கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பவர் முதல்வர் கருணாநிதி - நடிகர் வடிவேலு பேச்சு


‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பவர் முதல்வர் கருணாநிதி’ என்று நடிகர் வடிவேலு கூறினார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் கிருஷ்ணசாமியை ஆதரித்து திருக்கானூர்பட்டியில் 08.04.2011 அன்று நடிகர் வடிவேலு பேசியதாவது:
நான் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து அதை நிறைவேற்றியவர் முதல்வர் கருணாநிதி. சொன்னதை மட்டுமின்றி சொல்லாத பல நல்ல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார். அதை நாம் ஒவ்வொருவரும் நினைத்துப்பார்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ. 6 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். குழந்தைகள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், தாய்மார்களுக்கு மட்டுமல்ல வயிற்றிலிருக்கும¢ சிசுவுக்கும் நலத்திட்டம் கொடுத்தவர் முதல்வர். ஏழை மக்களுக்கு அவர் அள்ளிக்கொடுக்கும் நலத்திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஏழைவீட்டு பிள்ளைகள் பக்கத்து வீட்டிலிருக்கும் ரேடியோவை அதிசயமாக பார்த்து வந்தனர். ஆனால், அனைத்து குடும்பங்களுக்கும் இலவச கலர் டிவி கொடுத்தவர் முதல்வர். எங்கள் வீட்டுக்கும் டிவி வந்தாச்சு என்று ஏழை குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை பார்க்கையில் பேரானந்தமாக உள்ளது.
அப்படி ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பவர் முதல்வர் கருணாநிதி. இப்படி முதல்வர் கருணாநிதி அரசின் அனைத்து திட்டங்களாலும் பயன்பெறும் நம்மிடம், எதிர்க்கட்சி தலைவி வந்து ஓட்டு மட்டும் கேட்டால் போட்டுவிடுவோமா? திமுகவின் அறிக்கையையும், திட்டங்களையும் காப்பியடித்தவர்கள் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூறிய திட்டங்கள் வரும், ஆனா வராது. ஆனால், திமுக தலைவர் கூறிய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக உங்கள் வீட்டுக்கே வந்து சேரும்.

இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.

No comments:

Post a Comment