தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் 19.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 13ம் தேதி வாக்குச் சீட்டு அடங்கிய உறைகளை உரியவர்களிடம் சேர்க்க சென்ற தபால் துறை ஊழியரிடம் பெருந்தொகை கொடுத்து நூற்றுக்கணக்கான தபால் ஓட்டு உறைகளை பெற்றுள்ளனர். அவற்றை பூர்த்தி செய்து கள்ள ஓட்டு போட முயன்றபோது பிடிபட்டு, அந்த தபால் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 13ம் தேதி காலை 8 மணி வரை தபால் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியினர், மற்ற கட்சியை சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் சிலர் தபால் ஓட்டு போடுவோரின் வீடுகளை தேடிச்சென்று தமக்கே வாக்களித்து அந்த தபாலை தங்களிடமே கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகின்றனர். சிலர் பணத்தை காட்டி பேரம் பேசி வருகின்றனர்.
எனவே, தபால் ஓட்டு போடுவோரின் உயிருக்கும், உடைமைக்கும் தேர்தல் ஆணையம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், அந்த உத்தரவை ரத்து செய்து உடனடியாக புதிய தேதியை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment