சென்னை அயனாவரத்தில் 04.04.2011 அன்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
டெல்லியில் இருந்து நாம் எதிர்பார்ப்பது எல்லாம் தாமதமாக வருவதை போல நமது நண்பர் குலாம்நபி ஆசாத்தும் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். தாமதமாக வருவேன் என்றால் கூட தட்டாமல் வருவேன். தாமதமாக வருவேன் என்றால் கூட தரமாக வருவோம் என்பதற்கு அடையாளமாக நடைபெறுகின்ற இந்த கூட்டம்.
நறுக்கென்று நாலு வார்த்தைகள் பேசினார் ஆசாத்; இந்த ஆட்சியை மீண்டும் தொடரச் செய்ய என்னென்ன காரணங்கள் என்பதை எடுத்துச் சொல்லி அந்த காரணங்களால் அடுத்த முறையும் தொடர வேண்டும். 6வது முறையாக தொடர வேண்டும் என்று உரைத்திருக்கிறார்.
இந்தியா வலிவு பெற வேண்டும்; தமிழகம் பொலிவு பெற வேண்டும் என்பதற்கான ஒரு நல்ல நிலை உருவாக வேண்டும் என்பதற்கு அடையாளமாக இந்த தேர்தல் கூட்டணி அமைந்திருக்கிறது.
நாம் அகில இந்திய அளவிலே ஒற்றுமை ஒருமைப்பாடு இறையாண்மை இவைகளெல்லாம் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டும் என்ற இயக்கம் திமுக கழகம். அந்த இறையாண்மையும் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நாம் சொல்வது இந்த சட்டமன்ற தேர்தலுக்காக அல்ல. திமுக கழகத்தை உருவாக்கிய அண்ணா ஒருமைப்பாடு இறையாண்மை இவற்றை இந்தியாவிலே காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது என்பதை பலமுறை வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அண்ணாவின் பொன்மொழி தேர்தலுக்காக நாம் மறந்து விடுபவர்கள் அல்ல.
தேர்தல் நேரத்தில் அந்த உறுதிமொழியை மேலும் வலுப்படுத்த பாடுபடக் கூடியவர்கள் பணியாற்றக் கூடியவர்கள் இன்றைக்கு இந்த தேர்தலில் நாமும் காங்கிரஸ் கட்சியும் பாமக கட்சியும் வேறுபல இயக்கங்களும் ஒன்றாக இணைந்து ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
6வது முறையல்ல 7வது முறை 8வது முறை என்றெல்லாம் வந்தாலும் கூட எந்த முறையானாலும் அந்த முறையில் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் மாநில முன்னேற்றத்துக்கும் என்ன நம்மால் விளையக் கூடிய நன்மைகள் என்பதை எண்ணிப் பார்ப்பது தான் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி என்று சொல்லிக் கொள்கிற கட்சியின் கடமையாக இருக்க முடியும். குறிக்கோளாக இருக்க முடியும். அந்த குறிக்கோளையும் நோக்கத்தையும் கொண்ட இயக்கங்களில் தலைசிறந்த இயக்கமாக திமுகவும். திமுகவுக்கு அணுசரனையாக காங்கிரசும் இன்றைக்கு விளங்குகிறது என்பதை யாரும் மறுக்க முடியும்.
அத்தகைய இணைப்பை கொண்ட கூட்டணிதான் இந்த கூட்டணி. மாநில கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அல்லாமல் இந்த கூட்டணியில் மாநில கட்சியும், சமுதாய அமைப்புகளும், மற்ற கட்சிகளும் உள்ளன. திமுக மாநில கட்சி மாத்திரம் அல்ல. இணக்கத்தை உருவாக்கும் தேசிய கட்சியாக காங்கிரஸ் கட்சியும் இதில் உள்ளது.
அப்படி இருப்பதால் அந்த கட்சியுடன் இணக்கமாக பேசி தமிழகத்துக்கு வேண்டிய நல்ல பல திட்டங்களை பெற்றுக் கொள்ள முடிகிறது. மாநில கட்சியே மக்களுக்கு தேவையான வற்றை உருவாக்கி கொள்ள முடியாது. மத்திய ஆட்சியுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு தேவையான காரியங்களை சாதிக்க இந்த இணைப்பு தேவை.
காங்கிரசுடன் இணைப்பை, கூட்டணியை திமுக விரும்ப காரணம் தேசிய கட்சியுடன் உறவு கொண்டு மக்களுக்காக காரியத்தை சாதிக்க முடிகிறது. இதுபோன்ற தேசிய கட்சியின் இணைப்பு தேவை என்று உணர்ந்து தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது.
காங்கிரசுடன் திமுக கட்சி கூட்டணியை விரும்புவதற்கு என்ன காரணம், காங்கிரசுடன் இணைப்பு இருந்தால் தான் பெருமை என்று பேசுவதற்காக அல்ல. கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைந்தால் அவர்களிடம் திட்டங்களை கேட்டுப் பெற முடியும். குலாம் நபி ஆசாத் இன்று இந்த கூட்டத்தில் நம்மோடு இருந்து பேசியதால், அவரிடம் நாம் பின்னர் உரிமையுடன் கேட்க முடியும். அதற்கு இந்த கூட்டணி பயன்படும். நமக்கு தேவையான திட்டங்களை உதவிகளை மீண்டும் வலியுறுத்திப் பெற இந்த கூட்டணி உதவும். இது தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. யாரோ ஒருவர் முதல்வராக ஆக வேண்டும் என்பதற்காக அல்ல. யாரோ சிலருக்கு பதவி வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி அமைந்தது அல்ல. அப்படி எந்த கூட்டணியும் அமையக் கூடாது.
தன்னைவிட பெரிய கட்சியின் ஆதரவில் கூட்டணி உருவாக வேண்டும் என்றால் அதை நிராகரிக்க முடியாது. காங்கிரசுடன் தான் நான் கூட்டணி வைத்துக் கொள்வேன், அது என் இஷ்டம் என்று கூற நான் தயாராக இல்லை. மக்களுக்கு வேண்டிய திட்டமும், அதை செயல்படுத்தவும் தேசிய கட்சியுடன் உறவு தேவைப்படுகிறது. அத்தகைய உறவுகளால் தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இதைப் பெறுவதற்கான போராட்டம் நடந்தது என்பது 100 ஆண்டுகால வரலாறு. சூரிய நாராயண சாஸ்திரி தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். இந்த அந்தஸ்து தமிழுக்கு தேவை.
உலகில் இருக்கும் 6 மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும் இருக்கிறது. அந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கிறது என்றால் தமிழ் மொழிக்கும் அந்த அந்தஸ்து வேண்டும் என்றார் பரிதிமாற் கலைஞர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நான் முதல்வரானதும், நான் மத்தியில் அமைச்சராக இருந்த அர்ஜூன்சிங்கை சந்தித்து அவர் மூலம் சோனியாக காந்தியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். அப்போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று கேட்டேன். சோனியா காந்தி அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். பின்னர் அவர் ஒரு கடிதம் எனக்கு எழுதினார். அதில், செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதால் கூட்டணி கட்சிக்கு மட்டும் பெருமை அல்ல. அந்த பெருமை உங்கள் ஒருவருக்கே உரியத என்று எழுதினார். அந்த கடிதத்தை பத்திரமாக வைத்துள்ளேன். இந்த அந்தஸ்தை முன்பு இருந்த அரசு பெறமுடியாத நிலை இருந்தது. நான் பெற்றது எப்படி என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கொண்ட நல்லுறவால்தான். மெட்ரோ ரயில் திட்டம், சேது சமுத்திர திட்டம் போன்ற திட்டங்கள் நிறைவேற வேண்டி, உதவியதும் மத்திய அரசுடன் கொண்ட உறவுதான் காரணம்.
மத்திய அரசோடு நாம் உறவோடு இருக்க காரணம் நமக்கும், மத்திய அரசுக்கும் மனஸ்தாபம் இல்லாத நிலை உருவாக்க காரணம். இன்று நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு உருவானது என்பதற்காக அந்த வாய்ப்பை முரட்டு தனமாக கேட்டு பெறுவதல்ல. அந்த வாய்ப்பை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்ய வேண்டியதை இங்கிருந்து எடுத்துச் சொல்லி நிதானமாக அந்த திட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகதான்.
அண்ணா காலமாவதற்கு முன் இறுதி காலத்தில் ஒரு கடிதம் எழுதினார். அதில், “மாநில சுயாட்சி, நாம் விரும்புகிற பரிந்துரையை நிறைவேற்றாமல், கண்களை மூடுகிறேன். எனது சந்ததியினர் அதற்காக எப்பாடுப்பட்டாவது அதை பெற வேண்டும் என்று எழுதினார். அதற்காக மத்திய அரசுடன், மாநில அரசு மோதிக்கொள்ளும் நிலையை நாம் எடுக்கவில்லை. அவர் எழுதும் போது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரை குறிப்பிட்டு, அவரைப்போல் மோதிக்கொண்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். மத்திய அரசுடன் வாதித்து, எடுத்து சொல்லி நமது தேவையை பெற முடியும் என்று அண்ணா திராவிட நாடு பத்திரிகையில் கட்டுரை எழுதினார்.
அதையே காஞ்சி பத்திரிகையிலும் வெளியிட்டு அதுதான் எனது கடைசி விருப்பம் என்று சொன்னார். அவரது விருப்பம் நிறைவேற மத்திய அரசோடு மோதிக்கொள்ள கூடாது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் இந்தியா முழுவது உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் விலைவாசி உயர்வு உயர்ந்து விட்டது. கருணாநிதி என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர். விலைவாசி உயர்வை நான் தீட்டிய திட்டங்களை எடுத்து சொன்னேன். இது அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தவிலை. மத்திய அரசுதான் காரணம் என்று என்று சொன்னால் திருப்தி ஏற்படும்.
மத்திய அரசை நான் குறை சொல்ல விரும்பவில்லை. அதனால் தான் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்திய அரசுடன் மோதிக்கொள்கின்றன. கம்யூனிஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில், கருணாநிதி மத்திய அரசிடம் அடிமையாகிவிட்டார் என்றும், எதற்கெடுத்தாலும் டெல்லிக்கு பறக்கிறார் என்று கூறப்பட்டிருந் தது. டெல்லிக்கு செல்வது அவர்களது வேலை. நான் டெல்லிக்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை கருணாநிதி டெல்லிக்கு செல்கிறார் என்பதையும், எத்தனை முறை மார்க்சிஸ்ட் கட்சியினர் டெல்லிக்கு செல்கிறார் என்று கணக்கெடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால், மார்க்சிஸ்ட் கட்சியின் 100 முறை டெல்லிக்கு சென்று அடிமையாகி உள்ளனர் என்று தெரியும்.
நான் ஒரு முறை டெல்லிக்கு சென்றாலும் அது நட்பு ரீதியாக, உரிமைக்கு குரல் கொடுக்க, உரிமை பெறுவதற்காகத்தான். அப்படி இருப்பதால் தான் இன்று திமுக காங்கிரசுடன் கூட்டணி உள்ளது. இங்குள்ள தேவைகளை அவர்களோடு அணுகி உரிமையை பெற முடிகிறது. உரிமையை உத்வேகத்துடன் கேட்கும் திருமாவளவனும் இந்த கூட்டணியில் இருக்கிறார்.
காங்கிரசாரும் எங்களை நம்புகின்றனர். நாங்களும் அவர்களை நம்புகின்றோம். இடையில் யார் வந்தாலும் இந்த நம்பிக்கையை பிரிக்க முடியாது. இந்தக் கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்கின்றனர். இந்த உறவு நீடிக்க வேண்டும். நம்மோடு உறவு கொண்டுள்ள காங்கிரஸ் இயக்கத்தின் உறவு வலுப்பெற்றுள்ளது. மேலும், மேலும் இந்த உறவு வலுப்பெற வேண்டும். நாம் எத்தனை இடங்களை பெற்றோம் என்று இல்லாமல், சற்றேறக் குறைய இடங்கள் பெற்றாலும் இதயங்கள் ஒற்றுமையுடன், மக்களின் தேவைகளையும் நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
மாநிலங்களில் சிறந்தது தி.மு.க. அரசு 6வது முறையாக கருணாநிதிதான் முதல்வர் - மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் :
எல்லா மாநிலங்களிலும் சிறந்த அரசு, தி.மு.க. அரசுதான். ஏழைகள் வளம் பெற, கருணாநிதி 6வது முறையாக முதல்வராக வர வேண்டும்; நிச்சயமாக வருவார் என்று வாழ்த்துகிறேன் என்று மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறினார்.
வட சென்னை திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும், ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். ஒரே முதல்வர் கருணாநிதிதான். தேர்தல் அறிக்கையில் 35 கிலோ இலவச அரிசி வழங்குவேன் என்று அறிவித்திருக்கிறார்.
காமராஜர், மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அதைப் பின்பற்றிய முதல்வர், சத்துணவுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி, ஒரு முட்டை என்பதை 2 முட்டையாக்கி, 3 முட்டையாக்கி உயர்த்தி வழங்கி வருகிறார்.
தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் நாம் போட்டியிடுகிறோமோ, அங்கெல்லாம் உங்களுடைய ஓட்டுக்களை முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்க வேண்டும். அவர் ஏற்கனவே 5 முறை முதல்வராக பதவி ஏற்ற அவர், மீண்டும் 6வது முறையாக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அது நனவாக வேண்டும்.
தேர்தல் நேரத்தில், அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றன. ஆனால், சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி, அதை செயல்படுத்தும் ஒரே முதல்வர் நமது முதல்வர்தான். அந்த மாநிலமும் தமிழகம்தான். ஒரு கிலோ அரிசி திட்டத்தை தமிழகத்தை பின்பற்றி மற்ற 15, 16 மாநிலங்களும் செயல்படுத்தின. தமிழகத்தில்தான் எல்லா மக்களுக்கும் இலவச கலர் டிவி கொடுக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இப்படி தரப்படவில்லை.
இலவச எரிவாயு அடுப்பு இங்கு தரப்படுகிறது. அதுமட்டுமல்ல, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரேசன் திட்டங்கள், காப் பீட்டுத்திட்டங்கள் வேறு எங்கு இல்லாத அளவில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் கருணாநிதி, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கட்டமாக ஏழை, விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். அதேபோல மத்திய அரசும் ரூ.77 ஆயிரம் கோடி, விவசாய கடனை தள்ளுபடி செய்தது. இப்போது, 21 லட்சம் மக்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார். அந்தப் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. அவர் உறுதியளித்தது, நிறைவேற்றப்படும். இதுபோன்ற ஒரு புரட்சியை முதல்வர் கருணாநிதியால்தான் செய்ய முடியும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன் அடைவார்கள். அவர், அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். ஏழை, மக்களுக்கு வீடுகள் கிடைக்கும். இது அவரால் மட்டுமே செய்ய முடியும்.
முதல்வர் கருணாநிதி, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கட்டமாக ஏழை, விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். அதேபோல மத்திய அரசும் ரூ.77 ஆயிரம் கோடி, விவசாய கடனை தள்ளுபடி செய்தது. இப்போது, 21 லட்சம் மக்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார். அந்தப் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. அவர் உறுதியளித்தது, நிறைவேற்றப்படும். இதுபோன்ற ஒரு புரட்சியை முதல்வர் கருணாநிதியால்தான் செய்ய முடியும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன் அடைவார்கள். அவர், அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். ஏழை, மக்களுக்கு வீடுகள் கிடைக்கும். இது அவரால் மட்டுமே செய்ய முடியும்.
இதுபோன்ற திட்டங்களைச் செய்யும் ஒரே அரசு தமிழ்நாடுதான். ஒரே முதல்வர் கருணாநிதிதான். எல்லா மாநிலங்களிலும் சிறந்தது தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசுதான். எனவே திமுக தலைமையிலான காங்கிரஸ், பாமக, வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு ஆசாத் கூறினார்.
இவ்வாறு ஆசாத் கூறினார்.
வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் முதல்வர் - தங்கபாலு உறுதி :
பல வாக்குறுதிகளை தந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. 35 கிலோ அரிசி தருவோம் என்று கூறியிருக்கிறார். நிச்சயம் அவர், தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று தங்கபாலு கூறினார்.
அயனாவரம் பொதுக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசியதாவது:
2004ம் ஆண்டு ஏற்பட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணி அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு காரணம், அதிமுக ஆட்சியின் அலங்கோலம்தான். அந்த ஆட்சியின் அவலத்தை பார்த்த மக்கள், அதிமுகவை தோற்கடித்து, முதல்வர் கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினார்கள். மத்திய அரசு மூலம், தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்துள்ளன. 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து இதுவரை மாநில வளர்ச்சிக்காக ரூ.45 ஆயிரம் கோடி கிடைத்துள்ளன. 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல, ஏராளமான திட்டங்கள் தமிழகத்தில், மத்திய அரசு உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த தேர்தல் அறிக்கையின்போது சொன்ன அனைத்து திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றி விட்டார். இப்போதும், தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை தந்துள்ளார். 35 கிலோ அரிசி தருவோம் என்று கூறியிருக்கிறார். நிச்சயம் அவர், தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.
இவ்வாறு தங்கபாலு பேசினார்.
இவ்வாறு தங்கபாலு பேசினார்.
No comments:
Post a Comment