`மக்களுக்காக சொன்னதை செய்தவர் முதல்வர் கருணாநிதி’ என நடிகர் வடிவேலு பேசினார்.
மேலூர் தொகுதி திமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து, நடிகர் வடிவேலு 04.04.2011 அன்று சொக்கலிங்கம்பட்டி, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். மேலூர் பஸ் நிலையத்தில் அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதி மக்களுக்காக சொன்னதையும் செய்தார். சொல்லாததையும் செய்தார். முன்பு சாலை விபத்து நடந்தால் உறவினர்களுக்கு போன் செய்வர். ஆனால் தற்போது 108க்கு போன் செய்தால் போதும். நமக்கு வேலைப்பளு மிச்சம். பெண்கள் 30, 35, 40 வயதுவரை திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையை மாற்ற திருமண நிதிஉதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
கேப்டன், கேப்டன் என்று சொல்றாங்க. கப்பல் ஓட்டுபவரை கேட்பன் என கூப்பிடுவாங்க. டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. எனவே டோனியை கேப்டன் என அழைப்பதில் அர்த்தம் உள்ளது. டோனி மட்டையில் அடித்து ரன்களை குவிக்கிறார். ஆனால், இவரோ மட்டையாகி கிடக்கிறார்.
இவ்வாறு வடிவேல் கூறினார். ஏற்பாடுகளை மேலூர் திமுக நகர செயலாளர் முகமது இப்ராகிம் சேட், ஒன்றிய செயலாளர் ரகுபதி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் துரை ராஜேந்திரன், தொகுதி பொறுப்பாளர்கள் கரு.தியாகராஜன், வெள்ளையன், நகராட்சி தலைவர் தமிழரசி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
வடிவேலு சொன்ன குட்டி கதை :
வடிவேலு பேசுகையில், ``ஒரு ஊரில் ஒரு சேவல் இருந்தது. தினமும் அதிகாலையில் `கொக்கரக்கோ’ என கூவியது. பின்பு உதய சூரியன் உதித்தது. தான் கூவுவதால்தான் சூரியன் உதிப்பதாக, சேவல் நினைத்தது. ஒருநாள் காலை சேவல் கூவாமல் இருந்துவிட்டது. ஆனால், சூரியன் உதித்தது. அப்போது சேவலின் உரிமையாளர், ``நீ கூவுவதற்கும், `உதய சூரியன்’ உதிப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை’’ எனக்கூறி சேவலின் தலையை வெட்டிவிட்டார். அந்த சேவல்தான் விஜயகாந்த்.’’ என்றார்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு விஜயகாந்த்தை வேட்பாளர்கள் திருப்பி அடிக்கிற சூழல் வரும்!
தப்பு...தப்பா உளறுவதாக விஜய்காந்த் ஒப்புதல் வாக்குமூலம் - நடிகர் வடிவேலு பேச்சு : ‘தேர்தல் நேரத்தில் தனது வேட்பாளர்களை அடிக்கிறார். தேர்தல் முடிவுக்குப் பின், வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து விஜயகாந்த்தை திருப்பி அடிக்கிற சூழ்நிலை உருவாகும்’ என திருப்புத்தூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் பெரியகருப்பனை ஆதரித்து திருப்புத்தூர், திருக்கோஷ்டியூர், சிங்கம்புணரி பகுதிகளில் நடிகர் வடிவேலு 04.04.2011 அன்று பிரசாரம் செய்தார். திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
பாமர, ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை முதல்வர் கருணாநிதி பூர்த்தி செய்துள்ளார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு கொடுக்க முடியுமா என்று கேட்டார்கள். ஆனால், ஒரு ரூபாய்க்கு வழங்கிக் காட்டினார். அந்த அரிசி வாங்கிச் சாப்பிடும் ஏழைகளுக்குத்தான் அதன் அருமை தெரியும். இலவச காஸ் அடுப்பு, டிவி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வசதி படைத்த குழந்தைகள் படிக்கும் அதே படிப்பையே ஏழை வீட்டுக் குழந்தைகளும் இப்போது சமச்சீர் கல்வி மூலம் படிக்கின்றனர். வாக்குரிமை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் சிசுவுக்குக் கூட நலத்திட்ட உதவிகள் அளித்தவர் முதல்வர் கருணாநிதி. ஆறாவது முறையாக அவர் ஆட்சிக்கு வந்தால், ஏழை மாணவர்களுக்கு லேப்&டாப் அறிவித்துள்ளார்.
தினமும் காலையில் எழும்போதும், இரவு தூங்கச் செல்லும் முன்பும், டிவியில் என்னை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் ஒன்றும் கருப்பு எம்ஜிஆர் கிடையாது. கேப்டன் என்று ஒருவர் தன்னை கூறிக் கொள்கிறார். தண்ணீரில் மிதக்கும் கப்பலில் இருப்பவர்தான் கேப்டன். எந்நேரமும் ‘தண்ணி’யில் மிதப்பவர் அல்ல. விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளர் பெயரையே மாற்றி மாற்றிச் சொல்கிறார். நியாயமாகப் பார்த்தால், அந்த வேட்பாளர்தான் இவரை அடிக்க வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பிறகு, வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து இவரை திருப்பி அடிக்கிற சூழ்நிலை ஏற்படும்.
சினிமாவில்தான் அவர் ஹீரோ. நிஜத்தில் வெறும் ஜீரோ. நான் படத்திலும் சரி, நிஜத்திலும் சரி... எப்போதுமே காமெடி ஹீரோ. 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதியோர் பட்டினிச்சாவு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. ஆறாவது முறையும் கருணாநிதியை முதல்வராக தேர்ந்தெடுத்தால், தமிழக மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நிறைவேற்றுவார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
தான் தப்பு தப்பா உளறுவதாக விஜய்காந்த்தே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று நடிகர் வடிவேலு கூறினார்.
மதுரை மேற்கு தொகுதி காளவாசல், பெத்தானியபுரத்தில் தி.மு.க. வேட்பாளர் தளபதி, மதுரை கிழக்கு தொகுதி ஆனையூரில் தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி ஆகியோரை ஆதரித்து நடிகர் வடிவேலு நேற்று மாலை பிரசாரம் செய்தார். இதில் சூடான அரசியலை சுவையாக பேசி அனைவரையும் கலகலப்பூட்டினார். அவர் பேசியதாவது:
கருப்பு எம்.ஜி.ஆர்., பச்சை எம்.ஜி.ஆர்ன்னு சொல்லிக்கிட்டு ஒருவர் திரிகிறார். அவர் மக்கள் முன் நிதானமாக தோன்றுவதில்லை. தடுமாறகிவன் தலைவனா? பக்கத்து வீட்டுக்காரனை கூட காப்பாற்ற முடியாதவர். அவர் வீட்டு பக்கத்திலுள்ள என் வீட்டை தாக்கினார். என் பிள்ளைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காமெடி நடிகன் தானே? என்கிறார். காமெடி நடிகன் என்றால் கேவலமா?
அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கேட்ட தொகுதி தராததால், ஜெயலலிதா கொடும்பாவியை எரிக்க செய்தவர். சொந்த கட்சி வேட்பாளரை அடித்தார். தேர்தல் பிரசாரத்தில் விஜய்காந்த் தப்பு, தப்பா பேசுவதாக நான் சொன்னேன்.
இன்றைக்கு ‘அ.தி.மு.க. கொள்கை ஜெயலில் இருக்கிறது...’ என்று அவரே மக்கள் முன் பேசி இருக்கிறார். வேனில் இருந்தவர் பயந்து கொண்டே ‘அண்ணே தப்பா சொல்றீங்கணே...’ என்று சொல்லி இருக்கிறார். உடனே விஜய்காந்த் ‘நான் தப்பு... தப்பா.. பேசுகிறேன்’ என்று அவரே மக்கள் முன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இப்படி பேசக் கூடியவர் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் எப்படி பேசுவார்? அ.தி.மு.க. கூட்டணி வெறும் சீட்டணி தான். அவர்களை நம்பி ஏமாந்து விடாதீங்க. தி.மு.க. அணியை ஆதரியுங்கள். வீடு தோறும் கிரைண்டர், மிக்சி வரும். கலைஞர் அய்யா வரும்னு சொன்னா வரும்... ஜெயலலிதா வரும்னு சொன்னா.... (வராது என மக்கள் கோஷம்)
இவ்வாறு வடிவேலு பேசினார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
No comments:
Post a Comment