கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 26, 2011

திமுக உயர்நிலை குழு நாளை கூடுகிறது


திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் 25.04.2011 அன்று வெளியிட்டஅறிக்கை:
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டின் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியும் அதில் இணைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடன் 200 கோடி ரூபாயும், கடனை வழங்கிய நிறுவனத்திற்கு வட்டியுடன் திரும்பச்செலுத்தி, அதற்கான வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உட்பட அனைத்தும் ஆதாரமாகத் தரப்பட்டன.
இத்தனையும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற ஒன்றே தவிர, எவ்விதமான ஒளிவு மறைவோ மற்றும் சதியோ இல்லை என்பதை எடுத்துக்காட்டி நிரூபிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடன் தொகையைக் கூட நேர்மையான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி ஒரு பங்குதாரர், அதைப் போல சரத்குமார், ஒரு நிர்வாகப் பங்குதாரர் என்ற முறையில் இருவருமே விசாரிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் துணைவியார் தயாளு அம்மையாரையும் விசாரித்து, இவற்றை பூதாகரமாக விளம்பரப்படுத்தி இறுதியில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் என்ற செய்தியையும் பெரியதோர் விளம்பரமாக்கி, கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திமுக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் 27ம் தேதி காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் அந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment