கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

ஆட்சி மாறினால் நல திட்டங்கள் போய்விடும் - ரிஷிவந்தியத்தில் நடிகர் வடிவேலு பிரசாரம்


நான் சினிமாவில் காமெடி செய்தேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார் என நடிகர் வடிவேலு பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜை ஆதரித்து , நடிகர் வடிவேலு 11.04.2011 அன்று பிரசாரம் செய்தார். மணலூர்பேட்டை, கொரசப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, சவேரியர்பாளையம், மேல்சிறுவலூர் கூட்டுரோடு, வடபொன்பரப்பி, பிரம்மகுண்டம், ராவுத்தநல்லூர், புதுப்பட்டு, கடுவனூர், பகண்டை கூட்டுரோடு, திருப்பாலபந்தல், ஜி.அரியூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது, நடிகர் வடிவேலு பேசியதாவது:
என்னால் திரைப்படங்கள் மூலமாகத்தான் உங்களையும், குழந்தைகளையும் சிரிக்க வைக்க முடியும். ஆனால், உங்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க முடியாது. அவற்றை செய்து கொடுக்கக்கூடியவர் முதல்வர் கருணாநிதிதான். ஐந்தாண்டுகளில் முதல்வர் கருணாநிதி பல நல்ல திட்டங்களை செய்துள்ளார். கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோரது ஆசியோடு மதுரையில் பிரசாரத்தை தொடங்கி, ரிஷிவந்தியம் தொகுதியில் முடிக்கிறேன்.
கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருகிறார். அந்த அரிசியை உலை வைப்பதற்காக கேஸ் அடுப்பும் கொடுக்கிறார். அது கொதிக்கின்ற நேரம் வரை உலகத்தை பார்க்க டிவியையும் கொடுத்துள்ளார். ஏழை மாணவர்கள் படிப்பதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வந்துள்ளார். வாரம் 5 முட்டை வழங்குகிறார். மாணவர்களுக்கு 3 சீருடைகளையும் வழங்குகிறார்.
பெண்களுக்கு திருமணம் உதவி தொகையாக
^25,000
கொடுத்தார். இப்போது
^30,000
கொடுக்கப்போகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு
^6,000
கொடுத்து வருகிறார். இப்போது
^10
ஆயிரமாக கொடுக்க போகிறார். முதியோருக்கு
^500
கொடுத்து, இப்போது
^750
கொடுக்க போகிறார். 58 வயது கடந்த முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க உள்ளார். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். வேறு ஆட்சி மாறினால். இந்த திட்டங்கள் எல்லாம் போய்விடும்.
விஜயகாந்த் விருத்தாசலத்தில் மக்களிடத்தில் பொய் சொல்லி, அவர்களை ஏமாற்றிவிட்டு ரிஷிவந்தியம் வந்துள்ளார். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. விருத்தாசலத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சொன்னவர் அவ்வாறு செய்யவில்லை. சினிமாவில் அவர் தர்மம் செய்வது போன்ற காட்சியை பார்த்து மக்கள் ஏமாந்துவிட்டனர்.
அதிமுக கூட்டணி எண்ணையும், தண்ணியும் கலந்தது போல உள்ளது. இரண்டும் ஒன்று சேரவே சேராது. அதை செய்வேன், இதை செய்வேன் என்று கூறும் விஜயகாந்த வெற்றிபெற்றாலும் அந்த அம்மாவிடம் ஒன்றும் கேட்க முடியாது. ஏனென்றால் அந்த அம்மாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தியும், செருப்பால் அடித்தும் விஜயகாந்த அவமானப்படுத்தியுள்ளார்.
இதை அந்த அம்மா மறக்கமாட்டார். விஜயகாந்தால் அதிமுக கூட்டணி கெட்டுப்போச்சு. அவருக்கு ஒரு ஓட்டுகூட போடாதீங்க. உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அனுதாபம் மூலம் ஓட்டுக்களை பெற விஜயகாந்த் முயற்சிக்கிறார். அவருடைய டெபாசிட்டை காலி செய்யுங்கள்.
என்னை பயமுறுத்த பார்க்கிறார்கள். என் மக்களை ஏமாற விடமாட்டேன். எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது மிகப்பெரிய தப்பு. விஜயகாந்தை பார்த்தாலே குழந்தைகள்கூட அழுகிறது. நான் சினிமாவில் காமெடி செய்தேன். விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். யாரும் ஏமாந்து விடாதீர்கள்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.
கண்ணீர் விட்டார் வடிவேலு :
நடிகர் வடிவேலு பேசுகையில், “எங்கள் வீட்டில் 7 பிள்ளைகள். குடும்ப கஷ்டம் காரணமாக 4 தம்பிகளுடன் கண்ணாடி கடையில் வேலை செய்தேன்.
^60
சம்பளத்தில் 15 பேரை காப்பாற்ற வேண்டும். ஏழையின் கஷ்டம், அவர்களது வலி எனக்கு நன்றாக தெரியும் என்று சொல்லும்போது வடிவேலு அழுதார். மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை வறுமையின் காரணமாக காப்பாற்ற முடியாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கூறி வடிவேலு அழுதார்.
இப்போது உள்ளது போல் கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம், என நா தழுதழுக்க கூறினார்.

ஜெயலலிதா வாக்குறுதியை மக்கள் நம்ப மாட்டார்கள் - குமரிமுத்து பிரசாரம் :

ஜெயலலிதா அளித்த பொய்யான வாக்குறுதியை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று நடிகர் குமரிமுத்து கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து, 11.04.2011 அன்று தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் சிரிப்பு நடிகர் குமரிமுத்து திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டாக மகத்தான சாதனைகள் படைத்த திமுக அரசு தற்போது இந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. கருணாநிதி அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
ஆனால் எதிரணியில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். அது தேர்தலுக்காக அளித்த பொய்யான வாக்குறுதி என்பதை மக்கள் அறிவார்கள். மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற, மக்கள் வளமுடன் வாழ திமுகவை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு குமரிமுத்து பேசினார்.
அவரது குபீர் சிரிப்பை சிரித்து காட்டும்படி மக்கள் கேட்டனர். அவர் உடனே சிரித்தார். மக்கள் ரசித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

No comments:

Post a Comment