கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

நெசவாளர்களை கஞ்சித்தொட்டி திறக்க வைத்த பெருமை அதிமுகவை சேரும்


நெசவாளர்களை கஞ்சித்தொட்டி திறக்க வைத்த பெருமை அதிமுகவையே சேரும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் 09.04.2011 அன்று பிரசாரம் செய்தார்.
அப்போது, ஜி.கே.வாசன் பேசியதாவது:
அமைச்சர் கோ.சி.மணி இத்தொகுதியில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் 50 தொகுதிகள் 80 முதல் 90 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. அதில் கும்பகோணம் தொகுதியும் ஒன்று.
இத்தொகுதி நெசவாளர்கள் அதிகம் வாழும் தொகுதி. நெசவாளர்களின் கடன்
ஸி3,000
கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இலவச மின்சாரத்தை நெசவாளர்களுக்கு 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக தமிழக அரசு உயர்த்தி வழங்குகிறது.
நெசவாளர்களுக்கான ஓய்வூதியத்தை
ஸி600ஆக
மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 4,65,658 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 58 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனையை கருணாநிதி வழங்கியிருக்கிறார்.
100 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதியை காப்பாற்றியவர் கருணாநிதி. உழவர் சந்தையை மூடிய பெருமை அதிமுகவுக்கு உண்டு. நெசவாளர்கள் வேலை வாய்ப்பின்றி கஞ்சி தொட்டிக்கு அனுப்பிய பெருமையும் அதிமுகவையே சேரும்.
இவ்வாறு ஜி.கே. வாசன் பேசினார். கருணாநிதி முதல்வர் ஆவதே தமிழக மக்களின் விருப்பம் - திருமாவளவன் பேச்சு :

‘கருணாநிதிதான் முதல்வராக வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்’ என திருமாவளவன் பேசினார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனைசெல்வனை ஆதரித்து கட்சி தலைவர் திருமாவளவன் 09.04.2011 அன்று பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
தமிழகத்தில், குடிசைகளே இல்லாத கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகளுக்கு நிதியும் ஒதுக்கியுள்ளார். இந்த குடிசை வீடுகளில் பிற்பட்ட மக்களும், ஆதிதிராவிட மக்களுக்கும் 27 லட்சம் பேர் குடிசை வீட்டில் வசிக்கின்றனர். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி பெயரில் திட்டம் இருப்பதால், திட்டத்தை இழந்து விடுவோம்.
டாக்டர் முத்துலட்சுமி, ரெட்டை மலை சீனிவாசன் யார் என்றே விஜயகாந்துக்கு தெரியாது. நடிகை அசின், நமீதா பற்றி தெரியும். வறுமை என்றால் என்னவென்று ஜெயலலிதாவுக்கு தெரியாது. கருணாநிதி கொண்டு வந்ததால் உழவர் சந்தை திட்டத்தை இழுத்து மூடியவர் தான் ஜெயலலிதா. எதையும் ஏட்டிக்கு போட்டியாக செய்பவர்தான் அவர்.
ஜெயலலிதா தடுமாறும் தலைவர், விஜயகாந்த் தள்ளாடும் தலைவர். கருணாநிதி தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவர்தான் முதல்வராக வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
நலத்திட்டங்கள் நிறைவேற கருணாநிதி மீண்டும் முதல்வராக வேண்டும் - அன்புமணி :

வேளச்சேரி தொகுதி பாமக வேட்பாளர் ஜெயராமனை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி நேற்று ஆதம்பாக்கம் பெரியார் நகரில் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. ஜெயலலிதா, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தலுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வருகிறார். தேர்தல் முடிந்ததும் கோடநாடு சென்று விடுகிறார். ஜெயலலிதா, விஜயகாந்த் கூட்டணி அடிப்படை இல்லாத கூட்டணி.
விஜயகாந்த் போதையில் நிதானம் இழந்து புதிது புதிதாக எதை எதையோ சொல்லி அவரும் குழம்பி நம்மையும் குழப்புகிறார். தனது வேட்பாளரையே அடிக்கிறார். ஒரே மேடையில் பிரசாரம் செய்தால் விஜயகாந்த் அடித்து விடுவாரோ என்று ஜெயலலிதா பயப்படுகிறார்.
ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களின் அடிப்படை தேவையான உணவு, உடை, மருத்துவம் ஆகியவை திமுக ஆட்சியில் கிடைக்கிறது. கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வர் கருணாநிதி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம், பஸ் பாஸ், சைக்கிள் போன்றவற்றை வழங்கியுள்ளார்.
ஜெயலலிதா ஆடு, மாடு கொடுப்பதாக கூறியுள்ளார். சென்னையில் ஆடு, மாடு கட்ட இடம் உள்ளதா? மொட்டை மாடியில் கட்டுவீர்களா? இது நடக்காது.
எனவே, பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற கருணாநிதி மீண்டும் முதல்வராக வேண்டும்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.
முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, திமுக பகுதி செயலாளர் ரவி, வட்ட செயலாளர் தம்பிதுரை, நிர்வாகிகள் மதிவாணன், திருவேங்கடம், சொக்கலிங்கம், காங். நிர்வாகிகள் ஆதம் சிவா, செபஸ்டின், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் வளவன், அம்பேத், பாமக நிர்வாகிகள் வேலு, சிவா, ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment