கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

வன்னியருக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படும் - திண்டிவனத்தில் முதல்வர் கருணாநிதி வாக்குறுதி



வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்.
திண்டிவனத்தில் 08.04.2011 அன்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
நாம் அனைவரும் ஒரே அணியில் நிற்பதற்கு காரணம் தந்தை பெரியாரின் பிள்ளைகள் என்பது தான். அம்பேத்கருக்கும், எனக்கும் நேரடியாக பழக்கம் இல்லை. அம்பேத்கர் பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க மராட்டியத்தில் தீர்மானம் நிறைவேற்றி 10 ஆண்டுகள் ஆகியும் அமல்படுத்தவில்லை.
மராட்டியத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் திமுக போராட்டத்தில் ஈடுபடும் என அறிக்கை கொடுத்ததும், அந்த மாநில கவர்னர் அலெக்சாண்டர் உறுதி கூறி எனக்கு கடிதம் எழுதினார். மராட்டியத்தில் பல்கலைக்கழகம் அமைத்ததில் திமுகவுக்கும் பங்கு உள்ளது.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டார் ராமதாஸ். அவர் கேட்டு நான் மறுத்தது இல்லை. அதிமுக ஆட்சி காலத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் 20 பேர் பலியானார்கள். பலியான மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்கியதும், உயர்த்தி கொடுப்பதும் திமுக அரசு தான்.
இடஒதுக்கீடு விஷயத்தை நான் எப்போதும் கைவிடவில்லை. வன்னிய மக்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழுப்புரம்:
இதன் பின்னர், விழுப்புரம் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
திராவிட இயக்கத்தை அழித்தே தீருவேன், அண்ணா உருவாக்கி லட்சிய தாகத்தை இந்த இயக்கத்தை அழிப்பது தான் என் வேலை என்று புறப்பட்டுள்ள அந்த அம்மையார் உங்களிடம் ஆதரவு கேட்கிறார். எதற்கு ஆட்சி? நடத்துவதற்காக அல்ல... திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக. அதற்கு ஆதரவாக பெரும் படை பத்திரிகை படை அவரிடம் இருக்கிறது. அதை ஒன்றும் செய்வதற்கில்லை. ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரமும் ஒன்று. நாம் அதை கட்டுப்படுத்தியது இல்லை; வளர்த்தவர்கள் நாங்கள். வதைத்தவர்கள் அல்ல.
அந்த சுதந்திரம் இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும், எழுதலாம் எந்த செய்தியை வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று வெளியிடுகிறார்கள். என்னை பற்றி எழுதும் செய்திகள், கதை, பிரசாரம் என்னையும் எதையும் செய்துவிடவில்லை. அதற்கு மாறாக நான் வளர்ந்து கொண்டே இருக்கிறேன். எனவே வசைபாடட்டும்.

ஒரு காலத்தில் என்னை இழிவு, கேவலப்படுத்தியவர்கள், அதற்காக கண்ணீர் துளிகளை ஏந்தி வருத்தியதை பார்த்திருக்கிறேன். எனவே அதற்காக நான் வருந்துவதில்லை. வாழ்க வசவாளர்கள்.
நமக்கு காரியம் பெரிது. விரியம் பெரியதல்ல. அது ஜனநாயக கடமை ஆற்றும் காரியம். அதற்கு இங்கு யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறோமோ அவர்களுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
மணி 10 ஆகிறது. தேர்தல் ஆணையம் மிக மிக கெடுபிடியாக உள்ளது. முதல்வரான உன்னையா கேட்கிறார்கள் என்று கேட்கலாம். என் பாட்டனுக்கும் அதுதான்.
நான் முதல்வராக இருந்தாலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பவன். ஆனால், தேர்தல் ஆணையம் உண்மையிலேயே விதிமுறைகளை கடைப்பிடிக்கிறதா. இந்த பதவி நிலைப்பதற்கு நீங்கள் வழி வகுத்தால். நீங்கள் என்னை பதவியில் அமர வைத்தால் கேட்க வேண்டிய இடத்தில், கேட்க வேண்டியவர்களிடம், கேட்க வேண்டிய நேரத்தில் கேட்பேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment