கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, April 24, 2011

இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் நானல்ல, ஜெயலலிதாதான் - முதல்வர் கருணாநிதி


இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் 23.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார் ஜெயலலிதா. கோடை வாசஸ்தலமான கொடைநாடு எஸ்டேட் போனவர், பாவம் அங்கும் என் மீது வசை மாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு ஓய்வெடுக்க முடியாமல் என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
யாரை மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்? 1956ல் சிதம்பரம் திமுக பொதுக்குழுவில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
24&8&77ல் சென்னையில் இலங்கை தமிழர் பிரச்னைக்காக 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி நடத்தியவன் நான்.
1981ல் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகிற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ‘இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது. வட கொழும்பில் தமிழர் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரயில்கள் தாக்கப்படுகின்றன. தமிழ் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு தூக்கியெறியப்படுகிறார்கள். இந்த பிரச்னையை தீர்க்க மனிதா பிமான அடிப்படையில் உதவிட வேண்டும்’ என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இலங்கை தமிழர் பிரச்னையில் அதிமுக அரசால் கைது செய்யப்பட்ட கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
25&7&83ல் வெலிக்கடை சிறைக்குள் சிங்களர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழர்களை கொலை செய்தபோது தமிழக தலைநகரில் 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்திய நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10&8&83ல் நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.
16&5&85ல் காஞ்சிபுரம் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானேன்.
23&8&85ல் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் நான் பேரணி நடத்தியதை அடுத்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
இலங்கை தமிழருக்கு ஆதரவாக 1986 மே மாதம் மதுரையில் பேராசிரியர், வீரமணி, முரசொலி மாறன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘டெசோ’ அமைப்பின் சார்பில் அனைத்திந்திய தலைவர்களை அழைத்து மாநாடு நடத்திய கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
3&6&86ல் என் பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்கு பகிர்ந்து கொடுத்தேன்.
1987 அக்டோபர் 15ம் தேதி திமுக சார்பில் பேரணி நடத்தினோம்.
16&10&87ல் தளபதி கிட்டுவை காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக் கை விடுத்தவன் நான்.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக எட்டு மாநில முதல்வர்களுக்கும் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான்தான்.
6&11&87ல் சென்னையில் ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக மனிதச் சங்கிலி நடத்தியவனும் நான்தான்.
15&3&89ல் டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையை விவாதித்தவனும் நான்தான்.
15&6&89ல் சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கை பிரச்னை குறித்து பேசியவனும் நான்தான்.
1991 ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக திமுக ஆட்சியே கலைக்கப்பட்டபோது முதலமைச்சராக இருந்ததே நான்தான்.
1989 நவம்பரில் தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி ‘‘இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி” என்று கூறினார். அவ்வாறு இளந்தலைவர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
2008 ஏப்ரல் 23ம் தேதி பேரவையில் ‘‘இலங்கையில் முறையான அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டும்’’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
2008 அக்டோபர் 6ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெல்லியில் உள்ள இலங்கை தூதரை உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா..?
‘‘பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வலியுறுத்துகிறது. புலிகளின் இயக்கத்தை சேர்ந்த எவரையும் இந்திய நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது’’ என்று பேரவையில் 2002 ஏப்ரல் 16ம் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதாதான் என்னை மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.
தமிழர்களை கொன்று குவித்ததை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது, ‘‘இலங்கை தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் நடக்கும்போது அப்பாவிகள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் புலிகள் பிடித்து வைத்து ராணுவத்தின் முன்னால் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்” என்று 17&1&09ல் அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை மன்னிப்பு கேட்க செல்கிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு ஏதாவது இருக்க முடியுமா?
இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் திமுகவையும் என்னையும் குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவரா?
அனைத்து கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அத்தனையும் கபட நாடகம் என்று வர்ணித்தார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கைநழுவ விடுவதும், பதவியில் இருக்கும்போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும், யாரையும் மதிக்காமல் ஆணவமாக நடப்பதும் ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை; உழைப்பு, அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதையை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment