கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

வெற்றி பெறப்போவது யார்?


தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 77 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மொத்த வாக்காளர்கள் 4 கோடி 71 லட்சத்து 16 ஆயிரத்து 687. அதில் 3 கோடி 64 லட்சத்து 68 ஆயிரத்து 315 பேர் வாக்களித்துள்ளனர். இதுவரை கண்டிராத எண்ணிக்கை இது.
எந்த தேர்தலிலும் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானதில்லை. எனவே இது அனைத்து தரப்பிலும் ஆச்சரியமாக விவாதிக்கப்படுகிறது. இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானதால் எந்த கட்சிக்கு & எந்த கூட்டணிக்கு & சாதகமாக முடிவுகள் அமையும் என்பதும் ஆர்வமாக அலசப்படுகிறது. வாக்குப்பதிவு குறையும்போது வானிலை, தேர்வுகள், பண்டிகை, அலட்சியம், பயம், கெடுபிடி என பல காரணங்கள் கூறப்படுகிறது. அதே போல அதிகபட்ச வாக்குப்பதிவுக்கும் ஒரே காரணம் இருக்க சாத்தியமில்லை. அந்த காரணங்களை கண்டறியும்போது ஆதாயம் அடையப்போவது யார் என்பதையும் ஓரளவு ஊகிக்க முடியும்.
இந்த தேர்தலை பொருத்தவரை பொதுமக்கள் தங்கள் வாக்குரிமையை தவறாமல் செலுத்த வேண்டும் என்ற பிரசாரம் முந்தைய தேர்தல்களைவிட தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முயற்சியில் பிரபலமான நட்சத்திரங்கள் ஊடகங்கள் தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். வாக்களிக்காதவர்களுக்கு சலுகைகள் மற்றும் இலவசங்களை அரசு வழங்கக்கூடாது என சில அமைப்புகள் விடுத்த வேண்டுகோள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டதால், அந்த யோசனை நடைமுறைக்கு வரக்கூடும் என்ற அச்சமும் பலரை வாக்குச் சாவடிகளுக்கு இழுத்துவந்தது. 13 ஆவணங்கள் 17 ஆவணங்கள் என்று பலரிடம் இல்லாத ஆதாரங்களை கொண்டு சென்றால்தான் வாக்களிக்க முடியும் என்ற கெடுபிடியான நிபந்தனைகளை தளர்த்தி, பூத் ஸ்லிப் என்ற சீட்டு மட்டும் இருந்தால் போதும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததும் அதை ஆணையமே ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக வழங்கியதும் வாக்காளர்களை சாவடிக்கு ஈர்த்த காரணங்களில் முக்கியமானது.
ஒவ்வொரு தேர்தலிலும் பெயர் இல்லை, அட்டை இல்லை, ஆவணம் சரியில்லை, ஏற்கனவே யாரோ போட்டுவிட்டார்கள் என எதையாவது சொல்லி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்பவர்கள் நிறைய பேரை பார்க்க முடிந்தது; அந்த கொடுமையும் பூத் ஸ்லிப்பால் தவிர்க்கப்பட்டது. முன்னெப்போதும் கண்டிராத வகையில் துணை ராணுவ படைகளை குவித்து வாக்குச்சாவடிகளின் அருகே வேறு நபர்கள் எவரும் நடமாட விடா மல் தடுத்ததால், அசம்பாவிதம் நடக்குமோ என்ற பயத்தில் இதுவரை வாக்களிக்க வராமல் வீட்டில் இருந்தவர்களையும் இந்த தேர்தல் வெளியே வரவழைத்தது. இப்படி வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வாக்காளர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள், யாருக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள கட்சிக்காரர்களும் ஊடகங்களும் துடியாய் துடித்தாலும் அது ஒருபோதும் சாத்தியப்படுவதில்லை. கணிப்புகள் அப்படியே பலித்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. யுத்தம், பஞ்சம், கலவரம் போன்ற மோசமான நிகழ்வுகளை தொடர்ந்து வரும் தேர்தல்களில் மட்டுமே மக்களின் மனநிலையை முன்கூட்டி உணர முடிகிறது என்பதை கணிப்பியல் நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
உயர்ந்தபோதெல்லாம் திமுக வெற்றி
அதிகமான வாக்குப்பதிவு ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் எழுச்சி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், தமிழகம் இதுவரை சந்தித்த தேர்தல்கள் அந்த வாதத்துக்கு வலு சேர்க்கவில்லை. சொல்லப்போனால், வாக்குப்பதிவு அதிகமாக இருந்த தேர்தல்களின் முடிவு தி.மு.க.வுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. 21 ஆண்டுகளாக அதுதான் நிலவரம். 1989ம் ஆண்டு தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போது தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது. அடுத்து 1991ல் நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி மரணத்தால் அனுதாப அலை வீசியதாக கூறப்பட்ட நிலையிலும் வாக்குப்பதிவு முந்தைய தேர்தலைவிட 6 சதவீதம் குறைந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பின்னர் 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு 67 சதவீதமாக அதிகரித்தபோது தி.மு.க மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஐந்தாண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு முன்னைவிட 8 சதவீதம் வீழ்ச்சி அடைந்தபோது முடிவுகள் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்தது. மறுபடியும் வாக்காளர்கள் சாவடிகளுக்கு திரண்டு வந்து வாக்களித்ததால் வாக்குப்பதிவு 71 சதவீதமாக & முந்தைய தேர்தலை காட்டிலும் 12 சதவீதம் அதிகம்&உயர்ந்தபோது மீண்டும் தி.மு.க ஆட்சி பீடம் ஏறியது.
கடந்த 27 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு தமிழக மக்கள் இரண்டாவது வாய்ப்பு வழங்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், வாக்குப்பதிவு அதிகரித்த ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆளும் கட்சி மீது அதிருப்தியும் கோபமும் மேலோங்கும்போதுதான் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு கூட்டம் கூட்டமாக வந்து வாக்களிப்பார்கள் என்ற வாதம் அடிபட்டு போகிறது.
பொதுத் தேர்தல்கள் மட்டுமின்றி இடைத்தேர்தல்களும்கூட இதே நிலையைத்தான் பிரதிபலிக்கின்றன. அரசின் செயல்பாடு குறித்த பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தும் தேர்வாக கருதப்படுவது இடைத்தேர்தல். அதில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானால் முடிவு ஆளும் கட்சிக்கு எதிராகத்தான் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை பரவலாக காணப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் 80 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியும் அனைத்து இடங்களிலும் தி.மு.க மற்றும் அதன் தோழமைக்கட்சி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடினர் என்பது நினைவுகூரதக்கது. திருமங்கலம் (89%), பெண்ணாகரம் (85), திருச்செந்தூர் (78), கம்பம் (76), மதுரை மேற்கு (75) என தி.மு.க வென்ற அனைத்து தொகுதிகளிலும் அதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு காணப்பட்டது.
வாக்காளர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள், யாருக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள கட்சிக்காரர்களும் ஊடகங்களும் துடியாய் துடித்தாலும் அது ஒருபோதும் சாத்தியப்படுவதில்லை. கணிப்புகள் அப்படியே பலித்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. யுத்தம், பஞ்சம், கலவரம் போன்ற மோசமான நிகழ்வுகளை தொடர்ந்து வரும் தேர்தல்களில் மட்டுமே மக்களின் மனநிலையை முன்கூட்டி உணர முடிகிறது என்பதை கணிப்பியல் நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் நீண்ட காலத்துக்கு முன்பே கணிப்புகள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. இங்கிலாந்தில் 1992ல் நடந்த தேர்தல் அனுபவம் சுவையானது. கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்தது. லேபர் கட்சிதான் அமோக வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஊடகங் களும் அடித்துச் சொல்லின. வாக்குப்பதிவு சதவீ தம் 77 புள்ளி 7. முந்தைய 18 ஆண்டுகளில் காணாத அளவு. கன்சர்வேடிவ் பார்ட்டியின் கதை முடிந்தது என எழுதின. ஆனால் கன்சர்வேடிவ் கட்சிக்கு 336 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது; லேபருக்கு 271. கருத்துக் கணிப்பாளர்கள் பேச்சிழந்து போனார்கள். இது எப்படி நடந்தது என ஆராய்ந்தனர்.
கிடைத்த பதில்:
லேபர் கட்சிதான் அடுத்து ஆட்சிக்கு வரும் என வெளியான கருத்துக் கணிப்புகள் மக்களிடம் பீதியை கிளப்பிவிட்டது. அப்படி நடந்து லேபரின் கொள்கைகள் அமுலுக்கு வந்து விட்டால் தாங்கள் இப்போது அனுபவிக்கும் நிம்மதியான வாழ்க்கை பாதிக்கப்படும் என அஞ்சினர். தற்போதைய ஆட்சி தொடர்ந்தால் தான் தங்களுக்கு நல்லது நடக்கும் என உறுதியாக நம்பினர். அதனால், வாக்களிக்க ஆர்வம் இல்லாமல் வீட்டில் இருந்தவர்களும் துள்ளியெழுந்து அந்த அபாயத்தை தடுக்க சாவடிகளுக்கு விரைந்தனர். அதன் விளைவுதான் அலை அலையான கூட்டமும் அதிகபட்ச வாக்குப்பதிவும்.
கருத்துக் கணிப்புகளே தேர்தல் முடிவுக்கு வில்ல னாக மாறியதால் அதன் பிறகு இங்கிலாந்து மக்கள் தேர்தலுக்கு முன் வெளி யாகும் கருத்துக் கணிப்பு களில் அதிகமாக ஆர்வம் காட்டுவதில்லை. கணிப் பாளர்களும் வாக்குப்பதிவு செய்தபின் வெளியே வரும் மக்களிடம் யாருக்கு வாக்க ளித்தீர்கள் என்று கேட்டு பெறும் தகவலை எக்சிட் போல் என்ற பெயரில் வெளியிடுவதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.
இது இங்கிலாந்தில் நடந்தது. தமிழக மக்கள் மனதில் இருப்பது என்ன என்பதை அறிய மே 13 வரை காத்திருக்கதான் வேண்டும். நன்றி : தினகரன் நாளிதழ்

No comments:

Post a Comment