கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

மக்களுக்காக எந்த நேரத்திலும் மக்களுடன் இருந்து பணியாற்றுவோம் - மு.க.ஸ்டாலின்


மக்களுக்காக எந்த நேரத்திலும் மக்களுடன் இருந்து பணியாற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 10.04.2011 அன்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் 5 ஆண்டு ஆட்சியில் 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். சென்னை மக்களாகிய நீங்கள், எனக்கு இரண்டு முறை மேயர் வாய்ப்பை அளித்தீர்கள்.
நான் மேயராக இருந்தபோது, சென்னை நகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இப்போது மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 20 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இத்திட்டம் நிறைவடைந்து நடைமுறைக்கு வரும்போது சென்னை நகரம் வெளிநாடுகளை மிஞ்சும் அளவில் இருக்கும். கூவம் நதி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கூவம் நதியை ஒட்டியுள்ள குடிசைப் பகுதி மக்கள் அனைவரையும் அகற்றப் போவதாக தவறான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் செய்கின்றன. குடிசைவாழ் மக்களை அகற்றும் செயலில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
மக்களுக்காக எந்த நேரத்திலும் மக்களுடன் இருந்து பணியாற்றுவோம். சில கட்சி தலைவர்கள் அப்படி அல்ல. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை நோக்கி வருவார்கள். மற்ற நேரத்தில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் ஹெலிகாப்டரில் வருவார். சென்னைக்கு மட்டும்தான் அவர் ஹெலிகாப்டரில் வரவில்லை.
கருணாநிதியை பற்றி பேசும்போது, குடும்ப அரசியல் என்பார். தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ளது போல¢ பேசுவார். இப்படிப்பட்டவருடன் ஒருவர் கூட்டணி சேர்ந்துள்ளார். அவர் சொந்த கட்சி வேட்பாளரை அடிப்பது, கூட்டணி கட்சி கொடியை அப்புறப்படுத்த சொல்வது என்று செயல்படுகிறார். அவரைப் பற்றி கூற வேண்டும் என்றால், முதல் நாள் அடி, அடுத்த நாள் கொடி, அதற்கு அடுத்த நாள் குடி. ஜெயலலிதாவுக்கு தேர்தலில் புதிய ஜோடி கிடைத்துள்ளது. நல்ல வேளை, இவர் கதாநாயகியாக நடித்தபோது இவர் இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு பாடம் புகட்ட உங்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.
பெண்களுக்கு திருமண உதவி திட்டம், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி என்று பல்வேறு உதவிகளை திமுக அரசு செய்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கர்ப்பிணி ஒருவருக்கு
ஸீ6
ஆயிரம் என்பதை
ஸீ10
ஆயிரமாகவும், திருமணத்துக்கு
ஸீ25
ஆயிரம் என்பதை
ஸீ30
ஆயிரமாகவும், முதியோருக்கு
ஸீ500
என்பதை
ஸீ750
ஆகவும் வழங்குவோம். சுயஉதவிக் குழுவுக்கு தற்போது
ஸீ2
லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்
ஸீ4
லட்சம் வழங்கப்படும். அதில்
ஸீ2
லட்சம் மானியமாக தரப்படும். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்க முடியாது. அது சாத்தியம் இல்லை என்றார் ஜெயலலிதா. ஆனால் அதை நடத்திக் காட்டியவர் கருணாநிதி.
58 வயதாகி விட்டால் யாரும் வீட்டில் முடங்கி உட்கார வேண்டாம். அரசு பஸ்சில் இலவசமாக சுற்றி வரலாம். உறவினர்களை பார்த்து மகிழலாம். ஏற்கனவே உள்ள திட்டங்கள் தொடரவும், புதிய நலத்திட்டங்களை மக்கள் பெறவும் 6வது முறையாக கருணாநிதியை முதல்வராக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினர்.

கொளத்தூரில் போட்டியிடுவது ஏன்?

ஆயிரம் விளக்கில் போட்டியிடாமல், தொகுதி மாறி கொளத்தூரில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் அசன் முகம்மது ஜின்னாவை ஆதரித்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 10.04.2011 அன்று தியாகராய நகர் தாமஸ் சாலை போக்ரோட்டில் பிரசாரம் செய்தார். அப்போது ,அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, திரண்டிருந்த மக்கள் மத்தியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மீண்டும் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று உங்களை தேடி, நாடி வந்துள்ளேன். தேர்தலுக்காக மட்டும் உங்களை நாடி வரவில்லை. எந்த நிலையிலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்களை தேடி வந்துள்ளேன்.
எனக்கு ஓட்டு கேட்டு பலமுறை இந்த பகுதிக்கு வந்துள்ளேன். ஆனால், தற்போது எனது நண்பருக்காக ஓட்டு கேட்டு வந்துள்ளேன். மீண்டும் இங்கு போட்டியிடவில்லை என்று உங்களுக்கு கோபம் வரலாம்; அது நியாயமானது தான்.
இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாகவே, உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் போன்ற பணியில் என்னால் இடம்பெற முடிந்தது. அதன் மூலம் ஓட்டுமொத்த தமிழகத்துக்கும் பல பணிகளை செய்ய துணை நின்றுள்ளேன்.
தென்சென்னையில் செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களும், பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே, வடசென்னையிலும் இதுபோன்ற வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகதான், தொகுதி மாறி கொளத்தூரில் போட்டியிட்டுள்ளேன்.
ஆயிரம் விளக்கு தொகுதிக்கு 2 எம்எல்ஏக்கள் உங்களுக்கு கிடைத்துள்ளனர். இருந்தாலும், நிரந்தர எம்எல்ஏ உங்களுக்கு நான்தான். ஒரு தொகுதியில் 2 எம்எல்ஏக்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்காக பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் இருக்கத்தான் செய்கிறது. அதை அறவே போக்கும் வகையில் 15 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, 30 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
சென்னையை சிங்கார சென்னையாக்கும் முயற்சியில் 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. இன்னும் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளது. இதை ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment