கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

220 தொகுதியில் திமுக அணி வெற்றி பெறுவது உறுதி - மு.க. ஸ்டாலின்திமுக கூட்டணி 220க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஓட்டு போட்ட பிறகு கூறினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 13.04.2011 அன்று காலை 8.30 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோரும் அதே வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர். அப்போது ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் அசன் முகமது ஜின்னா உடன் இருந்தார்.
பின்னர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:
திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தேர்தல் கமிஷன் செயல்பாடுகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
இதுபற்றி ஏற்கனவே முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் கமிஷன் பாரபட்சமின்றி செயல்படவில்லை என்பது கடந்த 2 நாளில் அவர்களுடைய செயல்பாட்டில் இருந்து தெரிகிறது.
தேர்தலில் வன்முறை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
அவர் அரசியல் தலைவர் அல்ல. அறிக்கை தலைவர்.
வாக்குப்பதிவு நடந்து ஒரு மாதம் கழித்துதான் வாக்கு எண்ணப்படுகிறதே?
பொறுத்தார் பூமி ஆள்வார்.
திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று மக்கள் விரும்ப காரணம் என்ன?
கடந்த ஐந்தாண்டுகளில் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதுடன், சொல்லாத பல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எனவே, மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
திமுக வெற்றி பெற்றால் மீண்டும் கருணாநிதி முதல்வர் ஆவாரா?
அதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கிறதா.
திமுக அணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
220க்கும் அதிகமான தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment