கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, August 30, 2011

தூக்கு தண்டனையை நிறுத்த ஜனாதிபதிக்கு ஜெயலலிதா பரிந்துரை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின் பேச்சு


பேரறிவாளன் உள்பட மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த தனக்கு அதிகாரம் இல்லையென்று கூறும் முதல்வர் ஜெயலலிதா, ஜனாதிபதிக்கு பரிந்துரையாவது செய்யலாமே என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
திண்டுக்கல்லில் மாவட்ட திமுக சார்பில் �சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு� என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் 29.08.2011 அன்று இரவு நடந்தது. மாவட்ட செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், இளைஞரணி அமைப்பாளர் அசன்முகமது, துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அர.சக்கரபாணி எம்எல்ஏ., வரவேற்றார்.
கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இல்லாவிடினும், மக்கள் மன்றத்தில் திமுகதான் ஆளும்கட்சி. சட்டமன்றத்தில் ஜனநாயகமே இல்லை.
பேரறிவாளன் உள்பட மூன்று பேருக்கு தூக்குதண்டனையை நிறுத்தி வைப்பது குறித்த கருத்துக்களைக்கூட சட்டப்பேரவையில் சொல்ல முடியவில்லை. திமுக மட்டுமல்லாது அதிமுக கூட்டணி கட்சிகள், பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர் அனைவரும் தூக்குதண்டனையை நிறுத்தி வைக்க குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, தனக்கு அதிகாரம் இல்லை என்கிறார். ஜனாதிபதிக்கு குறைந்தபட்சம் பரிந்துரையாவது செய்யலாமே. தமிழ்மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கலாமே. வேறொரு நாடான இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அப்போது மட்டும் எங்கே இருந்து இவருக்கு அதிகாரம் கிடைத்தது. இதனை அரசியல் ஆக்காமல் உணர்வு ரீதியாக இப்பிரச்னையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
திமுக கொண்டு வந்த சமச்சீர் கல்வித்திட்டம் தரமானதே என உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறியுள்ளது. இதே போன்று தலைமைச்செயலக விவகாரத்திலும், நீதிமன்றத்தில் நாம் வெற்றிபெறுவோம். தலைமை செயலக கட்டுமான பணியில் தரமில்லை என்று கூறி மூடிவிட்டு பழைய கட்டிடத்திலேயே
தரமில்லாத புதிய தலைமை செயலக கட்டிடத்தில் எப்படி தரமான மருத்துவமனையை அமைக்க முடியும். இதுதவிர, தலைமை செயலகம் செயல்படுவதற்கேற்பவே அக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. மருத்துவமனைக்கான உள்கட்டமைப்புகளை கொண்டுவருவதற்கு மேலும் ரூ.2ஆயிரம் கோடி செலவாகும்.
இதனால் மக்கள் பணம் தான் விரயமாகும். 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளனர். திமுக என்றும் அழியாது.
நிலம் அபகரிப்பு தொடர்பாக குற்றம் நடந்திருந்தால், முறையாக வழக்குப்பதிவுசெய்து நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்க வேண்டும். அதைவிடுத்து, பொய்ப்புகார் மூலம் கைது செய்தால் அதனைக்கண்டு திமுக அஞ்சாது. இதைவிட பல்வேறு சோதனைகள், தோல்விகளை கடந்துள்ளோம். ஜெயலலிதாவின் இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சுப.தங்கவேலன், தங்கம்தென்னரசு, செங்குட்டுவன், வேலு, மொய்தீன்கான், கம்பம் ராமகிருஷ்ணன், கோவி.செழியன், பெரியகருப்பன், புஷ்பலீலா ஆல்பன் பங்கேற்றனர்.

தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் : கலைஞர் கருணை மனு


ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற மூன்று பேரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
மனித உரிமைக்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான து�க்குத் தண்டனை தேவையில்லை என்றும், அதனை எல்லா நாடுகளும் ரத்து செய்து விடலாமென்றும் கருத்து தெரிவிக்காதோர் யாரும் இல்லை. உயர்ந்த பட்சத் தண்டனையான து�க்கு தண்டனைக்குப் பதிலாக, கொலைக் குற்றம் சாற்றப்பட்ட ஒரு கைதி எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்றத்தை எண்ணியெண்ணி தனக்குத் தானே வருந்துவதை விட து�க்குத் தண்டனையால் பெரிய பயன் ஒன்றும் விளைந்து விடப்போவதில்லை.
கொலைக் குற்றத்தில் ஒரு மனிதன் ஈடுபட்டிருப்பானேயானால், அவன் அதற்காக ஆயுள் முழுவதும் வருந்தி வாடுவதுதான், து�க்குத் தண்டனையை விடக் கடுமையானது என்பது மட்டுமல்ல, அந்த மனிதன் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை வழங்கி, வழி வகுத்திடக் கூடியதுமாகும். இந்த எண்ணத்தின் அடிப்படையில் து�க்கு தண்டனையே கூடாது என்ற கருத்தை பல்லாண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், தமிழீழப் போராளிகள் வெலிக்கடை சிறைச்சாலையிலே சித்திரவதை செய்யப்பட்டு, செத்து மடிந்த காலந்தொட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் போராளிகளும், சிங்கள ராணுவத்தால் தாக்குண்டு மாண்ட அப்பாவித் தமிழர்களும் தாய்த் தமிழகத்தில் உள்ள நம்மை கண்ணீர்க் கடலில் மிதக்க விட்ட போது போர் என்றால் இதெல்லாம் நடக்கும்தான் என்றெண்ணி நாம் கிடந்திடவில்லை.
மத்தியப் பேரரசுக்கு நாம் எழுதிய மனமுருக்கும் கடிதங்களும் பிரதமர் மற்றும் இந்தியத் தலைவர்கள் அனைவரிடமும் நேரில் எடுத்து வைத்த கோரிக்கைகளும் யாரும் அறியாதது அல்ல. அறியாதோர் போல நடிப்பது அரசியலுக்காகவே அன்றி வேறல்ல. அதனை விவாதிக்க விரும்பவும் இல்லை. விவாதிப்பதற்கான நேரமும் காலமும் இதுவுமில்லை.
அனைத்தையும் மறந்து விட்டு, இன்று நம் உள்ளத்தை உருக்கும் பிரச்னையாக உருவெடுத்திருக்கின்ற மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதைத் தடுத்து உதவிடும் பணி நம் கண் முன்னே பேருரு எடுத்திருக்கிறது. அந்தப் பணியை நிறைவேற்றித் தரும் பொறுப்பையேற்று து�க்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்போவதாகக் கூறப்படும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களைக் காத்தருள வேண்டும்.
இன்று நம்மிடையே இல்லாத இளந்தலைவர் ராஜீவ் காந்தியே இருந்தால்கூட, இந்தச் சூழலில் உண்மைத் தமிழர்களின் குரலுக்கு மதிப்பளித்து, �மறப்போம், மன்னிப்போம்� எனும் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப இந்த மூவரின் உயிரையும் அந்த மாமனிதர் காப்பாற்றியிருப்பார். இதை எண்ணி மரண தண்டனையை மாற்றியமைத்து, அவர்கள் உள்ளபடியே குற்றம் புரிந்திருந்தால் அதற்காக மனம் வருந்தும் நிலையில் அவர்கள் இதற்காக 20 ஆண்டு காலத்திற்கு மேல் சிறையில் இருந்ததையே ஆயுள் தண்டனையை விட அதிகமானதெனக் கருதி து�க்கு தண்டனையை ரத்து செய்தால், இந்த மனித நேயச் செயலை மனமாரப் புகழ்ந்து மகிழக் கூடிய இனமாக தமிழினம் இருக்கும்.
இந்த மூவரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றும், து�க்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய து�ய வாழ்வினை மேற்கொண்டு அதனைத் தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் என்ற முறையிலும், அவர்களின் விடுதலைக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவன் என்ற அடிப்படையிலும், மத்திய, மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதை கருணை மனுவாகக் கருதிட வேண்டு கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையை நிறுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம் - மு.க.ஸ்டாலின்


ராஜிவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி ஆகியோர் கடந்த 25ம் தேதி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 29.08.2011 அன்று காலை கடலூர் வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சிறையில் உள்ள நேரு, அன்பில் பெரியசாமி ஆகியோரை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் சென்றனர்.
பின்னர் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
திமுகவினர் மீது ஜெயலலிதா தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருகிறார். அதனை திமுக சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும். உள்ளாட்சி தேர்தல் மற்றும் திருச்சி இடைதேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்து பயந்துபோன ஜெயலலிதா, இதுபோன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த ஜெயலலிதா தூக்கு தண்டனையை குறைப்பதற்கு தன்னிடம் அதிகாரம் இல்லையென தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதை போல தூக்கு தண்டனையை நீக்ககோரி தீர்மானம் நிறைவேற்றலாம், பரிந்துரை செய்யலாம். இதற்கு எந்த சட்டமும், அதிகாரமும் தேவையில்லை.
சட்டமன்றத்தில் இன்று ஜெயலலிதா அறிவித்துள்ள அறிக்கை, அவரது நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் கலந்து பேசி போராட்டம் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். காவல் துறையால் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் இன்று அமைச்சர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் உள்ளனர். இதுதொடர்பாக திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலின் வருகையையொட்டி சிறை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். சிறைக்குள் ஸ்டாலின் உட்பட 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

3 பேரையும் விடுவிக்க திமுக வக்கீல்கள் தீர்மானம்



திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக வழக்கறிஞர்கள் கூட்டம் 29.08.2011 அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இணை செயலாளர்கள் வெ.ரவி, கிரிராஜன், தலைமை கழக வழக்கறிஞர்கள் பரந்தாமன், தண்டபாணி, ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* அண்ணா விருது பெறவிருக்கும் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாராட்டு விழா நடத்தப்படும்.
* சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென இக்கூட்டம் மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.

Monday, August 29, 2011

நில அபகரிப்பு வழக்குகள் : திமுகவினர் மனுக்களை விசாரிக்க கூடுதலாக 4 நீதிபதிகள் நியமனம்


தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 4 நீதிபதிகளை நியமித்து தலைமை நீதிபதி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்குகளை போலீசார் பதிவு செய்து வருகிறார்கள். இதில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, எம்.எல்.ஏ. அன்பழகன் உள்பட தி.மு.க.வினர் பலர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். வீரபாண்டி ஆறுமுகத்திற்கு முன்ஜாமீன் வழங்கினார். பின்னர் என்.கே.கே.பி.ராஜா வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரிக்கும்போது, அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்தில் கூறினார். இதனால் தி.மு.க.வினர் வழக்கை விசாரிக்க நீதிபதி ராஜசூர்யா மறுத்து விட்டார்.
இதனால் வேறு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க. வக்கீல் என்.ஜோதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். தி.மு.க.வினர் வழக்கை விசாரிக்க நீதிபதி சுதந்திரம் மட்டும் நியமிக்கப்பட்டார். அவரிடம் அதிகமான வழக்குகள் பதிவாவதால், வழக்கு விசாரணையில் கால தாமதம் ஏற்பட்டது. இதுபற்றி வக்கீல் ஜோதி மீண்டும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி வழக்குகள் கால தாமதம் பற்றி குறிப்பிட்டார். இதனால் தலைமை நீதிபதி, நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க.வினர் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் கே.என்.பாஷா, வாசுகி, மதிவாணன், சுதந்திரம் ஆகிய 4 பேரை நியமித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து ஒரு வாராமாக விசாரணைக்கு வராமல் இருந்தது.
தற்போது 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதால், பொங்கலூர் பழனிச்சாமி மனு நீதிபதி மதிவாணன் முன் 29.08.2011 அன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி பாஷா தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த பெஞ்ச் 29.08.2011 அன்று விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு வரவில்லை.
நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் முன் ஜாமீன் மனுக்களை விசாரிக்க, 4 நீதிபதிகளை நியமித்துள்ளது உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை என்று வக்கீல் வி.மனோகர் கூறினார்.

தோல்வியால் திமுக துவண்டு விடாது விரைவில் வீறு கொண்டு எழும் : மு.க.ஸ்டாலின் பேச்சு



�ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக� என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆர்கே நகர் பகுதி திமுக சார்பில் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் விழா, புதுவண்ணாரப் பேட்டையில் 28.08.2011 அன்று நடந்தது.
பகுதி செயலாளர் டன்லப் ரவி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ பி.கே. சேகர்பாபு முன்னிலை விகித்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 2,100 முஸ்லிம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:

ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கக் கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியின் தலைவர் ஆர்.கே நகர் பகுதிக் கழக செயலாளர் டன்லப் ரவி அவர்களே, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முழு காரணமாய் அமைந்து முன்னின்று நடத்துவது மட்டுமல்ல இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு முன்னிலை பொறுப்பு ஏற்றிருக்கிற சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என் அன்பிற்கினிய சகோதரர் சேகர்பாபு அவர்களே, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே எழுச்சிஉரை ஆற்றி அமர்ந்திருக்கிற பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அப்துல் காதர் அவர்களே, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் அவர்களே, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களே, வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர் அருமை நண்பர் மா. சுப்பிரமணியம் அவர்களே, வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் அவர்களே, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதிவாணன் அவர்களே, செங்கை சிவம் அவர்களே, தலைமை நிலைய வழக்கறிஞர் அருமை நண்பர் கிரிராஜன் அவர்களே, மாவட்டக் கழக நிர்வாகிகளே, பகுதிக் கழக செயலாளர்களே, வட்டக் கழக செயலாளர்களே, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களே, பல்வேறு அமைப்புகளை சார்ந்திருக்கிற நண்பர்களே, நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக வருகை தந்துள்ள பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளை பாராட்டுகளை அதே நேரத்தில் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். புனித ரமலான் திருநாளை முன்னிட்டு ஏழை எளிய இசுலாமிய பெருமக்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய சிறப்பான நிகழ்ச்சியை நம்முடைய அன்புக்குரிய சகோதரர் சேகர்பாபு அவர்கள் ஏற்பாடு செய்து இதை எழுச்சியோடு ஏற்றத்தோடு நடத்திக் கொண்டிருக்கிறார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து மேடையிலே வந்து அமர்ந்து எதிரில் அமர்ந்துள்ள உங்களை எல்லாம் பார்த்த போது எனக்கு என்ன எண்ணம் ஏற்ப்பட்டது என்று சொன்னால் எண்ணம் என்பதை விட என்ன சந்தேகம் ஏற்பட்டது என்று கேட்டால் இது என்ன அரசு நிகழ்ச்சியா என எனக்குள்ளே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. காரணம் இது போன்ற நிகழ்சிகள் கடந்த தி.மு.க ஆட்சியிலே நாள்தோறும் நடந்தது. அப்படி நடைபெற்ற போது அதிகமான நிகழ்சிகளில் பங்கேற்றவன் யார் என்று கேட்டால் அடியேன் தான் அதிகமான நிகழ்சிகளில் பங்கேற்றவன்.அதனால் தான் சேகர்பாபு அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து என்னை அழைத்து அரசாங்கம் இருந்தால் மட்டுமல்ல அரசாங்கம் இல்லாவிட்டாலும் இது போன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவேன் என்று இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்து என்னை அழைத்திருக்கிறார். சேகர்பாபு அவர்களைப் பற்றி எனக்கு முன்னால் உரையாற்றிய பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள். அதே போல மற்றவர்களும் அவருடைய சிறப்பை அவரது செயல்பாட்டை இங்கே பெருமைப் படுத்தி எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். நேற்று முன்தினம் நான் திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் சென்றிருந்தேன். எதற்கு என்று கேட்டால் திருச்சி சிறையிலிருக்கிற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கழகத் தோழர்களை சந்திக்க திருச்சிக்கும், மாலையிலே புதுக்கோட்டையிலே நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கும் சென்றிருந்தேன். அப்படி சென்றிருந்த போது நம்முடைய சேகர்பாபு அவர்களை நான் அழைத்து சென்றிருந்தேன். சிறையிலிருக்கிற தோழர்களை அதிலும் குறிப்பாக அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை சந்திக்க இருக்கிறேன் என்று சொன்ன போது அவரும் வரக் கூடிய அந்த ஆர்வத்தை சொன்ன போது நான் போகிறேன் என்னோடு வாருங்கள் என்று சொல்லி அழைத்து சென்றேன். அப்படி அழைத்து சென்ற போது இடையிடையில் காரிலே போகிற போது அறையிலே தங்கியருந்த போது அதற்கு பிறகு மாலையிலே திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு காரிலே போகிற போது இடையிலே வரவேற்பு நிகழ்சிகளை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை போய் சேர இரண்டு மணி நேரம் ஆனது. அங்கு கூட்டத்தை முடித்து மீண்டும் திருச்சிக்கு விமானத்தை பிடிக்க காரிலே வந்து சேர இரண்டு மணி நேரம் பிடித்தது. எதற்கு இதை சொல்கிறேன் என்று சொன்னால் போகிற போதும் சரி வருகிற போதும் சரி காரிலே நான் முன் சீட்டில் அமர்ந்திருந்தேன். அவர் பின் சீட்டில் அமர்ந்திருந்தார். அவர் கையிலே செல்போனை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தார். இப்போது தான் எனக்கு புரிகிறது அவர் மெதுவாக பேசியதை நான் உணர்ந்தேன். இந்த நிகழ்ச்சி பற்றி எல்லோரோடும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் என்பது இங்கு வந்த பிறகு நன்றாக தெரிந்திருக்கிறது. எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால் எதோ நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று சொல்லி விட்டு அப்படியே ஒதுங்கி விடுவார்கள். ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம் என்று சொன்னால் அது எந்த அளவு வெற்றி பெற வேண்டும் என்று தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு பணியாற்றுவதிலே கடமையை நிறைவேற்றி தருவதிலே அதற்கு நிகர் யாரென்று கேட்டால் அது நம்முடைய சேகர்பாபு என்பதை நான் பெருமையோடு குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்.

ஆட்சியில் திமுக இல்லாவிட்டாலும் மக்கள் பயன்பெறும் இதுபோன்ற விழாக்கள் நடக்கிறது.
சில அரசியல்வாதிகள் தேர்தல் வந்தால்தான் மக்களை சந்தித்து ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவார்கள்.
ஆனால் தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் திமுக. தேர்தல் தோல்வியால் துவண்டு விடாது; மீண்டும் வீறு கொண்டு எழும்.
அண்ணா இஸ்லாமை பற்றி குறிப்பிடும்போது, இது மதமல்ல; மார்க்கம் என்றார். ஒரு லட்சியத்தை அடைய, சிறப்பான வழியை தேட இது உதவும் என்றார். நாட்டில் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டு. நான், முதல்வர் ஜெயலலிதாவை கூறவில்லை. அவர் பெண்களில் ஒரு விதிவிலக்கு.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய லீக் பொதுச் செயலாளர் அப்துல் காதர், மேயர் மா. சுப்பிரமணியன், எஸ்.பி. சற்குணபாண்டியன். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, ஆர்.டி.சேகர், செங்கை சிவம், இரா.மதிவாணன், கட்பீஸ் பழனி, கிரிராஜன், இளைய அருணா, மணிவேலன், ஏ.டி.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் லோக்பால் வரம்பில் பிரதமரை சேர்க்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் கருத்து



அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 27.08.2011 அன்று தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

மக்களவையில் டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக):
அன்னாவின் போராட்டத்தை அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கும் எதிரான மோதலாக ஊடகங்கள் மாற்றி விட்டன. லோக் அயுக்தா அமைப்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். கீழ்மட்ட அதிகாரிகளை லோக்பால் வரம்புக்கு கொண்டு வரக்கூடாது. அப்படி செய்வது அந்த அமைப்புக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவது போல் ஆகிவிடும். நிலைக்குழுவுக்கு அனுப்பாமல் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா குழு வேண்டுகோள் விடுப்பது சரியல்ல.

மாநிலங்களவையில் திருச்சி சிவா (தி.மு.க.):

தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொ ண்டு வர வேண்டும். இந்த பிரச்னையில் அரசு பிடிவாதமாக இருக்கக் கூடாது. நீதித்துறை லோக்பாலின் பார்வைக்குள் கொண்டு வர வேண்டும். கீழ்மட்ட அரசு ஊழியர்களை இதன் கீழ் கொ ண்டு வருவது பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். குடிமக்கள் உரிமை சாசனத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை கொடுக்கும் வரை சிவில் சொசை ட்டி நிர்வாகிகள் பொறுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

நில அபகரிப்பு வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் சிறையில் அடைப்பு



திருச்சியில் நில அபகரிப்பு வழக்கில் 26.08.2011 அன்று நள்ளிரவில் கைதான எம்எ ல்ஏ சவுந்தரபாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கடந்த சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தைப்போல மிகப்பிரமாண்டமாக இது கட்டப்பட்டு உள்ளது.
கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கு துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து 12 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட சிலர் தன்னை மிரட்டி இந்த நிலத்தை அபகரித்து கொண்டதாக டாக்டர் சீனிவாசன் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த 25ம் தேதி முன்னாள் அமைச்சர் நேரு, லால்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ.சவுந்திரபாண்யடின், முன்னாள் எம்.எல்.ஏ அன் பில் பெரியசாமி, திருச்சி துணை மேயர் அன்பழகன், மாவட்ட திமுக துணை செயலாளர் குடமுருட்டி சேகர், கே.என்.நேரு தம்பி தொழிலதிபர் ராமஜெயம், ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜூலு, ஷெரீப், கொப்பம்பட்டி தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன், மாமுண்டி ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 25ம் தேதி முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, தொழிலதிபர் சுந்தராஜுலு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், மாமு ண்டி, ஷெரீப், குடமுருட்டி சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேரு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் துணை மேயர் அன்பழகன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற அனைவ ரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் 26.08.2011 அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
ஸ்டாலின் சென்றதும் கைது
திருச்சியில் இருந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டு சென்றபின்னரே எம்எல்ஏ சவுந்தரபாண்டியனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, முதலில் விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை வரவேற்க வந்தபோதே எம்எல்ஏவை கைது செய்ய முடிவு செய்து இருந்தோம். ஆனால் திருவாரூரில் மு.க. ஸ்டாலின் இருந்தபோதே பூண்டி கலைவாணனை கைது செய்ததால் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. மீண்டும் அதுபோன்று நடப்பதை தவிர்க்கவே மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டு சென்றபின் எம்எல்ஏவை கைது செய்தோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து 25ம் தேதி முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, தொழிலதிபர் சுந்தராஜுலு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், மாமு ண்டி, ஷெரீப், குடமுருட்டி சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேரு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் துணை மேயர் அன்பழகன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற அனைவ ரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் 26.08.2011 அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் 26.08.2011 அன்று இரவு புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன்னும் கலந்து கொண்டார். பொதுக்கூட்டம் முடிந்ததும் திருச்சியிலிருந்து விமானத்தில் மு.க.ஸ்டாலின் சென்னை சென்றார். அவரை விமானநிலையத்தில் எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் வழி அனு ப்பி வைத்தார். பின்னர் இரவு சுமார் 11.30 மணியளவில் லால்குடியில் உள்ள தனது வீட்டிற்கு சவுந்தரபாண்டியன் காரில் சென்று கொண்டிருந்தார். அப் போது சமயபுரம் டோல் கேட் ரவுண்டானா பகுதி யில் தில்லைநகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் காரை வழிமறித்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் 27.08.2011 அன்று அதி காலை வரை வைத்திருந்தனர். காலை 6.30 மணிக்கு கலெக்டர் குடியிருப்புக்கு எதிர்புறம் உள்ள திருச்சி 4ம் எண் மாஜிஸ்திரேட் புஷ்பராணியின் வீட்டிற்கு அழை த்து சென்றனர். எம்எல்ஏ சவுந்தரபாண்டியனை வரும் 9ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீ சார், சவுந்தரபாண்டியனை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறை அதிகாரிகளிடம் தன்னை வேலூர் சிறையில் அடைக்குமாறு எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது கோரிக் கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சவுந்தரபாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Sunday, August 28, 2011

தமிழக ஆளுநராக நியமனம் : ரோசய்யாவுக்கு கருணாநிதி வாழ்த்து


தமிழக புதிய ஆளுநர் ரோசய்யாவுக்கு, திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யாவை, தமிழக ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் 26.08.2011 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் விரைவில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரோசய்யாவுக்கு, கருணாநிதி 27.08.2011 அன்று அனுப்பிய வாழ்த்து தந்தியில், “தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகத்தில் பெருத்த அனுபவம் பெற்ற நீங்கள், அரசியல் சாசனம் மற்றும் பொறுப்புகளையும் பாகுபாடின்றி நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்“ என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பரூக் மரைக்காயருக்கும் கருணாநிதி வாழ்த்து தந்தி அனுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவை பாராட்டுவதில் கம்யூனிஸ்ட்கள் இடையே போட்டி : கலைஞர் அறிக்கை


திமுக தலைவர் கருணாநிதி 27.08.2011 அன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:
தி.மு.க ஆட்சியில் சிலருக்கு முறைகேடாக வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் புகார் கூறியிருக்கிறாரே?
அமைச்சரே சுட்டிக் காட்டியிருக்கின்ற தி.மு.க. தொழிற்சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பூச்சி முருகன். அமைச்சரே கூறியதைப் போல ஸீ6000சம்பளம் பெறுபவர். அப்படிப்பட்ட நிலையிலே உள்ளவர் களுக்குத்தான் தி.மு.க ஆட்சியில் வீட்டுவசதி வாரிய மனைகள், அதுவும் முதலமைச்சர் தனது விருப்புரிமை அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும், இஷ்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய லாம் என்ற விதிமுறைப்படி உள்ளவைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நிலைமை?
அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என்.நாராயணன் ஐஏஎஸ்க்கு 1993ம் ஆண்டு 4115 சதுர அடி மனை ஒதுக்கப்பட்டது உண்டா இல்லையா? தற்போது அ.தி.மு.க. அமைச்சராக உள்ள செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் என்பவர் பெயரில் பெசன்ட் நகர் பகுதியில் 1995ம் ஆண்டு 4535 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது உண்டா இல்லையா?
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதிக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம் தரப்பட்டதா இல்லையா? அதைப்போலவே முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மனைவி நூர்ஜமீலாவுக்கு, எஸ்.எம்.வேலுச்சாமியின் மனைவி பானுமதிக்கு கொடுக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் என்று எடுத்துக் கொண்டால் தேவாரம், ஆர்.நடராஜ் முதல் அமைச்சரிடம் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன் என்று நீண்ட பட்டியலே உள்ளதே. நான் அவைகளை எல்லாம் தவறு என்று சொல்லவில்லை. முதலமைச்சருக்கு உள்ள விருப்புரிமையின் அடிப்படையில் தரப்பட்டவை.
ஆனால் இதிலே குற்றச்சாட்டு கூறப்பட்டதும் இனிமேல் இவ்வாறு விருப்புரிமை அடிப்படையிலே மனைகளை ஒதுக்குகின்ற அதிகாரத்தையே தேவையில்லை என்று ரத்து செய்தோம். ஆனால் அரசுக்கு அந்த விருப்புரிமை ஆணை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேதான் தரப்பட்டது.
அண்ணா நகரில் அ.தி.மு.க.வின் தொழிலாளர் பேரவைக்கு 3 கிரவுண்ட் நிலம், அ.தி.மு.க. ஆட்சியிலே வழங்கப்பட்டது. அ.தி.மு.க. தொழிற்சங்கப் பேரவையிலே தலைவராக இருந்த பள்ளிப்பாளையம் சண்முகம் என்பவருக்கு சீத்தம்மாள் காலனியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மைதானத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி டானியல் எட்வின் பிரேம்குமார் என்பவருக்கு மறைமலைநகரில் வீட்டு வசதி வாரியத்திற்கான வீடு (3/53) ஒன்று கிடைத்துள்ளது. அமைச்சர் பேரவையில் பேசும்போது ஒரு வீடு அல்லது மனை இருப்போருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பது விதி என்று சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி டானியல் எட்வின் பிரேம்குமாரின் மனைவி பியுலா பிரேம்குமார் என்பவருக்கு மறைமலை நகரில் எம்.ஐ.ஜி. எம்.26 என்ற மனை அ.தி.மு.க. ஆட்சியிலே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அம்மையார் மத்திய அரசு அலுவலர். ஆனால் இவரை சமூக சேவகர் என்ற பிரிவில் காட்டி வீட்டினை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.
மற்றொரு அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி எம்.மதுரை என்பவர் தஞ்சையில் ஒரு வீட்டு வசதி வாரிய வீட்டையும், கரூரில் சனப்பிரட்டி பகுதி 2 ஆ.99 என்ற இடத்தில் ஒரு மனையையும், சென்னையில் சி.ஐ.டி. நகரில் ஒரு வாடகை வீட்டையும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்றிருக்கிறார். இதை யெல்லாம் அப்படியே மூடி மறைத்துவிட்டு, பேரவையிலே ஏதோ தி.மு.க ஆட்சியில் தவறு நடைபெற்றதைப் போல அமைச்சர் கூறியிருப்பதால், இந்த விளக்கங்களையெல்லாம் தர வேண்டியதாயிற்று. கோட்டான் குயிலையும், வான்கோழி மயிலையும் பழிப்பதா?
மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜன் பேரவையில் ஆளுங்கட்சியை விடத் தீவிரமாக, முன்னாள் அமைச்சர் ஒருவரை மாமியார் வீட்டுக்கு அனுப்புவது எப்போது என்று கிண்டலோடு கேள்வி கேட்டிருக்கிறாரே?
கருடா சவுக்கியமா என்று சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்ட கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
கேட்டதைக் கொடுப்பது அ.தி.மு.க. அரசு, கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என்று முதல்வர் கூறியிருக்கிறாரே?
திட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது மத்திய அரசு மாநில அரசு கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்ததாக கூறியதும் இதே முதல்வர்தான். இப்போது கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என்று சொல்பவரும் இவரேதான்.
தி.மு.க அரசு ஆட்சி இருந்தபோது, மைனாரிட்டி தி.மு.க அரசு மத்திய அரசிடம் ஏன் வாதாடிப் பெறவில்லை, இங்கேயே இருந்துகொண்டு கேட்டால் கிடைத்து விடுமா? கடிதம் எழுதினால் போதுமா? எனவே அது கையாலாகாத அரசு என்றெல்லாம் வக்கணையாக அறிக்கை விட்ட ஜெயலலிதா தற்போது அந்த அறிக்கைகளை மீண்டும் படித்துப் பார்ப்பது நல்லது.
இந்தியக் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஒருவர் பேசும்போது, முதல்வர் தலைமையில் மத்தியில் ஒரு மாற்றம் வரும்போது கேட்டது கிடைக்கும் என்று பாராட்டியிருக்கிறாரே? இது எங்கே போய் முடியும்?
மார்க்சிஸ்ட் முன்னணி தலைவர் தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினரோடு தனியாகப் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது திமுக உறுப்பினர், அவரைப் பார்த்து, �உங்கள் கட்சி கொள்கையிலே முன்பெல்லாம் தீவிரமாக இருக்கும், ஆனால் இப்போது கொள்கையைப் பறக்க விட்டு விட்டு, அ.தி.மு.க.வை விழுந்து விழுந்து ஆதரிக்கிறீர்களே, என்ன காரணம்?� என்று கேட்டதற்கு, அந்த மூத்த மார்க்சிஸ்ட் உறுப்பினர், என்ன செய்வது? இப்போது எங்கள் கட்சிக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே யார் அதிக அளவுக்கு முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுவது என்பதிலே கடுமையான போட்டி நடைபெறுகிறது. அதன் விளைவுதான் இது என்று பதில் கூறினாராம்.
கல்வித் துறை மானியத்தின்போது அந்தத் துறையின் அமைச்சர் பதிலுரையில் அறிவிக்க வேண்டியதையெல்லாம் ஜெயலலிதா 110ம் விதியின் கீழ் அறிக்கையாக படித்துள்ளாரே?
அமைச்சர் பதிலுரையில் கூறியிருந்தால் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும் என்பதால் அறிக்கையாக படித்துள்ளார். அவரே படித்து விட்டு, 110ம் விதியின் கீழ் அறிக்கை படித்தால் விளக்கம்தான் கேட்கக் கூடாது, பாராட்டுரை வழங்கலாம் என்று அவரே கேட்டு, நிதியமைச்சரும், கல்வியமைச்சரும் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இளைஞர்களை பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம் : கலை அரங்கம் திறப்பு விழாவில் கருணாநிதி பேச்சு


இளைஞர்களை பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
முத்தமிழ் பேரவை அறக்கட்டளை சார்பில் அடையாரில் நாதஸ்வர மேதை திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கலை அரங்கம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் ராஜரத்தினம் பிள்ளை 113&வது பிறந்த நாள் விழா 27.08.2011 அன்று நடைபெற்றது. விழாவுக்கு முத்தமிழ் பேரவை தலைவர் ரமணி தலைமை தாங்கினார். கலை அரங்கை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்து, திருவிடைமருதூர் பி.எஸ்.வி.ராஜாவுக்கு ராஜரத்தினம் பிள்ளை விருதையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
ராஜரத்தினம் 58 ஆண்டுகள் வாழ்ந்தாலும் அந்த நாட்களில் உலகளவில் பெரும் புகழ் பெற்றார். இளைஞர்கள் புத்தெழுச்சியுடன், சுயமரியாதை உணர்வோடு நடமாட வழிவகுத்தார். தனித்துவத்துடன் திகழ்ந்தார். இசையை தன் உயிராக கருதியவர்களுக்கு, இசைவாணர்களுக்கு உரிய மரியாதை தராததை கண்டு வெகுண்டெழுந்தார். ராஜரத்தினம் யாருக்கும் தலை வணங்காதவர். இசைவாணர்களுக்கு சுயமரியாதை வழங்கினார்.
இளைஞர்களை பாதுகாக்கும் பொறுப்பை நாம் ஏற்றால்தான் வாழும் தலைமுறை புகழ் வாய்ந்த தலைமுறையாக விளங்கும்.
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசுகையில், �நாதஸ்வரம், தவில் போன்ற பாரம்பரிய இசைக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும்� என்றார்.
விழாவில், எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா, ஏ.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தயாளு அம்மாள், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், டி.ஆர்பாலு எம்பி, குமரி அனந்தன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அமிர்தம், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, August 27, 2011

சமச்சீர் கல்வி திட்டத்தை போல் புதிய தலைமை செயலக பிரச்னையிலும் நீதிமன்றம் மூலம் வெற்றி பெறுவோம் : புதுக்கோட்டையில் ஸ்டாலின் பேச்சு


சமச்சீர் கல்வி திட்டத்தை போல் புதிய தலைமை செயலகம் விவகாரத்திலும் வெற்றி பெறுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டையில் 26.08.2011 அன்று மாவட்ட திமுக சார்பில், சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத் தோடு மக்கள் வாக்களித்து ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்தனர். அந்த மாற்றத்தால் மக்களுக்கு வெறும் ஏமாற்றம்தான் கிடைத்தது. கடந்த திமுக ஆட்சியில் திமுக தலைவர், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி மட்டுமின்றி வாக்குறுதியில் இல்லாத பல்வேறு திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் சமச்சீர் கல்வி திட்டம்.
கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் என அனைவரையும் அழைத்து பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி கொண்டு வரப்பட்ட சமச் சீர் கல்வி திட்டத்தை அதி முக அரசு ரத்து செய்து முதல் தீர்மானமாக கொண்டு வந்தது. திமுக சார்பில் நான்தான் முதன்முதலில் குரல் கொடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்தேன். இதன்பிறகு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இந்த திட் டத்தை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என குரல் கொடுத்தன. கடைசியில் உச்சநீதிமன்றம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
சிறுதாவூர் நிலத்தை தலித் மக்களுக்கு கொடுக்காமலும், கொடநாடு எஸ்டேட்டில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தடுக்கும் ஜெயலலிதாவுக்கு திமுகவினர் மீது நில அபகரிப்பு மற்றும் பொய் வழக்கு போட தகுதி இல்லை. மிசாவை கண்டே அஞ்சாத நாங்கள் பொய் வழக்கிற்கா அஞ்ச போகிறோம்.
சமச்சீர் கல்வி திட்டத்தில் எப்படி நீதிமன்றம் மூலம் வெற்றி கிடைத்ததோ அதே போல புதிய தலைமை செயலக விவகாரத்திலும் வெற்றி பெறுவோம். அடுத்த தேர்தல் 2014ல் வந்தால் கூட அதற்கு முன்னதாகவே நீதிமன்றம் மூலம் அனைத்து தவறுகளையும் சுட்டிக்காட்டி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்வோம். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் யார் மூலம் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டதோ அவரையே மீண்டும் அந்த தலைமை செயலகத்தில் ஆட்சி பொறுப்பில் அமர வைப் போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், செல்வராஜ், எம்எல்ஏக்கள் கோவி. செழியன், லால்குடி சவுந்தரபாண்டியன், மன்னார்குடி ராஜா, கும்பகோணம் அன்பழகன், கம்பம் ராமகிருஷ்ணன், அரியலூர் சிவசங்கர், மாநில இலக்கிய அணி செயலாளர் கவிதைப்பித்தன், முன்னாள் எம்எல்ஏ சேகர்பாபு, நகர செயலாளர் வீரமணி, கேபிகே தங்கவேலு, சந்திரசேகரன், ராஜேஸ்வரி, செந்தில், பாலு, பழ.சுப்பையா, நைனாமுகமது, மாநில மகளிர் செயலாளர் விஜயா, அறந்தாங்கி ராசன், முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் சிறையில் அடைப்பு


அவிநாசி அருகே 3.10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, நிலத்தின் உரிமையாளர்களை மிரட்டியதாக 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் எஸ்.பி. மணியை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக எஸ்.பி. அலுவலகம் வந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கருவலூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (69). இவரது சகோதரர்கள் கணேசன், சாமியப்பன். சகோதரிகள் மாணிக்கம்மாள், தாயம்மாள். இதில் சுப்பிரமணியன், சாமியப்பன் ஆகிய இருவர் மட்டுமே தற்போது உள்ளனர். மற்றவர்கள் இறந்து விட்டனர். சுப்பிரமணியத்தின் தந்தை கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக கருவலூரில் அவிநாசி மெயின் ரோட்டில் 3.10 ஏக்கர் நிலம் இருந்தது.
இந்த நிலத்தை சுப்பிரமணியன், சாமியப்பன், கணேசன் ஆகியோருக்கு அவரது தந்தை கிருஷ்ணன் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தில் உரிமை கோர மாட்டோம் என சுப்பிரமணியத்தின் சகோதரிகள் மாணிக்கம்மாள், தாயம்மாள் ஆகியோர் எழுதி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணிக்கம்மாள், தாயம்மாள் ஆகியோரின் வாரிசுகளான பாலகிருஷ்ணன், சிவக்குமார், சுப்புலட்சுமி, சண்முகவடிவு ஆகியோருடன் சேர்ந்து, 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான எஸ்.பி. மணி மற்றும் அவரது ஆதரவாளர் செல்வராஜ் ஆகியோர் போலி ஆவணங்களை தயார் செய்து நிலத்தை அபகரித்து கொண்டதாக சுப்பிரமணியன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி போட்டு மிரட்டி வந்ததாகவும், கடந்த 24ம் தேதி தன்னையும், சகோதரர் சாமியப்பனையும் தி.மு.க. நகராட்சி தலைவர் எஸ்.பி.மணி, அவரது ஆதரவாளர் செல்வராஜ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணையை நிலஅபகரிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில் 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் எஸ்.பி. மணி, அவரது ஆதரவாளர் செல்வராஜ் மற்றும் பாலகிருஷ்ணன், சிவக்குமார், சுப்புலட்சுமி, சண்முகவடிவு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக 26 .08 .2011 அன்று காலை விசாரணைக்காக நகராட்சி தலைவர் மணியை மாவட்ட குற்றப்பிரிவு மையத்தில் ஆஜராக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 26.08.2011 அன்று காலை விசாரணைக்காக வந்த நகராட்சி தலைவர் மணியை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து திருப்பூர் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்ட நகராட்சி தலைவர் மணியை செப்டம்பர் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து நகராட்சி தலைவர் மணி கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். நகராட்சி தலைவர் மணி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநகராட்சி மேயர் செல்வராஜ் உட்பட ஏராளமான தி.மு.க.வினர் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3.10 ஏக்கர் நிலம் அபகரித்ததாக வழக்கு
கைதான 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் மணியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
6 பிரிவுகளில் வழக்கு
3.10 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில், 15 வேலம்பாளையம் நகராட்சி தலைவர் எஸ்.பி. மணி உள்ளிட்ட 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றுவதற்கு பொய்யாக புனைதல்), 447 (குற்றுமுறு அத்துமீறல்), 341 (சட்ட விரோதமாக தடுத்தல்), 294 (பி) தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், 506 (1) (குற்றுமுறு மிரட்டல்), 120 (பி) (கூட்டு சதி செய்தல்) என 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவை யாராலும் அழிக்க முடியாது ஒருவரை கைது செய்தால் ஓராயிரம் பேர் தோன்றுவார்கள் - மு.க.ஸ்டாலின்


பொய் வழக்கில் ஒருவரை கைது செய்தால், ஓராயிரம் திமுகவினர் தோன்றுவார்கள். திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக பிரமுகர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்ஸார் கோபி, குடமுருட்டி சேகர், மாமுண்டி, ஷெரிப் ஆகியோரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர், நிருபர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு திமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தலைவர் கருணாநிதி சொன்னதுபோல் இது ஒரு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி காலமாக உள்ளது. ஜெயலலிதா சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். 2006 முதல் 2011 வரை என காலக்குறியீடு நிர்ணயித்து நில அபகரிப்புக்கென தனி போலீஸ் பிரிவு ஒன்றை தொடங்கி, அதன்மூலம் பொய் வழக்கு போட்டு திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
நேற்று கூட முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு உள்ளிட்ட கட்சியினரை எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கைது செய்து நீதிபதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கான வாரன்ட் இல்லாததால் சிறைக்கு அனுப்ப முடியாது என நீதிபதி கூறிவிட்டதால், அதன்பின் போலீசார் அங்கேயே அவசரம் அவசரமாக வாரன்ட் தயாரித்து அதன்மூலம் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதை நாங்கள் சட்டப்படி கோர்ட்டில் சந்திப்போம். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் அங்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.
ஆளுங்கட்சியான அதிமுகவினர் மீது அக்கட்சியினரே நில அபகரிப்பு புகார் அளிப்பதாக தினந்தோறும் செய்திகள் வெளியாகிறது. உதாரணமாக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் எம்எல்ஏ சோமசுந்தரம் உள்ளிட்டோர் மீது அந்த கட்சியை சேர்ந்தவர்களே உண்மையான புகார்களை கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து எந்த வகையிலும் திமுகவின் பணிகளை முடக்கி விடமுடியாது. ஒரு நேருவையோ, ஒரு அனிதா ராதாகிருஷ்ணனையோ, ஒரு வீரபாண்டி ஆறுமுகத்தையோ கைது செய்தால் அதற்கு பதில் ஆயிரமாயிரம் நேரு, ராதாகிருஷ்ணன், வீரபாண்டி ஆறுமுகம் தோன்றி கட்சி பணிகளை மேற்கொள்வர். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராஜிவ் கொலை குற்றவாளிகளை தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க முன்வர வேண்டும் : கலைஞர் வேண்டுகோள்


திமுக தலைவர் கருணாநிதி 26 .08 .2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரை ஏழு நாட்களில் தூக்கிலிட வேண்டும் என்று குடியரசு தலைவர் உத்தரவு வந்ததாக செய்தியாளர்கள் என்னிடம் கேட்டனர். நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன். அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே இருபது ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.
அவர்கள் செய்தது குற்றம் என்றாலும் கூட அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில்கொண்டு அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற நம்மல் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரை காப்பாற்ற உருக்கத்துடன் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்த பிரச்சனையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன் வரவேண்டும். இதுகுறித்து முடி வெடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இந்த பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது - கலைஞர்


அ.தி.முக. ஆட்சியில் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல. தமிழுக்கும் ஆபத்து வந்துள்ளது என்று, வடசென்னை மாவட்ட தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசினார்.


"சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு'' என்ற தலைப்பில் வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 25.08.2011 அன்று நடந்தது. கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கலைஞர் பேசியதாவது:


தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் இங்கு கண்டன கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த தலைப்பில் ஒரு திருத்தத்தைக்கொண்டுவர விரும்புகிறேன். ஜனநாயகமே இல்லாத சட்டசபையில், ஜனநாயகம் படும் பாடு என்று எப்படி கூற முடியும்?


ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற உடன் இனி தமிழ்நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை. கொலை, கொள்ளை, திருட்டுகள், தாலி சங்கிலி பறிப்புகள் இதற்கெல்லாம் இடமில்லை. இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்கள் என்று கூறினார்.


ஆனால், இப்போது அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 100 வது நாளை கொண்டாடினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இந்த 100 நாட்களில் நடந்த கொலைகள் 86, கொள்ளைகள் 110, சங்கிலி பறிப்பு 38, வழிப்பறி கொள்ளைகள் 13. இவற்றையும் 100 நாள் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கட்சியினர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


நான் இன்று சட்டமன்றத்துக்கு சென்றேன். அங்கு என் கையெழுத்து பதிவாகாவிட்டால் எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும். நான் தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று எனக்கு வாக்களித்த திருவாரூர் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ.என்ற முறையில் கடமையாற்ற பழைய சட்டமன்றத்துக்கு சென்றேன்.


புதிய சட்டசபைக்கு அல்ல. அதுதான் பூட்டப்பட்டு கிடக்கிறதே. காரணம் நாம் கட்டியதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்ததற்காக, திறப்புவிழாவில் நம்முடைய சோனியா காந்தி முன்னிலை ஏற்றதற்காக. அந்த கட்டிடம் எதற்கும் உதவாது என்றார்கள். ஆனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை அமைக்கப்படும் என்று அம்மையார் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில், தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என்று கூறுகிற ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் சில கட்சிக்காரர்களும் இருக்கிற காரணத்தால், சட்டப்பூர்வமாக நாங்கள் நிறைவேற்றியுள்ளவற்றை எல்லாம் மாற்றி அமைக்கிறார். உலகில் 6 மொழிகள் தான் செம்மொழியாக்கப்பட்டன. தமிழ் செம்மொழி ஆவதற்கு முதல் குரல் கொடுத்தவர் பிராமணர் குலத்தில் உதித்த சூரிய நாராயண சாஸ்திரி. அவர் எழுப்பிய குரலை எழுப்பித்தான் 100 ஆண்டாக தமிழ்மொழி செம்மொழியாக வேண்டும் என்று நாங்கள் மட்டுமல்ல. பொதுவுடமை கட்சியினர், கம்ழூனிஸ்டு கட்சியினர் என இன்னும் எத்தனையோபேர் குரல் கொடுத்தனர்.


இந்த நிலையில் சோனியா காந்தி அம்மையாரை பலமுறை சந்தித்து, தமிழுக்கு செந்தமிழ் தகுதி தந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதைத்தொடர்ந்து, அவர் உத்தரவுப்படி, மத்திய மந்திரி அர்ஜுன் சிங்கும், புலவர்கள், அறிஞர்கள், மொழி வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்து பேசி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இது குறித்து, சோனியா காந்தி எனக்கு கடிதம் எழுதினார். உங்களால்தான் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தை நான் பத்திரமாக வைத்துள்ளேன். நான் மறைந்த பிறகு அதை எனது கருவூலத்தில் வைக்கும்படி கூறியிருக்கிறேன்.


செம்மொழி என்ற வார்த்தையை ஏற்க இந்த ஆட்சி மறுக்கிறது. சமச்சீர் புத்தகத்தில் எங்கெல்லாம் செம்மொழி என்ற வார்த்தை இருக்கிறதோ அவை, பேனா கொண்டும், மை கொண்டும் அழிக்கப்படுகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது அதை கருணாநிதி பெற்று தந்தார் என்று எழுதப்பட்ட வாசகத்தை அழித்து இருக்கிறார்கள்.


புத்தகத்தில் உள்ள வாசகத்தை வேண்டும் என்றால் அவர்கள் அழித்து விடலாம். ஆனால், தமிழர்களின் இதயத்தில் எழுதப்பட்ட வாசகத்தை எந்தக்கொம்பன் வந்தாலும் அழிக்க முடியாது.


மறைமலை அடிகளாரும், 500 தமிழ் புலவர்களும் பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கு தனி ஆண்டு இல்லையே என்று ஆராய்ந்து, விவசாயிகளின் அறுவடை காலம், நெல்மணிகள் குவியும் காலம் இவைகளையெல்லாம் பார்த்து, பொங்கல் நாள் என்ற அறிவித்து, தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு பிறக்கிறது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதம் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று முடிவு செய்யப்பட்டது.


அதை தி.மு.க. ஆட்சியில் சட்டமாக இயற்றி 2, 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டது.


ஆனால், ஜெயலலிதா அதை மாற்றி, சித்திரை முதல் தேதிதான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில், அ.தி.மு.க. ஆட்சியில், ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும், தமிழையும், தமிழ் உணர்வுள்ள அனைவரும் காப்பாற்ற வேண்டும். தமிழ் வாழ உயிரையும் கொடுக்கத்தயாராக இருக்கிறேன். நமது இளைஞர் பட்டாளம் உள்ள வரையில், தமிழை யாரும் அழிக்க முடியாது.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மு.க. அழகிரி உட்பட 21 பேர் மீது 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்


மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 21 பேர் மீது மதுரை மேலூர் கோர்ட்டில் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்கு
மு.க. அழகிரி சென்றார். கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினார்.

மேலும், கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. இதனால், யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்த மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்துமற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார்.


அப்போது மத்திய அமைச்சர் மு.க. அழகிரியுடன் இருந்த சிலர் தன்னை அடித்து உதைத்தனர் என்று தாசில்தார்
காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதனையடுத்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த
முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 , 341, 332, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார்.


தாசில்தார் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க
மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த வழக்கில் அழகிரி முன் ஜாமீன் பெற்றார்.


பின்னர் தாசில்தார் காளிமுத்து தன்னை யாரும் தாக்கவில்லை என்று புகார் மனுவை கோர்ட்டில் தாக்கல்
செய்தார். இந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.


இந்நிலையில் 25.08.2011 அன்று மேலூஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி, அழகிரி உட்பட சம்பவத்தில் ஈடுபட்ட 21 பேர் மீது
100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மேலூஎ மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.


இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பதா இல்லையா என்பது குறித்து கோர்ட் நாளை முடிவு செய்யும் என்று நீதிபதி
அறிவித்தார்.


டெல்லியில் முகாமிட்டிருந்த மு.க.அழகிரி, கடந்த இரண்டு தினங்களாக திருச்சி, மதுரை சிறையில் இருக்கும்
திமுகவினரை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நில அபகரிப்பு புகார் : கோவை மாநகர திமுக செயலாளர் உட்பட 3 பேர் கைது


நில அபகரிப்பு புகார் தொடர்பாக கோவை மாநகர திமுக செயலாளர் வீரகோபால் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பொய் வழக்கு போடுவதாக திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
கோவை வடவள்ளி ஸ்ரீசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினம் (70). இவர், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், விளாங்குறிச்சி ராகவி கார்டனில் எங்களது குடும்பத்தினர் 3 பேருக்கு சொந்தமான 2.45 ஏக்கர் நிலம் உள்ளது. இதை கோவை மாநகர திமுக செயலாளர் வீரகோபால் (43), கோவை ராஜவீதி சொர்ண மஹாலை சேர்ந்த சாந்தலிங்கம் (65) ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அன்னூர் டிஎஸ்பி சக்திவேல் தலைமையில், கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் (பொறுப்பு) இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 120 (பி), 465, 467, 420, 506 (2) ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர். 25.08.2011 அன்று அதிகாலை 4 மணிக்கு போலீஸ் படை கோவை பாப்பநாயக்கன்பாளையம் ரயில்வே கேட் அருகேயுள்ள உள்ள வீரகோபால் வீட்டுக்கு சென்றது. தூங்கிக்கொண்டிருந்த அவரை தட்டி எழுப்பி கைதுசெய்தனர். பின்னர், ராஜவீதிக்கு சென்று சாந்தலிங்கத்தையும் கைதுசெய்தனர். இதேபோல், கணபதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் தன்னிடமிருந்து 1.98 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அளித்த புகாரின்பேரில், பவானிசாகர் ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமலிங்கம் (40) என்பவரையும் கைதுசெய்தனர். மூவரையும் வேனில் கோவில்பாளையம் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காலை 9.45 மணிக்கு ரேஸ்கோர்ஸ் அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் செல்லபாண்டியன் வீட்டுக்கு அழைத்து சென்று, அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவர், மூவரிடமும், உங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு என்ன? தெரியுமா? உங்களை ஏன் கைது செய்துள்ளார்கள்? தெரியுமா? எனக்கேட்டார். அதற்கு மூவரும் தெரியாது என்றனர்.
அவர், போலீசார் சமர்ப்பித்த ஆவணங்களை படித்துக்கூறினார். பின்னர், மூவரையும் செப்டம்பர் 8ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரும் மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும் மாநகர மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள் சுமார் 300 பேர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் குவிந்தனர். மாஜிஸ்திரேட் வீட்டுக்கு செல்லும் வழியில் மெயின்ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனை சூழ்ந்து போடாதே... போடாதே... பொய் வழக்கு போடாதே... என பலத்த கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில், மூவர் சார்பிலும் திமுக முன்னணி வழக்கறிஞர்களும், முன்னாள் அரசு வக்கீல்களுமான கே.எம்.தண்டபாணி, அருள்மொழி தலைமையிலான வழக்கறிஞர் குழுவினர் ஜே.எம்.2 கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அமைச்சர் புத்திசந்திரன் பதவியை பறிக்க வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் வழக்கு


நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.முஸ்தபா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது:
உதகமண்டலம் அதிமுக எம்எல்ஏ புத்திசந்திரன் முதலில் சுற்றுலா துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் உணவு மற்றும் சிவில் சப்ளை துறைக்கு மாற்றப்பட்டார். மந்திரியாக பதவியேற்கும்போது, �அதிகார துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன்� என உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். ஆனால், அதற்கு மாறாக அவர் தற்போது நடந்து கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு ஆவின் பூத் ஒதுக்க வேண்டும் என தனது லெட்டர்பேடில் சிபாரிசு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். ஏற்கனவே உள்ளவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆவின்பூத் கொடுக்க அமைச்சர் உத்தரவிட்டது தவறானது.
அதிகாரதுஷ்பிரயோகம் செய்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அமைச்சராக நீடிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வருக்கு உத்தரவிட வேண்டும். இதுதவிர இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குறைபாடுள்ள பணிக்கு கில்குந்தா நகராட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு வரவேண்டிய ரூ.3 லட்சத்தை தற்போது அமைச்சரான பிறகு பெற்றுள்ளார். மலைஜாதி மக்கள் நல்வாழ்விற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தனது நகராட்சிக்கு ஒதுக்கி அதை பினாமி பெயரில் வேலை கொடுக்க திட்டமிட்டுள்ளார். அமைச்சராக உள்ள இவர் இப்படி செயல்படுவது சட்டவிரோதமானது. எனவே இவர் பதவியில் நீடிக்க தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு முஸ்தபா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கை 26.08.2011 அன்று விசாரிப்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் புத்திசந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர், உள்பட 5 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.