கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, January 24, 2012

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


தமிழக ஆளுநர் ரோசய் யாவை முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 06.01.2012 அன்று   சந்தித்து பேசி னார். அப்போது அவர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக இட மாற் றத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை கொடுத்தார். அண்ணா நூற் றாண்டு நினைவு நூல கத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக் கையை வலியு றுத்தி தி.மு.க. மாணவரணியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். இந்த கையெழுத்து இயக்கத் தின் போது ஒரு லட்சத்து 17 ஆயிரம் கையெழுத்துக் களை பெற்றனர். இந்த கையெழுத்து பிரதிகள் தமிழக ஆளுநரிடம் ஒப் படைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந் தனர்.இதையொட்டி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ரோசய்யாவை 06.01.2012 அன்று   மாலை சந் தித்தார். அவருடன் டி.கே.எஸ். இளங்கோ வன் எம்.பி., மாணவ ரணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி, சட்டத்துறைச்செய லாளர் ஆலந்தூர் ஆர். எஸ்.பாரதி, மாணவரணித் துணைச் செயலாளர் கோவை கணேஷ் குமார், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., கோவி. செழியன் எம்.எல்.ஏ., ஆர். கிரிராஜன், குத்தாலம் க.அன்பழகன், பூவை. சி.ஜெர்ரால்டு ஆகியோர் உடன் சென்றனர். ஆளு நரை சந்தித்து விட்டு வெளியே வந்த மு.க.ஸ்டா லின் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதா வது:-
ஆசியாவிலே முதல் தரமான நூல்நிலைய மாக அண்ணாவின் நூற்றாண்டு நினைவை போற்றத்தக்க வகையில் கலைஞரின் முயற்சி யோடு அமையப் பெற்ற அண்ணா நூற் றாண்டு நினைவு நூல கத்தை அ.தி.மு.க. ஆட் சிக்கு வந்தபிறகு மாற்றுவ தாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறி விப்பை வெளியிட்டார். ஏற்கெ னவே இந்த பிரச்சினை உயர்நீதி மன்றத்துக்கு சென்று, இடைக்கால தடைஉத்தரவும் போடப்பட் டுள்ளது. நீதி மன்றத்தில் இடைக்கால தடைஇருந்தாலும், தி.மு.க. மாணவர் அணி சார் பில், அரசை கேட்டுக் கொள்வ தற்காக, ஜெய லலிதாவால் போடப்பட்ட அந்த உத் தரவை, அவர் உடனே திரும்பப் பெற்றுக் கொண்டு மீண் டும் அதே இடத்தில் அந்த நூல்நிலையம் இயங்கிடவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கையொப்பங்களை பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மருத் துவர்கள் போன்றவர்களி டம் பெற்றோம்.
அந்த கையெழுத்து பிரதியை ஆளுநரிடம் எனது தலைமையில் மாணவர் அணி நிருவா கிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வழங்கியிருக் கிறோம். ஆளுநர் நாங்கள் கொடுத்த மனுவை படித்துப் பார்த்து, இந்த பிரச்சினை உயர்நீதி மன்றத்தில் இருக் கிறது.  எனவே ஆளுநர் என்ற முறையில் என்ன நட வடிக்கை எடுக்கமுடியுமோ, அந்த வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள் ளார். 
இவ்வாறு மு.க.ஸ்டா லின் கூறினார்.

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடூரத் தாக்குதல்!


07.01.2012 அன்று காலையில் வெளி யான நக்கீரன் இதழை தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேநேரத்தில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினரும், ரவுடிகளும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சோடா பாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள் ஆகிய வற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகிய வற்றையும் அடித்து நொறுக்கினர். 100க்கும் அதிகமான அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க, பாதுகாப்பு என்ற பெயரில் வந்த காவல்துறை வேடிக்கை பார்த்தபடியே நின்றனர். அ.தி.மு.கவினரின் தாக்குதலைக் கண்டு நடுங்கி ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து கற்களும் சோடா பாட்டில்களும் நக்கீரன் அலுவலகத்திற்குள் பறந்து வந்தபடியே இருந்தன. பத்திரிகை யாளர்கள், தொலைக்காட்சியினர் ஆகியோர் களத்திற்கு நேரில் வந்து செய்தி சேகரிக்கும் போது அவர்கள் முன்னிலையிலேயே அ.தி.மு.க ரவுடிகள் கற்களை வீசினர். காவல்துறையினர் அவர்களைப் பெயருக்குத் தடுத்தபோது, காவல்துறையினரைத் தள்ளி விட்டுவிட்டு அ.தி.மு.க ரவுடிகள் தாக்கு தலைத் தொடர்ந்தனர். நக்கீரன் அலுவலகத் திற்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகையினரும் தாக் குதலை நேரடியாக எதிர்கொள்ள வேண்டி யிருந்தது.






































காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அ.தி.மு.கவின் ஒவ்வொரு அணியினரும் கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதலைத் தொடர்ந்தபடியே இருந்தனர்.

எது தமிழர் திருநாள்?கலைஞர் பேட்டி


தமிழர்களுக்கு எது உண்மையான தமிழர் திருநாள் என்பது குறித் தும், நிவாரணப் பணி கள் குறித்தும் செய்தி யாளர்களுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டியளித்தார். புயல், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதி களில் சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் காரி லேயே பயணம் செய்து விட்டு, திருவாரூரிலி ருந்து புகை வண்டி மூல மாக சென்னை திரும்பிய தலைவர் கலைஞர் அவர் களை எழும்பூர் புகை வண்டி நிலையத்தில் சந்தித்த செய்தியாளர் கள் கேட்ட கேள்வி களும், அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த பதில் களும் வருமாறு:-
செய்தியாளர் :- புயல், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதி களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து விட்டுதிரும்பியிருக் கிறீர்கள். தங்கள் சுற்றுப் பயணம்எவ்வாறு அமைந்தது?
கலைஞர் :- என் னைப் பார்த்ததில் மக்க ளுக்கு ஆறுதல், பாதிக் கப்பட்ட மக்களை நேரில் பார்த்ததில் எனக்கு ஆறுதல்.
செய்தியாளர் :- அரசு நிவாரணப் பணி கள் மிகவும் மெத்தன மாக நடைபெறுகின் றன. மக்களுக்கு பால்கிடைக்கவில்லை.டீ கூட குடிப்பதற்கு அவர் களுக்கு வசதியில்லை. அரசு எந்த அளவிற்கு மெத்தனமாகச் செயல் பட்டுக் கொண்டிருக் கிறது?
கலைஞர் :- இந்த மாதிரியான காரியங் களில், இந்த மாதிரியான நேரங்களில் எந்த அர சாக இருந்தாலும், அந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் பணி என்று கருதுபவன் நான். எனவே அந்தப் பணியை முறையாகச் செய்திருக் கிறேன்.
செய்தியாளர்: - நிவாரணப் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எப்படி செயல்பட்டிருக்கின்றன? அவர்களுக்கு நீங்கள் ஏதாவது கோரிக்கை வைக்கிறீர்களா?
கலைஞர்:- தன் னார்வத் தொண்டு நிறுவனங்கள் இப் போதே உதவிகளைச் செய்து தான் வருகின் றன. மேலும் அந்தப் பணிகள்தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். அந்த நிறுவனங்களையும் வேண்டுகிறேன்.
செய்தியாளர் :- தமிழர் திருநாள் வரு கிறது. ஏற்கனவே நீங்கள் பொங்கல் திருநாளை யொட்டி தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழர் திருநாள் என்று சொல்லி யிருந்தீர்கள். தற்போது ஜெயலலிதா ஏப்ரல் மாதம் தான் தமிழர் திருநாள் தொடங்கு வதாக சொல்கிறாரே?
கலைஞர் :- தமிழர்கள்தான் எந்த நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு உரிமை உடையவர்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் நாளை யொட்டி தமிழர் திருநாளாகக் கடைப் பிடித்த அதே தைத் திங்கள் முதல் நாளைத் தான் இந்த ஆண்டும் தொடர்ந்து கொண் டாடுவோம்.
செய்தியாளர் :- புயல், மழையினால் பாதிக்கப்பட்ட மக் களை முதலமைச்சர் நேரில் சந்திக்கவில்லை என்ற மனக்குமுறல் மக்களிடையே பெரு வாரியாக உள்ளது. ஒருவரைக்கூட பாதிக் கப்பட்டவர்களைச் சந் திக்காமல், ஹெலிகாப் டரிலேயே வந்து விட்டு பத்தே நிமிடங்களில் ஜெயலலிதா திரும்பி விட்டார் என்ற குறை பாடு மக்களி டையே இருக்கிறதே?

கலைஞர் :- அதைப் பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை.
-இவ்வாறு செய்தியா ளர்களிடம் தலைவர் கலைஞர் அவர்கள் கூறி னார்.

தளபதியே உன்னால் காஞ்சி சிலிர்த்தது மாணவர் இனம் விழித்தது


(கழக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டில் மாணவ - மாணவியர்களுக்கு நடை பெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் இறுதிப் போட்டிகளில் தளபதி பங்கேற்று சிறப்பித்த நிகழ்ச்சியில் நடந்த சிறப்புகள்! )

பெண்கள் புரட்சிகொண்டு பெரியாருக்கு
பட்டம் தந்த செங்கல்பட்டில்!

மாணவரினம் எழுச்சி கொண்ட கொள்கையை
பறைகொட்டியது தளபதி ஏற்பாட்டில்!

இன உணர்வு விதைத்த நிகழ்ச்சி
இளைஞர் அணியின் புதிய எழுச்சி!

இன நன்மைக்கு தளபதியின் தேடல்
இதோ மாணவரிடம் நேரடி நாடல்!

காட்டாறால் மாணவர் இனம் போகாமல்
அணைகட்டி வயலுக்கு விடும் பணி!

கொடி கொடுத்து கொள்கைப் பதித்து
இயக்கத்திற்கு செய்தார் அணி!

அண்ணாபிறந்த காஞ்சி மாவட்டத்தில்
மகிழ்ச்சியில் குடும்பத்தோடு குவிந்தனர்!

விசிலடிக்கும் கூட்டமாய் போகாமல்
விஷயமுள்ள கூட்டமாய் ஆக்கினார்!

தமிழர் பண்பாட்டு பெருமையை உலகம் படிக்க
எழுதவந்த புதுகட்டுரையாளர்கள்

பண்பாட்டு காவலர் கலைஞர் பற்றி
உலகம் பேச பேசவந்த புது உரையாளர்கள்!

அறிஞர் பற்றிய கலைஞரின் கவிதையை
ஒப்பித்தல் செய்த அறிவு நெறியாளர்கள்!

உடல்கொடை தந்த படைதலைவனை
மாணவர்இனமே உயிரில் பிண்ணுங்கள்!

மாணவரினம் மேடையில் விதைத்தனர் சொல்லை
அட! அட! வான்மழையும் நிகரில்லை!

இதோ! மாணவரினத்தின் பேச்சுதுளிகள்
இல்லை சரித்திரம் செதுக்கிய சிலைகள்

மண்ணை தவிர்த்து நதிநகராது
கலைஞரை தவிர்த்து அரசியல் இருக்காது!

தமிழ்நாட்டில் தலைவர்கள் பலர் உண்டு
ஆனால் கலைஞரை போல யார் உண்டு!

கலைஞர் கருப்பு சட்டைகாரன்
மானம் உள்ள சுயமரியாதைக்காரன்!

அனைத்து ஜாதிக்காரனும் அர்ச்சகர்
ஆகலாம் என சட்டம் இயற்றினார்!

தந்தை பெரியாரின் இதயத்திலிருந்த முள்ளை
கலைஞரே அகற்றினார்!

வானில்தோன்றியது துருவ நட்சத்திரம்
அண்ணா எங்களை வாழவைத்த சரித்திரம்!

காமராசர் ஆகட்டும் பார்க்கலாம் என்பார்
கலைஞரோ ஆயிற்று பார்த்தாயா என்பார்!

கலைஞர் அதிகம் படிக்கவில்லை
ஆனால் கலைஞரை உலகம் படிக்கிறது!

ஒரு மாணவன் கல்விக்கு உதவிகேட்டு
கருணை மனு தளபதியிடம் கொடுத்தான்!

தளபதி கல்வி செலவை ஏற்பதாய்
அறிவித்ததும் கண்ணீர் வடித்தான்!

ஒரு மாணவன் தன் ஆசிரியர் பெற்றோரை
சிறப்பு செய்ய போட்டான் அன்பு வட்டம்!

ஒரு மாணவன் தன் தாய்தந்தைக்கு தளபதி
நடத்திய மணவிழா புகைப்படம் காட்டினான்!

மாற்று திறனாளி புதுவை தம்பி நம்
தத்துவத்தை சலங்கைக்கட்டி ஆட்டினான்!

போட்டியில் வெல்லாத புதுவை தம்பிக்கு
பரிசு தந்தார் தளபதி தன் பணத்தில்!

கலைஞரை போல பாசம் காட்டுவதில்
உயர்ந்தார் அனைவர் உள்ளத்தில்!

மாணவரோடு மனதை உலவவிட்டு
தளபதியும் மாணவர் ஆனார்!

அறிமுகம் இல்லாத அவர்களிடம்
நலம்கேட்டு கலந்து நண்பன் ஆனார்!

மாணவரின் பெற்றோர்கள் அனைவருக்கும்
உடன்பிறந்த அண்ணன் ஆனார்!

மாணவ பூக்கள் கூடி தளபதியை
பூங்காவாக்கி மகிழ்ந்தனர்!

மாணவியை பெற்ற தாயும் தளபதியை
தாயாய் கண்டு நெகிழ்ந்தனர்.

ஈரோடு இறைவன்

நாடும் - ஏடும்!


1-1-2012  தேதியிட்ட  “மாலைமுரசு” -  “மாலைமலர்”  -  “தமிழ் முரசு”  ஆகிய  மாலை ஏடுகளிலும்,  2-1-2012  தேதியிட்ட  “தினமலர்”  -  “தினத்தந்தி”  - “தினகரன்” -  “தினமணி”  ஆகிய  காலை ஏடுகளிலும்  முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக  வெளி வந்திருப்பது  “அரசு ஊழியர்களுக்கு  பொங்கல் போனஸ்”   வழங்கப்படும்  செய்தியாகும்.ஆயிரம் ரூபாய் முதல்  மூவாயிரம்  ரூபாய் வரை கிடைக்கும் என்று  “தினத்தந்தி”யும்  -   “அரசு ஊழியர், ஆசிரியர்கள் உட்பட 21 லட்சம் பேருக்கு பொங்கல்  போனஸ் -  யார் யாருக்கு போனஸ்  கிடைக்கும்”  என்று  “தினகரன்” இதழும்  -  “264 கோடி ரூபாயை  அள்ளித் தந்தார்  முதல்வர்”  என்று  “தினமலர்”  நாளிதழும்  இந்தச் செய்திக்கு தலைப்பிட்டுள்ளன.

இந்த ஏடுகள் எல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கின்றனவே  என்று   கடந்த ஆண்டு  தி.மு. கழக ஆட்சியிலே  இந்த பொங்கல் போனஸ் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லையோ  என்று  நமக்கு  சந்தேகம் ஏற்பட்டு,  கடந்த ஆண்டு  “முரசொலி”  பத்திரிகையை  தேடிப் பார்த்தோம்.   “264 கோடியை  அள்ளித் தந்தார் முதல்வர்” என்று “தினமலர்”  செய்தி வெளியிட்டிருக்கிறதே, தி.மு. கழக ஆட்சியில்   “கிள்ளியாவது”  அரசு ஊழியர்களுக்கு  பொங்கல் போனஸ்  கொடுக்கப்பட்டதா  என்று பார்த்த போது  -  கடந்த ஆண்டு  2011இல் பொங்கலுக்காக  277 கோடி ரூபாய் அளவிற்கு  அரசு ஊழியர்களுக்கு  பொங்கல் போனசாக கொடுக்கப்பட்டுள்ளது. 
  4-1-2011 தேதிய நாளேடுகளில் அந்தச் செய்தி வந்துள்ளது,  ஆனால் இன்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளி வந்திருக்கிறதே அதைப் போல அல்ல  -  “முரசொலி” இதழின்  12வது பக்கத்தில்  அந்தச் செய்தி வெளி வந்திருக்கிறது.    அந்தச் செய்திக் குறிப்பு வருமாறு :-“2009-2010ஆம் ஆண்டிற்கு  “சி”  மற்றும்  “டி”  தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும்  30 நாட்கள்  ஊதியத்திற்கு இணையாக  ரூ.  3000/- உச்சவரம்பிற்கு  உட்பட்டு  போனஸ்  வழங்கிடவும்,  “ஏ”  மற்றும்  “பி”  தொகுதியைச் சார்ந்த  அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1000/-  சிறப்பு போனஸ்  வழங்கிடவும்,  ஓய்வூதியம்  மற்றும்  குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் களுக்கு  ரூ. 500/- பொங்கல் பரிசு வழங்கிடவும்  முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.  இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ. 277 கோடி செலவாகும்”  என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.இதிலிருந்து  இந்த ஆண்டு  அ.தி.மு.க. அரசு  ஏதோ புதிதாக  அரசு ஊழியர்களுக்கு  பொங்கல் போனஸ் வழங்கிடவில்லை என்பதையும்,  கடந்த தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டதை விட  கூடுதலாக  தொகை எதையும் வழங்கிட வில்லை என்பதையும்  புரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு பொங்கல் போனஸ் வழங்கியிருப்பதை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக  வெளியிட்ட “தினகரன்”,  “அரசின் பல்வேறு நலத் திட்டப் பணிகளும் மற்றும்  வளர்ச்சிப் பணிகளும்  வெற்றிகரமாக செயல் படுத்தப்படுவதற்கு, உதவிகரமாக  விளங்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல்  பண்டிகையை  முன்னிட்டு,  மிகை ஊதியம் (போனஸ்)  வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.ட “தினகரன்”,  “அரசின் பல்வேறு நலத் திட்டப் பணிகளும் மற்றும்  வளர்ச்சிப் பணிகளும்  வெற்றிகரமாக செயல் படுத்தப்படுவதற்கு, உதவிகரமாக  விளங்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல்  பண்டிகையை  முன்னிட்டு,  மிகை ஊதியம் (போனஸ்)  வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இதன்படி, 2010-2011ஆம் ஆண்டுக்கு  “சி”  மற்றும் “டி”  பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும்  30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ. 3000 உச்ச வரம்புக்கு உட்பட்டு போனஸ் வழங்கவும்,  “ஏ”  மற்றும் “பி”  பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1000 சிறப்பு போனஸ்  வழங்கவும், ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கவும் முதல்வர் உத்தர விட்டுள்ளார்” என்று  குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பொங்கல் போனஸ் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டுமே யானால்,  2006ஆம் ஆண்டு  தி.மு. கழக அரசு பொறுப்பேற்று,  பேரவையில் வைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையிலேயே,  “2000-2001ஆம் ஆண்டு  வரை,  (அதாவது  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்த வரை)  அரசு அலுவலர்கள் மற்றும்  ஆசிரியர்களில்  “சி”  மற்றும்  ”டி”  அலுவலர்களுக்கு  மிகை ஊதியமும்,  “ஏ”  மற்றும்  “பி”  அலுவலர்களுக்கு  சிறப்பு மிகை ஊதியமும் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசும்  வழங்கப் பட்டு வந்தன.   2001-2002ஆம் ஆண்டு முதல் (அதாவது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு)  வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள  இந்தச் சலுகை யினை  மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும்  ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், இந்நிதி யாண்டில் வரும் பொங்கல் பண்டிகையின் போது  மேற்கூறிய  மிகை ஊதியம், சிறப்பு மிகை ஊதியம்  மற்றும் பொங்கல் பரிசு ஆகியன மீண்டும் வழங்கப் படும்”  என்று  22-7-2006  அன்று அறிவித்தோம்.  

அறிவித்ததோடு விட்டு விடாமல், அதற்கு பிறகு  அரசு அலுவலர் களுக்கெல்லாம்  பொங்கல் போனஸ்  வழங்கப்படும் என்று  28-12-2006 அன்றே அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு,  அதன் காரணமாக  அந்த ஆண்டு  248 கோடியே  68 லட்ச ரூபாய் அரசுக்குச் செலவாகும் என்றும் தெரிவிக்கப் பட்டது.
அதாவது  அ.தி.மு.க. ஆட்சி கடந்த முறை நடைபெற்ற போது அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பொங்கல் போனசை தி.மு. கழக அரசு தான்  2006ஆம் ஆண்டில்  பதவிக்கு வந்தவுடன்  மீண்டும் அறிவித்து வழங்கியது.    ஆனால் தற்போது  ஏதோ ஜெயலலிதா  தி.மு. கழக ஆட்சி வழங்காததை,  அவர் வழங்குவதைப் போல ஏடுகள் எல்லாம்  பெரிது படுத்தி வெளியிட்டுள்ளன.    ஒருவேளை அந்த ஏடுகள்  “என்றைக்கும் போடாத மகராசி  இன்றைக்கு புதிதாக போட்டிருக்கிறாரே, அது  வியப்பில்லையா”  என்ற எண்ணத்தோடு  அந்தச் செய்திக்கு  இவ்வாறு  முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் போலும்!   

அ.தி.மு.க. அரசு குறிப்பாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது  அரசு ஊழியர்களை எந்த அளவிற்கு மதித்தார் என்பதும்,  அரசுக்கு வருகின்ற மொத்த வருவாயில்  95 சதவிகிதம்  அரசு அலுவலர்களின் ஊதியத்திற்காகவே செலவழிக்கப்படுகின்றது என்றெல்லாம்  சொன்னவர் ஜெயலலிதா தான் என்பதும்,  அரசு அலுவலர்களைக் கொடுமைப் படுத்துவதற்காகவே  “எஸ்மா”,  “டெஸ்மா”  சட்டங்களைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் என்பதையும்,  ஏன் அரசு அதிகாரி களை யெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று பேரவை யிலேயே  அறிவித்தவரும்  அவர் தான் எம்,  அரசு அலுவலர்களைக் கொடுமைப் படுத்துவதற்காகவே  “எஸ்மா”,  “டெஸ்மா”  சட்டங்களைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் என்பதையும்,  ஏன் அரசு அதிகாரி களை யெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று பேரவை யிலேயே  அறிவித்தவரும்  அவர் தான் என்பதையும்  தமிழ்நாட்டிலே உள்ள அரசு  அலுவலர்கள் அறிய மாட்டா£களா என்ன?   இருந்தாலும் தமிழ் நாட்டில் உள்ள ஒருசில நாளேடுகள் (நமது ஏடுகள் உட்பட)  அம்மையாருக்கு எப்படியெல்லாம் வக்காலத்து வாங்குகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்  இந்த விளக்கங்களைத் தந்துள்ளேன்.  

இதிலே இன்னும் ஒரு ஏடு  ஒரு படி மேலே போய்,  கடந்த ஆண்டு  ஊழியர்களுக்கான போனஸ் ஜனவரி  5ஆம் தேதி கிடைத்தது.  இந்த ஆண்டு  போனஸ் தொகை  இன்று முதல் அவர்களுக்குக் கிடைக்கும் என்று முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.   அரசாணை தான் இன்று வெளி வந்திருக்கிறதே தவிர,  போனஸ் தொகையே  இன்று கிடைத்து விடாது.  மேலும்  ஜனவரி 2ஆம் தேதியோ, 5ஆம் தேதியோ பொங்கல் போனஸ் ஒரு முறை தான் அரசு ஊழியர்களுக்கு  வழங்கப்படும்.   ஆனால் இந்த ஏடுகள் இந்தச் செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பதைப் பார்ப்பவர்கள்,  தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்படாத ஒரு சலுகையை தற்போது  வழங்கியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொள்கின்ற அளவிற்கு  வெளியிட்டிருக்கிறார்கள் என்பதால்,  இந்தப் பொங்கல் போனஸ் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துவது நல்லது என்பதால் தான் இந்த விளக்கம்!£ர்கள் என்பதால்,  இந்தப் பொங்கல் போனஸ் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துவது நல்லது என்பதால் தான் இந்த விளக்கம்!

Friday, January 20, 2012

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தி.மு.க. ரூ. 50 லட்சம் உதவி : கலைஞர் அறிவிப்பு


புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் உள் ளிட்ட பகுதிகளைப் பார்வை யிட்ட திமுக தலைவர் கலை ஞர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவா ரண உதவிகளை வழங்க ரூ.50 லட்சம் நிதியை திமுக சார்பில் ஒதுக்குவதாக கூறினார்.
தானே புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளை திமுக தலைவர் கலைஞர் நேரில் பார்வையிட்டார். இதற்காக அவர் 04.01.2011 அன்று காலை சென் னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் முன் னாள் அமைச்சர்களான துரை முருகன், பொன்முடி, ஏ.வ. வேலு ஆகியோரும் புறப் பட்டுச் சென்றனர்.

அப்போது, தி.மு.க. தலைவர் கலைஞர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வரு மாறு:-

கேள்வி:- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கப் புறப்படுகிறீர்கள். வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

பதில்:- தமிழக அரசின் செயல்பாடு கள் பற்றி மக்கள் அதிருப்தியாக இருக் கிறார்கள். அந்த மக்களை நேரில் சந்திக் கத்தான் போகிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்தபிறகு கூறுகிறேன்.
கேள்வி:- மத்திய அரசிடம் கூடுதல் நிதி வேண்டுமென்று கேட்பீர்களா?

பதில்:- நான் தற்போது மாநில அரசின் தலைவன் அல்ல, மத்திய அரசிடமிருந்து என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும் என்று இப்போது சொல்ல முடியாது.
கேள்வி:- உங்களுடைய கூட்டணி கட்சியின் ஆட்சி என்ற முறையில் மத்திய அரசிடம் உங்கள் அமைச்சர்களை என் னென்ன உதவிகளை கேட்கச் சொல் வீர்கள்?

பதில்:- நம்முடைய மாநிலத்தில் வெள்ள நிவாரணத்திற்கு தேவையான உதவிகளை எல்லாம் மத்திய அரசு, மாநில அரசுக்கு செய்யவேண்டும் என்பதை தொடர்ந்து வற்புறுத்துவேன்.
- இவ்வாறு கலைஞர் கூறினார்.
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற திமுக தலைவர் கலைஞர் பாலவாக்கம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டிணம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் மரக்காணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். கீழ்புத்துப்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரி சென்ற கலைஞரை, அம்மாநில திமுகவினர் வரவேற்றதுடன், அம்மாநிலத்தில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தெரிவித்தனர். 

அரை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். 

மத்திய, மாநில திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் என்றபோதும், அது காலதாமதமாகும் என்பதால், அதுவரைக்கும் திமுக சார்பில் வழங்கப்படும் உதவிகள் இடைக்கால நிவாரணமாக அமையும் என்ற நோக்கத்தோடு, உடனடியாக இந்த நிதிகள் ஒதுக்கப்படுகிறது என்றும், அதுதவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் திமுகவினர் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கலைஞர் கேட்டுக்கொண்டார்.

கலைஞரின் காரை வழிமறித்த போலீசார் : கடலூர் பரபரப்பு

தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளை தி.மு.க தலைவர் கலைஞர்  பார்வையிட்டார். 

கடலூரில் ரெட்டிச்சாவடி, கங்கனாங்குப்பம், மஞ்சக்குப்பம், உள்ளிட்ட பல பகுதிகளை பார்க்கும் திட்டமும் அதற்கான வழிகளும் முன்கூட்டியே காவல் துறையிடம் வழங்கப் பட்டிருந்தது. 

இந்நிலையில் அவர் ரெட்டிச்சாவடி, பாகூர், சோரியாங்குப்பம் வழியாக கடலூர் கங்கனாங்குப்பத்திற்கு வந்தார். 
அங்கு புயலில் இடிந்து கிடந்த குடிசை வீடுகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் செல்ல ஆல்பேட்டை செக்போஸ்ட் வழியாக சென்றார்.

முன்னாள் அமைச்சர்களின் கார்கள் மற்றும் பாதுகாப்பு போலீசாரின் கார்கள் அவரின் காரை பின் தொடர்ந்தன. கமாண்டோ போலீசாரின் கார் முன்னால் சென்றது. அப்போது கடலூர் செக்போஸ்ட்டில் சாலையின் குறுக்கே இருக்கும் தடுப்புகளை அகற்றப்படாமல் இருந்தது.

சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த போலீசார் கார்களை மறித்தனர். நேராக செல்ல அனுமதியில்லை என்றும் புறவழிச்சாலை வழியாக செல்லுமாறும் கூறினார்கள். குண்டும் குழியுமாக இருக்கும் 5 கி.மீ புறவழிச்சாலையை சுற்றிக்கொண்டு போகுமாறு கூறினார்கள். 

இதனால் கலைஞரின் கார் உள்பட அனைத்து வாகனங்களும் அங்கு நிற்க நேரிட்டது. திமுகவினரும் அங்கிருந்த பொது மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.முன்னாள் முதல்வரின் காரினையே மறிப்பதா என ஆவேசம் அடைந்த மாநில மாணவரணி செயலாளர் புகழேந்தி தலைமையில் திமுக நிர்வாகிகள் போலீசாரிடம் சென்று வாக்கு வாதம் செய்தனர்.

உடனடியாக தடைகளை அகற்றாவிட்டால் நாங்களே அகற்றுவோம் எனக்கூறினார்கள். திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் தடை களை அகற்றி கலைஞரின் காருக்கு வழிவிட்டனர். அதன் பின்னர் அவர் மஞ்சக்குப்பம் வழியாக கடலூர் சென்றார்.




முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்: மு.க.அழகிரி

புத்தாண்டையொட்டி மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுக தொண்டர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார். பட்டு வேட்டி பட்டு சட்டையில் 01.01.2012 அன்று காலை  8 மணி முதல் தொண்டர்களை சந்தித்து வந்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கலைஞர் தலைமையிலான குழுவோடு சேர்ந்து நானும், பிரதமரிடம் முறையிட்டோம். தலைவர் கலைஞர் வேண்டுகோளுக்கு ஏற்ப உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், நல்ல முடிவு எடுக்கப்பதாகவும் உத்தரவாதமும், உறுதியும் கொடுத்தார் பிரதமர். 

இன்று புத்தாண்டு தினத்தையொட்டி நானும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். திமுக ஆட்சியிலும், நானும் மக்களுக்கு நல்லது செய்துள்ளோம். ஆனால் மக்கள் மறந்து விட்டார்கள்
என்றார்.

புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்: கலைஞர்

2012 புத்தாண்டையொட்டி தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:


தமிழக மக்கள் வளம்பெற தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிட அடுக்கடுக்கான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வெற்றிகண்ட மனநிறைவுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த வேளையில் ஆட்சி மாற்றம் கண்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக தந்துவிட்டு; பால் விலையை உயர்த்தி; பேருந்து கட்டணத்தை ஏற்றி; ஏழை எளிய மக்கள் பயனடைந்த பல்வேறு திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்தி; அறநெறிகளுக்கெல்லாம் அல்லல் விளைத்த இழைத்த 2011 ம் ஆண்டு மறைகிறது.

இந்நிலையில் ஆட்சியாளர்களின் அடக்குமுறைப் போக்குகள் மாறிட வேண்டும்; ஏழை எளியோர் நலம் பெற கழக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும்; மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும்; அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து; தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்   இன்று தொடங்கும் 2012 ஆங்கில புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

மறைமலையார் கருத்தை மறைப்பதோ? : கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,
கடந்த மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தது முதல், மக்களுக்குத் தேவையான நன்மை களைச் செய்கிறார்களோ  இல்லையோ, தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய திட்டங்களுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து திசை திருப்பும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். அது எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்றால், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்டமன்ற அலுவலகம், நாடாளுமன்ற அலுவலகம் என்பதைக் கூட மீண்டும் கைப்பற்றக் கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறது. வாழ்க அவர்களு டைய பரந்த சிறந்த உள்ளம்!
அந்த வரிசையில் ஒன்றாக நேற்றையதினம் (30.12.2011) நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுவிலே சிறப்புக்குரிய ஒரு தீர்மானமாக, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்திலே சட்டம் இயற்றியதை மாற்றி விட்டு, சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றிட பேரவையில் மசோதா ஒன்றினை அறநிலையத் துறை அமைச்சர் மூலமாக தாக்கல் செய்து குரல் வாக்கின் மூலம்  நிறைவேற்றிய தற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து நிறை வேற்றியிருக்கிறார்கள்.   அதன் மூலமாக  தி.மு. கழ கத்திற்கோ அது நடத்திய  ஆட்சிக்கோ அவமானமா என்றால் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்,  23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், பெரும் புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில்  ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள்,  1921ஆம் ஆண்டு  சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி,  தமிழர்களுக் கென்று  ஒரு  தனி ஆண்டு  தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வ தென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள்.  அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, மாண்புமிகு முதல மைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு,  1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப் பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப் பித்தார். திருவள்ளுவர் ஆண்டு  பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்த மாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடை முறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்தது. எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு  மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில்,  வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி;  வண்ண வண்ணக் கோலங்களிட்டு;  வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட;  புத்தாடை புனைந்து  தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப் பியும்;  தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால்  அன்பை அள்ளிப் பொழிவர் என பலத்த கைதட்ட லுக்கிடையில் அறிவித்தார். எனவே அந்த அறிவிப் பினைக் கூட கழக அரசின் அறிவிப் பாக ஆளுநர் அவர்கள்தான் தன் உரையிலே தெரிவித்தார்.
மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார்,  தமிழ்க் காவலர்  கா. சுப்பிரமணியம் பிள்ளை, சைவப் பெரியார்  சச்சிதானந்தப் பிள்ளை,  நாவலர் ந.மு.  வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவ நாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :
1. திருவள்ளுவர் பெயரில்  தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது;
2. அதனையே தமிழாண்டு எனக் கொண் டாடுவது;
3. வழக்கத்தில்  திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது  என்பனவாகும்.
அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார்  தலைமையில் கூடியது.  அதில்,  தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்,  திரு.வி.க., மறைமலை அடிகளார்,  பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார்,  புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன்,  பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர்.  அந்த மாநாடும்  தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும்,  பொங்கல் திருநாளே  தமிழர் திருநாள் என்றும் தீர்மானித்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்;
நித்திரையில் இருக்கும்  தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு!
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணியாண்ட  தமிழருக்கு
தைம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்
டு
என்று எழுதியிருக்கிறார் என்றால், தற்போது  அ.தி.மு.க. பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட  தீர்மானம், தமிழகத்திலே உலவிய அந்தத் தமிழறிஞர் களுக்கெல்லாம் இழைக்கப்படுகின்ற அவமானம்  என்பதை  தமிழர்கள் உணர்ந்து கொண்டால் அதுவே போதும்! ஆளுநரின் அறிவிப்பு பேரவையில் படிக்கப்பட்ட  மறுநாளே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில் தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும்  விவசாய வாழ்வு சார்ந்தும்  தைத்திங்கள் முதல் திருநாளே  தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற திருநாளாகும்.    மறைமலை அடிகளார்  போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப்படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் என்று தெரிவித்திருந்தார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ  தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு  வெற்றி கிடைத்து உள்ளது.   தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில்  புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது.  பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்  என்று  கூறினார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின்  தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித் திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடு கிறார்கள்.  எல்லா தேசிய இனங்களுக்கும் அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு.  தமிழர் களுக்கு  நில அடையாளம் இருக்கிறது; இன அடை யாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும்  குழப்பத்தில் இருந்தது.  அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரை கருத்துல கத்தின் அளவுகோலாய்க் காட்டியது  திராவிட இயக்கம். இன்று காலத்தின்  அளவுகோலாகவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திர மாகும்  என்று  குறிப்பிட்டிருந்தார்.
கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங் களுக்கு தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட் டுள்ளது. தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே  தமிழையே பகைத்துக் கொள்கிற - செம்மொழி என்றாலே  வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற  எதிர் மறையானதொரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.   அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக் கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக்கிறார்கள். இதோ ஒரு கதை!  நான் ஏற்கனவே எழுதிய கதை தான்; இருந்தாலும் மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன்.
நக்கீரன் காலத்திலே  குயக்கொண்டான் என்று  ஒருவர் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டி மன்றத்திலே ஆரியம் நன்று,  தமிழ் தீது என்று  சொல்ல - உடனே  நக்கீரனுக்கு கோபம் வந்து, தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும்  சொன்ன நீ, சாகக் கடவாய் என்று அறம் பாடினாராம். உடனே குயக் கொண்டான் கீழே விழுந்து இறந்து விடுகிறார்.   உடனே அங்கேயிருந்த சிலர் நக்கீரனைப் பார்த்து குயக் கொண்டாரைப் பிழைக்க வைக்க கேட்டுக் கொண்டார்கள். அதைக் கேட்ட நக்கீரன், ஆரியம் நன்று தமிழ் தீ தென் றுரைத்த காரியத்தால்  காலன் கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணை யினால்  செந்தமிழே  தீர்க்க சுவாகா! என்று பாட, குயக் கொண்டான் உயிர் பெற்று எழுந்தானாம். இப்படி ஒரு கற்பனைக் கதை!  பழங்காலத்தில்  உலவிய கதை!
தமிழக அரசின் அறிவிப்பு வந்த நேரத்திலேயே  மிகச் சிறந்த தமிழ் ஆய்வாளரான ஐராவதம் மகாதேவன் அவர்கள்,  இன்றைய  பஞ்சாங்கங் களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகிய வற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட் டத்துடன் - ஆராய்ந்துத் திருத்திக்கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய  பொங்கல்  திருவிழாவைப் புத்தாண்டு என்று  கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று  ரீதியில்  பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடை முறையில் உள்ள  பல புத்தாண்டுகளில்  இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.  ஆளுநர் உரை யிலே செய்யப்பட்ட அறிவிப் பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று  தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு  சட்ட முன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்து, 1-2-2008 அன்று  இச்சட்ட மசோதா  மீதான விவாதம் நடைபெற்று  அது நிறைவேறியது. இப்போது மலேசியா நாட்டில்  தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.  டாக்டர் மு. வரதரா சனார் அவர்கள், முன் காலத்தில்  வருடப் பிறப்பு  சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள்.  அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள்.  தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார் கள்.  ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள்.   இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங் கல் கொண்டாடுகிறார்கள்  என்று விளக்கியுள்ளார்.
தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் அது இருக்கலாமா  என்று  அதற்கு முடிவு கட்ட    அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா பேரவை யிலே அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு, அதற்காகவும் தற்போது அ.தி.மு.க. பொதுக் குழுவிலே நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள்.   பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்  விடுத்த  அறிக்கையில்; அ.தி. மு.க. அரசின் இந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும்  திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை  மீண் டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது  மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்.  மேலும் ஜெயலலிதா தனது பேரவை உரையிலே  கழக ஆட்சி நிறைவேற்றிய சட்டம் யாருக்கும் பயன் அளிக்காத ஒன்று என்றும், அந்தச் சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கருணாநிதியின் துதிபாடிகள் அனை வரும் அதனைப் போற்றினர் என்றும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற் காகத்தான் தமிழ்ப்  புத்தாண்டு தை முதல் நாள் என்று அறிவிக்கப் பட்டதென்றும் பேசியிருக்கிறார்.   துதிபாடிகள் என்று அம்மையாரால் வர்ணிக் கப்படும் பேறு பெற்றவர்கள் யார் யார் தெரியுமா? நமது பேராசிரியர் அன்பழகனார்,  அண்ணா பல்கலைக் கழகத்திலும்,  இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திலும் துணை வேந்தராக இருந்து பெரும்புகழ் பெற்ற வா.செ. குழந்தைசாமி, முனைவர்  தமிழண்ணல், முனைவர் வ.அய். சுப்பிர மணியம்,  முனைவர் அகத்திய லிங்கம், முனைவர் அவ்வை நடராசன்,  முனைவர் இரா. நாகசாமி,  தவத்திரு ஊரன் அடிகள்,  பேராசிரியர் கண. சிற்சபேசன்,  முனைவர் அ. அறிவொளி, முனைவர் சுதா சேஷையன்,  இலங்கை இ. ஜெயராஜ்,  முனைவர் சரசுவதி ராமநாதன், வழக்கறிஞர் த. ராமலிங்கம்,  பேராசிரியர் தி. ராசகோபாலன்,  முனைவர் இராம. சவுந்தரவல்லி,  முனைவர் இரா. செல்வ கணபதி,  புலவர் கோ. சாரங்கபாணி ஆகியோர்தான்!  அவர் கள் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில் தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்தான். அதே நேரத்தில் சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடுவோரை நாம் வேண் டாமென்று தடுக்கவும் இல்லையென்று அப்போதே அறிவித்துள்ளோம். நம்மைப் பொறுத்த வரையில்  நாம் தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிடுவோம்.
அன்புள்ள,
மு.க.
நன்றி: முரசொலி, 1.1.2012