கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 5, 2011

தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சுறாவளி பிரச்சாரம்


ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் எண்ணற்ற துயரங்களை சந்தித்தனர் - டாக்டர் ராமதாஸ் :
ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்கள் எண்ணற்ற துயரங்களை சந்தித்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.
திருவாலங்காட்டில் திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் இ.ஏ.பி.சிவாஜியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
ஜெயலலிதாவின் பத்தாண்டு ஆட்சியில் எண்ணற்ற துயரங்களை மக்கள் சந்தித்துள்ளனர். ஜெயலலிதாவால் தமிழகத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. இதுவரை 30 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெண்கள், கருணாநிதி பெயரை குறிப்பிட்டு அவரால்தான் எங்கள் வயிறு நிரம்புகிறது. அவருக்குதான் எங்கள் ஓட்டு என்கின்றனர். ஆனால் ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுகிறது. அதை மக்கள் பொய்யாக்குவார்கள். சிவாஜியை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். சிவாஜி வெற்றி பெற்றால் அமைச்சராக வருவார்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
பாமக மாவட்ட செயலாளர் பாலயோகி, வி.சிறுத்தை மாவட்ட செயலாளர் பாலசிங்கம், திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் ரமேஷ்காந்த், வி.சிறுத்தைகள் ஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசுடன் இணைந்து சாதனை திட்டங்களை திமுக நிறைவேற்றும் - ப.சிதம்பரம் :

‘மத்திய அரசுடன் இணைந்து திமுக சாதனை திட்டங்களை நிறைவேற்றும்’ என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
திருவண்ணாமலை காந்திசிலை அருகே நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
இந்திய நாட்டில் 74 சதவீதமும், தமிழகத்தில் 80 சதவீதமும் படித்தவர்கள் உள்ளனர். அவர்கள் யார் ஆட்சிக்கு வந்தால் சாதனைகள் நடக்கும் என்று சிந்தித்து வாக்களிப்பார்கள். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் நடந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சொல்லாத திட்டங்களான கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட் டத்தையும் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி உள்ளார்.
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளைப்போல, ஜெயலலிதா ஆட்சியில் ஒரு சாதனையையாவது சொல்ல முடியுமா? ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ், டெஸ்மா, எஸ்மா சட்டங்கள், உழவர் சந்தைகளை மூடியது, முதல்வர் கருணாநிதியை கைது செய்ததுதான் நினைவுக்கு வரும். மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிற, இணைந்து பல திட்டங்களை நிறைவேற்றுகிற அரசு யாருடையது என்று சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் ஆணையம் பாகுபாடின்றி செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன் :

தேர்தல் ஆணையம் பாகுபாடின்றி செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். முன்னதாக நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த மாபெரும் பொதுக்கூட்டம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிய திட்டங்கள் தமிழகத்துக்கு சிறந்த அடித்தளமாக அமைய இருக்கிறது. தேர்தல் ஆணையம் அனைவருக்கும் சமமாக, பாகுபாடின்றி செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். அடுத்தவர்களை அவதூறு பேசி வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு கருத்து கணிப்புகள் முக்கியம் அல்ல, மக்கள் கணிப்புதான் முக்கியம். மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள், அதற்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு இறுதி கணிப்பாக இருக்க முடியும்.
காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் மாவட்டம் குமரி மாவட்டம். காங்கிரஸ் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் இங்கு மகத்தான வெற்றி பெறுவர். மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கட்சிகள் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளை அளிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் போட்டி வேட்பாளர்கள் குறித்து கட்சி தலைமை, அதிகாரபூர்வ வேட்பாளர்களையே ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுகிறது - தங்கபாலு :

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் நேற்று தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தீவுத்திடலில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வருகிறார். இந்த கூட்டம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். நடிகர் சிரஞ்சீவி, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழகம் வருகிறார். 2004ம் ஆண்டு முதல் இந்த கூட்டணிக்காக சோனியா காந்தி பிரசாரம் செய்தார். இன்று வரை அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
பிரசாரத்துக்கு வரும் ராகுல் காந்தி சென்னை வரும் திட்டம் இல்லை. முதல்வர் கருணாநிதி மீது மரியாதையும், மதிப்பையும் வைத்திருப்பவர் ராகுல் காந்தி. பண்பாட்டு அரசியலுக்கு இலக்கணமானவர் முதல்வர் கருணாநிதி என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். மூத்த தலைவர்களை மதிப்பவர். தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு எப்போதுமே போலியான ஒன்று. 2009ம் ஆண்டு தேர்தலில் இந்த கருத்து கணிப்புகளுக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைப்பற்றி காங்கிரஸ் கட்சி எப்போ தும் கவலைப்பட்டதில்லை. கூட்டணி பலம் எங்களை வெற்றி பெறச் செய்யும். ஒரு சிலர் செய்யும் செயல் எங்கள் வெற்றியை பாதிக்காது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு. இதனை உருவாக்கியது காங்கிரஸ்தான்.
இந்த ஆணையம் எல்லோருக்கும் பொதுவாக இயங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கைள் பாரபட்சம் காட்டுவதாக இருக்கிறது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். சில அதிகாரிகளை மிரட்டி மத்திய அமைச்சர் அழகிரி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை வன்மை யாக கண்டிக்கிறேன். அவர் பொறுப்பான தலைவர்.
இவ்வாறு தங்கபாலு கூறினார்

மேலும் தங்கபாலு கூறுகையில், “காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வரும் 6, 7ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு, கரூர், விளாத்திகுளம், காரைக்குடி ஆகிய இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்” என்றார்.





No comments:

Post a Comment