கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, April 27, 2011

தபால் ஓட்டுகளை பதிவு செய்வதில் தேர்தல் ஆணையத்துக்கு ஆர்வமில்லை - ஆசிரியர் மன்றம் குற்றச்சாட்டு


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
தேர்தலின் போது வாக்குச் சாவடிகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்களை தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் கொடுக்கவில்லை. ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து மே 13ம் தேதி காலை 7 மணி வரை தபால் ஓட்டளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது, சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
திமுக ஆட்சி நடக்கும்போதெல்லாம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணப்பயன் நிறைவாக கிடைக்கும். அதனால், அவர்கள் நன்றியுடன் திமுக கூட்டணிக்கே வாக்களிப்பார்கள். ஆனால், இப்போது அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வசதியாக, தபால் ஓட்டளிக்க ஒரு மாதம் அவகாசம் கொடுத்தார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
மன்னார்குடி பகுதியில் தபால் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராதாபுரம் தொகுதி வாக்குச் சாவடியில் பணியாற்றியவர்களுக்கு தபால் மூலம் அனுப்பிய வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் 23ம் தேதி வரை கிடைக்கவில்லை. அதை அதிமுகவினர் அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை பற்றி தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.
அதிமுக கூட்டணியினர் தபால் வாக்குகளை இடைமறித்து, தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக கள்ள ஓட்டுகளாக பதிவு செய்து வருவது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. எனினும், தபால் வாக்குகளை பதிவு செய்வதில் தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையே ஏன்? முறைகேடுகள் நடப்பதை கண்டும், காணாததுபோல் இருப்பது ஏன்?.

Tuesday, April 26, 2011

திமுக உறவில் பாதிப்பில்லை: காங்கிரஸ்


திமுக காங்கிரஸ் உறவில் விரிசல் வராது; எப்போதும்போல கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2 வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்து இருக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. காங்கிரஸ் உறவு பாதிக்கப்படுமா என்று டெல்லியில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஸ் திவாரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:


2ஜி முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணைக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. 2ஜி முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின் எந்த காலக்கட்டத்திலும் மத்திய அரசின் தலையீடு இருந்தது கிடையாது. விசாரணை மேற்கொள்வதில் சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.

அரசியலில் யதார்த்த நிலைதான் கூட்டணியை நிர்ணயிக்கிறது. குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், அக் கட்சியுடனான உறவில் பாதிப்பில்லை. எனவே திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். 2006ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதன் பிறகு 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் களத்தை சந்தித்தோம். இரு தேர்தல்களிலும் எங்களது கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளோம். இந்தத் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

தமிழக அரசு பற்றி அவதூறு பரப்பும் அதிமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க மனு


தமிழக அரசு மீது அவதூறு குற்றச்சாட்டு கூறும் அதிமுக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக வலியுறுத்தியுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷிக்கு திமுக அமைப்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதோடு தற்போது இம்மாநிலத்தை ஆளும் கட்சியாகும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் (2011 மார்ச் 1) எங்களுக்கு எதிராக தவறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அதிமுக ஒரு வழக்கமாகவே கொண்டு இருக்கிறது. நாங்களும் அது பற்றி திரும்ப திரும்ப தங்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.
இன்று காலை (25&4&2011 ) அதிமுக சார்பில் அதன் நிர்வாகிகளில் 4 பேர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதாக செய்தித்தாள்கள் மூலம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. நேற்று தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயம் விடுமுறை விடப்பட்டு இருக்கும். ஆனாலும் அதிமுகவினர் அந்த புகார் குறித்த கடிதத்தை தேர்தல் ஆணையம் பெறுவதற்கு முன்பாக செய்தித்தாள்களுக்கு அளித்துள்ளனர். அதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், அவர்கள் வேண்டுமென்றே ஒரு விளம்பரத்திற்காகத் தான் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். எங்கள் அரசை பற்றி பொது மக்கள் அவதூறாக எண்ண வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயல்பட்டுள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.
ஊடகங்களின் மூலம் வெளியான அந்த புகாரில் உள்ளதைப் பற்றி எங்களுக்கு தெரியவந்துள்ளது. என்னவென்றால், அதில் எங்கள் அரசு ‘காபந்து அரசு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, தலைமைச் செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, புதியதாக அண்ணா சாலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமை செயலகத்துக்கு மாற்றி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்வாறு தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படும் போது, முக்கியப் கோப்புகள் பலவும் அழிக்கப்படுவதாகவும், எனவே தலைமைச் செயலகத்தை பாதுகாக்க மத்திய போலீஸ் படையின் துணையை நாடியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான அவர்களின் புகார்கள் மிகவும் அபத்தமானது என்பதுடன் தவறானதாகும். அத்துடன் ஒரு தீய நோக்கத்துடன் அந்தப் புகார்கள் அமைந்துள்ளன.
அதிமுகவினர் ஒரு முறை ஆட்சியில் இருந்துள்ள போதும், தற்போதைய அரசாங்கத்தை ‘காபந்து சர்க்கார்’ என்று குறிப்பிட்டிருப்பது அவர்களுக்கு அரசியல் சட்டம் மற்றும் நிர்வாக சட்டங்களில் அவ்வளவாக அனுபவம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. காபந்து சர்க்கார் என்றால், ஆளுனரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆட்சிக்காலம் முடிந்த பின்னரும் நீடிப்பது அல்லது பெருவாரியான ஆதரவை நிரூபிக்க தவறும்பட்சத்தில் அல்லது அதிக ஆதரவை நிரூபிக்க காத்திருக்கும் நிலையில் தற்காலிகமாக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க ஆளுனர் கேட்டுக் கொள்ளும் நிலையில் செயல்படுவது தான்.
ஆனால் நாங்கள் அவ்வாறில்லை. எங்களது அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பதுடன் இந்த ஆட்சிக் காலம் 2011 மே 14ம் தேதிதான் முடிவடைகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பொறுத்தவரையில் நாங்கள் தெரிவித்துக் கொள்வது இதுதான். புதிய தலைமை செயலகத்தின் கட்டுமானப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது. அந்த புதிய தலைமை செயலக வளாகத்தை கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும்.
அப்போதிருந்தே, பல்வேறு கட்டங்களாக அரசின் பல்வேறு துறைகள் புதிய தலைமை செயலகத்திற்கு இடம் மாறி வருகின்றன. அந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னரே கூட பொதுத்துறை, உள்துறை, பொதுப்பணித் துறை, தொழில் துறை, சட்டமன்ற பேரவை அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகள் புதிய தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமின்றி, புதிய தலைமை செயலகத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதும், ஆளுனர் உரை நிகழ்த்தியதும் நடைபெற்றுள்ளது. அமைச்சரவை கூட்டமும் ஏழு முறை நடைபெற்றுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை எந்த வகையிலும் மீறாமல் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள்தான் இவைகள்.
அத்துடன், முக்கிய கோப்புகளை இடமாற்றம் செய்யும் போது, அவைகள் அழிக்கப்படுவதாக தெரிவித்திருப்பது, மிகவும் அவதூறான ஒன்றாகும் என்பதோடு, அவைகள் தவறானதும் விஷமத்தனமானதுமாகும். இது ஆளும் கட்சியை மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசாங்கத்தையே குற்றம் சாட்டுவதாகும். இதுபோன்ற ஆதாரமற்ற நிலையில் தவறான புகார் அறிக்கை தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.
மாநில தலைமைச் செயலகத்தை பாதுகாக்க மத்திய ரிசர்வ் காவல்படை அல்லது மத்திய பாதுகாப்புப் படையை கோருவது என்பது சரியானதாக இருக்காது. எனவே, நாங்கள் இத்தைகய புகார்களை கடுமையாக கண்டிக்கிறோம். அந்தப் புகார் கடிதத்தில் கையெழுத்திட்ட நால்வர் மீதும், அவர்கள் சார்ந்த கட்சி மீதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையர்கள் வி.எஸ். சம்பத், எச்.எஸ்.பிரம்மா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோருக்கும் இந்த மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

திமுக உயர்நிலை குழு நாளை கூடுகிறது


திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் 25.04.2011 அன்று வெளியிட்டஅறிக்கை:
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டின் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியும் அதில் இணைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடன் 200 கோடி ரூபாயும், கடனை வழங்கிய நிறுவனத்திற்கு வட்டியுடன் திரும்பச்செலுத்தி, அதற்கான வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உட்பட அனைத்தும் ஆதாரமாகத் தரப்பட்டன.
இத்தனையும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற ஒன்றே தவிர, எவ்விதமான ஒளிவு மறைவோ மற்றும் சதியோ இல்லை என்பதை எடுத்துக்காட்டி நிரூபிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடன் தொகையைக் கூட நேர்மையான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி ஒரு பங்குதாரர், அதைப் போல சரத்குமார், ஒரு நிர்வாகப் பங்குதாரர் என்ற முறையில் இருவருமே விசாரிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் துணைவியார் தயாளு அம்மையாரையும் விசாரித்து, இவற்றை பூதாகரமாக விளம்பரப்படுத்தி இறுதியில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் என்ற செய்தியையும் பெரியதோர் விளம்பரமாக்கி, கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திமுக எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் 27ம் தேதி காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் அந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Monday, April 25, 2011

சட்டப்பேரவை நூலகம்: கலைஞர் பார்வை



தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை நூலகத்தை முதல்வர் கலைஞர் 25.04.2011 அன்று பார்வையிட்டார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்பி., ஆகியோர் உடனிருந்தனர்.

இலங்கைத் தமிழர்கள் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்: கலைஞர்


மக்களை திசை திரும்பும் வகையில் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்டுத்தும் வகையில் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று முதல் அமைச்சர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் 25.04.2011 அன்று முதல் அமைச்சர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்க அவர் பதில் அளித்தார்.

செய்தியாளர்: முக்கிய கோப்புகளை அழிக்க தி.மு.கழக அரசு முயற்சி செய்வதாக அ.தி.மு.க.வினர் சிலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்களே?


முதல்வர் கலைஞர்: அ.தி.மு.க.வின் தலைவர்களோ, தளபதிகளோ நான்கைந்து தளபதிகள் ஒரு புகார் எழுதி அரசு தலைமைச் செயலகத்தில் கோப்புகள் எல்லாம் மாற்றப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருகின்றன, அதை உடனடியாகத் தடுக்க வேண்டுமென்றும், அதைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அந்த மனுவில் இப்போது நடைபெறுவது காபந்து சர்க்கார் என்று அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் பி.எச். பாண்டியனை பெரிய வழக்கறிஞர்களில் ஒருவர் என்று கருதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய மகன் மனோஜ் பாண்டியனும் அவரை விடத் திறமையான வக்கீல் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இந்தப் புகார்ப் பட்டியலில் கையெழுத்திட்டுள்ள மனோஜ் பாண்டியன் இந்தச் சர்க்காரை காபந்து சர்க்கார் என்று சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாகும்.

சட்டக் கல்லுட்ரியின் வாசலைப் பார்த்தவர்கள் கூட காபந்து சர்க்காருக்கும், இப்போது நடைபெறுகின்ற சர்க்காருக்கும் உள்ள வித்தியாசத்தை நிச்சயமாக உணர்வார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது தொடர்ச்சியான அரசு தான். தேர்தல் முடிவு வெளி வந்து அதுவரையில் ஆட்சியில் இருக்கிற கட்சி தோற்றுப் போய் வீட்டிற்கு அனுப்பப்படுமேயானால் அடுத்து ஒரு சர்க்கார் அமைவதற்கு முன்பு இடையில் அரசாங்க நிர்வாகத்தில் தடங்கலோ தொய்வோ ஏற்பட்டு விடாமல் புதிய அமைச்சரவை அமைகிற வரையில் கவர்னர் அவர்களால் அனுமதிக்கப்படுகிற அரசுக்குத் தான் காபந்து சர்க்கார் என்று ஒரு கிராம வாசிக்குக் கூடத் தெரியும்.

புதிய தலைமைச் செயலக வளாகம் இன்று நேற்றல்ல. 13 3 2010 அன்றே பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், திருமதி சோனியா காந்தி அவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும். அதற்குப் பிறகு பட்ஜெட் கூட்டம் இந்தக் கட்டிடத்தில் தான் நடைபெற்றது. ஆளுநர் உரையும் கூட இங்கே தான் நிகழ்த்தப்பட்டது. அதையொட்டிய பொது விவாதமும் இங்கே தான் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையும் இந்த வளாகத்தில் தான் படிக்கப்பட்டது. அதற்கான விவாதமும் இங்கே தான் நடைபெற்றது.

இன்று வரையில் இந்தக் கட்டிடத்தில் ஏழு அமைச்சரவைக் கூட்டங்கள் இங்கே நடைபெற்றிருக்கின்றன. திரிபுரா கவர்னர் என்னை வந்து இங்குள்ள முதலமைச்சர் அறையில் சந்தித்து நீண்ட நேரம் உரையாற்றி விட்டுச் சென்றிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், நாராயணசாமி, ஆகியோர் இந்தக் கட்டிடத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். தமிழக ஆளுநர் பர்னாலா அவர்கள் ஒரு நாள் முழுவதும் அவர் உடல் நிலையைக் கூடப் பொருள் படுத்தாமல் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு பாராட்டிச் சென்றிருக்கிறார்.

வீடியோ கான்பரென்ஸ் நிகழ்ச்சிகள் பல குறிப்பாக கால்டுவெல் நினைவில்லத் திறப்பு விழா ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் திறப்பு விழா மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழா தேர்வாணைக் கழகக் கட்டிடக் கால்கோள் விழா போன்றவைகள் இங்கே தான் நடைபெற்றன.

அரசின் பல்வேறு துறைகள் பொதுத் துறை, உள்துறை, பொதுப்பணித் துறை, தொழில் துறை, சட்டப் பேரவைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்றவைகள் எல்லாம் இந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இங்கே பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போது கோப்புகளைத் திருத்துகிறோம் அல்லது திருடுகிறோம் என்றெல்லாம் வழக்கம் போல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். கோப்புகளைப் பற்றியும் அவைகள் எங்களுடைய நிர்வாகத்தில் பாதுகாப்பற்றுப் போய் விடும் என்பது பற்றியும் இந்த மூன்று நான்கு பேருக்கு முன்பே அம்மையார் ஜெய லலிதா அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

தேர்தல் தொடங்கியது முதல் இந்நாள் வரையில் பல அவதூறுகளை அ.தி.மு.க.வினர் குறிப்பாக அவர்களுடைய தலைவி ஜெயலலிதாவினால் இந்த அரசின் மீதும், என் மீதும் சுமத்துவதை எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டிருக்கின்றது.

செய்தியாளர்: காபந்து சர்க்கார் அல்ல, தொடர் அரசு என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சில அதிகாரிகள் உங்களைக் கேட்காமலேயே தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கிறார்களே, நேற்று கூட பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், அந்தத் துறையின் அமைச்சரைக் கேட்காமலேயே தேர்வு முடிவு வரும் நாட்களை யெல்லாம் அறிவித்திருக்கிறார்களே?

முதல்வர் கலைஞர்: அது அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு. நான் சொன்ன விஷயத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

செய்தியாளர்: அ.தி.மு.க. கொடுத்துள்ள புகார் குறித்து தேர்தல் ஆணையம் உங்களிடம் விளக்கமோ, தகவலோ கேட்டிருக்கிறதா?

முதல்வர் கலைஞர்: தேர்தல் ஆணையத்திற்கு நேற்றிரவு தான் புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்கள். இன்று காலையில் பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்திருக்கிறது. எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் இது உங்களுக்கு மிகவும் சுவையான விஷயம். அதனால் வெளியிட்டிருக் கிறீர்கள். எனவே அதற்காக வழக்கு போடுகிறோம்.

செய்தியாளர்: வழக்கு யார் மீது போடுகிறீர்கள்?

முதல்வர் கலைஞர்: எங்கள் சட்ட வல்லுநர்கள் அதைப் படித்துப் பார்த்து விட்டு யார் மீது வழக்கு போடலாம் என்று சொல்கிறார்களோ, அவர்கள் மீது வழக்குப் போடுவோம்.

செய்தியாளர் : தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது, சென்னையில் ஒரு மணி நேரம் மின் வெட்டு இருக்கிறதே?

முதல்வர் கலைஞர்:
மின்சாரப் பற்றாக்குறை இந்தியா முழுவதும் இருக்கிறது.

செய்தியாளர்: மின் பற்றாக்குறைக்கு நீங்கள்தான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறாரே?

முதல்வர் கலைஞர்:
அந்த அம்மையார் முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது, மின்சாரத் துறையில் எதையுமே செய்யாததால்தான் இப்போது இந்த விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

செய்தியாளர் : 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறதே?

முதல்வர் கலைஞர்:
தாக்கல் ஆனால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். தி.மு.க.வினர் மீது ஏதாவது ஒரு தூசி விழுந்தால் கூட, உங்களுக்கு அது தலைப்புச் செய்தியாகி விடுமே! அதற்காக நான் உங்களுடைய பத்திரிகைகளையெல்லாம் படிக்காமல் இருக்கப் போவதில்லை. ஆழ்ந்து படிக்கிறேன்.

செய்தியாளர்: அந்தக் குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினர் பெயர் இடம் பெறும் என்று கூறப்படுகிறதே?

முதல்வர் கலைஞர்:
அதுபற்றி எனக்குத் தெரியாது.

செய்தியாளர்: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?

முதல்வர் கலைஞர்:
பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது.

செய்தியாளர்: இலங்கை பிரச்சினை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே?


முதல்வர் கலைஞர்: இலங்கைப் பிரச்சினை பெரிய பிரச்சினை. இதை தி.மு.க. பிரச்சினை, அ.தி.மு.க பிரச்சினை என்று கருதி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அ.தி.மு.க. பிரபாகரனை கைது செய்து இங்கே அழைத்து வர வேண்டுமென்று தீர்மானமே சட்டப் பேரவையில் நிறைவேற்றும். ஒரு நாள், பிரபாகரனை தியாகி என்று அ.தி.மு.க. பாராட்டும். இன்னொரு நாளைக்கு இலங்கை அதிபரைத் தாக்கிப் பேசும். ஒரு நாளைக்கு தாங்கிப் பேசும். அதனால் இலங்கைப் பிரச்சினையில் எங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் கருத்து வேறுபாடு என்று சொல்லாதீர்கள். அவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை என்ன வென்றே தெரியாது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை இலங்கைப் பிரச்சினை அவருக்குத் தெரியும்.


செய்தியாளர்: இந்தச் சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.விற்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது. எனவே டெல்லியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?


முதல்வர் கலைஞர்: மத்திய அரசை இலங்கைப் பிரச்சினையில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம், வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் எங்கள் அணியில் உள்ளவர்கள் போராட்டமே நடத்தியவர்கள். இலங்கைப் பிரச்சினையிலே சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். விடுதலைப் புலிகளையெல்லாம் கைது செய்து நீதிமன்றத்திலே நிறுத்த வேண்டு மென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். பிரபாகரனைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். போர் என்றால் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். இலங்கைப் பிரச்சினையில் நாங்கள் அவர்களை விடத் தீவிரமான ஆதரவாளர்கள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு தி.மு.கழகத்தைப் பொறுத்த வரையில் தீவிரமான ஆதரவு என்றைக்கும் உண்டு. ஆனால் அவர்கள் தான் எங்களை விட்டு விட்டு வேறு ஆதரவைத் தேடிப் போய் அதனால் நஷ்டம் அடைந்தார்கள். அதற்காக நாங்கள் அவர்களை கை விட்டு விட முடியாது.


மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்.

செய்தியாளர்: ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கருத்தினை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் அணியில் டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். இதிலே உங்கள் கருத்து என்ன?


முதல்வர் கலைஞர்: இதிலே டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடவில்லை. அந்தக் கருத்தை எப்போது எந்தவிதமாக வலியுறுத்துவது என்பது தான் இதிலே முக்கியமே தவிர டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேனா என்று கேட்டு, கருணாநிதியும் ராமதாசும் கருத்து வேறுபாடு என்று தலைப்பு போட்டு விட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.


செய்தியாளர்: ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறதே?


முதல்வர் கலைஞர்: இவையெல்லாம் சர்வ தேச அளவில் சர்வ தேச நிலையையொட்டி விவாதிக்க வேண்டிய விஷயங்கள். இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியும் நல்லுறவு எப்படியெல்லாம் வளர்க்கப்பட வேண்டும் என்பதையொட்டியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். உங்களின் ஒரு கேள்வியிலும், என்னுடைய ஒரு பதிலிலும் இந்த விஷயங்களை அடக்கி விட முடியாது

இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் பதில் அளித்தார்.

பாபாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி



உடல் நலக்குறைவால் இறந்த சாய்பாபா உடலுக்கு, தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 24.04.2011 அன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சாய்பாபா மறைவு செய்தி கேட்டதும் முதல்வர் கருணாநிதி மிகுந்த வேதனை அடைந்தார். தனது சார்பில் சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை புட்டபர்த்தி செல்லுமாறு கூறினார். இதையடுத்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 24.04.2011 அன்று மதியம் 12.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் புட்டபர்த்தி சென்றார். அங்கு சாய்பாபா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிறிது நேரம் அங்கிருந்து விட்டு 24.04.2011 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை திரும்பினார்.

பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி பள்ளிக் கல்வி செயலாளரின் அறிவிப்பு தன்னிச்சையானது - அமைச்சர் தங்கம் தென்னரசு


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தன்னிச்சையாக கூறியிருக்கிறார்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிந்தன. அதற்கு பிறகு பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி முடிந்தன. பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 23ம் தேதியில் இருந்தே தொடங்கி விட்டது. இடையில் தேர்தல் பணிக்கு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் சென்று வந்தனர். மேலும், ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலை முன்னிட்டு விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு 4 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து, முடிவுக்கு வந்தது. இப்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா, 23.04.2011 அன்று சென்னை கன்னிமரா நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
அவர் தெரிவித்த தேதிகள் சரியானதுதானா? என்று தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு, “பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் நடக்கின்றன. விரைவில், டேட்டா சென்டருக்கு அனுப்புவோம். அவர்கள்தான் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பார்கள். மேலும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த பணிகள் முழுமை பெற்ற பிறகு தான் தேர்வு முடிவு வெளியிடும் தேதி முடிவு செய்யப்படும்” என்றார்.
பள்ளிக்கல்வி செயலாளர் கூறியது, தேர்வுத் துறை இயக்குநர் கூறியது ஆகியவை மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், தேர்வுத் துறைதான் அனைத்து பணிகளையும் செய்யும். பணிகள் முடிந்துவிட்டது என்று அரசுக்கு தெரிவித்த பிறகுதான், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி இறுதி செய்யப்படும். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா முன்கூட்டியே தேதியை வெளியிட்டது, தேர்வுத் துறை பணியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் செயலாளர் சபீதா கூறியது, தேர்வுத் துறை அதிகாரிகள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம்தென்னரசு இந்த பிரச்னை குறித்து கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதியும் வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்ததாக செய்தித்தாள் மற்றும் டிவிகளில் செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வுத் துறைக்கு சென்று, பின்னர் ‘டேட்டா சென்டருக்கு’ செல்லும். அங்கு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கும். அதற்கு பிறகு தேர்வுத் துறை பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு தெரிவித்து, செயலாளர் அமைச்சருக்கு தெரிவிப்பார். பின்னர், அந்த தகவல் முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். முதல்வர்தான் தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அறிவிப்பார். இதுதான் நடைமுறை. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அறிவித்துள்ளார். இது, அவரின் சொந்த கருத்து. தன்னிச்சையாக வெளியிட்டுள்ளார். இதுபோன்ற கொள்கை முடிவுகளை வெளியிடும் போது அமைச்சர் மற்றும் முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே வெளியிட வேண்டும். அதனால் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி முதல்வருடன் ஆலோசித்து பின்னர் வெளியிடப்படும். இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் சம்மந்தம் இல்லை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Sunday, April 24, 2011

சென்னை குடிநீர் பிரச்சனையை தீர்த்தவர் சாய்பாபா; கலைஞர் இரங்கல்



சத்ய சாய் பாபா(85) 24.04.2011 அன்று மரணம் அடைந்தார். 28 நாட்களாக தீவிர சிகிசை அளித்தும் பலனளிக்காமல் 24.04.2011 அன்று மறைந்தார்.

இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

’’நமது அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய புட்டபர்த்தி அருள்திரு சத்ய சாய்பாபா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் துன்புறுகிறேன்.

இறுதி அஞ்சலி செலுத்திட நமது துணை முதலமைச்சர், தம்பி மு.க. ஸ்டாலின் இன்று சென்றுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கிட சில மாநில அரசுகளே மறுத்த நிலையிலே கூட நான் கேட்காமலே தானாகவே என் இல்லத்துக்கே வருகை தந்து சென்னைக்குக் குடிநீர் கிடைக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் உதவி செய்து, தமிழ் மக்களின் உள்ளங்களில் எல்லாம் தக்கதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள். நான் ஒரு நாத்திகவாதி என்ற போதிலும், சிறந்த ஆத்திக வாதியான பாபா அவர்கள் என்பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.


2007-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையிலே நடைபெற்ற போது, அவரைப் பற்றி நான் பேசும்போது, மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை என்றும் அதாவது மக்கள் நலப் பணிக்காக அரசியல்வாதியும் ஆன்மிகவாதியும் ஒன்று சேர்வதில் தவறில்லை என்றும் கூறினேன்.


இவ்வளவு விரைவில் அவர் நம்மையெல்லாம் விட்டு மறைந்து விடுவார் என்று நான் நினைக்கவே இல்லை. அவரது மறைவால் வருந்தும் எண்ணற்ற அவருடைய சீடர்களின் துயரத்தில் நானும் பங்கேற்பதோடு, என்னுடைய தனிப்பட்ட ஆழ்ந்த இரங்கலையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கலைஞரிடம் வாழ்த்து


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் கருணாநிதியை வின்சென்ட் சின்னதுரை, இனிக்கோ, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் 24.04.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் நானல்ல, ஜெயலலிதாதான் - முதல்வர் கருணாநிதி


இலங்கை தமிழர்களுக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் 23.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார் ஜெயலலிதா. கோடை வாசஸ்தலமான கொடைநாடு எஸ்டேட் போனவர், பாவம் அங்கும் என் மீது வசை மாரி பொழிய ஏதாவது கிடைக்காதா என்ற நினைவோடு ஓய்வெடுக்க முடியாமல் என்னை பொது மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
யாரை மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்? 1956ல் சிதம்பரம் திமுக பொதுக்குழுவில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்த என்னைத்தான் மன்னிப்பு கேட்க சொல்கிறார்.
24&8&77ல் சென்னையில் இலங்கை தமிழர் பிரச்னைக்காக 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி நடத்தியவன் நான்.
1981ல் இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகிற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ‘இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாக தோன்றுகிறது. வட கொழும்பில் தமிழர் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரயில்கள் தாக்கப்படுகின்றன. தமிழ் பயணிகள் கொள்ளையடிக்கப்பட்டு தூக்கியெறியப்படுகிறார்கள். இந்த பிரச்னையை தீர்க்க மனிதா பிமான அடிப்படையில் உதவிட வேண்டும்’ என்று பிரதமருக்கு தந்தி கொடுத்த கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இலங்கை தமிழர் பிரச்னையில் அதிமுக அரசால் கைது செய்யப்பட்ட கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
25&7&83ல் வெலிக்கடை சிறைக்குள் சிங்களர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழர்களை கொலை செய்தபோது தமிழக தலைநகரில் 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்திய நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி 10&8&83ல் நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.
16&5&85ல் காஞ்சிபுரம் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானேன்.
23&8&85ல் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் நான் பேரணி நடத்தியதை அடுத்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
இலங்கை தமிழருக்கு ஆதரவாக 1986 மே மாதம் மதுரையில் பேராசிரியர், வீரமணி, முரசொலி மாறன், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘டெசோ’ அமைப்பின் சார்பில் அனைத்திந்திய தலைவர்களை அழைத்து மாநாடு நடத்திய கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
3&6&86ல் என் பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் மூலம் வசூலான நிதியினை போராளி இயக்கங்களுக்கு பகிர்ந்து கொடுத்தேன்.
1987 அக்டோபர் 15ம் தேதி திமுக சார்பில் பேரணி நடத்தினோம்.
16&10&87ல் தளபதி கிட்டுவை காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக் கை விடுத்தவன் நான்.
இலங்கை தமிழர் பிரச்னைக்காக எட்டு மாநில முதல்வர்களுக்கும் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தவனும் நான்தான்.
6&11&87ல் சென்னையில் ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக மனிதச் சங்கிலி நடத்தியவனும் நான்தான்.
15&3&89ல் டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்னையை விவாதித்தவனும் நான்தான்.
15&6&89ல் சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து இலங்கை பிரச்னை குறித்து பேசியவனும் நான்தான்.
1991 ஜனவரியில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக திமுக ஆட்சியே கலைக்கப்பட்டபோது முதலமைச்சராக இருந்ததே நான்தான்.
1989 நவம்பரில் தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி ‘‘இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி” என்று கூறினார். அவ்வாறு இளந்தலைவர் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
2008 ஏப்ரல் 23ம் தேதி பேரவையில் ‘‘இலங்கையில் முறையான அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வரவேண்டும்’’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்த நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
2008 அக்டோபர் 6ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெல்லியில் உள்ள இலங்கை தூதரை உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தை தெரிவிக்க வேண்டும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப் படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.
சொல்பவர் எப்படிப்பட்டவர் தெரியுமா..?
‘‘பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வலியுறுத்துகிறது. புலிகளின் இயக்கத்தை சேர்ந்த எவரையும் இந்திய நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது’’ என்று பேரவையில் 2002 ஏப்ரல் 16ம் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதாதான் என்னை மன்னிப்பு கேட்க சொல்லுகிறார்.
தமிழர்களை கொன்று குவித்ததை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது, ‘‘இலங்கை தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் நடக்கும்போது அப்பாவிகள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் புலிகள் பிடித்து வைத்து ராணுவத்தின் முன்னால் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்” என்று 17&1&09ல் அறிக்கை விடுத்த ஜெயலலிதா என்னை மன்னிப்பு கேட்க செல்கிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு ஏதாவது இருக்க முடியுமா?
இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் திமுகவையும் என்னையும் குறை கூறுவதற்கு ஜெயலலிதா தகுதி படைத்தவரா?
அனைத்து கட்சிகளும் சேர்ந்து அரசின் சார்பில் கலந்தாலோசனை நடத்திய நேரத்தில், ஜெயலலிதா அத்தனையும் கபட நாடகம் என்று வர்ணித்தார். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும், நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கைநழுவ விடுவதும், பதவியில் இருக்கும்போது மிரட்டுவதும், பதவி கோரும்போது கெஞ்சுவதும், யாரையும் மதிக்காமல் ஆணவமாக நடப்பதும் ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை; உழைப்பு, அறப்போராட்டம், தியாகம், அரவணைப்பு, நாகரிகம், பண்பாடு, சுயமரியாதையை மதித்து நடக்கும் நான் பொது மன்னிப்பு கேட்கின்ற நிலை என்றைக்கும் வராது. உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டியவர் ஜெயலலிதாதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Saturday, April 23, 2011

ஈஸ்டர் திருநாள்: கலைஞர் வாழ்த்து


முதல் அமைச்சர் கலைஞர் விடுத்துள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:

இன்னல் நீங்கி இன்பம் கண்ட நன்னாளாகக் கிறிஸ்தவ சமுதாய மக்கள் கொண்டாடும், ஈஸ்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (24.4.2011) மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அன்பையும், அருளையும் போதித்த இயேசு பெருமான் பகைவர் தமக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் தொண்டுகள் புரிந்தார்.

தமது போதனைகளாலும், செயல்களாலும் சமுதாயத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு உதவிடவேண்டும் என்னும் உணர்வை அனைவரிடமும் வளர்த்தார். உங்கள் மேல் உடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக் கொள்ளப்பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள், உங்களிடம் கேட்கும் எவர்க்கும் கொடுங்கள், உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடம் இருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள், திரும்பக் கிடைக்குமென எதிர் பார்க்காமல் கடன் கொடுங்கள் எனப்போதித்தார். ஒரு முறை, நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஒருவர் இயேசுநாதரை விருந்துக்கு அழைத்தபொழுது அவரிடம், நீர், பகல் உணவோ, இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, அண்டை வீட்டார்களையோ அழைக்க வேண்டாம், மாறாக நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் உறுப்புகள் குறைந்தோரையும், பார்வையற்றோரையும் அழையும் என்று அறிவுறுத்தினார்.

இப்படி, ஏழை எளிய நலிந்த பிரிவினரின் நலனுக்காகப் பாடுபட்டுத் துன்பங்களைச் சகித்துக் கொண்டு, தொண்டு செய்திடும் மனப்பான்மையை சமுதாயத்தில் வளர்வதற்குத் தம் செயல்கள் மூலமாகவே வழிகாட்டியவர் இயேசு பெருமான். அவரது புகழ் பாடும் பெருநாள் இந்த ஈஸ்டர் திருநாள். இந்நன்னாளில் அவர் போதித்த வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடித்து வாழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார்

6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி: ராமதாஸ்


6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் திமுக தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் 23.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி வேளச்சேரி தொகுதி வேட்பாளர் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,

திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 6வது முறையாக தமிழக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பேற்பது உறுதி. இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.

இலங்கை தமிழர்களுக்காக குரல் தருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, “இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் ஏற்கனவே குரல் தந்து கொண்டுதான் இருக்கிறோம். தொடர்ந்து குரல் தருவோம்” என்றார் ராமதாஸ்.
முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் 23.04.2011 அன்று காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு (பாமக), வி.சி. கட்சி நிர்வாகி செல்லபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு ஞானசேகரன் எம்எல்ஏ கூறியதாவது:
இந்த தேர்தலில் நாங்கள் அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டோம். எதிர்க்கட்சிகளைப் போல மாயாஜாலம் செய்யவில்லை. எனவே, திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளையும் இந்த கூட்டணி கைப்பற்றும். 6வது முறையாக மீண்டும் கருணாநிதி முதல்வராவார்.
இவ்வாறு ஞானசேகரன் எம்எல்ஏ கூறி னார்.

மீண்டும் ஆட்சி அமைக்க வாழ்த்து - ஓய்வூதியர் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு :

முதல்வர் கருணாநிதியை தமிழ் நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது முதல்வர் கருணாநிதி மீண்டும் ஆட்சி பொறுப்பேற்க வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் மு.காதர் மீரான் 23.04.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் மு.காதர் மீரான் 23.04.2011 அன்று நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக வரலாற்றில் நீண்டகாலம் முதல்வராக பணியாற்றி முத்திரை பதித்துள்ள முதல்வர் கருணாநிதி, மீண்டும் 6வது முறையாக முதல்வராக பதவியேற்க வேண்டும் என்றும், அவருடைய ஆட்சிக் காலத்தில் பெற்ற சலுகைகள், தமிழக அரசு அலுவலர்கள்& ஆசிரியர்கள், ஓய்வூதியர்களும் தங்களுடைய நன்றி விசுவாசத்தை, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரதிபலித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க துணைத் தலைவர் எம்.பி.கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் கோ.சீதாராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஒழுங்கு நடவடிக்கை பற்றி தன்னிலை விளக்கம் அளிக்க அவகாசம்: திமுக அறிக்கை


தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க. தோழர்கள் சிலர் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்களில் ஈடுபட்டதாக தலைமைக் கழகத்திற்கு கிளைக் கழகங்கள், ஒன்றிய கழகங்கள் அல்லது அவற்றின் மேல் அமைப்புகள மூலம் புகார்கள் வந்துள்ளன. அவைப் பற்றி உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் அனைத்துப் புகார்கள் பற்றியும் விசாரித்தறிந்து யார் மீது புகார் கூறப்படுகிறதோ அவர்களிடம் விளக்கம் பெற்று அவற்றை ஆய்வு செய்து கட்சி தலைவரும் பொதுச் செயலாளரும் முடிவு எடுத்து அறிவிக்க இருக்கிறார்கள்.
சட்டப் பேரவை தேர்தலில் கட்டுப்பாட்டை மீறியதாக வந்த புகார்களின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும், யார் மீதாவது ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வந்திருக்குமானால், அவர்கள் தலைமை கழகத்திற்கு மேல் முறையீடு செய்து தன்னிலை விளக்கம் தருவதற்கு வரும் 30ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஈழத்து இனப்போரினை இழித்தும், பழித்தும் பேசியது யார்? ஜெயலலிதாவுக்கு கலைஞர் கேள்வி


ஈழத்து இனப்போரினை இழித்தும், பழித்தும் பேசியது யார்? என்று முதல் அமைச்சர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கேள்வி: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மார்சுகி தருஸ்மேன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கி மூன் அமைத்தார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் எல்லாம் ஏடுகளில் வெளிவந்துள்ளனவே, அதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?.


பதில்: கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்ற விசாரணையின் அறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக முழுமையும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பலரும் அறிக்கைகளை விட்டுக்கொண்டுள்ளார்கள்.


இந்த விசாரணை ஆணையத்தை அமைத்த ஐ.நா. மன்றம் என்ன செய்யப்போகிறது என்றும் தெரியவில்லை. நமது மத்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது என்ற விவரமும் வரவில்லை. ஆனால் இதிலே அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா வழக்கம் போல தேவையில்லாமல் 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் உச்ச கட்டத்தில் நடைபெற்ற போது நான் உண்ணாவிரதம் இருந்ததை "கபட நாடகம்'' என்றும், மத்திய அரசின் மூலமாக தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கை சென்று வந்ததை குறை கூறியும் ஒரு அநாகரிகமான, அவருக்கே உரிய நடையில் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் அடுக்கடுக்காக கொல்லப்பட்டபோது, போர் என்றால் பொதுமக்களும் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஈழத்து இனப் போரினை இழித்தும் பழித்தும் ஜெயலலிதா கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்பது ஜெயலலிதாவின் நினைப்பு! எது எப்படியோ? வருகிற 25ம் தேதியன்று எந்தவிதமான திருத்தமும் இன்றி இலங்கை போர்க்குற்ற அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக அந்த அறிக்கை வெளியான பிறகு மத்திய அரசு கால தாமதம் இல்லாமல் அதைப்பற்றி முறையான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: ஜனதா கட்சி தலைவரான சுப்ரமணியன் சாமி 4 வெளிநாட்டுக்காரர்கள் அதாவது ஜெர்மனியிலிருந்து இரண்டு பேரும் பிரிட்டனிலிருந்து ஒருவரும் பிரான்சிலிருந்து ஒருவரும் சென்னைக்கு வந்து இறங்கியிருப்பதாகவும் அவர்கள் வாக்குப்பதிவான எந்திரங்களில் மாற்றம் செய்யப் போவதாகவும் ஒரு தகவலை கூறியிருக்கிறாரே?.


பதில்: இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்குத்தான் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இதுகுறித்து விசாரித்து, மக்களுக்கு உண்மையை தேர்தல் ஆணையம் தெரிவிப்பதோடு, இந்தச் செய்தியில் தவறு இருக்குமாயின் அடிக்கடி இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி, அவர்களைப் பீதியில் ஆழ்த்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையையாவது எடுக்க முன் வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் சர்வ வல்லமை உள்ளது என்பது உணரப்படும்.

கேள்வி: புட்டபர்த்தி சாயிபாபாவின் உடல்நிலை மேலும் மேலும் மோசமாகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே?.


பதில்: தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் ஆழ்ந்த அன்பு கொண்டவர் புட்டபர்த்தி சாயிபாபா. தனிப்பட்ட முறையில் என் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். பலரும் அவரை விரும்பிச் சந்திக்க முயன்ற போதிலும் என் இல்லத்திற்கே வந்து என்னுடன் நீண்ட நேரம் உரையாடியதோடு, அவரும் நானும் நிகழ்ச்சியிலே ஒன்றாகக் கலந்து கொண்டோம். சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் கிடைக்க அவர் செய்த உதவிக்காக அந்த விழாவிலே நான் நன்றியும் தெரிவித்துக் கொண்டேன்.


இதயத் துடிப்பு குறைந்து, உடல் உறுப்புகள் சில செயலிழந்த நிலையில் அவர் வருந்துவதாக வந்துள்ள செய்தியினை அன்றாடம் மிகுந்த கவலையோடு படித்து வருகிறேன். சாயிபாபா உடல் நலம் தேறிட பிரார்த்திக்கும் லட்சக்கணக்கான அவரது பக்தர்களின் நம்பிக்கை வெற்றி பெற நானும் உளமாற வேண்டுகிறேன்.

கேள்வி: நீதிமன்றங்கள் வெவ்வேறாக இருந்த போதிலும், அதாவது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் என்று தனித்தனியாக இருந்த போதிலும், நீதி ஒன்றுதான். நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்கள் தான் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் ஆகிறார்கள். நீதிக்கு கட்டுப்பட்டு, சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தான் எந்த நீதிபதிகளாக இருந்தாலும் தீர்ப்பு கூறுகிறார்கள். அவ்வாறிருக்க ஒரே வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வேறாகவும் இருக்கிறதே?
பதில்: இந்தக் கேள்விக்கு விடையளிக்க நான் நீதிபதியோ, வழக்கறிஞரோ அல்ல! இருந்தாலும் இந்தக் கேள்வியின் நியாயத்தை உணருகிறேன். உதாரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நாவரசு கொலை வழக்கிலே வழக்கு விசாரணை நடத்திய கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் 10&3&1998 அன்று குற்றவாளி ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்து 2001ல் தீர்ப்பளித்தது. ஆனால் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அவரை கைது செய்து சிறையிலே அடைக்க வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்காவிட்டால் ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டிருப்பார். ஆனாலும் கூட, 2001ல் அதாவது பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலையான ஜான் டேவிட், தற்போது வெளிநாடு ஒன்றில் குடியுரிமை பெற்று தேவாலயத்தில் போதகராக இருப்பதாக ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது. தமிழகத்திலேயே தலைமறைவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஒரே வழக்கில் இரண்டு நீதிமன்றங்கள் பதினைந்து ஆண்டு காலம் வழக்கினை விசாரித்து அளித்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறினேன். அரசியல் ரீதியாக ஒரு உதாரணம் கூறட்டுமா?
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருடைய பிறந்த நாளை விமரி சையாகக் கொண்டாடினார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பிறந்த நாள் பரிசாக வந்ததையொட்டி ஒரு வழக்கு சென்னை சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்காக நிலுவையிலே இருந்து வருகிறது. அந்த வழக்கிலே இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சி.பி.ஐ. நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவினை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா வருகிற மே 11ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டது. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு தடை பிறப்பிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்களிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்திலே ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதி மன்றம் ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்து விட்ட போதிலும், சி.பி.ஐ. நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பதற்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 29ம் தேதிக்கும் தள்ளி வைத்துள்ளது.
இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் நமது அண்ணா அவர்கள் Òசட்டம் ஒரு இருட்டறை & அதில் வக்கீலின் வாதம் ஒளிவிளக்குÓ என்று சொன்னார் போலும்! நான் இதைக் குறிப்பிடுவது யாரையும் குற்றஞ்சாட்ட அல்ல, நீதிமன்றங்களில் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று எப்படி மாறுபடுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்!

இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஸ்ரீதர் வாண்டையார் இல்ல மணவிழாவில் கலைஞர் நேரில் வாழ்த்து


மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரின் சகோதரி லீலா பாலசுப்பிரமணியன் மகன் சந்தோஷ்&ராகினி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் 22.04.2011 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி மணமக்களை வாழ்த்தினார். அருகில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

Friday, April 22, 2011

கலைஞர் தலைமையில் மணவிழா


சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் ஆய்வக நூலகத்தில் பணிபுரியும் செந்தில் - சத்யா மணவிழாவை 21.04.2011 அன்று முதலமைச்சர் கலைஞர் நடத்தி வைத்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் பலர் உடனுள்ளனர்.

கலைஞரிடம் பேரா. சுப. வீ வாழ்த்து


தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களை 22.04.2011அன்று அவரது இல்லத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் முதல்வரின் துணைவியார் தயாளு அம்மையார், சுப.வீ.அவர்களின் துணைவியார் வீ.வசந்தா ஆகியோர் உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை ஜெயலலிதா எடுத்துக் கொண்டாரா? - கலைஞர் கேள்வி


முதல் அமைச்சர் கருணாநிதி 21.04.2011 அன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: அறிக்கை அரசி ஜெயலலிதா ஓய்வெடுக்க கொடநாடு சென்றுள்ள நேரத்திலும் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், அதைத்தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு நீண்ட பட்டியலை கொடுத்துள்ளாரே?.

பதில்: தமிழ்நாடு காவல்துறையினர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி தொடர்ந்து அமைதியை நிலைநாட்டி வருகின்றனர்.

குற்ற நடவடிக்கைகள் என்பது எந்த ஆட்சிக்காலத்திலும் நடைபெறக்கூடிய ஒன்று தான். தமிழக காவல்துறையினர், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, கொலை, கொள்ளை மற்றும் சமுதாய குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தருவதுடன், அவர்களை தடுப்புக்காவலிலும் வைத்து வருகிறார்கள். காவல்துறையினர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிக்கும்பல்களை பலமுறை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும், அவர்கள் சட்டங்களில் உள்ள சில சந்து பொந்துகளை பயன்படுத்தி நீதிமன்றங்களில் வாய்தா வாங்கி, வழக்குகளை தாமதப்படுத்தி எப்படியோ தப்பித்துக் கொள்கின்றனர்.

ஆனால் பலரை சில நாட்கள் ஏமாற்றலாம், சிலரை பல நாட்கள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. முன் விரோதம் மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக நடைபெற்ற பின்வரும் ஒரு சில சம்பவங்களை வைத்து, சட்டம் ஒழுங்கு பராமரிப்பை ஒட்டுமொத்தமாக குறை கூறுவது என்பது ஊரை ஏமாற்ற முயலும் காரியமாகும். கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் சரகம், வில்லுக்குறியை சேர்ந்த நாகராஜன் என்பவரை 18.04.2011 அன்று, அடையாளம் தெரியாத நபர்கள், திங்கள் நகர் சந்தைக்கு செல்லும் வழியில் கொலை செய்துள்ளனர். நாகராஜன், இரணியல் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு கொண்ட போக்கிரியாவார்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 30 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் மூன்று முறை குண்டர் தடுப்பு சட்டத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவராவார். முன்விரோதம் காரணமாக இவரது எதிரிகள், இவரை கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து இரணியல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, எதிரிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இதை அப்படியே திரித்து ஜெயலலிதா தனது அறிக்கையில் தி.மு.க. வினர் கொலை செய்ததாக சொல்லியிருப்பது மாய்மாலமாகும். மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் காவல் நிலைய சரகம், உச்சப்பரம்பு மேட்டில், 18.04.2011 அன்று, சந்துரு என்ற மணிகண்ட வேலன், தனது தேநீர் கடை அருகில், குடிபோதையில் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்த சிலரை, தள்ளிச் சென்று பேசுமாறு கூறிய போது ஏற்பட்ட தகராறில், மேற்படி நபர்கள் சந்துரு மற்றும் விஸ்வநாதன் என்பவரையும் கொலை செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் ஏழு பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வழக்கில் திமுகவைச் சேர்ந்த யாரும் சம்பந்தப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா இதிலும் தி.மு.க. மீது பழி சுமத்த முயலுகிறார். மதுரையில், 14.04.2011 அன்று, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய சரகம், ஹீரா நகரில் பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, பாண்டிக்கண்ணன் என்பவரும், 16.04.2011 அன்று, கீரைத்துறையில் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் சித்திரைச்செல்வி என்பவரும், 17.04.2011 அன்று, செல்லூர் காவல் நிலைய சரகம், அருள்தாஸ்புரத்தில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சண்டை தொடர்பாக, சரவணன் என்ற சிறுவனும் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்குகளில், 11 எதிரிகள் கைது செய்யப்பட்டனர். இரண்டு எதிரிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் ஜெயலலிதா தனது அறிக்கையில் மதுரையில் கடந்த 15 நாட்களில் ஏழு பேர் கொலைச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது எண்ணிக்கை தெரியாத குற்றமாகும். சென்னை, வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்த இளையராஜா என்ற மாணவரின் வருகைப்பதிவு நாட்கள் குறைவாக இருந்த காரணத்தினால், கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, 11.04.2011 அன்று, அம்மாணவர் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, அக்கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றுக்கோரி 18.04.2011 அன்று, சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்தைத் தடை செய்த போது, காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற நேரத்தில், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உயிர் மற்றும் உடைமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைந்து போக செய்துள்ளனர். ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு தற்போது அப்பகுதியில் எந்தவிதமான பதற்றமும் இல்லை என்பதோடு, அமைதி நிலவிவருகிறது. 18.04.2011 அன்று இரவு, சென்னை, சாலிகிராமத்தில் திரைப்பட இசை அமைப்பாளர் விஜய் அந்தோணி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வரும், நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் ஒரு சிலர் கல்லெறிந்ததில், அவ்வீட்டின் ஜன்னல் கண்ணாடி ஒன்று உடைந்துள்ளது.

இது குறித்து, விஜய் அந்தோணி கொடுத்த புகாரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், குடிபோதையில் அவ்வழியில் சென்ற யாரோ ஒருவர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. காவல்துறையினர் அந்நபரை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ரவுடிகள் யாரும் ஈடுபட்டதாக தெரியவரவில்லை. ஆனால் ஜெயலலிதா இதற்கும் காது மூக்கு வைத்து கதை சொல்ல முற்பட்டுள்ளார்.

இது போலவே தான் அவர் குறிப்பிட்டுள்ள பல சம்பவங்களும் ஆகும். ஆற்றிலே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போன ஒருவன் "உலகம் போச்சு உலகம் போச்சு'' என்று குரல் கொடுக்க அவனைக் காப்பாற்றி "என்னப்பா உலகம் போச்சு என்று குரல் கொடுத்தாயே'' என்று கேட்டபோது "நீங்கள் என்னை காப்பாற்றா விட்டால் என்னை பொறுத்தவரையில் உலகம் போயிருக்கும் அல்லவா, அதனால் தான் அப்படி கத்தினேன்''என்றானாம். அதைப்போல அம்மையாருக்கும் வேறு வழி எதுவும் தெரியாததால் ஏதேதோ குரல் கொடுத்துப்பார்க்கிறார். இவர் வெளியிடும் அறிக்கைகளை பார்க்கும்போது ஆணையத்தின் அதிகாரத்தை அம்மையாரே எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடுதான் தோன்றுகிறது.

இவ்வாறு அறிக்கையில் முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Thursday, April 21, 2011

‘பழமைவாதிகள் எண்ணம் ஈடேறாது!’ - டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., தி.மு.க. அமைப்புச் செயலாளர்.


சொன்னதைச் செய்வோம்... செய்வதைத்தான் சொல்-வோம்...’ என்ற தாரக மந்திரத்தை மூச்சாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை நடத்தி வருகின்ற மிகப் பெரிய இயக்கம் தி.மு.க.

அரசியல் வரலாறுகளை படைத்த இயக்கமான தி.மு.க.வுக்கு தேர்தலை சந்திப்பது என்பது புதிது அல்ல. மூத்த மாநிலக் கட்சியான இந்த இயக்கம், தன்னுடைய ஆட்சிப் பொறுப்பு மூலமாக சாதித்த சாதனைகள் ஏராளம்.

மிகப் பெரிய அளவில் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டு, சமுதாய மாற்றங்களை உருவாக்கிய இயக்கம். இடஒதுக்கீட்டுக் கொள்-கைகள் இந்திய அளவிலும் நடை-முறைப்-படுத்தப்-படுவதற்கு மிக முக்கிய காரணம் தி.மு.கழகம்தான்.

வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற பல்-வேறு புரட்சித் திட்டங்-களிலும் திராவிட முன்-னேற்றக் கழ-கத்தின் பங்-களிப்பு நிறைய. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களும், சிறு-பான்மை இனத்-தவரும் தங்களுக்கு பா-துகாப்-பாக கருதுவது, நம்புவது திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான்.

தமிழகத்தில் அடுத்து யாருக்கு ஆட்சிப் பொறுப்-பை வழங்குவது என்பதற்காகத்தான் வரும் ஏப்ரல் 13&ல் தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்தும் தலைவர் கலைஞர் தலைமையில்தான் ஆட்சி அமையப் போகிறது என்பதை தீர்மானித்துவிட்டு, நடக்கும் தேர்தல் இது என்று சொல்வதுதான் சரி. அந்தளவுக்கு சிறப்பானதொரு ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது.

மதக் கலவரங்கள் இல்லாமல், ஜாதி சச்சரவுகள் அதிகமாக இல்லாமல் தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாகவே இருந்திருக்கிறது. காரணம்&கலைஞர்!

தி.மு.க. ஆட்சிக் காலத்துக்கு முன்பு நடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் பார்ப்போம்... வேலை நியமன தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. வேலை கொடுக்காமல் இளைஞர்களை சோம்பேறிகளாக்குவதற்கு அரசாணைகள் போடப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த உத்தரவுகள் தூக்கியெறியப்பட்டு, ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

இன்று இந்தியாவில் பயன் படுத்தப்பட்டுவரும் கார்களில் ஏறத்தாழ 20 சதவீதமும், செல்-போன்களில் 60 சதவீதமும் தமிழ்நாட்டில் தயாரானவை. அதற்குக் காரணம், தமிழகத்தில் தி.மு.க. அரசு ஏற்படுத்திய தொழில் புரட்சிதான். உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதி மேம்பாடு, பாலங்கள் அமைக்கும் பணிகளெல்லாம் திறம்பட நடந்திருக்கிறது.

அரவாணிகளுக்கும்கூட நலவாரியம் அமைத்து அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுத்த கலைஞர், உடல் ஊனமுற்றோரை ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று அழைக்க வைத்து, அவர்களுக்கு தனித் துறையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

இளம்பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற திருமண உதவித் திட்டம், முதியோர்களுக்கு உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்களுக்கு உதவித் தொகை என்று சமூகத்தின் அனைத்து தரப்பு மக்கள் வாழ்விலும் விளக்கேற்றி வைத்திருக்கிறது தி.மு.க. அரசு.

மக்கள் விரோத சக்திகள் எல்லாம் ஒன்றுகூடி கலைஞரை வீழ்த்திவிடலாம் என்று கங்கணம் கட்டித் திரிகின்றன. ஆனால், அது நடக்காது.

முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களை செயல்படுத்தாமல் நிறுத்திய ஜெயலலிதாவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொந்த வளர்ச்சியைத் தவிர வேறு எந்த வளர்ச்சியும் அவர் கண்ணுக்குப் புலப்படாது. அதுபற்றியெல்லாம் ஒரு நாளும் அவர் கவலைப்பட்டதில்லை. தன்னுடைய கட்சி அலுவலகத்துக்கு வருவதைக்கூட அவர் செய்தியாக்கும் அளவுக்குத்தான், கட்சியை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். சிறுதாவூரில் பெரிய பங்களாவைக் கட்டி அவ்வப்போது ஓய்வெடுக்கச் செல்லும் அவர், தேர்தல் நேரத்தில்தான் கட்சிக்காரர்களை நினைத்து வெளியே வருவார். அதுபோதாதென்று, ஊட்டியிலும் தேயிலை பண்ணையை விலைக்கு வாங்கி, அங்கேயும் ஓய்வெடுக்கச் செல்வதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.

அவரால், அவரை சார்ந்து நிற்கும் ஒரு தனிப்பட்ட குடும்பம்தான் பலனடைந்திருக்கிறதே தவிர, வேறு யாருக்கும் எந்த புண்ணியமுமில்லை. தமிழ் நாட்டையோ, தமிழ் மக்களையோ முன்னேற்றுவதற்கு என்று ஒரு செயலையும் செய்தவர் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் சமூக நீதி என்ற வலிமைமிக்க கொள்கையால் தங்களுடைய இடத்தை இழந்த வைதீகவாதிகளின் கோபம், தலைவர் கலைஞர் மீது பாய்ந்திருக்கிறது. அதனால், அந்த வைதீகவாதிகளும் பிற்போக்குவாதிகளும் ஜெயலலிதாவை தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

எனவே, தமிழர்கள் இந்த நேரத்தில் விழிப்புணர்வோடு இருந்து பழைமைவாதிகளின் எண்ணம் ஈடேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், வளர்ச்சிக்கும் பிற்போக்குத்தனத்துக்கும் இடையில் நடக்கப் போகும் தேர்தல். இதில், ஜெயலலிதா வெற்றியடைந்தால் பிற்போக்குத்தனம் தலைதூக்கி விடும். தமிழகத்தின் மொத்த வளர்ச்சியும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடும். எனவே, மக்கள் துளியும் ஏமாறாமல் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை மட்டும் மனதில் கொண்டு, கலைஞருக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க. அணிக்கு எதிராக களத்துக்கு வருபவர்களைப் பாருங்கள். கொள்கையை அடமானம் வைத்திருப்பவர்கள்... தொகுதிகளுக்காக மானம் மரியாதையையும் விட்டுக் கொடுத்தவர்கள்... இதெல்லாம் மக்களுக்கும் நன்கு தெரியும் என்பதால், கலைஞர் ஆறாவது முறையும் பெரு வெற்றியடைந்து ஆட்சிப் பொறுப்புக்கு வருவார். இது நிச்சயம்.

கழக அரசின் சாதனைகள் ஒருபுறமிருக்க, தேர்தல் அறிக்கையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதால், ‘புதிய ஆட்சி... அது தி.மு.க. ஆட்சி...’ என்ற சந்தோஷச் செய்தியோடு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.