கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

69% இட ஒதுக்கீட்டை நிரந்தரமாக்க நடவடிக்கை - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு


தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சத்தியமூர்த்தி பவனில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 09.04.2011 அன்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தேசிய விளையாட்டு நிறுவனம் தமிழகத்தில் தொடங்கப்படும்.
* தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினருக்கு அளிக்கப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* முல்லை பெரியாறு அணை பிரச்னையில் இரு மாநிலங்களுக்கும் இடையில் உள்ள நட்புறவு பாதிக்காத வகையில் சுமுக தீர்வு காண நடவடிக்கை.
* நீர் நிலைகள், ஆற்றுப்படுகைகளை ஆக்கிரமிப்பவர்களை கடுமையாக தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வருவோம்.
* சேது சமுத்திர திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்போம்.
* தேசிய நதிகளை இணைக்க உறுதியுடன் செயல்படுவோம். முதற்கட்டமாக தென்னக நதிகளை இணைப்போம்.
* மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நதிநீரை அணை கட்டி சுரங்கம் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வருவோம்.
* கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியலின மக்களுக்கும், பட்டியலின மக்களுக்குரிய உரிமைகளை வழங்க வலியுறுத்துவோம்.
* தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுப்போம்.
* ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த துணை நிற்போம்.
* பனை, தென்னை தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க முயற்சி எடுப்போம்.
* விருப்பத்தின் அடிப்படையில் மாணவ, மாணவியர்கள் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற 3வது மொழி பயில வசதி செய்வோம்.
* பொறியியல், மருத்துவக் கல்வி நிலையங்கள் தரத்தை உயர்த்துவோம். நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம்.
* 8 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவச கம்ப்யூட்டர் படிப்பு அளிக்கப்படும்.
* சத்துணவு திட்டத்தில் தவறுகள் நடக்காமல் பாதுகாக்க அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
* போக்குவரத்து வாகனங்களில் புகைபோக்கும் கருவியை மேல் நோக்கி வைக்கப்படும்.
* ஊதிய உயர்வு, பணி நேரம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் காவலர்கள் நலன் பாதுகாப்போம். பெண் காவலர்கள் பாதுகாப்புக்கு கண்காணிப்பு ஆணையம் அமைப் போம்.
* திருப்பூர், ஈரோடு, வாணியம்பாடி மற்றும் பல இடங்களில் உள்ள மாசு கட்டுப்பாட்டு பிரச்னைகளுக்கு அரசு செலவில் முடிவு காண்போம்.
* மத்திய அரசு நெசவாளர் நலனுக்கும், நெசவுத் தொழில் வளர்ச்சிக்கும் தேசிய அளவில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு பல புதிய திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறது. நெசவு தொழில் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்போம்.
* நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வினியோகத்தை சீர்செய்யும் நடவடிக்கை எடுப்போம்.
* டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு பெற நடவடிக்கை எடுப்போம்.
* '108’ இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற ஒத்துழைப்பு தருவோம் - தங்கபாலு :

திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற அனைத்து ஒத்துழைப்பையும் கொடுப்போம்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 09.04.2011 அன்று வெளியிட்டார். முதல் பிரதியை மாநில தலைவர் தங்கபாலு பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சமூக பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வருவதில், காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும், இன்னும் சாதிக்க வேண்டியதும் நிறைய இருக்கிறது. மக்கள் நலனை முன்வைத்து பல்வேறு அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக தந்துள்ளோம். வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள், சமூக நீதி, மதச்சார்பற்ற நிர்வாகம் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்ட புதுமையான இயக்கமாக காங்கிரஸ் நடைபோடும். அத்துமீறல்கள் போன்ற அவலங்கள் தடுக்கப்படும். சட்டத்தின் மேன்மையையும், சட்டத்தின் ஆட்சியையும் போற்றி, அதற்கேற்ப நடைமுறைகள் அமைக்கப்படும்.
தூய்மையான, சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் நிர்வாகம் நடைபெற ஒத்துழைப்போம். லஞ்ச கொடுமைகளையும், நிர்வாக திறமையின்மையையும் வேரறுத்து ஒழிப்போம். திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற அனைத்து ஒத்துழைப்பையும் கொடுப்போம். திமுக& காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகம் வளர்ச்சியை நோக்கி வீறு நடைபோடும்.
இந்த கூட்டணிதான் 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் ஐந்தாண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இவ்வாறு தங்கபாலு பேசினார்.

எல்லா துறைகளிலும் முன்னேற்றம் தமிழக நிதிநிலை வலுவாக இருக்கிறது - பிரணாப் முகர்ஜி :
''எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மாநிலத்தின் நிதிநிலை, பொருளாதாரம் வலுவாகவும், திடமாகவும் இருக்கிறது” என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 09.04.2011 அன்று வெளியிட்டார். அதை மாநில தலைவர் தங்கபாலு பெற்றுக் கொண்டார். அப்போது, பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மையப்படுத்தி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான உறவு இருப்பதால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஆதாரங்கள், சலுகைகள், திட்டங்கள் தங்கு தடை யின்றி வந்து கொண்டிருக்கிறது.
12வது நிதி ஆணைய பரிந்துரையின் பேரில் தமிழகத்துக்கு ரூ.36,680 கோடி ஒதுக்கப்பட்டது. இப்போது, ரூ.83,437 கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது 127 சதவீதம் அளவுக்கு கூடுதல் நிதியாகும். அதேபோல், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கான செலவு நிதி ரூ.9,130 கோடியிலிருந்து ரூ.17,500 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு ஒருநாள் கூட ரிசர்வ் வங்கியில் மேல்வரை பற்று (ஓவர் டிராப்ட்) வாங்கியது கிடையாது. கடந்த மார்ச் 24ம் தேதியன்று தமிழக அரசின் ரொக்க இருப்பு ரூ.13,537 கோடியாகும். தமிழகத்தின் நிதிநிலை, பொருளாதாரம் வலுவாகவும், திடமாகவும் உள்ளது.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்துள்ளது. தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. பன்னாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது. அனைத்து வகை யி லான வளர் ச்சியிலும், திட்டங் களை செயல்படுத்துவதிலும் தமிழகம் சிறந்த மா நிலமாக விளங்குகிறது.
இவ் வா று பிரணாப் முகர்ஜி கூறினார்.


No comments:

Post a Comment