‘ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் ஆயிரம் கோடியை வாங்கிக்கொண்டு வைகோவை வெளியேற்றினார் ஜெயலலிதா’ என நாஞ்சில் சம்பத் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்
தேனி மாவட்ட மதிமுக சார்பில், தேனி நகரில் பட்டிமன்றம் நடந்தது. ‘இன்றைய சூழலில் தமிழகம் ஆளுமைப்படுகிறதா; அடங்கிக் கிடக்கிறதா’ என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை மாவட்டச் செயலாளர் சந்திரன் துவக்கி வைத்தார். நடுவராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
‘இந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக போட்டியிடுவதில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒரு துரோகக் கும்பலால் மதிமுக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இன்றைய சூழலில், தனியாக போட்டியிட்டால், ஒரு கட்சியிடம் பெட்டி வாங்கிக் கொண்டு வைகோ போட்டியிட்டார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்கவே தேர்தல் புறக்கணிப்பு நிலையை எடுத்துள்ளோம். நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்க ளைப் புறக்கணித்தது ஏன்?

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வரும் நச்சுப்புகையால் தமிழன் வாழ்வு பாதித்து விடக்கூடாது என்பதற்காக வைகோ போராடுகிறார். இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய் தருவதற்குக் கூட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகி அனில் அகர்வால் முயற்சித்த போது, அதைப் புறந்தள்ளியவர் வைகோ. சுப்ரீம் கோர்ட் வைகோவை வைத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் விஷயத்தில் வைகோ மற்றும் அவரது சகாக்கள் குரல் சட்டசபையில் ஒலிக்கக்கூடாது என்பதற்காக அனில் அகர்வால் கொடுத்த ஆயிரம் கோடியை வாங்கிக் கொண்டு, ஜெயலலிதா திட்டமிட்டு வைகோவை வெளியேற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல், தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவிடம் இருந்து பல்லாயிரம் கோடி வாங்கிக் கொண்டுதான் மதிமுகவை ஜெயலலிதா புறக்கணித்திருக்கிறார் என நான் குற்றம் சாட்டுகிறேன். மதிமுக தற்போது எடுத்துள்ள தேர்தல் புறக்கணிப்பு, கட்சியை வலுவடையச் செய்யும். தென்மேற்கு பருவக்காற்று தேனியில் திரண்டால் அது தென்றல், வைகோ தொண்டர்கள் தேனியில் திரண்டால், போடியில் ஏற்படும் சூறா வளி.
இவ்வாறு சூசகமாக போடி பகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாகவும், அதிமுக வேட்பாளர் (ஓ.பி.எஸ்) எதிராகவும் சூசகமாக பேசினார்.
இவ்வாறு சூசகமாக போடி பகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாகவும், அதிமுக வேட்பாளர் (ஓ.பி.எஸ்) எதிராகவும் சூசகமாக பேசினார்.
கூட்டத்தில், மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கம்பம் பாஸ்கரன், பரசுராமன், பொன்முடி, ராசு, நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், தங்கராசு, நகரச் செயலாளர்கள் பெரியகுளம் முகமது சலீம், கம்பம் ராமகிருஷ்ணன், சின்னமனூர் பாலமுருகன், ஒன்றியச் செயலாளர்கள் தேனி போஸ், உத்தமபாளையம் ராஜாராம், பெரியகுளம் பெரியசாமி, கம்பம் அம்சராஜன், சின்னமனூர் தவச்செல்வம் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment