கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

தமிழக மக்கள் ஆரவார ஆதரவு திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - நடிகர் வடிவேலு


தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று 6வது முறையாக கருணாநிதியை முதல்வராக தேர்ந்தெடுப்பது உறுதி என்று நடிகர் வடிவேலு கூறினார்.
விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் நடிகர் வடிவேல் 13.04.2011 அன்று காலை 9 மணிக்கு வாக்களிக்க வந்தார். விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் க.தனசேகரன், வடிவேலை வரவேற்று வாக்குச்சாவடி மையத்துக்கு அழைத்து சென்றார். வாக்களித்து விட்டு வெளியே வந்த நடிகர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 20 நாள் சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். இந்த கூட்டணிக்கு எல்லா இடங்களிலும் மக்கள் ஆரவார ஆதரவு தெரிவித்தனர். காரணம் திமுகவின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இன்று மக்கள் சந்தோஷமாக ஓட்டு போடுகிறார்கள். நான் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து விஜயகாந்த் தோலை உரிச்சு காட்டியிருக்கிறேன். வீட்டுக்கு ஒருவர் குடித்தாலே அந்த வீடு நன்றாக இருக்காது. நாட்டுக்கே தலைவராக வர ஆசைப்படுபவர் குடித்து விட்டு பிரசாரத்தில் உளறலாமா, அடிக்கலாமா? முதல்வர் கருணாநிதியை 6வது முறையாகவும் தமிழக மக்கள் முதல்வராக தேர்ந்தெடுப்பது உறுதி.

இவ்வாறு வடிவேலு கூறினார்.

No comments:

Post a Comment