கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 16, 2011

அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு





சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர், அரசியலில் வில்லனாக மாறி கடந்த ஒரு வாரமாக காமெடியனாக மாறியுள்ளதைப் பார்த்து அனைவரும் சிரிப்பாய் சிரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் 06.04.2011 அன்று மாலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரசாரத்தை துவங்கினார்.
குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் வெப்படை செல்வராஜை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சட்டப்பேரவை தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் மீண்டும் முதல்வர் கலைஞர் தலைமையிலான ஆட்சி அமைய, அனைவரும் துணை நின்று ஆதரவு தர வேண்டும். அதற்காக உங்களை தேடி, நாடி வந்துள்ளேன்.
எந்த சூழ்நிலையிலும் உங்களுடன் இருந்து பணியாற்றியதால், உங்களை தேடி உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளேன். தேர்தல் நேரத்தில் சிலர் தனி விமானம், ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று, வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.
வானத்தை கிழிப்பேன், வைகுண்டத்தை காட்டுவேன், மணலை கூட கயிறாக திரிப்பேன் என்று கூறுவார்கள். தேர்தல் முடிந்ததும் கதை முடிந்தது என போய்விடுவார்கள். தேர்தல் வந்தால் மட்டுமே அவர்களுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வரும். தேர்தல் முடிந்தவுடன் கொடநாடு நினைவுக்கு வரும்.
இப்படிப்பட்ட தலைவருடன், மற்றொரு தலைவரும் கூட்டு சேர்ந்துள்ளார். சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர், அரசியலில் வில்லனாக மாறி, கடந்த ஒரு வாரமாக காமெடியனாக மாறியுள்ளதைப் பார்த்து அனைவரும் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.
சொந்த கட்சிக்காரர்களுக்கு கூட அங்கு பாதுகாப்பு இல்லை. கட்சி வேட்பாளரையே அடித்து உதைக்கும் நிலைதான் அங்கு உள்ளது. அந்த கட்சியில் ஒன்று அடி, இல்லாவிட்டால் குடி. இவருக்கு சரியான பதிலை, வைகைப்புயல் வடிவேலு சொல்லிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் காமெடியனாக இருந்த வடிவேலு, தற்போது கதாநாயகனாக மாறிவிட்டார்.
மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பினருக்கும் என்னென்ன திட்டங்கள் தரப்படும் என்று ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் முதல்வர் உறுதிமொழி கொடுத்துள்ளார். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பெண்களின் மேம்பாட்டுக்காக திமுக கூட்டணியை ஆதரியுங்கள்
குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் செல்வராஜின் சொந்த ஊரான வெப்படையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் கம்பீரமாக வளர்ந்துள்ளன. சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த தேர்தல் அறிக்கையில் பல சலுகைகளையும், திட்டங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார். பொருளாதார கடன் ^2.50 லட்சத்தில் இருந்து ^4 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் ^2 லட்சத்தை திருப்பிச் செலுத்த தேவையில்லை. மானியமாக அரசே செலுத்தும் என்று கூறியுள்ளார். முதல்வருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment