கருணாநிதி மீண்டும் முதல்வராவது உறுதி என திருமாவளவன் கூறினார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 13.04.2011 அன்று திட்டக்குடி வந்தார். அவர் அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். கருணாநிதி மீண்டும் முதல்வராவது உறுதி. திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்.
முதல்வராக பொறுப்பேற்க உள்ள கருணாநிதியின் முதல் கையெழுத்து முழு மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கையாக இருக்க வலியுறுத்துவோம். தற்போது பட்டா உள்ளவர்களுக்கு மட்டுமே கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்பதை மாற்றி அனைவருக்கும் மனைப்பட்டா, அனைவருக்கும் காரை வீடு என்ற நிலையை கருணாநிதி நிறைவேற்ற வேண்டும்.
அதிமுக கூட்டணியினர் இந்த தேர்தலில் கருணாநிதி குடும்பத்தை மட்டுமே குறி வைத்து தனிநபர் விமர்சனங்களை வாரி இறைத்தனர். சாதனைகள் எதையும் கூற முடியாத நிலையில் அதிமுகவின் இந்த அணுகுமுறை கருணாநிதி மீது மேலும் ஆதரவைத் தான் பெருக்கியது.
இதற்காக ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் நன்றி. பாமக, விடுதலை சிறுத்தைகள் நட்பு, வெறும் தேர்தல் உறவாக மட்டும் அமைந்து விடக்கூடாது. மேலும் வலுவாக வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
ஜெயலலிதா குற்றச்சாட்டில் உடன்பாடு இல்லை - ஜி.கே.வாசன் பேட்டி :
6வது முறையாக கருணாநிதி முதல்வராவார் - ராமதாஸ் பேட்டி :‘திமுக கூட்டணி வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை பக்தவச்சலம் தெருவில், மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வீடு உள்ளது. அவர் 13.04.2011 அன்று காலை 9.45 மணிக்கு பீமன்னா கார்டன் தெருவிலுள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அவருடன், அவரது மனைவி சுனிதா, ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் சந்திரசேகர மூப்பனார் ஆகியோரும் வாக்களித்தனர்.
பின்னர், நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
தமிழகத்தின் தொடர் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் மற்றும் திமுகவின் நம்பிக்கையான தேர்தல் அறிக்கை ஆகியவை ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். தேர்தல் பணிகள் கடந்த 15 நாட்களாக அமைதியாக நடந்து வருகிறது. திமுக கூட்டணி வன்முறை யை கட்டவிழ்த்து விடுவதாக, ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 13.04.2011 அன்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேரு வீதியில் உள்ள முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.
பின்னர், நிருபர்களிடம் ராமதாஸ் கூறுகையில், “கருணாநிதி 6வது முறையாக முதல்வர் ஆவார் என்று பாமக முன்னரே முடிவு செய்துள்ளது. இதை வாக்குகள் மூலம் மக்களும் முடிவு செய்துள்ளனர்” என்றார்.
அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “திமுக அரசின் சாதனைகள் தொடர 6வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவார். அதற்காக மக்கள் வாக்களித்து வருகின்றனர்” என்றார்.
No comments:
Post a Comment