மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி ஆகியோர், ஜைன சமயத்தை சார்ந்தோர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் .
வர்த்தமான மகாவீரர் பிறந்த திருநாள், 16.04.2011 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய பீகார் மாநிலத்தில் பாட்னா நகருக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.599ம் ஆண்டில் பிறந்த வர்த்தமானர், தமது செல்வத்தை எல்லாம் மக்கள் பலருக்கும் தானமாக வழங்கித் துறவு பூண்டு, விருப்பு வெறுப்புகளை வென்றவர் என்பதால், ‘‘மகாவீரர்’’ என வரலாற்றில் போற்றப்படு கிறார்.

இவர், கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பேராசை கொள்ளாமை முதலிய நல்லறங்களை மக்களுக்கு வலியுறுத்தி, ஜைன சமயக் கோட்பாடுகளைப் பரப்பியவர். மக்களிடம் கேள்விகளைக் கேட்டு, அவர்கள் தரும் விடைகளின் மூலமே தமது சிந்தனைகளை மக்களுக்கு வலியுறுத்தியவர்.
‘‘ஒருவர் கூறினார் என்பதற்காக கடும் வெப்பத்தால் கனிந்து சிவந்த இரும்புக் கம்பியை கையில் பிடிப்பீர்களா? அது உங்களால் முடியாதல்லவா? அப்படியானால் மற்றவரை நீங்கள் அதுபோல் செய்யச் சொல்வது முறையாகுமா? துன்பம் என உங்களால் தவிர்க்கப்பட்டதை மற்றவரிடம் நீங்கள் வலியுறுத்துவது சரியாகுமா?’’ எனக்கேட்டு, அதன்மூலம் ‘பிற உயிருக்கு இன்னா செய்தல் ஆகாது’ என்னும் அறத்தை வலியுறுத்திய மாமனிதர் மகாவீரர். அவர் பிறந்த திருநாளில் அவர் அறிவுறுத்திச் சென்ற சிந்தனைகளை மனதில் பதித்து, அனைவரிடமும் அன்பு செலுத்தி மனிதநேயம் வளர்ப்போமாக. மகாவீரர் பிறந்த திருநாளைக் கொண்டாடி மகிழும் ஜைன சமயம் சார்ந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாக்குகிறேன்.
No comments:
Post a Comment