சட்டப்பேரவை தொகுதியில், திமுக கூட் டணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட் பாளர் முகமது ஷேக் தாவூதை ஆதரித்து, நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் அருகில் நடிகை குஷ்பு 06.04.2011 அன்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, நடிகை குஷ்பு பேசியதாவது:
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் கருணா நிதி அறிவித்திருக்கிறார். பெண்கள் இட்லிக்கு மாவு அரைக்க சிரமப்படுகிறார்கள் என்று கிரைண்டர் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினோ, பெண்களுக்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என சொல்லாதது எல்லாம் வழங்கப்படும் என்று கூறி வருகிறார். இப்படி சொன் னது மட்டுமல்லாமல் சொல்லாததையும் மக்கள் நலனை கருத்தில்கொண்டு நலத்திட்டங்களாக வழங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். தமி ழக மக்களை பற்றியும், தமிழகத்தைப்பற்றியும் எப் போதும் சிந்தித்து திட்டங் களை செயல்படுத்தி வரும் ஒரே தலைவர் முதல்வர் கருணாநிதிதான்.
முதல்வர் கருணாநிதியின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் எதையும் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் அவர்கள் எதையும் செய்து நிரூபித்ததும் இல்லை. மற்றவர்களை குறை கூறியே, திட்டிப்பேசியே வாக்கு சேகரித்து வருகிறார்கள். கஜினி படம் பார்த்திருப்பீர்கள். அதில் நடிகர் சூர்யா, 15 நிமிடத்துக்கு ஒரு முறை நடந்ததை எல்லாம் மறந்துவிடுவார். அதுபோல் எதிர்க்கட்சியினர் இரவில் பேசியதை பகலில் மறந்துவிடுகிறார்கள்.
தேர்தல் அறிவித்தபின், இந்த 19 நாட்களாகத்தான் ஜெயலலிதாவுக்கு தமிழ் மக்களைப்பற்றி ஞாபகம் வந்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் கொடநாட்டுக்கு போய் தூங்கிடுவாங்க. அவங்க ஞாபகத்துல இருக்கிறது எல்லாம் கொடநாட்டுல உள்ள 1000 ஏக்கர் நிலமும், சொகுசு பங்களாவும்தான். இதைவிட்டால், அவங்களோட தோழியை பற்றிய ஞாபகத்தோடுதான் இருப்பாங்க.
இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.
No comments:
Post a Comment