கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் - நடிகர் சிரஞ்சீவி பிரசாரம்


‘தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும்’ என நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலத்தில் வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு வரலாற்று நாயகர். மத்தியில் ஆளும் காங்கிரசுடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம், ஜவுளித்துறை என தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார்.
கருணாநிதி ஒரு அரசியல் ஞானி. பீஷ்மர் போன்றவரான அவர் அரசியல் மேதையாக திகழ்கிறார். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். பெண்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கர்ப்பிணிகளுக்கு வழங்கிய
ஸீ
6 ஆயிரத்தை,
ஸீ10
ஆயிரமாக உயர்த்துவதாக கூறியுள்ள திட்டம் மிகவும் பிடித்துள்ளது. மிக்சி, கிரைண்டர், லேப்டாப் ஆகியவை சிறப்பான திட்டங்கள்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். கருணாநிதி 6வது முறையாக முதல்வராவார். அவரது திட்டங்கள் வந்து சேர திமுக வேட்பாளர் பிரகாசுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
விஜயகாந்த் அடிப்பார் என ஜெயலலிதா பயப்படுகிறார் - அன்புமணி ராமதாஸ் பிரசாரம் :

போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று ஜெயலலிதா பயப்படுகிறார் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை கூட்டுரோட்டில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
செய்யூரில் போட்டியிடும் பார்வேந்தன் வெற்றி பெற்றால், கருணாநிதி 6 வது முறையாக அரியணை ஏறுவார். நமது கூட்டணி சமத்துவ கூட்டணி, சமூகநீதி கூட்டணி, பலமான கூட்டணி. அதிமுக கூட்டணி சினிமா கூட்டணி, கோடம்பாக்கம் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி.
முதல்முறையாக பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் இணைந்து களம் காண்கிறது. சிங்கமும், சிறுத்தையும் இணைந்த இந்த கூட்டணி, நிச்சயம் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும். ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் இதுவரை ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. இதற்கு காரணம், போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று ஜெயலலிதா பயப்படுகிறார்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினர். நிகழ்ச்சியில், தேமுதிகவில் இருந்து 600 பேர் விலகி பாமகவில் இணைந்தனர்.

தமிழகம் மேலும் வளர்ச்சியடைய திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - ஜி.கே.வாசன் :
‘தமிழகம் மேலும் வளர்ச்சியடைய, திமுக கூட்டணியை வெற்றி பெற வேண்டும்’ என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருவாரூர் கீழ வீதியில் 10.04.2011 அன்று நடந்த தேர்தல் பிரசார பொதுட்டத்தில், திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதிக்கும், திருத்துறைப்பூண்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்வதுரைக்கும் ஆதரவு கேட்டு மத்திய கப்பல் போக¢குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள¢, கஷ்டங்கள் மீண்டும் தமிழகத்திற்கு ஏற்படக்கூடாது. நாட்டின் வளர்ச்சி ஒன்றையே கருத்தாக கொண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல்வாதி, மதவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத¢தவர். கருணாநிதியின் வெற்றியில் ஒட்டுமொத்த தமிழத¢தின் வெற்றி அடங்கியுள்ளது.
கூட்டணி கட்சியினரை அரவணைத¢து மதிக்கும் பக்குவம் தெரிந்தவர் முதல்வர் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதாவோ கூட¢டணி கட்சியினரை மதிக்காமல் இன்றுவரை அவர்களை அவமானப்படுத்தி வருபவர்.
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் சோனியாகாந்தி முதல் அனைத்து தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால் அதற்கு நேர்மாறாக கோவையில் கூட்டணி கட்சியினரை அழைக்காமல் புறக்கணித்தார் ஜெயலலிதா.
மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமாக அரசு செயல்படுவதால் திட்டங்கள் அதிகரித்து, மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகம் மேலும் வளர்ச்சியடைய, திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அம்மிக்கல்லுக்கு ‘டாட்டா’ - ப.சிதம்பரம் பிரசாரம் :

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகிய இரண்டுக்கும் டாட்டா காட்டி விடலாம் என மதுரை பிரசாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மதுரை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து அனுப்பானடி, காமராஜர் சாலை, முனிச்சாலை, தெற்குவாசல் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கருத்து கணிப்பு என வெளியாகும் பத்திரிக்கை செய்திகளை நான் ஒருபோதும் நம்புவது இல்லை. மக்களை மட்டுமே நம்புகிறேன். சில மேதாவிகள் அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சிக்கு வருவதாகக் கூறுகின்றனர். கடந்த 2004 மக்களவை தேர்தல், 2006 சட்டசபை தேர்தல், 2009 சட்டசபை தேர்தல் என திமுக & காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வெற்றிவாகை சூடிவருகிறது.
வாக்களிக்கும் முன்பு நீங்கள் திமுக, அதிமுக சாதனைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 2006&11 திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிய மக்கள்நலத்திட்டங்கள், சாதனைகளை மக்கள் மறக்கமுடியாது. குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
மத்திய அரசுடன் இணக்கமான மாநில அரசு இருந்தால் தான் பலதிட்டங்களையும், நிதி ஆதாரத்தையும் பெறமுடியும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் ஜெயலலிதாவால் இருக்கும் திட்டங்களும் கெட்டுப்போய் விடும்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்மிக்கல்லுக்கும், ஆட்டுக்கல்லுக்கும் டாட்டா காட்டி விடலாம்.
தேர்தல் முடிந்ததும் கருணாநிதியை நேரில் சந்தித்து திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள மிக்சி அல்லது கிரைண்டர் என்பதில் உள்ள ‘அல்லது’ என்பதை நீக்கிவிட்டு இரண்டையுமே சேர்த்து வழங்க வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment