கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 19, 2011

என் மீது கூறப்பட்ட புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: கே.சி.பழனிசாமி


என் மீது கூறப்பட்ட புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அரவாக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமி கூறினார்.

அரவாக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி கூறியதாவது:

கடந்த 2 நாட்களாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் என்னை எதிர்த்து நின்ற வேட்பாளருக்கு நான் கொலை மிரட்டல் விடுத்ததாக செய்தி வெளியாகிறது. நான் 3 முறை எம்.பி. தேர்தலில் நின்று உள்ளேன். ஒரு முறை எம்.பி.யாக இருந்து உள்ளேன்.


இதுவரை எந்த வேட்பாளரும் என்னை பற்றி குறை கூறியது இல்லை.


ஒருவர் அந்த கட்சியின் மாவட்ட செயலாளராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த கட்சியின் வேட்பாளரிடம் சொல்லி இவ்வாறு புகார் கூறி உள்ளார். நான் ஜெயலலிதாவை குறை சொல்ல மாட்டேன்.


நான் யாரையும் மோசமாக பேசமாட்டேன். என்னை பற்றி கரூர் மாவட்ட மக்களுக்கு தெரியும். என்னை எதிர்த்து நின்றவர், மற்ற ஒருவர் சொல் பேச்சை கேட்டுக் கொண்டு புகார் கூறியுள்ளார்.


என் வாழ்க்கை, என் தொழில், என் அந்தஸ்து என்ன? இது போன்று நான் எந்த செயலையும் செய்ய மாட்டேன். என் மீது கூறிய புகார் வெறும் நாடகம் ஆகும். என் அரசியல் வாழ்க்கையில் எப்போதும் இல்லாத குற்றச்சாட்டு தற்போது கூறப்பட்டு உள்ளது. இதை நிரூபிக்க வேண்டும்.


இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். எனவே என்னை குறை கூறியவர் முயற்சி பலிக்காது. என்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை நான் நேரில் பார்த்தது கூட இல்லை.


எனவே இது குறித்து தேர்தல் ஆணையம், மற்றும் காவல்துறை ஆகியோருக்கு என்னை பாதுகாத்துக் கொள்ள கடிதம் அனுப்பி உள்ளேன்.

அதே போன்று கட்சி தலைமைக்கும் கடிதம் எழுதி உள்ளேன். இவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment