தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா முன் பெண்கள் மிதிபட்டு அலறுகிறார்கள். விஜயகாந்த் வேட் பாளரை அடிக்கிறார். இவர் கள் மக்களை பற்றி கவலைப்படுவார்களா? என்று மத் திய அமைச்சர் மு.க.அழகிரி கேள்வி விடுத்தார்.
மதுரை மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் மருதுபாண்டியன் தலைமையில் 1,100 பேரும், அ.தி.மு.க.வினர் 100 பேரும் விலகி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சி ஒத்தக்கடையில் 01.04.2011 அன்று மாலை நடந்தது. இதில் அமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது:&
தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வரு கிறது. தொண்டர்கள் மத்தி யில் எழுந்துள்ள எழுச்சியை 13&ந் தேதி தேர்தலில் காட்ட வேண்டும். பூத் கமிட்டி அமைத்து பணியாற்றுவோர் வாக்காளர்களை அழைத்து வந்து வாக்களிக்க செய்வது முக்கியமாகும்.
நம் கூட்டணி பலமானது. எதிர் கட்சி கூட்டணி பலவீனமானது. நடிகர் விஜய்காந்த் மக்களுடன் தான் கூட்டணி, அடுத்த முதல்வர் நான் தான், நான் முதல் வரிசையில் இருக்கிறேன் என்றார். இன்றைக்கு கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளார். இரவில் ஒன்று, பகலில் ஒன்று பேசுகிறார்.
விஜயகாந்த் எனது நண்பர், ரோசக்காரர் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரமாட்டார்“ என்று கூறி னேன். அதற்கு அவர் “அழகிரி எப்படி நண்பராக முடியும்? அவருடன் கோலி, கிட்டி விளையாடினேனா? என நாகரீகம் இல்லாமல் பேசுகிறார். சொந்த கட்சி வேட்பாளரையே மக்கள் முன் அடிக்கிறார். அ.தி.மு.க. கொடியை இறக்கு என கோபத்தில் திட்டுகிறார். அவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவுடன் வெட்கமின்றி கூட்டணி சேர்ந்துள்ளார். தைரியம் இருந்தால் சொந்த ஊர் மதுரையில் நின்று பார் என்றேன். ரிஷிவந்தியத்திற்கு ஓடி விட்டார். அங்கு தோற் பார்.
இன்றைக்கு ஜெயலலிதா பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் அவர் கண் முன் மிதிபட்டு, ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி அலறுகிறார்கள். அவர்கள் கதி என்ன? என்பதை கூட கவலைப்படாமல் பேசி விட்டு போகிறார். இந்த காட்சியை சன் டிவியில் பார்த்து அதிர்ச்சி அடைந் தேன். அனைவரும் பாருங் கள்.
இப்படி பெண்கள் வேதனையை அறிய முடியாதவரும், சொந்த கட்சி வேட்பாளரையே அடித்து உதைப்பவரும் கூட்டணி சேர்ந்துள் ளனர்.
ஏழைகள் நலனுக்காக வாழும் ஒரே தலைவர் முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா ஆட்சிக்கு வர முடியாது. தப்பித் தவறி வந்தால், தி.மு.க. ஆட்சி வழங்கிய நலத்திட்டங்களை எல்லாம் நிறுத்தி விடுவார். நலத்திட்ட உதவிகள் தொ டர, தி.மு.க. அணியை ஆத ரிக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
தே.மு.தி.க. மதுரை கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன், குலமங்கலம் கிளை செயலா ளர் ராஜா, ஆனையூர் சரவணன், மன்ற செயலாளர் மாரிமுத்து, அ.தி.மு.க. மதன், அசோக், செல்வம் ஆகியோர் தி.மு.க.வில் சேர்ந்தனர்.
மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி, மாவட்ட காங்கிரஸ் தலை வர் செல்வராஜ்பாண்டியன், விடுதலை சிறுத்தை எல்லா ளன், மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், தேவகிஅய்யாவு, ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், பொம்மத்தேவன், பணச்செல்வம், ராஜா, சுப்பையா, துணை மேயர் மன்னன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment