மருத்துவம், கல்விக்காக 32 பேருக்கு தலா ஸீ10 ஆயிரம் வீதம் ஸீ3.20 லட்சத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
இதுதொடர்பாக, திமுக தலைமைக் கழகம் 16.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக முதல்வர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த
ஸீ5
கோடியை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து, அதில் கிடைக்கும் வட்டியிலிருந்து மாதம்தோறும் ஏழை, எளியவர்களுக்கு உதவித் தொகை, கடந்த 2005 நவம்பர் முதல் வழங்கப்பட்டு வந்தது.
ஸீ5
கோடியில்
ஸீ1
கோடியை 10&1&2007ல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு கருணாநிதி வழங்கினார். மீதமுள்ள
ஸீ4
கோடியில் கிடைக்கும் வட்டி தொகையில் மருத்துவம், கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
2005 நவம்பர் முதல் இதுவரை
ஸீ1
கோடியே 95 லட்சத்து 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் கிடைத்த வட்டியில் மருத்துவம், கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு தலா
ஸீ10
ஆயிரம் வீதம் 3.20 லட்சத்தை முதல்வர் கருணாநிதி 16.04.2011 அன்று வழங்கினார்.
நிதி பெறுவோருக்கு தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment