கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 16, 2011

அதிமுகவை வீழ்த்த உளியாவோம் - மதிமுக தலைவர் வைகோ சிடி மூலம் பிரசாரம்


தேர்தலை புறக்கணித்துள்ள மதிமுகவினரின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் சின்னையா, தன்சிங் ஆகியோரை தோற்கடிப்பது என அந்த தொகுதிகளின் மதிமுக சார்பில் ரகசிய கூட்டம் போட்டு முடிவு எடுத்துள்ளனர்.
ஏழு ஆண்டு காலம் அதிமுக கூட்டணியில் இருந்து, தற்போது கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மதிமுகவினர் கொதித்துப்போய் உள்ளனர். தமிழகத்தில் பல இடங்களிலும் அதிமுக கூட்டணியை தோற்கடிப்பது என மதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதா திருந்தவே மட்டார். அவரது ஆணவ போக்கு மாறவே இல்லை. திருந்துவார் என எதிர்பார்த்தது தவறு, வஞ்சிக்கப்பட்ட எங்கள் தொண்டர்கள் ஜனநாயக கடமையை தெளிவாக செய்வார்கள் என்றும், ஜெயலலிதாவுக்காக பல தியாகங்களை மதிமுக செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஜெயலலிதா பற்றி வைகோ பேச்சு அடங்கிய சிடி தயாரிக்கப்பட்டு, தொகுதி முழுவதும் மதிமுக நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்தித்து வழங்கி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரம் சிடிக்கள் தொகுதி முழுவதும் வினியோகிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் து.மணிவண்ணன் கூறுகையில், “கடந்த 7ஆண்டாக அதிமுகவுக்கு ஆதரவாக மதிமுக இருந்தது. பல தியாகங்கள் செய்துள்ளது. வஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும் ஏமாற்றப்பட்டுள்ளோம். நஞ்சு எண்ணம் கொண்டவர்களுக்கு நாங்கள் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை, ஒவ்வொரு மதிமுக தொண்டனுக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு உளியாக வேலை செய்தால், ஜெயலலிதா தோற்கடிக்கப்படுவது உறுதி ” என்றார்.

No comments:

Post a Comment