கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

திமுக ஆட்சியில் அதிக தொழிற்சாலைகள் தொடக்கம் - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்


காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகன், உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் பொன்குமார் ஆகியோரை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் 08.04.2011 அன்று நடந்தது.
திமுக நகர செயலாளர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி தலைவர் சன் பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இணைந்து செயல்படுவோம். ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவர் தேர்தல் நேரத்தில்தான் வருவார். தேர்தல் வந்தால் தமிழ்நாடு; இல்லையென்றால் கோடநாடு. அவருக்கு தற்போது ஒரு புது ஜோடி கிடைத்திருக்கிறது. அவர், கதாநாயகனாக அறிமுகமாகி, அரசியலில் வில்லனாக மாறி, தற்போது காமெடியனாக மாறிவிட்டார். சில நாட்களில் அனாதையாகி விடுவார்.
நான் ஆணவத்தோடு பேசுகிறேன் என நினைக்க கூடாது. தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளருக்கு அடி விழுகிறது. இதை கண்டிக்க வேண்டிய தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து பிரசாரம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் கலந்து கொள்ளாததால் ஜெயலலிதா தலை தப்பியது.
முதல் நாள் அடி, 2வது நாள் கொடி, 3வது நாள் குடி. 13ம் தேதி மக்கள் கொடுப்பார்கள் அடி. வடிவேல் கதாநாயகனாக மாறி வருகிறார். அவர் காமெடியனாக மாறி வருகிறார்.
முதல்வர் கருணாநிதி அமைத்துள்ள கூட்டணி மக்களுக்கான கூட்டணி. ஐந்து ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி ஓட்டுக் கேட்கிறோம். ஆனால், ஜெயலலிதா, தான் செய்த சாதனைகளை கூறி ஓட்டுக் கேட்க தெம்பிருக்கிறதா? கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம்.
ஸீ7000
கோடி விவசாய கடன் தள்ளுபடி, கர்ப்பிணிகளுக்கு
ஸீ6000
உதவித்தொகை போன்றவற்றை வழங்கியுள்ளோம். ஆனால் திருமண உதவித் திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தினார். இத்திட்டத்தை முதல்வர் மீண்டும் கொண்டு வந்தார்.
காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் தொடங்கப்பட்டுள்ளன. 51 பெரிய நிறுவனங்கள் மூலம் 2 லட்சத்து 34,434 பேர் பயன் பெற்றுள்ளனர். இதுபோன்று ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம்.
ஜெயலலிதா தனி நபர் விமர்சனம் செய்கிறார்; குடும்ப ஆட்சி என்கிறார். தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு திருமண உதவித்தொகை வழங்குகிறோம், கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை ஏழை குடும்பங்களில் உள்ளவர்களுக்கு தான் செல்கிறது.
தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா காப்பியடித்துள்ளார். மக்களுக்காக செயல்படும் ஆட்சி தொடரவேண்டும் என்றால் கருணாநிதி மீண்டும் முதல்வராக வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக மாவட்ட துணை செயலாளர் பொன்மொழி, ஒன்றிய செயலாளர் குமார், காங். மாவட்ட தலைவர் அண்ணாதுரை, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் அம்பேத்கார் வளவன், எம்எல்ஏ சக்தி கமலம்மாள், பாமக மாவட்ட செயலாளர் குமாரசாமி, தி.க. மாவட்ட செயலாளர் அசோகன், பாமக நிர்வாகிகள் உமாபதி, முத்துச்செல்வம், காங். நிர்வாகிகள் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர். அபுசாலி நன்றி கூறினார்.

காமெடியன் ஆன விஜயகாந்த் ஹீரோவாக நிற்கும் வடிவேலு - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் :

அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ப.ரங்கநாதனை ஆதரித்து பிரசார கூட்டம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்தில் 08.04.2011 அன்று நடந்தது. நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் தலைமை வகித்தார்.
அப்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கிறது. அவை தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிறது; தேர்தல் முடிந்ததும் பல கட்சிகள் காணாமல் போய்விடுகிறது.
தேர்தல் வந்தால் தமிழ்நாட்டுக்கு வருகிறார்; முடிந்ததும் கோடநாடு சென்று விடுகிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். இன்னொருவர் (விஜயகாந்த்) கதாநாயகனாக இருந்தவர் வில்லனாகி, காமெடியனாகி விட்டார். காமெடியன் வடிவேலு ஹீரோவாகி விட்டார்.
கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்று உங்களிடம் கேட்கிறேன். ஏனென்றால், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருக்கிறார். 2006 தேர்தல் நேரத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தார். பதவியேற்றதும் அந்த திட்டத்தை நிறைவேற்றினார். பின்னர், சொல் லாமலே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கினார். விவசாய கடன் 7 ஆயிரம் கோடியை ரத்து செய்தார். சத்துணவில் வாரம் 5 முட்டை வழங்கினார். பெண்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார்.
கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, முதியோருக்கு உதவித் தொகை என பல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. தற்போது தேர்தல் அறிக்கையில் 58 வயது முடிந்தவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என அறிவித்துள்ளார். இதனால், வயதானவர்கள் உறவினர்களை சென்று பார்த்து வரலாம். திருமண உதவித்தொகையை 30 ஆயிரமாக்குவதாக அறிவித்துள்ளார்.
எனவே, திமுக நல்லாட்சி தொடர 'உதயசூரியன்’ சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் கே.நீலகண்டன், ஆ.இரா.நாதன், உதயசூரியன், லோகநாதன், மூர்த்தி, எம்.ஏ.அன்பு, காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.மகேந்திரன், மோகன்குமார், பீர்முகமது, சத்தியநாராயணன், பாமக நிர்வாகிகள் மு.சந்தானம், ரமேஷ், ஆயிரம், குப்பன், கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் விஸ்வநாதன், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment