பெரியார், அண்ணாவை எதிர்த்த கூட்டம்தான் இன்றைக்கு கலைஞரையும் எதிர்க்கிறது என்று நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் கூறி விளக்கவுரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரை வருமாறு:
கிருஷ்ணகிரியோடு நீண்ட காலமாக தொடர்புடையவன். ஏறத்தாழ கிருஷ்ண கிரிக்கு சேலம் மாவட்டச் செயலாளராக சேலம் இ.ஆர். கிருஷ்ணன் அவர்கள், இருந்த காலத்தில் நான் இங்கு வந்தி ருக்கின்றேன். அரசியலில் இலக்கண மாக விளங்குபவர் கலைஞர் அவர்கள்.
அதற்கு அடிப்படையான காரணம் கலைஞர் வெறும் அரசியல்வாதி அல்ல, ஆட்சிக்கு வருவது எப்படி என்பதற்காக கட்சி நடத்துபவர் அல்ல, தமிழ் நாட்டு மக் களின் வாழ்க்கையை மாற்றம் செய்வது எப்படி? வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எப்படி? வறுமையை விரட்டுவது எப்படி? வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவது எப்படி? பசி, பட்டினி இல்லாமல் மக்களை வாழச்செய்வது எப்படி? உழவருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது எப்படி? விவசாயி களுடைய முன்னேற்றத்திற்கு வழி செய்வது எப்படி? கைத்தறி நெசவாளர் களை காப்பாற்றுவது எப்படி? என்று ஒவ்வொரு துறையில் எண்ணிப்பார்த்து, செயல்படுகின்ற, மக்களோடு ஒன்றாக இணைந்திருக்கின்ற ஒரு தலைவர் கலைஞர், அவருடைய பக்குவம், அவரு டைய மனப்பான்மை, அவருடைய தொண்டு ஏறத்தாழ நான் அறிந்து 1943 ஆம் ஆண்டு பார்த்தேன்.
1943 லிருந்து 93வரை 50 ஆண்டுகள். இப்பொழுது 67 ஆண்டுகளாக எனக்கு அவரைத் தெரியும். முதன் முதல் அறிஞர் அண்ணாவோடு திருவாரூருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்றேன். அங்கே நான் அவரைப் பார்த்தேன். அந்த நாள் முதல் அவரு டைய எழுத்து, பேச்சு, எண்ணம் அத்த னையும் இந்த இயக்கத்திற்காக திராவி டத்திற்காக அறிஞர் அண்ணாவால், எப்படிப்பட்ட மறுமலர்ச்சி மாற்றம், வளர்ச்சி இவையெல்லாம் தமிழகத்தில் உருவாகியதோ, ஓர் இன எழுச்சி பிறந் ததோ,ஒரு தன்னம்பிக்கை வளர்ந்ததோ, இப்படி ஒரு கட்டுக் கோப்பான இயக் கத்தை அண்ணா உருவாக்கித் தந்தாரோ, அதை கட்டிக் காப்பாற்றுகிற ஆற்றல் உள்ள தலைவராக உள்ளவர் கலைஞர் என்ற காரணத்தால் அவரால் நாடு வாழும், அவரால் நம்முடைய சமுதாயம் வாழும் என்ற நம்பிக்கையோடு அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.
நான் இன்றைக்கு இங்கேயும் வாழ்த்துகிறேன். என்றைக்கும் வாழ்த்துவேன். சட்டமன் றத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகாலம், தொடர்ந்து உறுப்பினராக இருந்தவர். அவரும் நானும், சட்டமன்றத்திற்கு ஒன்றாகத்தான் போனோம். ஒரு முறை சட்டமன்றத்தை விட்டு நான் மேல வைக்குப் போனேன். ஒரு முறை சட்ட மன்றத்தை விட்டு நாடாளுமன்றத்திற்குப் போனேன். மறுபடியும் சட்டமன்றத் திற்கு தமிழகத்திற்கு வந்தேன்.
அவர் அப்படியல்லாமல், தொடர்ந்து சட்ட மன்றத்தில் இருந்து உறுப்பினராக, ஒரு கட்சி கொறடாவாக, எதிர்க்கட்சி துணைத் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக, அண்ணா அமைச்சரவை யில் இடம் பெற்றவராக, அண்ணா மறைந்த பின், முதலமைச்சராக 5 ஆவது முறை முதலமைச்சராக தமிழக வரலாற்றிலோ இந்திய வரலாற்றி லேயோ 5 ஆவது முறை முதலமைச்ச ராக ஆனவர்கள் யாரும் கிடையாது. ஒரு இயக்கத்திற்கு பாடுபாடமல் எவராலும் இப்படி 5 முறை முதல மைச்சராக ஆக முடியாது. மாட மாளிகையில் இருந்த அரசியல் கட்சிகளை சாதாரண மரத்தடிக்கு கொண்டு வந்தவர். பேரறிஞர் அண்ணா.
நாங்கள் நீதிக்கட்சியில் பணியாற்றி வந்தவர்கள்! தெலுங்கர், மலையாளி, கன்னடர் அத்தனை மொழி பேசுகிற மக்களிடையே தலைவர்களாக இருந் தவர்கள் ஒன்று சேர்ந்து நீதிக்கட்சியை உருவாக்கினார்கள். ஏன் அப்படி உரு வாக்கினார்கள். பார்ப்பனிய ஆதிக்கம் இருக்கிற வரையில் இந்த நாட்டினு டைய குடிமக்கள் முன்னேற முடியாது; விவசாயிக்கு வாழ்வு கிடைக்காது;
தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்காது; நம்முடைய பிள்ளை களுக்கு நல்ல கல்வி கூட கிடைக்காது; எனவே இந்தச் சமூகத்தை வாழவைக்க வேண்டும் என்று அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 1917 ஆம் ஆண்டு குரல் கொடுத்து தொடங்கியது நீதிக் கட்சி.
நான் பிறந்தது 1922, நான் பிறக்க அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னாலே முதல் குரல் நீதிக்கட்சி குரல். அதற்கு ஓர் அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னாலே கருத் தளவிலே டாக்டர் நடேசனார் திராவிட சங்கம் ஏற்படுத்தினார். அதற்குப் பின்னர் பெரியார் தலைவராக வந்த உடனேதான் சமுதாயத்திலே, மக்களிடத்திலே அந்த இயக்கம் பரவிற்று. பெரியார் மக்கள் தொண்டர். இன்னும் சொல்லப் போனால் அடித் தட்டு மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்பதற்காக வாதாடுகிற இயக்கத்தைத் தோற்று வித்தவர்.
பெரியாருடைய சுயமரியாதை இயக் கம் இந்த மேடையிலே இருக்கிற வர்களுடைய குடும்பங்களை எல்லாம், அவர்களுடைய பெற்றோர்களை எல்லாம்கூட, நம்முடைய வெங்கடே சனுடைய தந்தை சிறீராமுலுவைக்கூட, இந்த இயக்கத்திலே ஈடுபட வைத்தது. நாமெல்லாம் தாழ்ந்தவர்கள் அல்ல. இங்கே இருக்கிற வெங்கடேசனாக இருந்தாலும், வெங்கடாஜலமாக இருந் தாலும், வெற்றிச் செல்வனாக இருந் தாலும் அத்தனை பேர்களும் பார்ப்பனர் களுடைய அகராதியிலே, அந்த அகராதி யிலே அவர்கள் வைத்த வேதத்திலே சூத்திரர்கள்.
நான் உள்பட எம்.ஏ, படித்தாலும் சூத்திரன்தான், வக்கிலுக்குப் படித்தாலும் சூத்திரன் தான், டாக்டராக ஆனாலும் சூத்திரன் தான். நாம் சூத்திரன் அல்ல, அப்படிச் சொல்வது அயோக் கியத்தனம். பித்த லாட்டம் என்று எதிர்த்துக் குரல் கொடுத்து நமக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர் பெரியார். அறிஞர் அண்ணா அவர்கள் அந்த நாளிலேதான் சொன்னார் என் வாழ் நாளில் நான் கண்ட ஒரே தலைவரும், கொண்ட தலைவரும் பெரியார் ஒருவர் தான் என்றார். அறிஞர் அண்ணா அவர் கள் அந்தக் கருத்துக்குச் செல்வாக்குத் தேடினார்கள். அந்தக் கொள்கை வளர் வதற்கு எப்படி பக்கு வமாக மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டுமோ அப்படிச் சென்றார்கள்.
அதே வழியிலே கலைஞர் அவர் களும் ஒரு பெரிய எழுத்தாளராக, திரைப்படத் துறையிலே 60 ஆண்டு காலம் அவர் பணியாற்றி இருக்கிறார். அவர் எழுதிய பராசக்தி தமிழ் நாட்டிலே ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கியது. அவர் எழுதிய மனோகரா தமிழிலே ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அவர் எழுதிய சிலப்பதி காரத்தைப் பின்பற்றி அவரால் உரு வாக்கப்பட்ட பூம்புகார் அறிஞர் அண்ணாவே பாராட்டினார்.
சிலப்பதிகாரம் ஒரு சிறப்புமிகுந்த இலக்கியம், 2000 ஆண்டுகளுக்கு முன் னாலே ஒரு பெரிய மேதையாக இருந்த இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் இப்போது என்னுடைய தம்பி கருணாநிதி அந்த சிலப்பதிகாரத்தையே பூம்புகாராக உருவாக்கி அந்த இளங்கோ அடிகள் பார்த்தால்கூட மகிழ்ச்சி அடைவார். அந்த அளவுக்கு அருமை யாகச் செய்திருக்கிறார்.
எவ்வளவு பாடுபட்டு, எவ்வளவு உழைத்து, எவ்வளவு கற்று, எத்தனை இரவு கண் விழித்து இதை கருணாநிதி செய்திருப் பார். அவருடைய தாயாரைக் கேட் டால் தெரியும். அவ்வளவு துன்பப் பட்டு, பாடுபட்டு, உழைத்து, தியாகஞ் செய்து இந்த இயக்கக்தை வளர்த்தவர் கருணாநிதி என்று பாராட்டினார்.
எதிர்க்கட்சி அம்மையார் இருக் கிறாரே அவர்கள் கூட்டத்தைக் கூட்டி வரச் சொல்லி, கூட்டத்திற்கு முன் னாலே தீய சக்தி, திருக்குவளை தீயசக்தி என்று கர்ஜித்திருக் கிறார். கருணாநிதி தீய சக்தியா? இல்லை, யார் குடும்பத் திற்காவது கேடு செய்திட்டாரா? இல்லை அந்த தீய சக்தி உன்னை கொட நாட்டிலே தூங்கவிடாமல் தடுத்ததா? (சிரிப்பு) அந்தத் தீய சக்தி இங்கே சென்னைக்குப் பக்கத்திலேயே சிறு தாவூரிலே பங்களா கட்டியபோது நிறுத்தியதா? அவர் அரசியல் கட்சி யிலே வந்தபோது எம்.ஜி.ஆரே அரசி யல் கட்சிக்கு வரவில்லை.
1945 ஆவது ஆண்டு பெரியாரிடத்திலே சீடராக, அவருடைய பயிற்சிப் பாசறையிலே இடம் பெற்றவர் கலைஞர் அதற்குப் பின்னாலே அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்து பணியாற்றினார். அப்பொழுது எம்.ஜி.ஆரே திராவிட இயக்கம் அல்ல, சுயமரியாதை இயக்கம் அல்ல.
கோயம் புத்தூரிலே கலைஞர் திரைப்பட எழுத்தாளராக இருக்கிறபோது அங்கே நடிப்புக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். கலை ஞரிடத்திலே பழகித்தான் எம்.ஜி.ஆர் அதற்கு முன்னாலே நான் நினைக்கி றேன் ஒருவேளை தவறாக இருக்கலாம் விபூதி பட்டை அணிந்து கதர் சட்டை போட்டு தேசிய உணர்வோடு இருந்தார். அவர் கெட்டவர் என்று நான் சொல்ல வில்லை. அவருக்குத் தெரிந்த அரசியல் காந்தி பெயரை, நேரு பெயரைச் சொல்வது. அவர் கலைஞரோடு பழகித் தான் அறிஞர் அண்ணாவோடு வந்து அதற்குப் பின்னர்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திலே சேர்ந்தார்.
இன்னும்கூட ஒரு உண்மையைச் சொல்கிறேன். முதன் முதலிலே ஒரு மாநாட்டிலே அவரைப் பேசச் சொன்னபோது அவர் என்னைத்தான் கேட்டார். நான் இன்ன இன்ன பேசலாமா என்று கேட்டார். அப்படிப் பேசுகிறபோது அவர் சொன்னார் பெண்கள் கற்பு இழக்கக்கூடாது அப்படின்னு நான் பேசப்போகிறேன் என்றார். நான் சொன்னேன் அதை நீங்கள் பேசக் கூடாது, இதெல்லாம் நாம பேசற சங்கதி இல்லை.
நீங்கள் கலைத் துறையிலே இருக்கிறீர்கள். உங்கள் துறையைப் பற்றி மற்றவர்கள் வேறுமாதிரி பேசுவார்கள். நாங்களும் பெரியார் வழியிலே வந்தவர்கள், நாங்கள் மதிக்கிறோம் அது வேறு. ஆக நீங்கள் சொன்னால் அது தப்பாகப் போய்விடும். கற்பு பற்றியெல்லாம் நீங்கள் பேசாதீர்கள். அப்படி அவர் வந்தவர் திராவிட முன்னேற்றக் கழ கத்திலே. அதற்குப் பின்னர் அண்ணா வினுடைய இயக்கத்தைப் பற்றிகூடத் தெரியாமல் தவறாகப் பேசி, அது ஒரு எதிர்ப்பாக வளர்ந்து, அவர் கூட்டத்தை விட்டு போய், சென்னைக் கடற்கரை யிலே பொதுக் கூட்டமே கலைந்து போனது, அப்படியெல்லாம் ஆனவர்.
அவர் ஒன்றும் கெட்டவர் அல்ல, அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவரையே இந்த இயக்கத்துக்குக் கொண்டு வந்த கலைஞர் பற்றி ஒரு தீய சக்தி என்றார். எம்.ஜி.ஆரை அழைத்து வந்தது தீய சக்தியா? இல்லை இந்த நாட்டிலே அவரால் ஏற்பட்ட கெடுதல் என்ன? அவர் தீட்டியுள்ள திட்டங் களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் என்ன? அப்படி ஒரு தலைவி இந்த நாட்டிலே அரசியல் நடத்துகிறார். அந்தத் தலைவி எழுப்புகிற பேச்சு என்னவென்று கேட் டால் கலைஞரை ஒழித்துவிட வேண்டும்.
கலைஞர் உன்னைக்கேட்டு அரசியலுக்கு வந்த வரா? அல்லது உன்னுடைய ஆதரவு பெற்று தலைவர் ஆனவரா? அல்லது உன்னுடைய கருத்துச் செல்வாக்காலே அவர் என்றைக்காவது சட்டமன்றத்திலே உன்னுடைய ஆதரவு பெற்று அதன் மூலமாக ஆட்சி நடத்துகிறாரா? தன்னு டைய ஆட்சி இல்லையென்ற உடன் கருணாநிதி ஆட்சியை ஒழிக்கவேண்டும். நாங்கள் சொல்லக்கூடிய வாதத்திற்கெல் லாம் அந்த அம்மாவாலே ஒன்றும் பதில் சொல்ல முடியாது. ஆனால் எப்படியா வது ஒரு வெறுப்பை உண்டாக்க வேண்டும்.
பத்திரிகைகளிலே அதற்குத் தகுந்தாற்போல் சில பத்திரிகைகள் இருக்கின்றன. அந்த அம்மையார் வருகிற கூட்டத்தைப் பற்றி பெரிய கூட்டம் என்று போடுகிறார்கள். அந்தப் பத் திரிக்கை செய்தியாளர்களுக்குக் கூட் டத்தைப் பார்த்தால் அளவு தெரியாதா? நான் ஒரு பத்திரிகையிலே, தினமலர் என்று நினைக்கிறேன் பெரிய அளவிலே அந்தப் படத்தை திருச்சியிலே ஜெய லலிதா பேசுகிற கூட்டம். பெரிய கூட்டம் அதைப் படம் போட்டிருக்கிறார்கள்.
நான் எண்ணிப் பார்த்தேன். ஒரு சின்ன கூட்டம் போட்டால் அதில் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று எங்களுக்கு ஒரு கணக்குத் தெரியும். ஒரு நூறு தலை இருந்தால் இருநூறு என்று கணக்குப் பண்ணுவோம். 200 புள்ளி இருந்தால் 400 பேர் என்று கணக்குப் போடுவோம். 500 புள்ளி இருக்கிற கட்டமாக இருந்தால் 1000 என்று கணக்குப் போடுவோம்
. அப்படிக் கணக்கிட்டால் 12,000 பேர் இருப்பார்கள். வெறும் 12,000 பேர் கூட்டத்தை பத்திரிகையாளர்கள் ஒரு மாபெரும் கூட்டம், கோவையிலே கூடிய கூட்டத்தைவிட இங்கே அதிக கூட்டம் அதைவிட இங்கே செலவு அதிகம். (சிரிப்பு) அப்படியே கூட்டம் கூடினால் என்ன?
அப்படி கூட்டம் கூடினால் அத்தனை பேரும் கட்சிக்காரர்களா? இந்தக் கூட்டத்தில் உள்ள அத்தனை பேர்களையும் என்னுடைய கட்சிக்காரர்கள் என்று எடுத்துக்கொள்ள லாமா? (கைதட்டல்) தி.மு.க உறுப்பினர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? (கைதட் டல்) என்னதான் பேசுகிறார்கள் பார்க்கலாம் என்று வேறு கட்சிக்காரர்கள் வந்திருக்க மாட்டார்களா? அல்லது நடு நிலையாளர்கள் இருக்க மாட்டார்களா? எல்லாக் கூட்டத்திலும் இருப்பார்கள். அந்தக் கூட்டத்திலும் இல்லை. அந்தக் கூட்டத்தில் எல்லாம் அவர்கள் அழைத்துக்கொண்டு வந்த கூட்டம்தான்.
அதனாலே பிரியாணி சாப்பிட்ட கூட்டம், செங்குட்டுவன் சொன்னதெல் லாம் சாப்பிட்ட கூட்டம். (சிரிப்பு) ஆனால் அந்தக் கூட்டத்தை பெரிய பெரிய பத்திரிகையிலே ஏதோ அவர் களுக்கு ஒரு பெரிய சக்தி இருப்பதைப் போல இந்தக் கூட்டத்தைப் பார்த்து கலைஞரோ தி.மு.கவோ மிரண்டு போய் விட்டது என்பதைப் போல ஒரு மாயையை உருவாக்கப் பார்க்கிறார்கள் நாங்கள் உங்கள் அப்பனைப் பார்த்தே மிரளவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்து பெரும் பெரும் ஆரியக் கலாச் சாரத்து புலவர்களைப் பார்த்தே நாங்கள் மிரளவில்லை. பெருந்தலைவர் காமராச ரையே நாங்கள் எதிர்த்து நியாயத்துக் காகப் போராடியவர்கள் தான் எங்கள் மனதிலே பட்ட நியாயத்துக்கு. அதே காமராசரை தமிழன் என்பதற்காக குடி யாத்தத்திலே ஆதரித்தவர்கள் தான் நாங் கள்.
இராஜாஜியை நாங்கள் எதிர்க்க வில்லையா? பண்டித நேருவை எதிர்த்து கறுப்புக்கொடி பிடிக்கவில்லையா? நாங்கள் எதிர்த்துப் போராட மாட்டோம் என்பதல்ல, நாட்டிற்கு இந்த நேரத்தில் யாருடைய ஆட்சி தேவை, யார்மூலம் நாட்டைப் பாதுகாக்கலாம் அதைக் கருதுகிறார்கள். ஆனால் ஆரியம் அப்படி யல்ல. நம்மைப்போல நாட்டுக்காக அல்ல. அந்த ஒரு இனத்திற்காக எந்த இனத்தை ஒழிக்கலாம். எந்த ஆட்சியைக் கவிழ்க்க லாம். யாரை மாற்றலாம்.
கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்து 89 ஆவது ஆண்டு முதலமைச்சர். இரண்டாவது ஆண்டு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. கலைத்தவர் யார் தெரியுமா? அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட் ராமன். குடியரசுத் தலைவர் வெங்கட் ராமனுக்கு கலைக்க, கையெழுத்துப் போடுவதற்கு எப்படி அந்த மனப் பான்மை வந்தது. அந்த மனப்பான்மை உடைய இனத்தைச் சேர்ந்தவர் அவர். வேறு யாராக இருந்தாலும் என்ன சொல்லியிருப்பார்கள்.
அந்த ஆட்சி சரியாக இல்லாவிட்டால் பொதுமக்கள் தீர்ப்பு அளிக்கட்டும். இடையிலே நாம் எப்படி தலையிடுவது என்று கேட்டிருப்பார்கள். நம்முடைய மிகப்பெரிய இலக்கியம், தமிழ் மொழியினுடைய பெருமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டிய ஒரு நூல் திருக்குறள். அதனுடைய பெருமையைப் பற்றி பாரதியார் பாடுகிறபோது வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றார்.
மற்ற புலவர் கம்பரையோ, சேக்கிழாரையோ உலகத்திற்குத் தரமுடியாது, அது ஒரு தமிழ் மொழி இலக்கியம் மனித நேய இலக்கியம், சமத்துவ சமுதாய இலக்கியம், பண்பாட்டு இலக்கியம், எனவே அப்படிப்பட்ட அறநூல் உலகமெல்லாம் மதிக்கிற நூல் என தேசியக் கவி பாரதியார் பாரதிதாசன் பாடினால் ஆச்சரியம் அல்ல; கலைஞர் பாடினால் ஆச்சரியம் அல்ல; பாடியது பாரதியார். அந்த வள்ளுவனுடைய திருக்குறளைப் பற்றி வைதிக மனப்பான்மைக் கொண்டவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியுமா? ஆண்டாள் பாட்டிலே வைத்துச் சொல்லுகிறார்கள்.
நாங்கள் இறைவனுக்கு வழிபாடு செய்வதற்கு முன்னால் தீக்குறளைத் தீண்டோம். திருக்குறள் தீக்குறளாம். திருக்குறள் தீக்குறள் அதைத் தீண்ட மாட்டோம் என்றார்கள். அதேபோல் திராவிடம் என்று நாங்கள் தொடங்கிய காலத்திலே எல்லாம் இது தீரா இடம் என்றார்கள். இது என்றைக்கும் தீராத நந்தி என்றார்கள்.
தமிழ்நாட்டை தமிழன் ஆளுவதை விரும்பாத கூட்டம்!
இன்னும் சொல்லப்போனால் பெரியாரைப் பற்றி எவ்வளவோ கேவலமாகக் கண்டித்துப் பேசினார்கள். அண்ணாவைப் பற்றி பேசினார்கள், இன்றைக்கு கலைஞரைப் பற்றிப் பேசுகிறார்கள். அதையெல்லாம் நான் எதற்குச் சொல்கிறேன் என்றால் அவர்களுக்கு எங்கிருந்து அந்த ஆதரவு வருகிறது, இன உணர்வு, இனப் பற்று. தமிழ்நாட்டை தமிழன் ஆளுவதைப் பற்றி விரும்பாத ஒரு கூட்டம் தமிழ்நாட்டிலே இருக்கிறது.
அவர்கள் வேண்டுமானால் நமக்கு எதிரே நம்மிடத்திலே அன்போடு மகிழ்ச்சியாகத்தான் பேசுவார்கள். ஆனால் மனதிற்குள் அன்பழகன் நல்லாத்தான் பேசினீர்கள் என்பான். அப்புறம் ஓட்டுப் போடுகிறபோது கேட்டால் சொல்வான் அதுவேறு, இது வேறுங்க என்பான். ஓட்டுப் போடுகிறபோது வேறு யாருக்கோதான் போடுவான். அவன் அப்படி எண்ணுகிற எண்ணத்தைப் பல பேர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிலே பல நல்லவர்கள் இருக்கிறார்கள்.
உத்தமர்கள் இருக்கிறார்கள், யோக்கியர்கள் இருக்கிறார்கள், தியாகிகள் இருக் கிறார்கள், அவர்களை நாங்கள் வணங்குகிறோம். ஆனால் அயோக்கியத்தனத்திற்குப் பிறப்பிடமே அந்த இனம்தான். அரசியலிலே பித்தலாட்டத்தை வளர்த்தது அந்த இனம் தான். பெரியாரோ, அண்ணாவோ பெற்றிருக்க வேண்டிய அந்தப் பெருமையை அந்தக் காலத்திலேயே பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது அந்த சக்திதான். திரு.வி.க வைப் போல ஒரு பண்பாளரை அரசியலிலே வளரவிடாதவர்கள் அவர்கள்தான்.
இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொன்னால், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை அரசியலைவிட்டு ஒதுக்கி வைத்தது அந்தக் கூட்டம்தான். ஆக அப்படி ஒரு காலம். அதையெல்லாம் எதிர்த்து நின்று வெற்றி பெற்று வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்தான் கலைஞர். அவரை எதிர்ப்பதற்கு இந்த ஒரு சக்தியைத் தவிர வேறு சக்தி கிடையாது என்ற காரணத்தினால்தான் அந்த அம்மையாரைப் பத்திரிகைகளிலே தூக்கி விடுகிறார்கள். பிரமாதமாகத் தூக்குகிறார்கள்.
அந்த அம்மா அரசாங்க நிலத்தை டான்சி நிலத்தை வாங்கிவிட்டு நீதிமன்றத்திலே என்ன சொன்னார்கள் நான் வாங்கவில்லை என்றார்கள். இந்தக் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்களே அது யாரு என்று கேட்டார்கள். அதுவும் நான் இல்லையென்றார்கள். உச்சநீதிமன்றத் திலே என்ன சொன்னார்கள் அந்த அம்மா நிலத்தை வாங்கியதும் தவறுதான் வாங்கவில்லை என்று சொன்னது அதைவிட தவறு, அந்தக் கையெழுத்தை தன் கையெழுத்து இல்லையென்று, தானே கையெழுத்து போட்டு பொய் சொல்வது ஒரு முதலமைச்சருக்குக்கான தகுதிக்கான அழகு இல்லை.
அவர்களை நான் இரண்டு ஆண்டுகள் தண்டித்ததற்காக நான் அதைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் விடுதலை செய்கிறோம் என்று உச்சநீதிமன்றத்திலே சொல்லி ஒரு முதல மைச்சரைத் தண்டிக்க வேண்டாம் என்று ஒரு வரலாற்று அடிப்படையிலே இந்தியாவிலே முதலமைச்சரையே தண்டித்தோம் என வேண்டாம் என முதலமைச்சராக இருந்த நிலையிலே தண்டிக்க வேண்டாம் என விட்டு விட்டார்கள். விட்டுவிட்ட காரணத்தினாலே நீ யோக் கியன் ஆகிவிடுவாயா? நீதிமன்றத்திலே உங்களை விட்டுவிட்டார்கள், ஆனால் நீதிமன்றத்தில் சொன்ன அந்த வார்த்தைகள் எல்லாம் அந்தப் பதிவிலே இருக்கிறதே அதை என்ன செய்யப்போகிறீர்கள்?
அதேபோல, ஒரு பிறந்த நாள் நேரத்திலே அம்மை யாருக்கு இரண்டு கோடி ரூபாய் நன்கொடை வந்தது. அந்த இரண்டு கோடி ரூபாய் நன்கொடை ஒரு முதலமைச்சருக்கு வந்தால், கலைஞராக இருந்தால் என்ன செய்வார்? அண்ணாவாக இருந்தால் என்ன செய்வார்? காமராசராக இருந்தால் என்ன செய்வார் என்றால், முதலமைச்சர் பெயரால் வந்திருக்கிறதப்பா? அரசாங்கத்திலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி முதலமைச்சர் நிவாரண நிதி என்று ஒன்று இருக்கிறது அதிலே போடுவார்கள். இந்த அம்மா என்ன செய்தார்கள்.
வேறு எங்கு போடலாம் என்று விசாரித்தார்கள். செய்யாறிலே ஒரு வங்கி இருக்கிறது அங்கே போடலாம் என்றார்கள். அங்கே யார் மூலம் போடலாம் என்று, அங்கே ஒரு ஆளை நியமித்து அங்கே அவர்கள் பெயரால் அந்தப் பணத்தைப் போட்டார்கள். அதுதான் இப்போது வழக்கு நடக்கிறது. அரசியல் பிழைப்பு நடத்த
ஜெயலலிதாவை புகழும் கூட்டம்!
அந்த வழக்கை நடத்தவிடாமல் திரும்பத் திரும்ப இங்கே பேசிய நம்முடைய செங்குட்டுவன், மற்றவர்கள் எல்லாம் சொன்னது மாதிரி இழுத்தடித்து இழுத்தடித்து இவ்வளவு நாள் ஆகி, இப்பொழுதும் அந்த வழக்கு நடக்கிறபோது, திரும்பவும் உயர்நீதிமன்றத்திற்குப் போய் என்ன கேட்கிறார்கள்? வழக்கைத் தொடரவிடக் கூடாது. நான் திருடுவேன், கையைப் பிடிக்கக்கூடாது. நான் கொள்ளையடிப்பேன், கேள்வி கேட்கக்கூடாது.
என் மேலே குற்றச்சாட்டு இருக்கலாம் ஆனால் என்னை விசாரிக்கக்கூடாது. ஒருவேளை அந்த அம்மா என்ன சொல்லுவார்கள் நான் பிராமணர் என்று தெரிந்தும் என்மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு சொல்கிறார்கள். அந்தக் காலத்திலே இது எப்படி என்று தெரியுமா? பிராமணன் திருடினால் அவனைத் தண்டிக்கக்கூடாது. ஆகவே அவர் தீய சக்தி என்று சொல்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அப்படிச் சொன்னால் அதைக் கேட்க பல பக்தர்கள் கிடைப்பார்கள். அதை நம்புவதற்கு கட்சிக் காரர்கள் கிடைப்பான்.
அதை நம்புவதற்கு சில தீவட்டிகள் கிடைப்பார்கள். அதை நம்பினால் தான் எம்.எல்.ஏ ஆகலாம் என்றால் நிச்சயம் நம்புவான். அதை நம்பினால் மந்திரியாவேன் என்றால் அதுதான் உண்மை என்பான். பிழைப்பு நடத்துவதற்கு அரசியலிலே சில பேர் இருக்கிற இந்தக் காலத்தில் அப்படி ஏமாந்து போகிறவர்கள் பலபேர் இருப்பார்கள். ஆனால் பொதுமக்கள் எது உண்மை எது நியாயம் என்பதை திண்ணையிலே உட்கார்ந்து வாதித்துப் பேசி உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டிலே கலைஞருடைய அரசு எவ்வளவு பெரிய சாதனைகள் செய்திருக்கிறது என்பதை வேறு மாநிலத்திலே உள்ள முதலமைச்சர்கள் எல்லாம் கூட ஆச்சரியப்படுகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு தேவையான சலுகைகள்! அது மட்டுமா? இடஒதுக்கீடு நூற்றுக்கு மூன்று புள்ளி அய்ந்து விழுக்காடு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு, அதிலும் பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கியிருப்பது அவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய ஒரு நன்மை.
உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். அந்தக் காலத்திலே காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் முஸ்லிம் லீக்கினுடைய தலைவராக இருந்த காலத்தில் பெரியாரிடத்திலே அவருக்குப் பழக்கம், பற்று, அண்ணாவிடத்திலே அவர்களுக்குப் பழக்கம் நானும் பழகியிருக்கிறேன், கலைஞரும் பழகியிருக்கிறார். அவர் படுக்கையிலே இருந்தபோது அவருக்கு 75 வயதிலே கொஞ்சம் நோய் அதிகமாகி படுக்கையிலே இருந்தார்.
அப்போது அவரைப் போய் பார்த்தபோது அன்று பார்த்துச் சொன்னார் கலைஞர் நீங்கள் தான் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு பாதுகாவலராக இருக்க வேண்டும்.(கைதட்டல்) உங்களை நான் மிகவும் நம்புகிறேன். எங்கள் கொள்கை வழியிலே எங்களோடு உடன்பட்டவர்கள் நீங்கள். எங்கள் இஸ்லாமை மதிப்பவர்கள் நீங்கள். நீங்கள் எங்களுடைய பிள்ளை களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் எங்கள் இனத்தைப் பாதுகாக்கவேண்டும். நான் அதற்காகத்தான் உங்களோடு கூட்டணி வைத்தேன். வெறும் எம்.எல்.ஏ பதவிக்காக அல்ல என்று சொன்னார். அது இன்றைக்கும் கலைஞரால் நிறைவேற்றப்படுகிறது.
அதேபோல நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்களேயானால், அருந்ததியர் சமூகம், அருந்ததியர் சமூகம் என்றால் ஆதிதிராவிடர்களிலே அவர்கள் இன்னும் தனிப்பட்ட ஒரு பிரிவாக பாதிக்கப்பட்டவர்கள். தாழ்த்தப்பட்ட வர்கள் அதிலும் அவர்கள் ஏதோ சில காரணங்களால், ஒரு சூழ்நிலையால் எப்படியோ அவர்கள் செய்கிற ஒரு தொழில் காரணமாக இழிவான நிலையிலே ஆளாகியிருந்தார்கள். அவர்கள் படிப்பு வசதி பெறாமல் இருந்தார்கள். அவர்களுக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர்.
வன்னிய சமுதாயத்திற்கு கலைஞரை விட நன்மை செய்தது யார்?
வன்னிய சமூகத்திற்கே முதன்முதலாக மிகமிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் தனி இடஒதுக்கீடு கிடைக்கக்கூடிய அளவிற்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரித்துக் கொடுத்தவர் கலைஞர் தான். இப்போது ஒரு அரசியல் தலைவர் இருக்கிறார், செவ்வாய்க் கிழமை ஒரு கட்சியில் இருப்பார், புதன் கிழமை வேறு ஒரு கட்சியிலே இருப்பார், கிழமை அதேதான் என்பார். (கைதட்டல்) அவர் சொல்லியிருக்கிறார் சமூக நீதியைப் பற்றி பேச கலைஞருக்கு என்ன உரிமை இருக்கிறது, தகுதி இருக்கிறது.
நாங்கள் பிறந்ததற்குப் பிறகு பிறந்தவர்கள் எல்லாம் எங்களைப் பார்த்து நீங்கள் எப்படி எங்களைக் கேட்காமல் பிறந்தீர்கள் என்றால், நீங்கள் பிறக்க வில்லையே நாங்கள் என்ன பண்ணுவது.(கைதட்டல்) நீங்கள் பிறந்திருந்தால் உங்களை கேட்டுவிட்டு நாங்களும் பிறந்து இருப்போம். நாங்கள் பிறந்த பிறகு நீங்கள் கேட்காமல் பிறந்திருக்கிறீர்கள். சமூக நீதியை இவர்களா காப்பாற்றுகிறார்கள்? அரசியலிலே எதை வேண்டு மானாலும், யார் வேண்டுமானாலும் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் தெளிவு ஏற்படாது என்பது உண்மை என்றாலும் அவர்கள் எல்லாம் அரசியல் நோக்கத்திற்காகப் பேசுகிறார்கள். அவர்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள், அதை எதிர்க்கிற கட்சியையும் ஆதரிப்பார்கள். கம்யூனிஸ்டை ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். அவர்களுடைய நிலையிலே நாம் இருக்க முடியாது. இப்போதுகூட சிலபேர் மேடையிலே பேசுகிறபோது சில கட்சியைச் சேர்ந்தவர்கள் இத்தனை இடங்கள் எங்களுக்கு வேண்டும் என்று பேசுகிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் அவர்கள் கட்சித் தலைவரி டத்திலே முழு நம்பிக்கை இல்லை. நம்முடைய கட்சியிலே அப்படி ஆளுக்கு ஆள் அப்படிப் பேசமாட் டார்கள். கலைஞரிடத்திலே நம்பிக்கை உள்ள கட்சி, கலைஞர் தான் பேசுவார், அவர் சொல்லித்தான் பேசுவார். ஆக அப்படியெல்லாம் அவர்கள் பேசினாலும்கூட திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல கடமை கண்ணியம் காப்பற்றுகிற கட்சி மட்டுமல்ல, கட்டுப்பாட்டைக் காப்பாற்றுகிற கட்சி அந்தக் கட்டுப்பாடுதான் நாம் மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய சக்தியை நமக்குத் தந்திருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டுமானால் கழகத் தோழர்கள் கட்டுப்பாட்டோடு கலைஞருடைய தலைமையிலே தொடர்ந்து பணியாற்ற உறுதி எடுக்க வேண்டுமென்று கேட்டு, வாழ்க கலைஞர் என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறு நிதியமைச்சர் பேராசிரியர் உரையாற்றினார்.