கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

திமுக ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள் - முதல்வர் கருணாநிதி பேச்சு



திமுக ஆட்சி மீண்டும் தொடர ஆதரவு தாருங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி தனது தொகுதியில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரை ஆட்சி கட்டிலில் அமர¢த்த வேண்டும் என¢பது உங்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் உங்களிடம் வேட்பாளராக வாக்கு கேட்டு வந்துள்ளேன். எனக¢கு திருவாரூர் ஒன்றும் புதிதல்ல. நான் அண்ணாவிடம் பகுத்தறிவு பயின்றது திருவாரூரில் தான். திருவாரூர¢ தொகுத¤யை ஏன் தேர்வு செய்தீர்கள் என நீங்கள் கேட்கலாம். குளித்தலை , தஞ்சை, சென்னை உள்ளிட்ட இடங்களில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், தாய் வீட்டு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படுவது எனது பாக்கியம். அதை நீங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என நம்புகிறேன்.
காமராஜர் காலத்தில் ஆரம்ப பள்ளி கூடங்கள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட¢டன. அதனை பின்பற்றி திமுக ஆட்ச¤ காலத்தில் ஏராளமான கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏழை எளிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி வளம் கிடைக்க இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பட்டி தொட்டிகளெல்லாம் பட்டதாரிகள் இருக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இத்தகையை கல்வி வளம் பெருக திமுக ஆட்ச¤ இன்றியமையாதது. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் திமுக ஆட்ச¤ காலத்தில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக மக¢களுக்கு அவரவர் கோரிக்கைகளை இந்த திமுக அரசு நிறைவேற்றி நல்லரசாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
கடலோர பகுதிய¤ல் உள்ள மீனவர்களின் நலன் கருதி விசைப்படகுக்கு 1500 லிட்டர் டீசல் மானியம் வழங்கப்படுகிறது. நாட்டுப் படகுக்கு 300 லிட்டர் மண்ணெண்னை மானியம் வழங்கப்படுகிறது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் விசைப் படகுக்கு 2 ஆயிரம் லிட்டர் டீசலும், நாட்டுப் படகுக்கு 500 லிட்டர் மண்ணெண்னையும் மானியமாக வழங்கப்படும் என அறிவித¢துள்ளேன்.
உங்களில் ஒருவனாக தான் உங்களிடம் வாக்கு கேட¢க வந்துள்ளேன். எனவே திமுக ஆட்சி மீண்டும் தொடர எனக்கு ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.
முதல்வர் கருணாநிதி தனது சொந்த ஊரான திருவாரூரின் பல்வேறு கிராமங்களுக்கு பிரசாரம¢ செய்ய சென்றதால் ரோட்டின் இருபுறங்களிலும் ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்து அவருக்கு ச¤றப்பான வரவேற்பு அளித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக காலை 11 மணிக்கு நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்திற்கு வந்தார். திமுக ஒன்றிய செயலாளர் செல்லசேது ரவிக்குமார் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதி பாமக வேட்பாளர் அகோரத்தை ஆதரித்து, முதல்வர் கருணாநிதி மங்கைநல்லூர் கடைவீதியில் பேசுகையில், “வரலாற்று சிறப்பு மிக்க பூம்புகார் பட்டினம் கடலால் அழிந்தது. அந்த பூம்புகாரை மீண்டும் உருவாக்கி வரலாற்று சின்னங்களை அமைத்தது திமுக அரசு. பூம்புகார் என்ற ஒரு தொகுதியை உருவாக்கியதும் திமுக அரசுதான். பூம்புகார் தொகுதி வாக்காளர்கள் இதையெல்லாம் நினைவில் கொண்டு, அகோரத்திற்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிக்கனியை அளித்திட வேண்டும்” என்றார்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் எம்எல்ஏ ராஜகுமாரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், “காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் கடந்த 10 ஆண்டு காலமாக ஏற்பட்ட உறவு காரணமாக இன்றைக்கு கூட்டணியாக உருவாகி, ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் ராஜகுமார் போட்டியிடுகிறார். மத்தியில் காங்கிரசின் ஆட்சி மாநிலத்தில் திமுக ஆட்சி புரிகின்ற காரணத்தால் உறவுக்கு கைகொடுத்து உரிமைக்கு குரல் கொடுத்து உங்களது எல்லாவிதமான கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் புறப்பட்டுள்ளோம்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

தொய்வின்றி தேர்தல் பணியாற்ற திமுக கூட்டணி கட்சியினருக்கு கருணாநிதி வேண்டுகோள் :

முதல்வர் கருணாநிதி 10.04.2011 அன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் மூமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது முதல்வர் பேசியதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக மூமுக கட்சியை சேர்ந்த ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். காட்டுமன்னார்கோயில் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். தேர்தலுக்கு மிகக்குறைந்த நாட்களே உள்ளதால் கூட்டணியில் உள்ள இளைஞர்கள், மகளிர் அணியினர், தொண்டர்கள் அயராது பணியாற்றி திமுக கூட்டணியினரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
தொய்வின்றி தேர்தல் பணியாற்றி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். மூமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் குடும்பத்துக்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையால் பொதுமக்கள் நல்ல வாய்ப்பை தவற விடாமல் ஸ்ரீதர் வாண்டையாருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ரவிக்குமாருக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment