கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 23, 2011

ஈழத்து இனப்போரினை இழித்தும், பழித்தும் பேசியது யார்? ஜெயலலிதாவுக்கு கலைஞர் கேள்வி


ஈழத்து இனப்போரினை இழித்தும், பழித்தும் பேசியது யார்? என்று முதல் அமைச்சர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கேள்வி: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மார்சுகி தருஸ்மேன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கி மூன் அமைத்தார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் எல்லாம் ஏடுகளில் வெளிவந்துள்ளனவே, அதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?.


பதில்: கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்ற விசாரணையின் அறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக முழுமையும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பலரும் அறிக்கைகளை விட்டுக்கொண்டுள்ளார்கள்.


இந்த விசாரணை ஆணையத்தை அமைத்த ஐ.நா. மன்றம் என்ன செய்யப்போகிறது என்றும் தெரியவில்லை. நமது மத்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது என்ற விவரமும் வரவில்லை. ஆனால் இதிலே அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா வழக்கம் போல தேவையில்லாமல் 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் உச்ச கட்டத்தில் நடைபெற்ற போது நான் உண்ணாவிரதம் இருந்ததை "கபட நாடகம்'' என்றும், மத்திய அரசின் மூலமாக தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கை சென்று வந்ததை குறை கூறியும் ஒரு அநாகரிகமான, அவருக்கே உரிய நடையில் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் அடுக்கடுக்காக கொல்லப்பட்டபோது, போர் என்றால் பொதுமக்களும் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஈழத்து இனப் போரினை இழித்தும் பழித்தும் ஜெயலலிதா கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்பது ஜெயலலிதாவின் நினைப்பு! எது எப்படியோ? வருகிற 25ம் தேதியன்று எந்தவிதமான திருத்தமும் இன்றி இலங்கை போர்க்குற்ற அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக அந்த அறிக்கை வெளியான பிறகு மத்திய அரசு கால தாமதம் இல்லாமல் அதைப்பற்றி முறையான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: ஜனதா கட்சி தலைவரான சுப்ரமணியன் சாமி 4 வெளிநாட்டுக்காரர்கள் அதாவது ஜெர்மனியிலிருந்து இரண்டு பேரும் பிரிட்டனிலிருந்து ஒருவரும் பிரான்சிலிருந்து ஒருவரும் சென்னைக்கு வந்து இறங்கியிருப்பதாகவும் அவர்கள் வாக்குப்பதிவான எந்திரங்களில் மாற்றம் செய்யப் போவதாகவும் ஒரு தகவலை கூறியிருக்கிறாரே?.


பதில்: இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்குத்தான் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இதுகுறித்து விசாரித்து, மக்களுக்கு உண்மையை தேர்தல் ஆணையம் தெரிவிப்பதோடு, இந்தச் செய்தியில் தவறு இருக்குமாயின் அடிக்கடி இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி, அவர்களைப் பீதியில் ஆழ்த்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையையாவது எடுக்க முன் வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் சர்வ வல்லமை உள்ளது என்பது உணரப்படும்.

கேள்வி: புட்டபர்த்தி சாயிபாபாவின் உடல்நிலை மேலும் மேலும் மோசமாகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே?.


பதில்: தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் ஆழ்ந்த அன்பு கொண்டவர் புட்டபர்த்தி சாயிபாபா. தனிப்பட்ட முறையில் என் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். பலரும் அவரை விரும்பிச் சந்திக்க முயன்ற போதிலும் என் இல்லத்திற்கே வந்து என்னுடன் நீண்ட நேரம் உரையாடியதோடு, அவரும் நானும் நிகழ்ச்சியிலே ஒன்றாகக் கலந்து கொண்டோம். சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் கிடைக்க அவர் செய்த உதவிக்காக அந்த விழாவிலே நான் நன்றியும் தெரிவித்துக் கொண்டேன்.


இதயத் துடிப்பு குறைந்து, உடல் உறுப்புகள் சில செயலிழந்த நிலையில் அவர் வருந்துவதாக வந்துள்ள செய்தியினை அன்றாடம் மிகுந்த கவலையோடு படித்து வருகிறேன். சாயிபாபா உடல் நலம் தேறிட பிரார்த்திக்கும் லட்சக்கணக்கான அவரது பக்தர்களின் நம்பிக்கை வெற்றி பெற நானும் உளமாற வேண்டுகிறேன்.

கேள்வி: நீதிமன்றங்கள் வெவ்வேறாக இருந்த போதிலும், அதாவது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் என்று தனித்தனியாக இருந்த போதிலும், நீதி ஒன்றுதான். நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்கள் தான் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் ஆகிறார்கள். நீதிக்கு கட்டுப்பட்டு, சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தான் எந்த நீதிபதிகளாக இருந்தாலும் தீர்ப்பு கூறுகிறார்கள். அவ்வாறிருக்க ஒரே வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வேறாகவும் இருக்கிறதே?
பதில்: இந்தக் கேள்விக்கு விடையளிக்க நான் நீதிபதியோ, வழக்கறிஞரோ அல்ல! இருந்தாலும் இந்தக் கேள்வியின் நியாயத்தை உணருகிறேன். உதாரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நாவரசு கொலை வழக்கிலே வழக்கு விசாரணை நடத்திய கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் 10&3&1998 அன்று குற்றவாளி ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்து 2001ல் தீர்ப்பளித்தது. ஆனால் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அவரை கைது செய்து சிறையிலே அடைக்க வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்காவிட்டால் ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டிருப்பார். ஆனாலும் கூட, 2001ல் அதாவது பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலையான ஜான் டேவிட், தற்போது வெளிநாடு ஒன்றில் குடியுரிமை பெற்று தேவாலயத்தில் போதகராக இருப்பதாக ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது. தமிழகத்திலேயே தலைமறைவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஒரே வழக்கில் இரண்டு நீதிமன்றங்கள் பதினைந்து ஆண்டு காலம் வழக்கினை விசாரித்து அளித்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறினேன். அரசியல் ரீதியாக ஒரு உதாரணம் கூறட்டுமா?
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருடைய பிறந்த நாளை விமரி சையாகக் கொண்டாடினார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பிறந்த நாள் பரிசாக வந்ததையொட்டி ஒரு வழக்கு சென்னை சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்காக நிலுவையிலே இருந்து வருகிறது. அந்த வழக்கிலே இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சி.பி.ஐ. நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவினை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா வருகிற மே 11ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டது. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு தடை பிறப்பிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்களிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்திலே ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதி மன்றம் ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்து விட்ட போதிலும், சி.பி.ஐ. நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பதற்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 29ம் தேதிக்கும் தள்ளி வைத்துள்ளது.
இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் நமது அண்ணா அவர்கள் Òசட்டம் ஒரு இருட்டறை & அதில் வக்கீலின் வாதம் ஒளிவிளக்குÓ என்று சொன்னார் போலும்! நான் இதைக் குறிப்பிடுவது யாரையும் குற்றஞ்சாட்ட அல்ல, நீதிமன்றங்களில் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று எப்படி மாறுபடுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்!

இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment