கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளை சிரிக்க வைப்பவர் கருணாநிதி - நடிகர் வடிவேலு


நான் நடிப்பால் மக்களை சிரிக்க வைக்கிறேன். முதல்வர் கருணாநிதி, நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளை சிரிக்க வைக்கிறார்’ என நடிகர் வடிவேலு பேசினார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து நடிகர் வடிவேலு குமராட்சி, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் கச்சேரிரோடு ஆகிய இடங்களில் திறந்த வேனில் 10.04.2011 அன்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
என்ன தான் உங்களை நான் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தினாலும், உங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிற ஒரே தலைவர் கருணாநிதிதான். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு, அதை பூரா ஏழை மக்களுக்கு கொடுத்தவர் கருணாநிதி தான்.
பிரசாரம் செய்ய போகும் இடமெல்லாம் உடம்பு தெரியவில்லை, தலைகள் தான் அதிக அளவு தெரிகிறது. எதிரணி கூட்டத்தில் பார்த்தால், தனித்தனியாக ஆட்கள் நிற்பது தெரிகிறது. ஏன்னா அந்த கூட்டம் எல்லாம் காசு கொடுத்து கூட்டிவந்த கூட்டம். இது பூரா எனது சொந்தம், பந்தம், அக்கா, தங்கச்சி கூட்டம். தமிழ்நாடு பூரா எங்க போனாலும் எழுச்சி கூட்டம். மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். எதிரணி சைடில் 10 பேரா தான் நிக்கிறாங்க. அதனால அங்கு ஆப்புதான்.
நான் எல்லா மக்களையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் முதல்வர் கருணாநிதி ஏழை மக்களை, நலத்திட்டங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார்.
ஒரு வீட்டிற்கு என்ன செய்யணுமோ அனைத்தையும் முதல்வர் செய்துள்ளார். கருவுற்ற பெண்களுக்கு
ஸீ6
ஆயிரம் கொடுத்தார். இப்ப 10 ஆயிரமாக உயர்த்தி உள்ளார். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைகூட மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது.
ஏழை மாணவர்களுக்கு இலவச லேப் டாப். இந்த திட்டம் ரொம்ப டாப். ஒரு வசதியான வீட்ல இருக்கிற அனைத்தும் ஏழை வீட்டில் இருக்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் கருவறையில் இருந்து கல்லறை வரை முதல்வர் கருணாநிதி செய்கிறார்.
எதிரிணியில ஒரு ஆளு... வேட்பாளரை போட்டு அடிக்கிறான் அந்த ஆளு. 40 வேட்பாளரையும் அடிக்கப் போறாரு. அனைவரும் வெளியே வந்துவிடுங்கள். பொதுமக்களாகிய நீங்கள், முதல்வர் அமைத்துள்ள இந்த நல்ல கூட்டணியை, அருமையான கூட்டணியை ஆதரிக்க வேண்டும். ரவிக்குமாரை ஆதரித்து மே 13ம் தேதி மெழுகுவர்த்தி சின்னத்தில் நச் என்று ஓட்டு போடணும்.
அப்புறம் பட், பட் என்று கிரைண்டர், மிக்சி வரும். வீட்டுக்கு ஒரு பெரிய மனுஷன் இருப்பதுபோல் நாட்டுக்கு ஒரே பெரிய மனிதர் முதல்வர். 6வது முறையாக ஆட்சியில் அவரை உட்கார வைத்து அவர் திட்டம் பூரா நாம வாங்கிக்கிறோம். இவ்வாறு வடிவேலு பேசினார். மிரட்ட மிரட்ட பிரசாரம் சூடு பிடிக்கும் - நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி :

திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யும் நடிகர் வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுபற்றி முதல்வர் கருணாநிதியிடம் வடிவேலு புகார் செய்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரி மற்றும் கடலூரில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி 09.04.2011 அன்று பேசினார். அதைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாளிகையில் முதல்வர் கருணாநிதி அன்று இரவு தங்கினார்.
இந்நிலையில், முதல்வர் கருணாநிதியை 10.04.2011 அன்று காலை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த வடிவேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எனக்கு மாற்று அணியிலிருந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. சென்னையில் எனது அலுவலகம் மற்றும் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் மூலம் மிரட்டுகிறார்கள். நான் பிரசார செய்யும் வேனில் குண்டு வைத்து, என்னை கொன்று விடுவதாக மிரட்டல் வருகிறது. இந்த மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இதுபற்றி, முதல்வர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தேன்.
அவர், ‘தண்ணி பாம்பால் கூட உன்னை ஒன்றும் பண்ண முடியாது’ என்று எனக்கு தைரியம் கொடுத்தார்.
ஒவ்வொரு தொகுதியிலும் திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துச் சொல்லி வருகிறேன். மக்கள் எனது பிரசாரத்துக்கு அமோக ஆதரவு தருகிறார்கள். இதை மாற்று அணியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்காக நான் அஞ்சமாட்டேன். சொல்லப்போனால் இவர்கள் மிரட்ட மிரட்ட எனது பிரசாரம் இன்னும் சூடு பிடிக்கும்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக அரசின் நலத்திட்டங்கள் அப்படியே ‘பாம்’ மாதிரி இருக்கிறது. இதனால்தான் எனக்கு ‘பாம்’ மிரட்டல் விடுகிறார்கள். மக்கள் ஆதரவை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த முறை விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிட்டார். இப்போது தோல்வி பயம் வந்ததால் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார். அங்கு அவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். அவரை தோற்கடிப்பதற்காக ரிஷிவந்தியம் தொகுதியிலும் பிரசாரம் செய்ய உள்ளேன்.
எங்கள் கூட்டணியினரின் பிரசாரத்தில் ஒரே மக்கள் தலையாக தெரிகிறது. மாற்று அணியில் உடம்புதான் தெரிகிறது.
இவ்வாறு வடிவேலு கூறினார்.

No comments:

Post a Comment