அறிஞர் அண்ணா 103-வது பிறந்த நாளையொட்டி கட்டுரை - கவிதை - பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவிகளுக்கு பரிசுத்தொகை
39 பேருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டில் விழா நடைபெற்றது
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா 103வது பிறந்த நாள் விழாவையொட்டி செங்கல்பட்டில் 2 நாட்கள் கோலாகலமாக நடத்தப் பட்ட கட்டுரை, கவிதை ஒப்பித்தல், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 39 பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகையை கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 103வது
பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ -மாணவியர்களுக் கான, மாநில அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித் தல் இறுதிப் போட்டிகள் செங்கல்பட்டு அண்ணா திடலில் கடந்த 2 நாட் களாக மிகவும் கோலாக லமாக நடைபெற்றது.
தி.மு.கழகப் பொருளா ளரும், கழக இளைஞர் அணிச் செயலாளருமான தளபதி மு.க.ஸ்டாலின் 2 நாட்களாக செங் கல்பட்டிலேயே தங்கியி ருந்து இந்தப் போட்டி களை முன்னின்று நடத்தினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க ளில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களும் புதுவை மாநிலத்தில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களும் மாநில அளவிலான இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த இறுதிப் போட்டி நடுவர்களாக தஞ்சை கூத்தரசன், முனைவர் கோவி. செழியன், பொள்ளாச்சி உமாபதி, குழந்தை தமிழர சன், சாவல் பூண்டி சுந்தரே சன், ஈரோடு இறைவன், தாயகம் கவி, குமரி மணி மாறன், தாமரைபாரதி, நந்தனம் நம்பிராசன், புதுக் கோட்டை விஜயா, நளினி சாரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்பு இப்போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் களுக்கு பரிசளிப்பு விழா நேற்று பகல் நடை பெற்றது. இவ்விழா கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.
கழக இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், இ.ஜி. சுகவனம், பனை மரத்துப் பட்டி ராஜேந்திரன், சுபா. சந்திரசேகர், சுப.த.சம்பத், அசன்முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலா ளர் தா.மோ.அன்பரசன் அனை வரையும் வரவேற்றார்.
பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற திருவள் ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.கே.பி.ரிஷி சந்தோஷ் என்ற மாண வனுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் இடம் பெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நரேன் கவுதம் என்ற மாணவனுக்கு இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன் றாம் இடம் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொ.கணபதி என்ற மாணவனுக்கு 3ஆம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் திருவண்ணாமலை உசேன் செரீப், திருவாரூர் டேனியல் வில்சன், தஞ்சை பிரவீணா, ஈரோடு தமிழ் பிரபாகரன், விழுப்புரம் பிருதிவிராசன், காஞ்சிபுரம் விக்னேஷ் குமார், திண்டுக்கல் விநோதினி கோவை அபு பக்கர் சித்திக், விருதுநகர் கார்த்தீஸ் வரி, நாகை ஆர்த்தி ஆகிய 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையை தளபதி மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கவிதை ஒப்பித்தல் போட்டியில் முதல் இடம் பெற்ற கரூர் மாவட்டத் தைச் சேர்ந்த எஸ். ரோசினி, இரண்டாம் இடம் பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கவுசல்யா, மூன்றாம் இடம் பெற்ற நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ச.புவனேசுவரி ஆறுதல் பரிசாக நாமக்கல் பால ஜெகதீசுவரி, வட சென்னை நிஷாந்தினி, கடலூர் லாவண்யா, இராம நாதபுரம் பிரவீன் குமார், திருப்பூர் விநோதினி, புதுவை பூர்ணிமா, மதுரை மாநகர் கமலா, திருச்சி விநோதினி, தென் சென்னை வைஷ்ணவி, கன்னியாகுமரி நடராஜ் ஆகிய மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுத் தொகை யாக தலா ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
கட்டுரைப் போட்டிகளில் முதல் இடம் பெற்ற நெல்ல மாணவி ராஜப் பிரியா, இரண்டாம் இடம் பெற்ற சேலம் மாவட்டம் ஆ.ச.ஜீவிதா, மூன்றாம் இடம் பெற்ற மாணவி அப்சாரா ஆறுதல் பரிசு பெற்ற மதுரை புறநகர் நீலாப்பிரியா, கிருஷ்ண கிரி மங்களா, நீலகிரி கேத்ரின் கிறிஸ்டினா, அரியலூர் கவுதம், புதுக் கோட்டை கவுசல்யா, வேலூர் ஹேம லதா, பெரம்பலூர் சரவ ணன், தருமபுரி வடக்கு பத்ம ஜோதி, தருமபுரி தெற்கு ப.சிவா ஆகிய மாணவ, மாணவியர் களுக்கு தலா ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையை அவர் வழங்கினார்.
இங்கு 3 போட்டி களிலும் வெற்றி பெற்ற 39 மாணவ, மாணவியர் களுக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகையை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அண்ணாவின் நூற் றாண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக மாநில, மாவட்ட அளவில்பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்து வரு கிறோம். இதேபோல், திமுக தலைவர் கலைஞ ரின் பிறந்த நாளை முன் னிட்டு 10, 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங் களை பிடிக்கும் மாணவர் களுக்கு பரிசு வழங்கி ஊக் கப்படுத்தி வருகிறோம்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 2008ஆம் ஆண்டு இந்த போட்டி தொடங்கப் பட்டது. இதுவரை 5,616 மாணவ, மாணவிகளுக்கு 1 கோடியே 20 லட்சத்து 7,500 பரிசு வழங்கியுள் ளோம். 2009ஆம் ஆண்டு முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 6,830 பேருக்கு 1 கோடியே 91 லட்சத்து 4,500 பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடியே 21 லட்சம் பரிசு வழங்கி, மாணவர்களை ஊக்கப் படுத்தி வருகிறோம்.
தி.மு.க.வில் எத்த னையோ துணை அமைப் புகள் இருக்கின்றன. ஆனால் இளைஞர் அணி, தி.மு.க.வின் கொள்கை, லட்சியங்களை செயல் படுத்துவது மட்டுமல்லா மல், மாணவர்களை ஊக்கு விக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. எத்தனை பணிகள் செய் தாலும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கும் இந்த பணியில்தான் மன நிறைவு ஏற்படுகிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப் பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பா ளர்கள் அனைவரும் தனித் தனி யாக விழா மேடைக்கு சென்று தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பொன் னாடை அணி வகுத்து வாழ்த்துப் பெற்றனர்.
முன்னாள் அமைச்சர் கள் க.பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாவட்டக் கழகச் செயலாளர் ஏ.கே. எஸ்.விஜயன், ஆர்.டி. சேகர், மாதவரம் சுதர் சனம், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ. வைதியலிங்கம், கோவை மாநகரச் செயலாளர் வீரகோபால், புதுவை மாநில அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன், கு.க.செல்வம், மு.ஈஸ் வரப்பன், அன்பகம் கலை, சென்னை மாநகர பகுதிச் செயலாளர்கள் மகேஷ் குமார், மணிவேந்தன், டன்லப் ரவி, தமிழ்வேந் தன், ஐ.சி.எப். முரளிதரன்,
காஞ்சிபுரம் மாவட்டக் கழக அவைத் தலைவர் கே. சுந்தர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.வி.எம். அ.பொன்மொழி, வி. எட்டியப்பன், மல்லிகா மோகன், மாவட்டப் பொருளாளர் ஜி.சுகுமார், காஞ்சி மாவட்ட இளை ஞர் அணி அமைப்பாளர் பாலவாக்கம் த.விசுவநா தன், துணை அமைப் பாளர்கள் டி.வி.கோகுல கண்ணன், ப.அப்துல் மாலிக், ஜி.செல்வம்,
புதுவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் இரா.சிவா, கழக ஆதி திராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆ. கிருஷ்ணசாமி, எல்லா புரம் மூர்த்தி, பூவை ஜெயக்குமார், அன்பில் பெரிய சாமி, திரு வண்ணாமலை திருமகன், வீரபாண்டி ராஜா, இ.பெ. செந்தில் குமார், தஞ்சை நீலமேகம், திருவள்ளூர் நீலகண்டன், தென் சென்னை வி.எஸ். ராஜ், வேலூர் ஏ.கே.சுந்தர மூர்த்தி, கோவை அருண் குமார், தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் வெ. விசுவநாதன், சன்பிராண்ட் ஆறுமுகம், ஆ.ஜானகிரா மன், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள், வீ. தமிழ்மணி, செய்யூர் பால கிருஷ்ணன், கெ.பழனிச் சாமி, எம்.எஸ். கே.இப் ராகிம், ஆ.கோ. பாண்டு ரங்கன், கண்டோன் மெண்ட் நந்தகுமார், கெ.ஞானசேகரன், மலர் விழிகுமார், மீராசபா பதி, நகரச் செயலாளர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணா நிதி, பி.குணா, சி.வி.எம். அ. சேகர், க.அன்புச் செல்வன், பம்பல் கருணா, மு.நித்தியானந்தம், ஜெ. சண்முகம்,
ஒன்றியச் செயலாளர்கள் இரா.நாகன், எம்.கே.தண்டபாணி, ஆ.மனோகரன், பி.எம். குமார், ரோஸ் எஸ்.நாக ராசன், லத்தூர் சேகர், கே.கண்ணன், அ.விஜயன், இரா.ஸ்ரீதரன் பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பா ளர்கள் படப்பை ராஜேந் திரன், சி.கே.வஜ்ஜிரவேலு, எஸ்.கே.நெப்போலி யன், த.விஜயபாலன், ஜனனி ராஜாகிருஷ்ணமூர்த்தி, வனஜா உட்பட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.
செங்கல்பட்டு நகரில் 2 நாட்கள் மிகவும் கோலாக லமாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இவ் விழாவையொட்டி செங் கல்பட்டு நகரம் முழுவதும் கழக கொடி தோரணங் களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. மாவட்ட மாநாடு போல மிகவும் எழுச்சியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோ ரின் ராட்சத கட் அவுட்க ளும் மேடை எதிரில் வைக்கப்பட்டிருந்தது.
செங்கை நகர கழகச் செயலாளரும், நகர மன்றத் தலைவருமான கே.அன்புச் செல்வன் விழா முடிவில் நன்றி கூறினார்.