கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 30, 2013

கலைஞர் 90 - அறக்கட்டளை

ஒரு கோடியில் அறக்கட்டளை துவங்கி
ஒவ்வொரு மாதமும் வட்டிப்பணத்தை
கல்வி மற்றும் மருத்துவத்திற்காக
கழகத்தின் நலிந்த தொண்டர்களுக்கு
கனிவோடு வழங்கி வரும்
கன்னித்தமிழே வாழ்க பல்லாண்டு

# இன்னும் 4 நாட்கள்...

Wednesday, May 29, 2013

கலைஞர் 90 - இலவச மருத்துவமனை

பெற்றோர் பெயரில்
இலவச மருத்துவமனை ஏற்படுத்திட
வசிக்கும் வீட்டையே
வழங்கிய வள்ளலே
வாழிய வாழியவே

#இன்னும் 5 நாட்கள்..

Tuesday, May 28, 2013

கலைஞர் 90 - தமிழ்வழிக்கல்வி

தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா
என ஏளனம் செய்தோர் வெட்கி தலைகுனியும் வகையில்
"தமிழ்வழிக் கல்வி" பயின்றோருக்கு வேலைவாய்ப்பில்
தனி இடஒதுக்கீடு தந்த
தன்னிகரற்ற தலைவரே
வாழ்க வாழ்க

#இன்னும் 6 நாட்கள்...

Monday, May 27, 2013

கலைஞர் 90 - அமுதத்தமிழ்

கலை & அறிவியல் கல்லூரிகளில் கூட அசைன்மெண்ட் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் எனச் சொல்லும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் "பொறியியல் படிப்பில் தமிழ் வழிக் கல்வி"யை அறிமுகப் படுத்திய
அமுதத் தமிழே வாழிய வாழியவே

#இன்னும் 7 நாட்கள்...

கலைஞர் 90 - உயிரெழுத்து

உயிர்மெய்யின் முதல் எழுத்தே
உடன்பிறப்புகளின் உயிரெழுத்தே
வாழ்க பல்லாண்டு 

கலைஞர் 90 - காவிரி கொண்டான்

வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர் மன்றத்தையும்
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் காவிரி நதிநீர் ஆணையத்தையும்
மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பையும் பெற்றுத் தந்து அதை அரசிதழிலும் வெளியிடச் செய்த
"காவிரி கொண்டான்" கலைஞர் வாழிய வாழியவே

கலைஞர் 90 - ஆதாரம்

பதிமூன்று (1976 - 1989) ஆண்டுகால வனவாசத்திலும்
சேதாரம் சிறிதும் இன்றி கழகத்தை காத்த ஆதாரமே
வாழிய வாழியவே 

கலைஞர் 90 - நன்னயம்

இன்னா செய்தார்க்கும் அவர் நாண
நன்னயம் செய்திட்ட நற்றமிழ் நாயகரே
வாழ்க பல்லாண்டு 

கலைஞர் 90 - போக்குவரத்து பொதுஉடைமை

தனியார் வசம் இருந்த போக்குவரத்துத் துறையை
அரசுடைமையாக்கிய அறிவார்ந்த தலைவரே வாழ்க வாழ்க 

கலைஞர் 90 - பெண் குடியரசு தலைவர்

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரை
உருவாக்கிய உத்தமத் தலைவரே
வாழிய வாழியவே 

கலைஞர் 90 - தொடர் வெற்றி

55 ஆண்டுகளுக்கும் மேலாக
தொடர்ந்து தேர்தல் களத்தில்
வாகை சூடும் எங்கள்
வாழ்வாதாரமே
வாழ்க பல்லாண்டு

கலைஞர் 90 - குடிசை மாற்று வாரியம்

குடிசையிலே வாழ்ந்தவருக்கு வீடு கொடுத்தார்
சில கோணல் புத்திகாரருக்கு ஈடு கொடுத்தார்
அவர் தான் கலைஞர்
அன்புத் தலைவர் வாழிய பல்லாண்டு 

கலைஞர் 90 - அமைதிப்படை

தமிழ் சொந்தங்களை கொன்று குவித்து
தாயகம் திரும்பிய இந்திய ராணுவத்தை
வரவேற்க மறுத்து மரபை உடைத்த
தமிழினத்தின் தானைத் தலைவரே
வாழ்க பல்லாண்டு

கலைஞர் 90 - கை ரிக்சா

மனிதனை மனிதனே இழுத்துச் செல்வதைக் கண்டு
மனம் பதைபதைத்து மனிதாபிமானத்தோடு
"கைரிக்சா" முறையை ஒழித்த
தலைவரே வாழ்க வாழ்க

கலைஞர் 90 - சுயமரியாதைக்காரர்

ஏரோட்டும் உழவரெல்லாம்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் ஏன்
உனக்கு தியாகேசா
எனக் கேட்ட
"மானமிகு சுயமரியாதைக்காரர்"
வாழிய பல்லாண்டு

கலைஞர் 90 - கல்லக்குடி

தமிழ்ப் பெயரைக் காத்திட
தன்னுயிரைத் தரத் துணிந்து
தண்டவாளத்தில் தலைவைத்து
கல்லக்குடி களம் வென்ற
கன்னித்தமிழே வாழிய வாழியவே

கலைஞர் 90 - தந்தை பெரியார்

அரசு உயர் பதவி எதையும் வகிக்காத
அய்யா பெரியாருக்கு மரபை உடைத்து முழு
அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடத்தியதோடு,
"இதற்காக ஆட்சியையும் இழக்க தயார்" என மார் தட்டி
பெரியாரைப் போற்றிய பெருந்தகையாளரே
வாழ்க நீவிர் பல்லாண்டு 

கலைஞர் 90 - அய்யன் திருவள்ளுவர் சிலை

ஆழிப்பேரலையையே அடி தொழ வைக்கும் வண்ணம் அய்யன் திருவள்ளுவனுக்கு குமரி முனையில் சிலை அமைத்த தமிழ்க்குலத் தலைவரே வாழ்க வாழ்க

கலைஞர் 90 - முதல் தலைமுறை பட்டதாரிகள்

முதல் தலைமுறை பட்டதாரிகள்
தொழிற்கல்வி (மருத்துவம், பொறியியல்) பயின்றிட
கட்டண சலுகை அளித்து அவர்கள் வாழ்வில்
சிறக்க வழி ஏற்படுத்திய தலைவரே வாழ்க பல்லாண்டு

கலைஞர் 90 - நெருக்கடி நிலை

நெருக்கடி நிலையை
நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு வென்று
இந்தியாவின் இரும்பு பெண்மணியாம்
இந்திராவையே பின்னாளில் (சென்னை கடற்கரை பொதுக்கூட்டம்)
"நெருக்கடிநிலை பிரகடனம் செய்தது தவறு" என
நேரடியாக மன்னிப்பு கேட்டு
மண்டியிட வைத்த
மாவீரமே வாழ்க நீவிர் வானம் உள்ளவரை 

கலைஞர் 90 - தேசியக்கொடி

ஆண்டுதோறும்
ஆகஸ்ட் 15 அன்று
தேசியக் கோடி ஏற்றும் உரிமையை
மாநில முதல்வர்களுக்கு பெற்று தந்த
மாசற்ற தலைவரே வாழ்க வாழ்க 

கலைஞர் 90 - 108

அன்று கடவுளின் 108 போற்றி
இன்றோ கலைஞரின் 108 போற்றி !
உயிர் காக்கும் ஊர்தி தந்த
உத்தமத் தலைவரே வாழிய பல்லாண்டு !!

கலைஞர் 90 - சூரியன்

சூனியமாய்க் கிடந்த
சூத்திரர் வாழ்வில் ஒளியேற்ற
சூன் 3இல் பிறந்த
சூரியனே
வாழ்க நீ எம்மான்

கலைஞர் 90 - செம்மொழி

எம்மொழியை செம்மொழியாக்கிய
எங்கள் தலைவர் கலைஞரே
என்றும் நீர் இளைஞரே

கலைஞர் 90 - பிறந்தநாள்

தலைவருக்குப் பிறந்தநாள்
தமிழருக்கு சிறந்தநாள் 

கலைஞர் 90 - திருக்குவளையின் கருவே

திருக்குவளையின் கருவே
தி.மு.கவின் திருவே
தளராத உழைப்பின் உருவே
தமிழகத்தை தழைக்க வைத்த தருவே
பல்லாண்டு வாழ்க !
பகை வென்று ஆள்க !!

கலைஞர் 90 - தொல்காப்பியமே

தொண்ணூறாம் அகவையைத்
தொடப் போகும் தொல்காப்பியமே
நூறாண்டு தாண்டி வாழ்க !
ஆறாம் முறையாய் ஆள்க !!