கடலில் மீன் பிடிக்கச் சென்று ஊர் திரும்பாத 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு,
ஸி20
லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு 12.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 2ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற விக்டர்ஸ், மாரிமுத்து, அந்தோணிராஜ் மற்றும் ஜான்பால் ஆகிய 4 மீனவர்கள் ஊர் திரும்பவில்லை. தமிழக அரசு, இந்திய கடலோர காவல் படையினரின் துணையுடன் கடலில் மீனவர்களை தேடும் பணியை மேற்கொண்டது.
இந்நிலையில், 6ம் தேதி கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து, அழுகிய நிலையில் உள்ள ஒரு உடல் இலங்கை டெல்ப் தீவு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. மீனவர்களின் உறவினர்கள் 9ம் தேதி இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இறந்த மீனவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. அதன்பின், அந்த இடத்திலேயே மீனவரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.
மீனவர்கள் 4 பேரும் மீன் பிடிக்கச் சென்று 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு மீனவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலை உள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற நிகழ்வுகளில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. அதை முன்மாதிரியாகக் கொண்டு, இந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கும் தலா
ஸி5
லட்சம் வீதம் மொத்தம்
ஸி20
லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளா.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment