கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 2, 2011

தேர்தல் கமிஷன் கெடுபிடிகளுக்கு மக்கள் பதிலளிப்பார்கள் தி.மு.க. அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - துணை முதல்வர் ஸ்டாலின்


தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதற்கு எதிரான தேர்தல் கமிஷனின் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு தேர்தலில் மக்கள் சரியான பதிலளிப்பார்கள் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரையில் 01.04.2011 அன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் மக்களிடம் அமோக ஆதரவை காண்கிறேன். வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருணாநிதி 6&வது முறையாக மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
தேர்தல் விதிமுறை என்ற பெயரில் மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வீட்டுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்து முதல்வர் கருணாநிதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிராக அதிகரிக்கும் தேர்தல் கமிஷனுடைய கெடுபிடி நடவடிக்கைகளுக்கு தேர்தலில் மக்கள் சரியான பதில் அளிப்பார்கள். திமுக அணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள்.
ஜெயலலிதா தனது பிரசாரத்தில் தேர்தல் அறிக்கையை முன்னிறுத்திப் பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பேசுகிறார். அதிமுக தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையைத்தான் அப்படியே காப்பி அடித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதனால் தான் ஜெயலலிதா பிரசாரத்தில் அந்த தேர்தல் அறிக்கையை முன்னிறுத்திப் பிரசாரம் செய்வது இல்லை. அவர் பேசினாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை.

இவ்வாறு மு.க.ஸ்டாலின்கூறினார்.
இதையடுத்து மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த துணை முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டார்.

No comments:

Post a Comment