கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, April 16, 2011

ஏழை மக்கள் வாழ்வை மேம்படுத்த காங்கிரஸ்&திமுக பணியாற்றுகிறது - கரூரில் ராகுல் காந்தி


மத்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் உள்ள திமுக என இரு அரசுகளும் ஏழை மக்களுக்கான அரசுகள் என்று கரூரில் 06.04.2011 அன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி பேசினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி 06.04.2011 அன்று கரூர் வந்தார். ஈரோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கரூர் ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் கரூர் திருவள்ளுவர் மைதானத்திற்கு வந்தார்.
மேடைக்கு வந்த ராகுல் காந்தி பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியில் இருப்பதற்கு தமிழக மக்களின் ஆதரவு தான் காரணம். டெல்லியிலும், தமிழகத்திலும் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு முதலில் நன்றி.
மத்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் தமிழகத்தில் உள்ள திமுக என இரு அரசுகளும் ஏழை மக்களுக்கான அரசுகள். ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்தவே இரு அரசுகளும் பணியாற்றி வருகிறது. இந்தியாவில் ஏழைகளே இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்ற ஒரு நிலையை நோக்கி நாங்கள் பணியாற்றி கொண்டு இருக்கிறோம். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் கொண்டு பொருளாதார மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். மத்திய, தமிழக அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
கரூரில் உள்ள ஜவுளித்தொழிலில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்படும். கொசுவலை தொழில் மேம்பாடு, குடி தண்ணீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும். கல்வி, சுகாதாரம், மதிய உணவு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்கன்வாடி திட்டங்களை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு உறுதியான வேலை வழங்கியதற்கு இந்த அரசு பெருமைப்படுகிறது.
இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஏழைகளுக்கு 100 நாளுக்கு உறுதியான வேலை வழங்குவதை உலகில் உள்ள நாடுகள் வியந்து தங்கள் நாடுகளிலும் அமல்படுத்தி வருகின்றன. இந்தியா விவ சாயம் சார்ந்த நாடு, விவசாயிகள் மீது அக்கறை கொ ண்டு விவசாயிகளின் ரூ.70 ஆயிரம் கோடி கடன் தள்ளு படி செய்யப்பட்டது.
பெண்களுக்கு அதிகாரம் மிக்க பணிகளை வழங்குவதற்காக உள்ளாட்சி பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி. எம்.எல்.ஏ., பொறுப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும். நகரங்களை மேம்படுத்துவதற்காக ஜெஎன்ஆர்எம் திட்டம் செயல்படுத்த மாநகரங்களிலும், நகரங்களிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிகளவிலான நிதி கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. ஏழைகள், இளைஞர்கள் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வந்ததில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.
தமிழகத்தோடு எனது குடும்பத்திற்கு நீண்ட கால தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை நான் எடுத்து செல்ல விரும்புகிறேன். தமி ழக மக்களை பார்க்கும்போ 1397776754 நான் நெகிழ்ச்சி அடைகி றேன். மீண்டும் தமிழக மக்களுடன் அதிகளவு நேரத்தை செலவிட விரும்புகிறேன்.
கரூர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் கே.சி.பழனிசாமி, குளித்தலை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதி வேட் பாளர் காமராஜ் ஆகியோரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

No comments:

Post a Comment