
சொன்னதைச் செய்வோம்... செய்வதைத்தான் சொல்-வோம்...’ என்ற தாரக மந்திரத்தை மூச்சாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை நடத்தி வருகின்ற மிகப் பெரிய இயக்கம் தி.மு.க.
அரசியல் வரலாறுகளை படைத்த இயக்கமான தி.மு.க.வுக்கு தேர்தலை சந்திப்பது என்பது புதிது அல்ல. மூத்த மாநிலக் கட்சியான இந்த இயக்கம், தன்னுடைய ஆட்சிப் பொறுப்பு மூலமாக சாதித்த சாதனைகள் ஏராளம்.
மிகப் பெரிய அளவில் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டு, சமுதாய மாற்றங்களை உருவாக்கிய இயக்கம். இடஒதுக்கீட்டுக் கொள்-கைகள் இந்திய அளவிலும் நடை-முறைப்-படுத்தப்-படுவதற்கு மிக முக்கிய காரணம் தி.மு.கழகம்தான்.
வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற பல்-வேறு புரட்சித் திட்டங்-களிலும் திராவிட முன்-னேற்றக் கழ-கத்தின் பங்-களிப்பு நிறைய. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களும், சிறு-பான்மை இனத்-தவரும் தங்களுக்கு பா-துகாப்-பாக கருதுவது, நம்புவது திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான்.
தமிழகத்தில் அடுத்து யாருக்கு ஆட்சிப் பொறுப்-பை வழங்குவது என்பதற்காகத்தான் வரும் ஏப்ரல் 13&ல் தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்தும் தலைவர் கலைஞர் தலைமையில்தான் ஆட்சி அமையப் போகிறது என்பதை தீர்மானித்துவிட்டு, நடக்கும் தேர்தல் இது என்று சொல்வதுதான் சரி. அந்தளவுக்கு சிறப்பானதொரு ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது.
மதக் கலவரங்கள் இல்லாமல், ஜாதி சச்சரவுகள் அதிகமாக இல்லாமல் தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாகவே இருந்திருக்கிறது. காரணம்&கலைஞர்!
தி.மு.க. ஆட்சிக் காலத்துக்கு முன்பு நடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் பார்ப்போம்... வேலை நியமன தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. வேலை கொடுக்காமல் இளைஞர்களை சோம்பேறிகளாக்குவதற்கு அரசாணைகள் போடப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த உத்தரவுகள் தூக்கியெறியப்பட்டு, ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
இன்று இந்தியாவில் பயன் படுத்தப்பட்டுவரும் கார்களில் ஏறத்தாழ 20 சதவீதமும், செல்-போன்களில் 60 சதவீதமும் தமிழ்நாட்டில் தயாரானவை. அதற்குக் காரணம், தமிழகத்தில் தி.மு.க. அரசு ஏற்படுத்திய தொழில் புரட்சிதான். உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதி மேம்பாடு, பாலங்கள் அமைக்கும் பணிகளெல்லாம் திறம்பட நடந்திருக்கிறது.
அரவாணிகளுக்கும்கூட நலவாரியம் அமைத்து அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுத்த கலைஞர், உடல் ஊனமுற்றோரை ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று அழைக்க வைத்து, அவர்களுக்கு தனித் துறையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இளம்பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற திருமண உதவித் திட்டம், முதியோர்களுக்கு உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்களுக்கு உதவித் தொகை என்று சமூகத்தின் அனைத்து தரப்பு மக்கள் வாழ்விலும் விளக்கேற்றி வைத்திருக்கிறது தி.மு.க. அரசு.
மக்கள் விரோத சக்திகள் எல்லாம் ஒன்றுகூடி கலைஞரை வீழ்த்திவிடலாம் என்று கங்கணம் கட்டித் திரிகின்றன. ஆனால், அது நடக்காது.
முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களை செயல்படுத்தாமல் நிறுத்திய ஜெயலலிதாவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொந்த வளர்ச்சியைத் தவிர வேறு எந்த வளர்ச்சியும் அவர் கண்ணுக்குப் புலப்படாது. அதுபற்றியெல்லாம் ஒரு நாளும் அவர் கவலைப்பட்டதில்லை. தன்னுடைய கட்சி அலுவலகத்துக்கு வருவதைக்கூட அவர் செய்தியாக்கும் அளவுக்குத்தான், கட்சியை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். சிறுதாவூரில் பெரிய பங்களாவைக் கட்டி அவ்வப்போது ஓய்வெடுக்கச் செல்லும் அவர், தேர்தல் நேரத்தில்தான் கட்சிக்காரர்களை நினைத்து வெளியே வருவார். அதுபோதாதென்று, ஊட்டியிலும் தேயிலை பண்ணையை விலைக்கு வாங்கி, அங்கேயும் ஓய்வெடுக்கச் செல்வதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.
அவரால், அவரை சார்ந்து நிற்கும் ஒரு தனிப்பட்ட குடும்பம்தான் பலனடைந்திருக்கிறதே தவிர, வேறு யாருக்கும் எந்த புண்ணியமுமில்லை. தமிழ் நாட்டையோ, தமிழ் மக்களையோ முன்னேற்றுவதற்கு என்று ஒரு செயலையும் செய்தவர் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் சமூக நீதி என்ற வலிமைமிக்க கொள்கையால் தங்களுடைய இடத்தை இழந்த வைதீகவாதிகளின் கோபம், தலைவர் கலைஞர் மீது பாய்ந்திருக்கிறது. அதனால், அந்த வைதீகவாதிகளும் பிற்போக்குவாதிகளும் ஜெயலலிதாவை தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
எனவே, தமிழர்கள் இந்த நேரத்தில் விழிப்புணர்வோடு இருந்து பழைமைவாதிகளின் எண்ணம் ஈடேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், வளர்ச்சிக்கும் பிற்போக்குத்தனத்துக்கும் இடையில் நடக்கப் போகும் தேர்தல். இதில், ஜெயலலிதா வெற்றியடைந்தால் பிற்போக்குத்தனம் தலைதூக்கி விடும். தமிழகத்தின் மொத்த வளர்ச்சியும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும். எனவே, மக்கள் துளியும் ஏமாறாமல் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை மட்டும் மனதில் கொண்டு, கலைஞருக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும்.
தி.மு.க. அணிக்கு எதிராக களத்துக்கு வருபவர்களைப் பாருங்கள். கொள்கையை அடமானம் வைத்திருப்பவர்கள்... தொகுதிகளுக்காக மானம் மரியாதையையும் விட்டுக் கொடுத்தவர்கள்... இதெல்லாம் மக்களுக்கும் நன்கு தெரியும் என்பதால், கலைஞர் ஆறாவது முறையும் பெரு வெற்றியடைந்து ஆட்சிப் பொறுப்புக்கு வருவார். இது நிச்சயம்.
கழக அரசின் சாதனைகள் ஒருபுறமிருக்க, தேர்தல் அறிக்கையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதால், ‘புதிய ஆட்சி... அது தி.மு.க. ஆட்சி...’ என்ற சந்தோஷச் செய்தியோடு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.
No comments:
Post a Comment