கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, April 21, 2011

பிரகாஷ் காரத் புகாருக்கு முதல்வர் கருணாநிதி பதில்


முதல்வர் கருணாநிதி 20.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சாதியில் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு அந்த இழிவான எண்ணத்தை மெய்ப்பிப்பதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்டு, அதற்காக பூணூலை உருவிக் கொண்டு போர்க்குரல் கொடுத்த கூட்டத்தை எதிர்த்து பெரியாரும் அண்ணாவும் அறப்போர் ஆயுதங்களை ஏந்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி, தன்மான இயக்கத்தின் விரிவாக்கம் கண்டபோது வர்ணாஸ்ரம வெறி கொண்ட வைதீக புரியினர் வெகுண்டெழுந்து பெரியார் மீதும் அண்ணா மீதும் கடுங்கணைகளை காதால் கேட்க முடியாத சுடுமொழிகளை வீசித் தாக்கினர். அருவறுக்கத்தக்கதும், ஆபாசமானதுமான அர்ச்சனைகளை நம் மீது பொழிவதை அவர்கள் இன்றும் நிறுத்திக் கொள்ளவில்லை.
ஆனால், அவற்றுக்கு நாம் விளக்கம் அளிக்கும்போது எந்தவொரு நிலையிலும் தரம் தாழ்ந்து அவர்களை விமர்சிக்கும் முறையை கையாண்டதில்லை. எதிர் தரப்பினரின் எரியீட்டிகள் பாயும் போதெல்லாம் எவ்வளவு பவ்வியமாக, பக்குவமாக, பண்பாடு கெடாமல் பழைய உறவுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாமல் நான் இன்று வரை மாற்றுக் கட்சி தலைவர்களை மதிக்கும் போக்கினை துளியளவும் கை விடாமல் கடைப்பிடித்திருக்கிறேன்; இன்னமும் கடைப்பிடித்து வருகிறேன். இது என் இயல்பு மட்டுமல்ல; என்னை ஆளாக்கிய பெரியார், அண்ணா ஆகிய இருவரின் வழியில் நடந்து பெற்றுள்ள வளர்ச்சியுமாகும்.
அண்ணன் ஜீவானந்தம் என்றும் பெரியவர் மணலி என்றும் மரியாதை கலந்த அன்பு வைத்தே கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பழகியிருக்கிறேன். நல்லகண்ணு போன்றவர்கள் அந்த வரிசையில்தான் என் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். அத்தகைய நண்பர்களில் ஒருவராகத்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தையும் கருதியிருக்கிறேன்.
பாண்டியன்களும் ராமகிருஷ்ணன்களும் நரகல் நடையில் நம்மை இழித்தும் பழித்தும் பேசுகிறார்களே என எண்ணும்போது கூட, பிரகாஷ் காரத், எச்சூரி போன்றவர்களை நினைத்து இவர்களது ஏச்சு பேச்சுகளை நான் பொருட்படுத்தாமல் இருந்து விடுவதுண்டு.
ஆனால் நான் விழி கலங்கும் நிலையில் பிரகாஷ் காரத் பெயரால் தீக்கதிர் ஏட்டில் செய்தி வெளிவந்திருப்பதை பார்த்து திடுக்கிட்டேன்.
Òமாநில சுயாட்சி மற்றும் மத்திய&மாநில உறவுகளுக்கு குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கியது தி.மு.க. அத்தகைய பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்ற கழகமாக மாறி, கொள்ளையடித்த பணத்தை தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயல்வதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறதுÓ என பிரகாஷ் காரத் கூறியிருக்கிறார்.
அவரோடு குடுமி பிடி சண்டையில் ஈடுபட நான் விரும்பவில்லை. அவர் எழுப்பியுள்ள ‘குடும்ப முன்னேற்ற கழகம்’ என்ற குற்றச்சாட்டுக்கு அவரோடு இணைந்து இயக்கப் பணியாற்றும் பிருந்தா காரத் அவர்களே விடையாகவும் விளக்கமாகவும் விளங்கும்போது அந்த குற்றச்சாட்டை தவிர்த்து, Òஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயல்வதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறதுÓ என்று கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மாத்திரம் பதில் சொல்ல விரும்புகிறேன்.
கொள்கை அடிப்படையில் நானும் கழகமும் விடாப்பிடியாக இருந்து இலங்கை பிரச்னையிலும் மத்திய மாநில உறவுகள் பிரச்னையிலும் Òநெருக்கடிக் கொடுமைக்கு ஈடு கொடுத்து இந்தியாவிலேயே சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இடம் தமிழ்நாடு தான்Ó என்று தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் சென்னை கூட்டத்தில் பாராட்டிய அளவுக்கு நானும் கழகமும் நிமிர்ந்து நின்றபோது அதைப் பார்க்காமல் இருந்து விட்டாரே & அல்லது பார்த்தும் இப்போது அதை மறந்து விட்டாரே காரத் என்பதை நினைக்கும்போது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment