கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

அதிக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதால் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் ஆனது தமிழகம் - முதல்வர் கருணாநிதி


பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
திருவாரூரில் 11.04.2011 அன்று மாலை முதல்வர் கருணாநிதி பங்கேற்ற தேர்தல் பிரசார நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
நான் திருவாரூரில் எத்தனையோ கூட்டங்களில், எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினாலும், எத்தனையோ விழாக்களில், வைபவங்களில் கலந்து கொண்டிருந்தாலும் கூட இன்றைக்கு மணவறைக்கு வந்துள்ள புதுப்பெண் போல நான் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கி றேன். காரணம், மற்றவர்களுக்கு ஆதரவு கேட்டும், துணை நின்றும் ஒவ்வொரு வேட்பாளரையும் பெயர் சொல்லி மாநிலம் முழுவதும் வாக்கு கேட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியிருக்கிறேன்.
என்னை முதன் முதலாக அண்ணா தேர்தலில் போட்டியிட ஆணையிட்டார். நானும் நண்பர்களிடம் கலந்துபேசிவிட்டு நாகை தொகுதியில் போட்டியிடுகிறேன் என்றேன். அதற்கு அண்ணா போட்டியிடுவதாக இருந்தால் திருவாரூர் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும். அது தனி தொகுதியாக இருப்பதால் நீ குளித்தலையில் போட்டியிடு என்றார். அப்படியே நானும் குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
நான் இதுவரை 11 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். தஞ்சை, சென்னை போன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 11 முறை சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்கு சென்றுள்ளேன். இப்போது நீங்கள் தேர¢ந¢தெடு¢த¢து அனுப்பினால் 12வது முறையாக சட்டமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இன்று கூட நான் பிரசாரம் செய்ய சென்றபோது வழியில் ஒரு சிறுமி எனக்கு ஒரு புகைப்படத்தை பரிசாக வழங்கினார். நான், போர்டு ஹை ஸ்கூலில் படித்தபோது எடுத்த படம். அதில் உள¢ளவர்கள் எல்லாம் இன்று இல்லை. அவர்கள் எல்லோரையும் நினைவிருக்கிறது.
அந்த பள்ளியில் இந்தி கற்பிக¢க வந்த ஆசிரியரை எனது நண்பர்களோடு சேர்ந்த கேலி செய்தது மறக்க முடியாதது. நான் என்றைக்கும் ஆத்திகருக்கு எதிரானவனாக செயல்பட்டதில்லை. அண்ணாவின் கொள்கையான பகுத்தறிவு கொள்கையையும், சுயமரியாதையையும் மாணவ பருவத்திலேயே கடைபிடித்தேன். இப்போதும் நான் சுயமரியாதைகாரன்தான்.
நான் ஆத்திகர்களுக்கும் பக்தர்களுக்கும் தீங்கு விளைவித்தவன் அல்ல. எந்த ஒரு கருத்தையும் மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். திணிக¢க கூடாது என்பது எனது வாதம். இதுதான் அண்ணாவின் வாதம். எனவே பகுத்தறிவு என்பது பரப்பப்பட வேண்டுமே தவிர ஊட்டப்பட கூடாது.
நான் சட்டமன்றத்தில் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காளிமுத்து என்னை பார்த்து, இன்று திருவாரூரில் தேர் ஓடுகி றதா என்றார். தெரியவில்லை என்றேன். அதற்கு காளிமுத்து, ‘ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி தவிக்கையில் தேரோட்டம் உனக்கெதுக்கு தியாகேசா’ என பாடல் எழுதிய நீங்கள், இப்போது வாழ்த¢து செய்தி அனுப்பியிருக்கிற¦ர்களே என கேட்டார்.
அதற்கு நான், எனது ஆட்சியில் தற்போது ஏரோட்டும் உழவரெல்லாம் நல்ல நிலைய¤ல் இருக்கிறார்கள். எனவேதான் தேரோட்டம் என கூறினேன். அதனால் தேர் ஓடுகிறது என்றேன். நாங்கள் என்றைக்கும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அதே போல் சிலர் திராவிடத்தை வீழ்த்திவிட, அழித்திட துடிக்கின்றனர். திமுக இருக்கும் வரை அவர்களது எண்ணம் நிறைவேறாது. திராவிடத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கூட தனது கட்சிக்கு திராவிடத்தின் பெயரை சூட்டியுள்ளனர். அப்படியாவது அவர்கள் திராவிடத்தின் பெயரை கூறி கொண்டால் நமக்கு மகிழ்ச்சிதான்.
தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. அந்த திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என சோனியாகாந்தியும், தமிழகம் இந்தியாவில் முன்னணி மாநிலமாக முன்னேறி வருகிறது என மத்திய அமைச்சர¢ பிரணாப் முகர்ஜியும் பாராட்டியுள்ளனர். இதனை கருத்தில்கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
நான் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், எதிர்க்கட்சியினரை, என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை எதிரியாக கருதமாட்டேன். நான் தேர்ந்தெடுக¢கப்படும் திருவாரூர் தொகுதியின் வளர்ச்சிக்காக அவர்களையும் அழைத்து கலந்தாலோசித்து திட¢டத்தை செயல்படுத்துவேன். திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் 75 சதவீதம் முடிந்துவிட்டது. மீதம் உள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்


வெற்றிக் கூட்டணி :

முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பிரசாரத்தை முடித்து விட்டீர்கள். வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணி. மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். அதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கூட்டணிக்கு எத்தனை இடம் கிடைக்கும்?
தமிழகத்தில் மெஜாரிட்டியாக ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மையான தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இரண்டே நாளில் 184 கி.மீ. பயணம் செய்து முதல்வர் கருணாநிதி பிரசாரம் :

முதல்வர் கருணாநிதி இரண்டே நாளில் 184 கிலோ மீட்டர் சென்று பிரசாரம் செய்துள்ளார்.
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி, திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திலிருந்து தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்பு 11.04.2011 அன்று பிரசாரத்தை தொடங்கினார். தயாளு அம்மாள், முரசொலி செல்வம், டி.ஆர¢.பாலு எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், பாப்பாணாமங்கலம், மணக்கால், அய்யம்பேட்டை, அரசவனங்காடு, காப்பணாமங்கலம், சிமிழி, 52.புதுக்குடி, திப்பணம்பேட்டை, மஞ்சகுடி, இலையூர், செல்லூர், கொரடாச்சேரி மற்றும் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திரளான மக்கள் மத்தியில் முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்தார்.
அப்போது, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
சமூக நீதிக்காக போராடும் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுகிறோம். கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு எந்தெந்த திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தியது என்பதனையும், அந்த ஆட்சி மீண்டும் அமைந்தால், என்னென்ன திட்டங்கள் செயல்படுத¢தப்படும் என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அத்தகைய நல்ல திட்டங்கள் தொடரவும், தமிழகத்தில் நல்லாட்சி மீண்டும் அமையவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். அதுதான் ஏற்கெனவே திமுக அரசு புரிந்திட்ட சாதனைகளுக்கு அங்கீகாரமாக இருக்கும்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், திருவாரூர் தொகுதியில் திமுக என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. என்னைப¢பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். திருவாரூர் தொகுதி மேலும் வளர்ச்சி காணவும், இங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், எனக¢கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக்குங்கள்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
இரண்டே நாளில்...:
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல¢வர் கருணாநிதி, பிரசாரத்தின் கடைசி 2 நாட்களில் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம¢ மேற்கொண்டார். 10.04.2011 அன்று மதியம் திருவாரூர் பஸ் நிலையத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் அன்றிரவு தேவர்கண்டநல்லூர¤ல் பிரசாரத்தை முடித்தார். இதன் பயண தூரம் 88 கிமீ. 11.04.2011 அன்று காலை பவித்திரமாணிக்கத்தில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் கருணாநிதி குடவாசல், கொரடாச்சேரி வழியாக திருவாரூர் கீழ வீதி வந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரசாரத்தை முடித்தார். இதன் பயண தூரம் 96 கிமீ. கடந்த 2 நாட்களில் மட்டும் முதல்வர் கருணாநிதி 184 கிமீ தூரம் கிராமம் கிராமமாக சென்று திருவாரூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
9 குழந்தைக்கு பெயர் சூட்டினார்:
பிரசாரத்தின் போது சிமிழி கிராமத்தில், ஆரோக்கியதாஸ்& சுதா தம்பதியினரின் குழந்தைக்கு ஆதவன், பாஸ்கரன்& சுகுணா தம்பதியரின் குழந்தைக்கு கண்ணகி, ஜெயக்குமார்& மாலதி தம்பதியின் குழந்தைக்கு மல்லிகை, செல்லையன்& சுதா தம்பதியின் குழந்தைக்கு அழகிரி, பாஸ்கர்& வள்ளி தம்பதியின் குழந்தைக்கு மலர்விழி, குமார்& தேவி தம்பதியின் குழந்தைகளுக்கு கதிரவன், நெடுஞ்செழியன் என முதல்வர் பெயர் சூட்டினார். அதேபோல் இலையூர் கிராமத்தில் பாலகுமார்& தமிழ்மதி தம்பதியினரின் குழந்தைக்கு மனோன்மணி, ராமச்சந்திரன்& அகிலா தம்பதியினரின் குழந்தைக்கு பூங்கொடி என முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.


No comments:

Post a Comment