ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுசெயலாளர் ராகுல்காந்தி, மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 06.04.2011 அன்று ராகுல் காந்தி பேசினார். இதில் ராகுல்காந்தி பேசியதாவது:
கடந்த 7 ஆண்டுகளாக ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆதரவளித்து வரும் தமிழக மக்களுக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்து கொள் கிறேன்.
மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட அரசாக விளங்கி வருகிறது. நம்நாட்டின் முன்னேற்றத் தில் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளின் பங்கு மிக முக்கிய மானது. அவர்களது வளர்ச்சியில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கி யிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஏழை மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு தான் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தற்போதைய இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சி வேகம் முன்பை விட அதிகமாக உள்ளது.
இருப்பினும் இந்த வளர்ச்சியின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உண்டு. மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பொருளாதார உதவியை மத்திய அரசு வழங்க தயாராகவே உள்ளது. முன்பு பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதா அரசு ஏழைகளை கவனிக்காமலும், அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டாமல் இருந்து விட்டது.
இருப்பினும் இந்த வளர்ச்சியின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் உண்டு. மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பொருளாதார உதவியை மத்திய அரசு வழங்க தயாராகவே உள்ளது. முன்பு பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதா அரசு ஏழைகளை கவனிக்காமலும், அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டாமல் இருந்து விட்டது.
ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை தொழிற்துறையில் குறிப்பாக ஜவுளி, பொறியியல் துறைகளில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இருப்பினும் இத்தொழில்களில் உள்ள பிரச்னை குறித்தும் மத்திய அரசு அறிந்துள்ளது. ஜவுளித்துறையின் வளர்ச்சியை அதிகப்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியது அவசி யம். சாலைவசதி, மின்சாரம், சாக்கடை வசதிகளை ஏற்படுத் துவதன் மூலம் ஈரோடு சுற்றுப்பகுதிகளில் ஜவுளித்தொழில் மேலும் வளர்ச்சிப் பெற வைக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
மேலும் ஜவுளித்தொழிலை பாதிக்கும் கழிவுநீர் பிரச்னையும், அதனால் ஏற்படும் அபாயம், அவதி போன்றவை குறித்தும் எனக்கு தெரியும்.
சாயக்கழிவுநீர் பிரச்னையால் ஏற்பட்டுள்ள அவல நிலையை போக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் துறை மட்டுமின்றி ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்பவியலையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனநாயக முற் போக்கு கூட்டணி அரசு கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் வரை யிலும் நிதி வழங்கியுள்ளது.
இதற்கு முந்தைய மத்திய அரசுகள் வழங்காத நிதியுதவியை தற்போதைய அரசு, தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியாகாந்தி ஆகியோர் தமிழகத்தின் வளர்ச்சியில் கொண்டிருக்கும் தனி அக்கறை தான்.
பொருளாதார வளர்ச்சியுடன், சமூக வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட அரசாக ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு விளங்குகிறது. தமிழக அரசை பொறுத்தவரை கல்வி, பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக உள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மன்மோகன்சிங், கருணாநிதி, சோனியா ஆகியோர் ஒருமித்த கருத்து கொண்டவர்களாக இருப்பதால்தான் மத்தியிலும் மாநிலத்திலும் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றி நடக்கிறது.
உலகிலேயே கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசு நம்முடைய அரசு தான் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை அளிக்கும் திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
மற்ற நாடுகள் கூட இத்திட்டம் குறித்து கேட்டு வியப்படைவதுடன், தங்களது நாடுகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் செலுத்துகிறது.
இதுவரை விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்கு சம உரிமை வழங்க வும் பஞ்சாயத்து ராஜ் மூலம் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 50 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு செய்வதற்கான மசோதா தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. 14 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக கொண் டுள்ள இளைஞர் காங்கிரஸ் தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரசும், திமுகவும் ஒருங்கிணைந்து இளைஞர்கள், ஏழைகள், தொழிலாளர்களின் முன்னேற்றத் திற்காக தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தும். தமிழகத்துடன் எனக்கும், எனது குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இம்முறையும் தமிழகத்தில் காங்கிரஸ்& திமுக., கூட்டணிக்கு நீங்கள் அமோக ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
No comments:
Post a Comment