கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

நலத்திட்டங்கள் வீடுதேடிவர திமுகவுக்கு வாக்களியுங்கள் - நடிகை குஷ்பு பிரசாரம்


நலத்திட்டங்கள் உங்கள் வீடு தேடி வர திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று நடிகை குஷ்பு கூறினார்.
உத்திரமேரூர் திமுக வேட்பாளர் பொன்.குமாரை ஆதரித்து நடிகை குஷ்பு உத்திரமேரூர், பெருநகர், மானாம்பதி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் கருணாநிதி, ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி உட்பட பல்வேறு நலத் திட்டங்களை நூற்றுக்கு நூறு நிறைவேற்றி மக்கள் மனங்களில் நிறைந்துள்ளார்.
ஆனால் எதிர்கட்சிகள், பொய் பிரசாரம் செய்கின்றனர். அவர்களது பொய் பிரசாரத்தை. நீங்கள் நம்பக்கூடாது. என்றென்றும் மக்களுக்காகவே பாடுபடும் கருணாநிதி, 6 வது முறையாக முதல்வராக வந்தால்தான் தற்போது உள்ள வளர்ச்சி பணிகளும், அடுத்து வரும் வளர்ச்சி பணிகளும் உங்கள் வீடு தேடிவரும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.

No comments:

Post a Comment