கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 26, 2011

திமுக உறவில் பாதிப்பில்லை: காங்கிரஸ்


திமுக காங்கிரஸ் உறவில் விரிசல் வராது; எப்போதும்போல கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2 வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்து இருக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. காங்கிரஸ் உறவு பாதிக்கப்படுமா என்று டெல்லியில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஸ் திவாரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:


2ஜி முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணைக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. 2ஜி முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின் எந்த காலக்கட்டத்திலும் மத்திய அரசின் தலையீடு இருந்தது கிடையாது. விசாரணை மேற்கொள்வதில் சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.

அரசியலில் யதார்த்த நிலைதான் கூட்டணியை நிர்ணயிக்கிறது. குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், அக் கட்சியுடனான உறவில் பாதிப்பில்லை. எனவே திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். 2006ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதன் பிறகு 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் களத்தை சந்தித்தோம். இரு தேர்தல்களிலும் எங்களது கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளோம். இந்தத் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

No comments:

Post a Comment