மத்திய, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்றுபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 99 பேரின்குடும்பங்களுக்கும், காயமடைந்த 96 பேருக்கும்மொத்தம் 84 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி அளிக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘’தமிழக பொது மக்களில் சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்கள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் விபத்து நிவாரண நிதியுதவி வழங்கிடக் கோரி மத்திய, மாநில அமைச்சர்கள், பாராளுமன்றஉறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பரிந்துரைகளுடன், மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகத்திற்கும், தனிப்பிரிவிற்கும் வரப்பெற்ற மனுக்களின் மீது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அறிக்கைகளைப் பெற்று, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் 195 குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 84 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிதியுதவி
வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
அதன் விவரம்:
துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, சென்னை இராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வன் வி.பரத் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்காக, அவரது தாயார் புஷ்பராணிக்கு 50 ஆயிரம் ரூபாய் ; மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி பரிந்துரையை ஏற்று, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், ம.வெள்ளாளபட்டி கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதால், வறுமையில் வாடும் அவர்களது இரண்டு குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு
நிதியாக தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சம் ரூபாய் ;
முதலமைச்சர், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் பி.பத்மாவதி பரிந்துரையினை ஏற்று, நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம், திருமருகல் ஒன்றியத்தைச் சேர்ந்த இளையரசன் (20) என்பவர் கட்டுமரம் கவிழ்ந்து கடல் நீரில் மூழ்கிஉயிரிழந்ததற்காக, அவரது தாயார் ராஜவள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் ;பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் பரிந்துரையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தீ விபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது மனைவி சகாயமேரிக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி அவர்களின் பரிந்துரையினை ஏற்று, சென்னைசெனாய் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது மனைவி ஜமுனா என்பவருக்கு 50 ஆயிரம்
ரூபாய் ;
சென்னை செனாய் நகரைச் சேர்ந்த ஆர். குணசேகரன் என்பவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதால், அவரது மனைவி கிருஷ்ணவேணி என்பவருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய்;
கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி பரிந்துரைகளை ஏற்று,தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நாச்சியார் கோவில் கிராமத்தினைச் சேர்ந்த 8 பேர் சென்ற கார்
லாரியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 4 இலட்சம் ரூபாய் ;
பேராவூரணி நாட்டாணிக்கோட்டை வடக்கு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் வீரமணிகண்டன் (12) என்பவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக அவரது தந்தை திரு.எஸ்.செல்வராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
வல்லுண்டான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லோகேஸ் (13) மற்றும் மதிவாணன் (7) ஆகிய இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவர்களின் தந்தை குமார் என்பவருக்கு 1 இலட்சம் ரூபாய் ;
வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் பரிந்துரையை ஏற்று, சேலம் மாவட்டம், வாழப்பாடி ட்டம், அனுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் என்கிற பெருமாள் என்பவரின் மகனான தாமரைக்கண்ணன் (13),ராஜசுந்தரி என்பவரின் மகன் ஆகாஷ் என்கிற மணிமாறன், மகள் தேவயாணி ஆகிய மூவரும் பள்ளிக்குச் சென்று
விட்டு திரும்பி வரும் வழியில் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதால், உயிரிழந்த மூவரின் குடும்பத்தாருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 3 இலட்சம் ரூபாய் ;
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அளித்த பரிந்துரைகளை ஏற்று, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், எல்லப்பன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவக்கொழுந்து என்பவருக்குச் சொந்தமான மின்மோட்டார் சிமெண்ட் கான்கிரிட் ஷெட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 இலட்சம் ரூபாய் அவ்விபத்தில் காயமுற்ற ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய்
ஆக மொத்தம் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ;
குறிஞ்சிப்பாடி கொத்தவாச்சேரி கிராமம், கிழக்குத்தெருவை சேர்ந்த ரவி மற்றும் ரவி என்கிற பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதால்,அந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 2 இலட்சம் ரூபாய்;
கடலூர்-சிதம்பரம் சாலையில் பள்ளிக்குழந்தைகள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் பவித்ரா (12), திவ்யா (வயது 15), அபிராமி (15) மற்றும் அகிலாண்டேஸ்வரி (12) ஆகிய நான்கு பள்ளி மாணவிகள் உயிரிழந்துள்ளதால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் 4 இலட்சம் ரூபாயும் அவ்விபத்தில் காயமடைந்த 31 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ;
சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் அளித்த பரிந்துரைகளை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சௌத்திரி என்பவர் கோவையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
அய்யன் பாறவிளையைச் சேர்ந்த சுதாம்பிகா என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால், அவரது கணவர் பகவதிபிள்ளைக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிந்துரையை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த அகமது மொய்தீன் (வயது 55) என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதால், அவரது மனைவி மும்தாஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பரிந்துரையை ஏற்று, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், தெ.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ம.கதிரேசன் என்பவரது மனைவிக்கு ஒரேபிரசவத்தில் 4 குழந்தைகள் (3 ஆண், 1 பெண்) பிறந்துள்ளதாகவும் மற்றும் வயதான பெற்றோரை வைத்து கஷ்ட ஜீவனம் நடத்தி வருவதால், அவரது குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் ;
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அளித்த பரிந்துரைகளை ஏற்று, ஈரோடு மாவட்டம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த பெண் காவலர் நாகஜோதி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது கணவர் பி.விஸ்வநாதன் என்பவருக்கு 1 இலட்சம் ரூபாய் ;
ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் ஏ.பரமசிவம், இரயில் விபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது குடும்பத்தினருக்கு 1 இலட்சம் ரூபாய் ;
மீன்வளத் துறை அமைச்சர் கே. பி. பி. சாமி அளித்த பரிந்துரையை ஏற்று, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லம்பேட்டை கிராமத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியைச் சேர்ந்த குமரேசன், சுமதி, சுகுமார், சுஜிதா மற்றும் குழந்தை தயானந்த் ஆகிய ஐவர் உயிரிழந்ததற்காக, அவர்களின் குடும்பத்தாருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ;
நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆருண் பரிந்துரையை ஏற்று, மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த முருகன் என்பவர் தனது மகள் தனலெட்சுமி விபத்தில் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்று, அதிர்ச்சியில் முருகனும்உயிரிழந்துள்ளதால், அவர்களின் வாரிசுதாரரான எம்.நித்யா என்பவருக்கு 1 லட்சம் ரூபாய் ;
முன்னாள் அமைச்சர் மற்றும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தினேஷ்பாபு (வயது 13) என்பவர், குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரது தந்தை ஆர்.தேவராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
முன்னாள் அமைச்சர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சொ.கருப்பசாமி அளித்த பரிந்துரைகளை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மின்சார விபத்தில் உயிரிழந்துள்ளதால், மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தை முருகன் என்பவரும் உயிரிழந்ததற்காக, அவர்களின் வாரிசுதாரரான செந்தாமரை என்பவருக்கு 1 இலட்சம் ரூபாய்;
கே.வி.ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததற்காக, அவரது தந்தை அங்குராஜ் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
கீழஅழகுநாட்சியாபுரத்தைச் சேர்ந்த காந்திமதி என்பவரது 1 ஙூ வயது குழந்தை கபில்ரட்சகன் என்பவர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்ததற்காக, அவரது தாயார் காந்திமதிக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அளித்த பரிந்துரையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம் பாலமார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த கரடிமுத்து (வயது 11) மற்றும் மாரிச்செல்வம் (வயது 11) ஆகிய இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததற்காக, இருவரின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் வீதம் 1 இலட்சம் ரூபாய்;
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் அளித்த பரிந்துரைகளை ஏற்று, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ஆண்டிப்பட்டி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்பட்டி விளக்கு அருகில் லாரியும் மகேந்திரா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர்கள் உயிரிழந்ததற்காகவும் மற்றும் 17 பேர்கள் காயமடைந்துள்ளதாலும், உயிரிழந்த ஒவ்வொருவருக்காகவும் அவர்களின் குடும்பத்திற்குத் தலா 1 இலட்சம் ரூபாய்
வீதம் 11 லட்சம் ரூபாயும், விபத்தில் காயமுற்ற 17 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.4 இலட்சத்து 25 ஆயிரமும் ஆக மொத்தம், 15 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ;
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.லட்சுமணன் அளித்த பரிந்துரைகளை ஏற்று, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், உத்தமபாளையம் சின்னமனூர் தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் தென்னஞ்சாலை அருகில் தனியார் பேருந்து ஈப்புடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் உயிரிழந்த சீனியம்மாள், நிலோபர் நிஸா, சீதையம்மாள், குருவம்மாள், சுரேஷ், செல்வி மற்றும் இந்திரா ஆகிய 7 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 7 இலட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகமொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரம்
ரூபாய் ;
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.கௌஸ்பாஷாகோரிக்கையினை ஏற்று, மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த எஸ்.மகபூப்பாஷா கும்பக்கரை அருவி நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரதுமனைவி எம்.மகபூ பீவி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன் அளித்த கோரிக்கையை ஏற்று, தஞ்சாவூர் மாவட்டம், துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (19) நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரது
தந்தை ராஜேந்திரன் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
சென்னை மாவட்டம் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரன் அளித்த பரிந்துரையை ஏற்று, வியாசர்பாடியை சேர்ந்த சுலைமான் (வயது 14) குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக, அவரது தாயார் நூர்ஜஉறான் என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வை.சிவபுண்ணியம் அளித்த பரிந்துரையை ஏற்று, மன்னார்குடியைச் சேர்ந்த திருவாளர்கள் புகழேந்திரன், சாரதி மற்றும் கணேசன் ஆகிய மூவரும் கோலாலம்பூரில் உள்ள ஜவுளிக்கடை தீ விபத்தில் உயிரிழந்ததால், உயிரிழந்த மூவரின் குடும்பத்தாருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 3 இலட்சம் ரூபாய் ;
கோயம்புத்துhர் மாவட்டம், பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜெயராமன் அளித்த பரிந்துரையை ஏற்று, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சூளேஸ்வரன்பட்டி கிராமம், காந்திபுரத்தை சேர்ந்த நாகூர்மீரான் என்பவர் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்ததால், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா அளித்த பரிந்துரையை ஏற்று, ஷரீப் அலி சுபேதார் தெருவினைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததால், உயிரிழந்த சிலம்பரசனின்குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் அளித்த பரிந்துரையை ஏற்று, பொன்னமராவதி ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி(வயது 15), நிஜபாரதி (வயது 10) மற்றும் பார்வதி (வயது 10) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்ததால், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ;
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி அளித்த பரிந்துரையை ஏற்று, இராசிபுரம் வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.பழனிச்சாமி என்பவரது மகள் அம்சவேணி மின்னல் தாக்கி உயிரிழந்ததால், அவருக்காக ஒரு இலட்சம் ரூபாய், மேலும் பழனிச்சாமி, ருக்குமணி, முருகன், சங்கீதா, சுவாதி ஆகிய ஐந்து பேர் காயமடைந்துள்ளதால், அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என
2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்;
கடலூர் மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன்அளித்த பரிந்துரையை ஏற்று, கடலூர் ஒன்றியம் திருப்பனாம்பாக்கம் ஊராட்சி களையூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற வேனும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த ரமேஷ் வேலு ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1 இலட்சம் ரூபாய் படுகாயம் அடைந்த 12 பேருக்கு தலா 25ஆயிரம் ரூபாய் வீதம் 3
இலட்சம் ரூபாய் என 4 இலட்சம் ரூபாய் ;
நெல்லிக்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அளித்த பரிந்துரையை ஏற்று, பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் பூண்டியான் தெருவில் வசித்து வரும் திருமதி நாவம்மாள் என்பவரது மகன் ரோஷன்குமார் (7) குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்ததால், உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் ;
திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம் அளித்த பரிந்துரையை ஏற்று, மாத்தூர் அருகே காவல்துறை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தனியார் லாரி காவல்துறை வாகனத்தின் மீதுமோதியதால், காவல்துறை அலுவலர்கள் திருவாளர்கள் சுப்பையா, கே.துரைராஜ், எம்.குழந்தைச்சாமி ஆகிய மூவரும், இதே விபத்தில் திரு.தமிழ்செல்வன் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்த நால்வரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 இலட்சம்
வீதம் 4 இலட்சம் ரூபாய் ;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ஏ.ராஜன் அளித்த பரிந்துரையை ஏற்று, வட்டவினையைச் சேர்ந்த ஏ. முகம்மது அனீபா என்பவரது மகள் திருமணத்திற்கு கலந்து கொள்ள வந்த 12 பேர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் 6 இலட்சம் ரூபாய்;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் பி.என்.பி. இன்ப சேகரன் அளித்த பரிந்துரையை ஏற்று, பாலக்கோடு வட்டம், கர்த்தாரப்பட்டி கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த 25 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ;
- எனப் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 99 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்த 96 பேருக்கும், மொத்தம் 84 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவியாக வழங்கிடமுதலமைச்சர் கருணாநிதி 30.12.2010 அன்று ஆணையிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.