திமுக ஆட்சியை தான் மக்கள் விரும்புகின்றனர் என நடிகர் சந்திரசேகர் பேசினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நீதிராஜனை ஆதரித்து, விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் நடிகர் சந்திரசேகர் திறந்த வேனில் 05.04.2011 அன்று இரவு பிரசாரம் செய்தார்.
அப்போது, நடிகர் சந்திரசேகர் பேசியதாவது:
தமிழக முதல்வர் தலைமையிலான திமுக ஆட்சியில் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு, 108 ஆம்புன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம் என பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தேர்தல் அறிக்கையில் கூட எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் திமுக ஆட்சியை தான் விரும்புகின்றனர். சினிமா படங்களில் புள்ளி விவரங்களுடன் பேசும் விஜயகாந்த், சமுதாயத்தில் ஒன்றும் செய்ய முடியாது.
அவர் தினமும் ஒரு காமெடி, கூத்து செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் அரசியல் காமெடியன் விஜயகாந்த். இவரை சமாளிக்க தான் கருணாநிதி பிரசாரத்துக்கு காமெடியன் வடிவேலுவை தேர்வு செய்துள்ளார்.
திமுக அறிக்கையை காப்பியடித்தவர் ஜெயலலிதா - சேலத்தில் நடிகர் பாக்யராஜ் பிரசாரம் :
திமுக அறிக்கையை காப்பியடித்த ஜெயலலிதா அதற்கு முன்பு ‘அ‘வை போட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளார் என சேலத்தில் நடிகர் பாக்யராஜ் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் நடிகர் பாக்யராஜ் பேசியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, திருமண உதவி, போலீசில் வேலை, உள்ளாட்சி அமைப்புகளில் பதவி ஆகியவற்றை வழங்கியவர் கலைஞர். ரூ.2க்கு அரிசி, இலவச கலர் டிவி, வழங்கப்படும் என கலைஞர் அறிவித்த போது, கஜானாவில் பணம் இல்லை, வாய்ப்பே இல்லை என்றும் நம்பவேண்டாம் என்றும் ஜெயலலிதா கூறினார். ஆனால் அவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறை அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். திமுக அறிக்கையை காப்பியடித்த ஜெயலலிதா அதற்கு முன்பு ‘அ‘வை போட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளார். மகளிர் திருமண உதவியை நிறுத்திவிட்டு தற்போது 4 கிராம் தங்கம் வழங்குவதாக எப்படி அறிவித்தீர்கள். இலவச மின்சாரம், குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டம் ஆகியவை உங்கள் ஆட்சியில் நிறுத்தப்பட்டது. தற்போது வழங்கப்படும் என்று எப்படி அறிவித்தீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு ஜெயலலிதாவால் பதிலளிக்க முடியவில்லை.
தமிழகத்தில் 2லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் வேலை இழந்த 3 லட்சம்பேருக்கு வயது உச்சவரம்பை 35 ஆக தளர்த்தி வேலை வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால்தான், 4 மற்றும் 6 வழி சாலைகள், விமானநிலைய விரிவாக்கம், சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்து வமனை நமக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
No comments:
Post a Comment