கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, October 31, 2010

தமிழக அரசு திட்டங்களுக்கு தங்கபாலு பாராட்டுமுதல்வர் கருணாநிதியை இன்று (31.10.2010) அவரது கோபாலபுரம் இல்லத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு,


கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு குறித்து முதல்வரிடம் பேசினோம். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய வருவதாக முதல்வர் கூறினார்.


கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு விரைவில் முதல்வர் கருணாநிதி தீர்வு காண்பார். தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை முதல்வர் கருணாநிதி, சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறார் என்றார்.கலைஞர் காப்பீடு திட்டத்தில் 19 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன - கலைஞர்


கலைஞர் காப்பீடு திட்டத்தில் 19 லட்சத்து 42 ஆயிரத்து 575 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்,
கலைஞர் காப்பீடு திட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி சேர அனுமதி வழங்கியதற்கு பாராட்டு விழா, நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். செங்கல்பட்டில் ரூ.50 கோடியில் அமைக்கப்படும் தமிழ்நாடு கட்டுமான உயர் பயிலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் கருணாநிதி பேசியதாவது:
இந்த விழாவைக் காண மழையும் வந்து சாளரம் வழியாக எட் டிப் பார்த்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு உதவ என்று மழை வந்துள் ளது. அணைகள் நிரம்பி உள்ளன. தண்ணீர் விடமாட்டோம் என்று சொன்ன கர்நாடகம்கூட விட்டுத்தான் தீரவேண்டும் என்று எண் ணும் அளவுக்கு மழை பொழிந்துள்ளது. நீங்கள் எனக்கு நன்றி தெரிவித்தீர் கள். நான் தமிழர்கள், தமிழக மக்கள் சார்பில் உழவர்கள் சார்பில் மழைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மாமழை போற்றுதும் என்று கூறி நன்றி கூறுகிறேன். இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். தேவர் திரு மகன் குருபூஜை கமுதியில் நடக்கும் நாள். தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அங்கு அணிவகுத்துள்ளனர். நான் ஆண்டுதோறும் அங்கு தவறாமல் செல்பவன். இடையில் உடல் நலிவுற்றபோது ஒன்றிரண்டு ஆண்டுகள் செல்லாமல் இருந்திருப் பேன். எல்லோரும் அங்கு சென்று மரியாதை செலுத் தும் நினைவிடத்தை அமைத்து தந்தது, நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் தான். மதுரையில் தேவர் சிலை அமைத்து அதை அன்றைய ஜனாதிபதி கிரியை அழைத்து திறந்து வைத்தவனும் நான் தான். தேவர் சிலைகளிலேயே பெரிய சிலை அதுதான். மகத்தான புகழ்பெற்ற அந்த திருமகன் தேசபக்தர், விடுதலை வீரராக இருந்து தாம் ஏற்றுள்ள சூளுரையை நிறைவேற்ற பாடுபட்டார்.
இங்கு எனக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு நன்றி தெரிவித்தீர்கள். யார் வாழ்த்து பலிக்கிறதோ இல்லையோ பாட்டாளிகளான உங்கள் வாழ்த்து நிச்சயம் பலிக்கும்.
உயிர் காக்கும் கலைஞர் காப்பீடு திட்டம் 2009ல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 33 அமைப்பு சார தொழிலாளர் வாரியங்களில் பதிவு பெற்ற லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எந்த நிபந்தனையும் இன்றி வருமான வரம்பின்றி பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரியங்களில் 2 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். 41 ஆயிரத்து 653 பேருக்கு ரூ.108 கோடியே 42 லட்சத்து 322க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அப்படி காப்பாற்றப்பட்டவர்கள் இங்கே வந்து என் கையைப் பிடித்து நன்றி தெரிவித்தனர். குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இதுவரை 19 லட்சத்து 42 ஆயிரத்து 575 குடும்பங்களுக்கு ரூ.909 கோடி 40 லட்சத்து 98 ஆயிரத்து 848 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு செலவு செய்து இவ்வளவு பேர் காப்பாற்றப்பட்ட பின்பும் அர சியல் காரணங்களுக்காக இது பயனுள்ள திட்டம் இல்லை என்று பேசுபவர்களும் நாட்டில் உள்ளனர். அவர்கள் நலம்பெற எந்த திட்டம் அறிவிப்பது? உடல் நலம் கெட்டால் காப்பாற்றலாம். மனநலம் கெட்டவர்களை எப்படி காப்பாற்ற முடியும்?
ஜனநாயகம் என்ற பெய ரால் சர்வாதிகாரம் கூடாது. சர்வாதிகார ஆட்சி நடத்தக்கூடாது. இங்கு பேசியவர் கள் 6வது முறையாக நான் முதல்வராக வர வேண்டும் என்றார்கள். அது உங்கள் கையிலும் இல்லை. என் கையிலும் இல்லை. நாட்டு மக்கள் கையில் தான் இருக்கிறது. இந்த மக்களுக்காக இப்படிப்பட்ட காரியங்களை நான் செய்வது எப்படி என்று பேசினார்கள். நான் சீமான் வீட்டு பிள்ளை அல்ல. சாதாரண மனிதன். நான் எப்படி வளர்ந்தேன். எந்த சூழலில் வளர்ந்தேன் என் பதை எண்ணிப் பார்த்தேன். நான் வளர்ந்த சூழல் தான் மக்களைப் பற்றி சிந்திக்க வைத்தது.
என் பள்ளித் தோழன் ராமச்சந்திரன், முடிதிருத்தும் தொழிலாளி. அவரது முடிதிருத்தும் நிலையத்துக்கு நான் சென்றபோதுதான் பெரியாரின் கட்டுரைகளை படித்தேன். அதைப் படித்து சுயமரியாதை உணர்வுடன் ஜாதி, மதமற்ற கொள்கையை ஏற்றேன். அதை செயல்முறையில் காட்டுபவன் நான். கலப்பு மனத்தை என் வீட்டில் செய்து காட் டினேன். அழகிரிக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தேன். பெண்ணை எடுத்தாயே? பெண்ணை கொடுத்தாயா? என்று கேட்கலாம். எனது பேத்தி தேன்மொழியை நாமக்கலில் அருந்ததி வகுப்பில் பிறந்தவருக்கு கொடுத்துள்ளேன். ஜாதி, மத வித்தியாசத்தை என்றும் பார்த்தவன் இல்லை. என்னுடைய அந்தரங்க செயலாளரும் அருந்ததியர்தான். நான் மிக மிக பின் தங்கிய சமூகத்தில் இருந்து வந்தவன். எனவே, அந்த மக்களுக்கு உழைக்கும் உணர்வை பெற்றுள்ளேன். அந்த உள்ளம் தான் உங்கள் வாழ்த்தை பொன்போல போற்றிப் பெறுகிறது. நீங்கள் காலால் இடும் கட்டளையை தலையால் செய்து முடிக்கும் தொண் டன் நான். முதல்வர் என்ற ஆணவமோ கர்வமோ எனக்கு துளியும் கிடையாது. உங்களின் உடன் பிறப்பாகவே என்றும் இருப்பேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமை வகித்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் நேரு, பொங்கலூர் பழனிச்சாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பனைமர தொழிலாளர் நல வாரியத் தலைவர் குமரிஅனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய ரேஷன் கார்டு விநியோகம் - முதல்வர் கருணாநிதி அதிரடி உத்தரவு


“கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று (30.10.2010) வெளியிட்ட அறிக்கை:
ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று (30.10.2010) ஆய்வுக் கூட்டம் நடந்தது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் அனைத்தும் தரமானதாக இருக்கிறதா என்பதை மேலதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கார்டுகள் தொடர்பாக மேல்முறையீடு செய்து, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.
அதுவரை விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்டுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். புதிய கார்டு கேட்டு வந்துள்ள மனுக்களை கூடுதல் பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்து, வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், சென்னை ரேஷன் கடைகளுக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு, மாநகராட்சி இடங்களில் தகுதியானதை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வழங்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் செய்யும்போது, 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்றும் முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் (கண்காணிப்பு) கா.அலாவுதீன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன் மைச் செயலாளர் சுவரண் சிங், உணவு வழங்கல் ஆணையர் பாலசந்திரன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுவைன் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவ சங்கங்கள், மண்ணெண்ணெயில் இயங்கக்கூடிய மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கு மானிய விலையில், மாதம் 200 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரி வந்தனர். ஆயத் தீர்வை, விற்பனை வரி, போக்குவரத்துக் கட்டணம் உட்பட ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் அடக்க விலை 43 ரூபாய் 94 காசு ஆகிறது. அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினைப் பொருட்படுத்தாது, மீனவர்களின் கோரிக்கையினை ஏற்று, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும் என்ற அடிப்படையில், மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, படகு ஒன்றுக்கு மாதம் 200 லிட்டர் வீதம் வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். இந்த ஆணையின் காரணமாக 16 ஆயிரம் நாட்டுப் படகு மீனவர்கள் பயனடைவார்கள். அரசுக்கு ஆண்டுக்கு 77 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் தேவர் குருபூஜை : துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி


முத்துராமலிங்கத்தேவரின் 103&வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி எம்எல்ஏ.


மதுரை வந்த அவரிடம் “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூடிய கூட்டத்தின் மூலம் தேர்தலில் திருப்புமுனை ஏற்படும் என பிரசாரம் செய்து வருகிறாரே? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

மதுரையில் ஜெயலலிதா பேசியது பொய் பித்தலாட்டமானது. தேர்தல் நெருங்குவதால், மக்களை ஏமாற்றும் நாடகத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கிறார். இதை நாங்கள் மட்டுமல்ல பொது மக்களும் கூர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவரது பொய் பிரசார நாடகம் மக்களிடம் எடுபடாது. இதற்கு தேர்தலில் மக்கள் நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
அவரது பொய் பிரசார நாடகத்திற்கு ஒரு உதாரணத்தை கூறுகிறேன். கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் தி.மு.க.வினருக்கு முன்னுரிமையுடன் ஒப்பந்தம் அளித்து இருப்பதாக பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவர் ஜெயலலிதா கூறியது வெட்ககேடானது அபாண்டமான இந்த குற்றச்சாட்டுக்கு மறு நாளே நான் பதில் கூறினேன்.
அதை நிரூபித்தால், நானே முழு பொறுப்பேற்பதாக தெரிவித்தேன். ஜெயலலிதாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவரது குற்றச்சாட்டுகள் எல்லாம் இப்படி அபாண்டமான பொய் பிரசாரமாகத்தான் தான் இருக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டா லின் கூறினார்.


பசும் பொன் கிராமத்தில் நேற்று (30.10.2010) நடந்த முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் னில் முத்துராமலிங்கத்தேவரின் 103வது ஜெயந்திவிழா மற்றும் 43வது குருபூஜை விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. 2ம் நாள் விழா வில் தேவர் நினைவிடம் அருகே ஆயிரக்கணக்கானோர் மொட்டை போட் டனர்.
மூன்றாவது நாளான நேற்று (30.10.2010) குருபூஜையும், ஜெயந்தி விழாவும் நடந்தது. மகாஅபிஷேகத்துடன் விழா துவங்கியது. காலை நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நட ரா ஜன் தலைமையில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
திமுக சார்பில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை 9.50 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், சுப.தங்கவேலன், தமிழரசி மற்றும் ரித்தீஸ் எம்பி, எம்எல்ஏ முருகவேல், மதுரை மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தேனி மூக்கையா, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

சாயல்குடி திமுக சார்பில் பசும்பொன் கிராமத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய செயலர் சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் நகர் செயலர் பால்காளை, விவசாய தொழிலாளர் அணி முத்துராமலிங்கம், கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒன்றிய செயலர் தமிழ்செழியன், ஒன்றிய அவைத்தலைவர் சீனி பாண்டியன், துணை செயலர்கள் செந்தூர்காந்தன், முனியசாமி, தொண்டரணி தர்மலிங்கம், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், இலக்கிய அணி முருகேசன், சாயல்குடி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதில் மாவட்ட பிரதிநிதி அப்துல்சுக்கூர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபாலன், ஊராட்சி தலைவர்கள் பாலகிருஷ்ணன் (எஸ்.வாகைக்குளம்), ராஜாங்கத்தேவர் (மாரியூர்), பாலகிருஷ்ணன் (உச்சிநத்தம்), அமானுல்லாகனி (அவத்தாண்டை), ஜெயபாலன் (கொத்தங்குளம்), ராமலட்சுமி லிங்கராஜ் (செஞ்சடைநாதபுரம்), வஹிதாசகுபர் (வாலிநோக்கம்), முனியசாமி (டி.எம்.கோட்டை), முத்துக்கானி தனுஷ்கோடி (டி.வேப்பங்குளம்), செந்தூர் பாண்டியன் (கொண்டுநல்லான்பட்டி), தட்சிணாமூர்த்தி (வீ.சேதுராஜபுரம்), மங்களேஸ்வரி மங்களசாமி (இதம்பாடல்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தேவர் குருபூஜையை முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன்னில் நடந்த அன்னதானத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். உடன் அமைச்சர் சுப.தங்கவேலன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தேர்தல் வரும் போதெல்லாம் இங்கு வருவதுபோல் அல்லாமல், நாங்கள் தேவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆண்டுதோறும் செலுத்தி வருகிறோம்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 6வது முறையாக மீண்டும் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய தொழிற்சாலைகள் அமைக்க பல்வேறு சலுகைகள் அளித்து வருகிறோம் என ஸ்டாலின் கூறினார்.

Saturday, October 30, 2010

முதல்வர் கருணாநிதியை ஜி.விஸ்வநாதன் சந்தித்து பேசினார்


தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று (29.10.2010) வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் சந்தித்து பேசினார்

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கலைஞர் கடிதம்


கத்தார் நாட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.


இது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி ஆகியோருக்கு, முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,


தமிழகத்தை சேர்ந்த 43 மீனவர்கள், மீன்பிடித் தொழிலுக்காக சவுதி அரேபியா மற்றும் பக்ரைன் நாடுகளுக்காக சென்றுள்ளார்கள். அவர்கள், கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது, தங்களை அறியாமல், கத்தார் நாட்டு கடல் எல்லைப்பகுதிக்குள் சென்று விட்டார்கள். அந்த 43 மீனவர்களையும், கத்தார் நாட்டு அரசாங்கம், கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.


இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு அவர்களை விடுவிப்பது தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழக மீனவர்கள் சிறைப்பட்டிருப்பது பற்றி, கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் வாடும் தமிழக மீனவர்களுக்கு சட்டரீதியாக உதவி அளித்து, மனிதாபிமான அடிப்படையில் அந்த அப்பாவி மீனவர்களை விடுவிப்பதற்காக கத்தார் நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்

Friday, October 29, 2010

கலைஞருடன் கமல் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக முதல்வரை இன்று (29.10.2010) அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

கலைஞருடன் அப்துல்ரகுமான் - சோலை சந்திப்பு

தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று (29.10.2010) அவரது கோபாலபுரம் இல்லத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல்ரகுமான் மற்றும் எழுத்தாளர் சோலை ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள்.

கலைஞர் -இயக்குநர் சேரன் சந்திப்பு

இயக்குநர் சேரன் இன்று (29.10.2010) தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கெம் 2010 கண்காட்சி மற்றும் மாநாடு : மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பெற்றுக் கொண்டார்


மும்பையில் நேற்று (28.10.2010) இந்தியா கெம் 2010 கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பெற்றுக் கொண்டார் . அருகில் மகாராஷ்டிரா ஆளுநர் கே.சங்கரநாராயணன்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச் சர் மு.க.அழகிரி வர வேற்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய ரசாயனத் துறை யில் வெளிநாட்டு நிறு வனங்களின் முத லீட்டை அதிக அளவில் கவர இதுபோன்ற மாநாடுகள் வாப்பளிப் பதாக தெரிவித்தார்.

சமுதாய முன்னேற் றத்தில் ரசாயனத்துறை முக்கிய பங்காற்றுவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டிருப்பதாக அவர், கடந்த ஆண்டு களில் ரசாயனத்தை துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண் டுள்ளதாக தெரிவித்தார். சிறு மற்றும் குறு ரசா யன நிறுவனங்கள் மேம் பாட்டுக்காக தொழில் வளர்ச்சி நிதியம் உரு வாக்குவது குறித்து ரசாய னத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ரசாய னத்துறையை மேம் படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் மகாராஷ் டிர ஆளுநர் சங்கர நாராயணன், ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் சிறீகாந்த்குமார் ஜேனா மற்றும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.

எத்தனை சக்திகள் ஒன்று திரண்டாலும் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது - முதல்வர் கருணாநிதி பேச்சுதென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று (28.10.2010) நடந்தது.
ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து நேற்று (28.10.2010) தென் சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கலைஞர் அரங்கில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், பரிதிஇளம்வழுதி மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, வசந்தி ஸ்டான்லி, ஜின்னா, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் சற்குணபாண்டியன், ரகுமான்கான், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், சைதை கிட்டு, பெ.வீ.கல்யாணசுந்தரம், கு.க.செல்வம் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இந்த கூட்டம் எப்படி வாக்குகளைப் பெறுவது என்பதற்கு மாத்திரம் கூட்டப்பட்ட கூட்ட அல்ல. கட்சியை கடந்த காலத்திலே எப்படி வளர்த்தோம்; இப்போது எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் கூட்டப்பட்ட கூட்டம். வாக்குகள் மட்டும் முக்கியமல்ல, தேர்தல் வெற்றி மாத்திரம் குறிக்கோள் அல்ல. தி.மு.க. ஒரு சுய மரியாதை இயக்கம். நீதிக் கட்சியினுடைய இயக்கம். பெரியார், அண்ணா தலைமையில் சமூக நீதிக்காக இன்றளவும் போராடுகிற மனப்பக்குவத்தைப் பெற்றுள்ள நாம் தேர்தலுக்காக மாத்திரம் இங்கே கூடிப் பேசுகிறோம் என்று எண்ணினால் கொள் கைகளை, லட்சியங்களை மறந்து விட்டோம் என்றுதான் பொருள்.
இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற எல்லாவிதமான சவால்களையும் சமாளிக்கக்கூடிய திறன் திமுகவுக்கு இருக்கிறது. நிச்சயமாக இந்தத் தேர்தலில் எத்தனை சக்திகள் ஒன்று திரண்டு வந்தாலும், எத்தனை பேர் அணிவகுத்து நின்றாலும், தி.மு.க.வை வீழ்த்த முடியாது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் அத்தகைய ஒரு சறுக்கல் ஏற்படுமானால்; கடந்த காலத்திலே தமிழ் மக்களுக்காக, திராவிட மக்களுக்காக ஆற்றிய, ஆற்றி வருகிற சாதனைகள் வீண் தானா? என்று கேட்டு வருந்த நேரிடும்.
இவ்வளவு செய்தும் மக்கள் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லையே என்று எண்ணினால், அந்த மக்களுக்குத் தொடர்ந்து நாம் ஆற்ற வேண்டிய காரியங்களை ஆற்றாமல் இருந்து விடுவோமா? என்னுடைய ஆசையெல்லாம் மக்களுக்குத் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதுதான். அவர்களுக்குத் தேவையான காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதுதான். என்ன தொய்வு ஏற்பட்டாலும், கவலைப்படாமல் மக்களுக்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். அந்த ஒரு லட்சியத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு தி.மு.க. தோழனும், உடன்பிறப்பும் என் மதிப்பிற்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள்.
அந்த வகையில் நீங்கள் எப்படிப் பணியாற்றப் போகிறீர்கள்? எப்படிக் குரல் கொடுத்திருக்கிறீர்கள்? என்பதை அறிந்து கொள்ளவும் யோசனைகளைச் சொல்லவும் தான் இந்த கூட்டம். என்னதான் நீங்கள் இங்கே உறுதி எடுத்துக் கொண்டாலும், வெற்றி பெற்றே தீருவோம் என்று சொன்னாலும், உங்களிடத்திலே உள்ள ஒற்றுமை கெட்டிப்படவில்லை என்றால், அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாது.
தி.மு.க. வரலாற்றில் எத்தனையோ மேடு பள்ளங்கள். எத்தனையோ வீழ்ச்சிகள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது நான் ஒருவன்தான் தேர்தலிலே வெற்றி பெற முடிந்தது. மற்ற அனைத்து இடங்களில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்கள் தோற்றுப் போன நிலை.
அந்த வீழ்ச்சிக்குப் பிறகு இந்த கட்சி உருப்படுமா? மீண்டும் எழுமா? எழுந்து மக்கள் பணி ஆற்றுமா? தி.மு.க. என்ற பெயர் நிலைத்திருக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுந்த நேரத்தில், இன்றைக்கு உலகமே வியக்கத்தக்க அளவில் நாம் உயர்ந்து நிற்கிறோம். அதற்கு நீங்களும், உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும் தந்த அயராத உழைப்புதான் காரணம். அப்படிப்பட்ட உழைப்பை நீங்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறீர்கள்.
ஒருசில இடங்களிலே ஒற்றுமையின்மைக்கு காரணம், குழு மனப்பான்மைதான். எந்த வட்டத்திலாவது இரண்டு குழுக்கள் இருக்குமானால், அந்தக் குழுக்கள் எல்லாம் முன்னேற்றத்தை அழிக்கிற புழுக்கள். குழு மனப்பான்மையை அகற்றினால்தான், ஒற்றுமையை நிலை நாட்டினால்தான் தேர்தலில் மாத்திரமல்ல, திமுக ஒரு கொள்கைக் கூடாரம் என்பதை எடுத்துக்காட்ட முடியும்.
குழு மனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லோரும் ஒன்று, எல்லோரும் தி.மு.க, எல்லோரும் அண்ணாவின் தம்பிகள், எல்லோரும் இந்தக் கூடாரத்திலே உள்ளவர்கள்தான் என்ற உணர்வோடு செயல்பட்டால் தான், ஜெயலலிதா அல்ல; ஜெயலலிதாவோடு 100 பேர் திரண்டு வந்தாலும், தி.மு.க.வை யாராலும் வெற்றி பெற முடியாது. வீழ்த்த முடியாது.
ஆகவே, இந்த இயக்கத்தில் குழுக்களே இல்லை, கோஷ்டிகளே கிடையாது என்ற நிலைதான் உயர்ந்த நிலை. அநேகமாக கோஷ்டிகள் இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் கிடையாது. நாம் மாத்திரம் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நாம் கோஷ்டிகள் இல்லாத காரணத்தினால்தான், இன்றைக்கு கூட்டணியினுடைய பிரதான கட்சியாக இருக்க முடிகிறது. இன்றைக்கு ஆளுங்கட்சியாக விளங்க முடிகிறது. ஆகவே, கோஷ்டிகள் இல்லாத நிலையை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.
அண்ணாவிற்குப் பிறகு நான் முதலமைச்சராக இருந்தேன். அப்போது மாநகராட்சி மன்றத்தைப் பற்றிய புகார்கள் எழுந்து, அதற்காக ஒரு கமிட்டி போடப்பட்டது. சட்டசபையிலே ஹண்டே பேசுகிறார். அவர் ஊழல்களை அடுக்கடுக்காகச் சொன்னபோது, முதலமைச்சராக உட்கார்ந்திருந்த நான் எழுந்து, “நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான், நான் மறுக்கவில்லை. சென்னை மாநகராட்சி மன்றத்தில் இத்தகைய ஊழல் நடைபெற்றதை ஒத்துக் கொள்கிறேன். யார் காரணம் என்பதை அறிய இப்போதே விசாரணைக்கு உத்தரவிடப் போகிறேன். விசாரணைக் கமிஷனுக்கு உத்தரவிடுவதை முன்னிட்டு, மாநகராட்சி மன்றத்தை இதே நிமிடத்திலே கலைக்கிறேன்” என்று சொல்லி கலைத்த வரலாறு உங்களுக்குத் தெரியும். அப்படிக் கலைக்கப்பட்ட மாநகராட்சி மன்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல, ஜாம்பவான்கள். மாநகராட்சி மன்றத்தை ஒருவிரலால் ஆட்டி வைக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்றவர்கள்.
நிர்வாகத்தில் புலிகளாக, சிங்கங்களாக இருந்தவர்கள். அவர்களை விட்டால் மாநகராட்சி மன்றத்தை நிர்வகிக்க ஆள் இல்லை என்று சொல்கிற அளவிற்கு இருந்தவர்கள். என்னுடைய ஆருயிர் நண்பராக இருந்த மைனர் மோசஸ் போன்றவர்களை எல்லாம் ஒரே நாளில் மாநகராட்சி மன்றத்தைக் கலைத்ததன் மூலமாக வீட்டிற்கு அனுப்பி, அதன் மூலமாக கட்சிக்கு நான் சம்பாதித்து கொடுத்த மதிப்பு, மரியாதை தான் அடுத்த தேர்தலிலே தி.மு.க. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தது. இந்தப் பழைய வரலாற்றை, வரலாறு தரும் பாடத்தை உணர்ந்து கொண்டால், கட்சிக்கு, வருகிற சட்டமன்றத் தேர்தலிலே வெற்றி நிச்சயம்.
சென்னையில் நடைபெறுகிற தி.மு.க. கூட்டங்கள் என்று இல்லாமல், திமுக சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவானாலும், அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் செல்ல வேண்டும். ஒரு மாவட்டச் செயலாளர் என்றால், அடிக்கடி தலைமைக் கழகத்திற்கு வரவும், தலைவரோடு கலந்து பேசவும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீல நாராயணன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பணியாற்றியபோதும் சரி, எப்போதும் அவர்கள் தலைமைக் கழகத்திற்கு வருவார்கள் எங்களோடு பேசுவார்கள். எங்களோடு கலந்து செயலாற்றுவார்கள்.
அதேபோல் தலைமைக் கழகத்தோடு நாள்தோறும் தொடர்பு கொண்டு பணிகளை ஆற்றிட வேண்டும். நான் சொன்ன வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடந்து கட்சியை காப்பாற்றுங்கள். தேர்தல் வரட்டும், போகட்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட சட்டப்படி அணுகுவோம் - முதல்வர் கருணாநிதி


காவிரி பிரச்னையில் கர்நாடக அரசின் முடிவை சட்டப்படி அணுகுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடக அரசு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஆண்டு இதுவரை 83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே காவிரி நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. மீதமுள்ள தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குமாறு முதல்வர் கருணாநிதி வலியுறுத்தி வந்தார். கர்நாடக அரசுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வழங்க இயலாது என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நேற்று (28.10.2010) நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் அளித்த பேட்டி:
கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்களே?
பத்திரிகைகளிலே வரும் செய்திகளை வைத்துக் கொண்டு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகைகளிலே வரும் செய்திகளினால், நான் சொல்கிற பதில்களினால் இரண்டு மாநிலங் களுக்கும் இடையிலே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு நான் இடம் தர விரும்பவில்லை. சட்டப்படி நமக்கு வந்து சேர வேண்டிய தண்ணீருக்காக தொடர்ந்து நாம் வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.
கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்திருக்கிறது. அதில் தமிழகத்திற்குத் தண்ணீர் தரக்கூடாது; அணை நிரம்பியதற்குப் பிறகுதான் தண்ணீர் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே?
நீங்கள் சொல்கிற செய்திகளையெல்லாம் நான் பத்திரிகைகளிலே பார்க்கவில்லை; பார்த்த பிறகு சொல்கிறேன்.
இது தொடர்பாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதுவீர்களா?
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவே இது குறித்து சொல்லியிருக்கிறோம். அதனால் கடிதம் எழுதத் தேவையில்லை. அவருக்குத் தெரியும். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இருக்கிறது. அது குறித்து சட்டப்படி நாங்கள் அணுகுவோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Thursday, October 28, 2010

அமைச்சர் பூங்கோதைக்கு கலைஞர் வாழ்த்துமுதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று (28.10.2010) தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பிறந்த நாளை முன்னிட்டு சந்தித்தார்.

அப்போது அமைச்சர் பூங்கோதைக்கு முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.


இதேபோல் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுகவினர் பலர் அமைச்சர் பூங்கோதையை நேரில் சந்தித்தும், போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்து தெரிவித்தனர்.கலைஞருடன் என்எல்சி தொழிற்சங்கத்தினர் சந்திப்புமுதல்வர் கருணாநிதியின் கோரிக்கையினை ஏற்று, நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துடன், நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (28.10.2010) முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


இந்நிகழ்வின்போது, தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் செ. குப்புசாமி, பாட்டாளி தொழிற் சங்கத்தின் சார்பில் எல்.எல்.ஏ. தி. வேல்முருகன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேகர், ஐ.என்.டி.யு.சி. சார்பில் ஏ. ஜானகிராமன் எல்.எல்.எப். சார்பில் கே. குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்


திமுகவினர் யாரையும் இழித்து பழித்து பேசும் இழிகுணம் கொண்டவர்கள் அல்ல -


லயோலா கல்லூரியும், பிரான்ஸ் நாட் டில் உள்ள ஈகாம் கல்வி நிறுவனமும் இணைந்து சென் னையில் லயோலா ஈகாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியை தொடங்கியுள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று (27.10.2010) மாலை நடந்தது.
விழாவுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். முன்னதாக அவர் கல்வெட்டை திறந்து வைத் தார். பின்னர் அவர் பேசியதாவது:
வாடிகன் நகரத்தில் போப் ஆண்டவர் சன்னிதானத்தில் காணும் உணர்வு லயோலா கல்லூரியில் நுழையும் போது ஏற்படுகிறது. அறிவார்ந்த அன்புள்ள இடமாக இதை கருதுகிறேன். அவர்களின் நடவடிக்கை, அமைதி, அன்பு, அருட்செல்வத்தால் இந்த கல்லூரி அந்த புகழை எய்துகிறது. அந்த கல்லூரி சார்பாக பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈகாம் கல்வி நிறுவனம் கடந்த 100 ஆண்டுகளாக பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பொறியியல் கல்வியை வழங்கி வல்லுனர்களை உருவாக்கி வருகிறது. அதேபோல 200 ஆண்டுகளாக லயோலா கல்லூரி கலை அறிவியல் கல்வியை வழங்கி தலைசிறந்த மாணவர் களை உருவாக்கி வருகிறது.
இந்த கல்லூரியில் 30சதவீத மாணவர்கள் தாழ்த்தப்பட்ட, ஏழை சிறுபான்மை மாணவர்கள் என்பது போற்றத்தக்கது. தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு இந்த நிறுவனம் ஆற்றி வரும் தொண்டை போற்றுகிறேன். தமிழக அரசு எந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு துணை புரிந்து வருவதை இங்கே கூறினார்கள். என வேதான் எங்கள் ஆட்சிக்கு ‘சிறுபான்மை ஆட்சி’ என்று ஒரு பட்டம் கூட உண்டு. அதை நான் பெருமையாக கருதுகிறேன். மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் அரசு இது என்று நான் கூறுவேன். இந்த அரசை மாற்ற வேண்டும் என்று எண்ணுகிற, மாற்றியே தீருவோம் என்று சபதமிட்டு இருப்பவர்களுக்கு மத்தியில் நான் கூறுவது என்னவென்றால், இந்த ஆட்சி மாறினாலும், மாற்றினாலும், சபதம் நிறைவேறினாலும் ஒன்றை மாற்ற முடியாது.
இந்த அரசு ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்சியை மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றாலும் பெற முடியாமல் போனாலும் நாங்கள் என்றும் உங்களோடு இருப்பவர்கள். உங்களுக்காக பணிபுரிபவர்கள். அதற்கு அரசு என்ற அங்கீகாரம் தேவையில்லை. நாங்கள் அந்த உணர்வில் உங்களுக்காக இருப்பவர்கள்.
எங்களை வீழ்த்த முயலுபவர்கள் நாங்கள் சிறுபான்மை மக்களுக்காக பாடுபடுகிறோம் என்றால் அவர்களின் ஆதரவை இழக்க நேரிடும். எனவே எங்களுக்கு மத நல்லிணக்கம், மத வேறுபாடு களைந்த மனிதநேயம் தேவை என்று அதற்காக பாடுபடுவர்கள் நாங்கள். ஸ்ரீரங்கத்தில கட்டிய கோயில் என்றாலும் அயோத்தியில் ராமர் ஆலயம் என்றாலும் இடிக்கப்பட்ட பாபர் மசூதி என்றாலும் சரித்திரத்தில் மாற்ற முடியாத ஒன்று. எங்கள் ஆட்சி மாநில தேவைகள், உரிமைகள், மக்கள் நன்மை, முன்னேற்றம் ஆகியவற்றுக்காக எங்கள் கட்சி பெரியாரால் தொடங்கப்பட்டு அண்ணாவால் வழிநடத்தப்பட்டு எங்களால் பின்பற்றப்பட்டு உங்களால் ஆதரிக்கப்படும் இயக்கம்.
நாங்கள் கட்டிக் காத்து வரும் பண் பாட்டை புண்படுத்த முடி யாது. எங்களின் விரோதிகள் அறிவாளிகள் என்றால், எங்களின் பகைவர்கள் அறிஞர்கள் என்றால் தலைவணங்குபவர்கள் நாங்கள்.
எங்களின் எதிரிகள் தியாகி என்றால் மதிப்பவர்கள் நாங்கள். இன்று நான் பழைய கவிதைகளை புரட்டிக் கொண்டிருந்தேன். நேரு மறைந்த போது நான் எழுதிய கவிதையை படித்தேன். நேரு குடும்பத்திற்கும் இந்த இயக்கத்துக்கும் பகை இருப்பது போல சில புல்லுருவிகள் கதை கட்டி விடுகிறார்கள். நேரு அல்லது இந்திராகாந்தி குடும்பத்தாருடன் எங்களுக்கு அரசியல் ரீதியாக வேறுபாடு இருக்கலாம். ஆனால் யாரையும் இழித்து பழித்து பேசும் இழிகுணம் படைத்தவர்கள் அல்ல திமுகவினர். இன்றுள்ள சூழலுக்காக அல்ல 1970ல் நான் எழுதிய கவிதை இது. (கவிதையை படித்தார்) இன்று அந்த குடும்பத்துக்கும் எங்களுக்கும் இடையே பகையை மூட்டி அரசியலில் மீன்பிடிக்க சிலர் கருதினாலும் நாள் தோறும் அறிக்கை, கட்டுரை, விதண்டாவாதம் செய்தாலும் அந்த குடும்பத்தார் சோனியாகாந்தி உள்ளிட்ட அனைவரும் இந்த கவிதையை படித்துப் பார்த் தால் இன்றுள்ள நிலைக்காக அல்ல. அன்று நேருவை நாம் இழந்த போது என்ன உணர்வு பெற்றிருந்தோமோ அந்த உணர்வு இன்னும் நம் உள்ளத்தில் இருக்கிறது.
அந்த குடும்பத்துடன் அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகளை காட்டியதுண்டு. கருப்பு கொடி காட்டினாலும் கன்னியம் தவறியதில்லை. கன்னியம் தவறி, நன்முறை தவறி, வன்முறை தலைதூக்கும் என்று யாராவது கருதினால் அப்படி சிண்டு முடியும் யாரும் வெற்றி பெற முடியாது. நாம் பெறுகிற வெற்றி, தலித் மக்கள் சிறுபான்மை மக்கள் உங்களின் அன்பு, அறிவு பெறுகிற வெற்றியாகும். அப்படிப்பட்ட வெற்றியை பெற நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
விழாவுக்கு வந்தவர்களை கல்வி நிறுவன இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் வரவேற் றார். இயேசு சபை பனித்தல தலைவர் விக்டர் சேஷா, பிரான்ஸ் நாட்டு ஈகாம் கல்வி நிறுவன இயக்குனர் மார்க் ஜெனி யூட், துணை இயக்குனர் ஜோ அருண், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் மத்திய ஜவு ளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், தமிழக அமைச்சர் பொன்முடி ஆகியோர் பேசினார்கள்.
கட்டிட கலை நிபுணர்களுக்கு தயாநிதிமாறன் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். முடிவில் கல்லூரி முதல்வர் ஜோஸ் நன்றி கூறினார்.

கலைஞருடன் மா.கம்யூ. ரங்கராஜன் சந்திப்பு


சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில், 27.10.2010 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரங்கராஜன், சிஐடியு பொதுச்செயலாளர் சவுந்தராஜன் ஆகியோர் சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்பின் போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன்,


தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து, முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினோம். என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சனைகள் பற்றி பேசினோம். அதில் சுமூக தீர்வு எட்டப்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம்.


மேலும் தமிழகத்தில் தொழில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். பொதுவாகவே தமிழகத்தில் தொழில் அமைதியை ஏற்படுத்த தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சட்டத்தை அரசு உடனடியாக கொண்டு வரவேண்டும் என்பதை கேட்டுக்கொண்டோம். இவற்றையெல்லாம் பரிசீலிப்பதாக முதல்வர் கருணாநிதி உறுதி அளித்தார்

ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை: திமுக எம்.பி. ஹெலன்டேவிட்சன்


ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கையெழுத்திடவில்லை என்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெலன்டேவிட்சன் தெரிவித்தார்.


ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத் நாடு முழுவதும் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹெலன் டேவிட்சன் கையெழுத்திட்டதாக செய்தி வெளியானது.


இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் என அறிவித்துள்ளது.


இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹலன் டேவிட்சனும் கையெழுத்திட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ஹெலன் டேவிட்சனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக ஹெலன் டேவிட்சன் கூறியதாவது, மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கிறார்கள். அதுபோலவே ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில்தான் கையெழுத்திட்டிருந்தேன்.


ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நான் கையெழுத்திடவில்லை. திமுக தலைமைக் கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றுள்ளது. இதுகுறித்து புதன்கிழமை (அக்டோபர் 27) விரிவான விளக்கம் அனுப்பிஉள்ளேன் என்றார்.


ஜனவரிக்குள் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் - முதல்வர் கருணாநிதி


ஜனவரி மாதத்திற்குள் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 26.10.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
எனது இளமைக் காலத்தில் ஏழையெளிய பாட்டாளி மக்கள் சிறுசிறு குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்ததை பார்த்திருக்கிறேன். அதனால் எனது உள்ளத்தின் அடி ஆழத்தில் ஒருவகை பாதிப்பு ஏற்பட்டிருந்ததையும் உணர்ந்திருக்கிறேன்.
மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை, உறையுள் இன்றியமையாத அடிப்படைத் தேவைகளாகும். உணவு என்பது அன்றாடம் எழும் தேவையாகும். உடை என்பது ஆண்டு தோறும் எழும் தேவையாகும். உறைவிடம் என்பது நிரந்தரத் தேவையாகும். ஒருமுறை உறைவிடம் ஒன்றை உருவாக்கிவிட்டால், வாழ்நாள் முழுதும் அந்தத் தேவையை நிறைவு செய்வதோடு, வாழ்நாளுக்குப் பிறகும் மரபுரிமையினர்க்கு அந்தத் தேவையை நிறைவு செய்திடப் பயன்படுவதாகும்.
உறைவிடத்தைப் பற்றிய இந்த உண்மையும் அதிலும் குறிப்பாக ஏழையெளிய பாட்டாளி மக்கள், விவசாயக் கூலிகள் ஆகியோருக்கு பாதுகாப்பான உறைவிடம் என்பது எட்டாக் கனியாக இருந்துவரும் நிலையும், இளமைக் காலத்தில் எனது உள்ளத்திலே ஏற்பட்ட உணர்வுகளும், ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் என்னைச் சிந்திக்கத் தூண்டின.
அதன் விளைவாகத் தான் இலவசமாக கான்கிரீட் வீடுகள் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால், இதுவரை 68236 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு தரப்பட்டுள்ளன. குடிசைவாசிகள் மீது அ.தி.மு.க. ஆட்சி காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்துக்கும் எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், 20 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குடிசைவாசிகளுக்குக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் மொத்தம் 38 ஆயிரம் தான். இதை, திமுக ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.
சென்னை அடையாறு ஊரூர்ப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜெயப்பிரகாஷ் நாராயண், “காந்தியடிகள் கண்ட கனவினை முதல்வர் கருணாநிதி நனவாக்கியதை எண்ணிப் பரவசம் அடைகிறேன்” என்று புகழ்ந்துரைத்தார்.
ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு அடித்தளம் அமைக்கும் சீரிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் ஆதிதிராவிடர் இலவச வீட்டுவசதிக் கழகம் 1974ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்படி, ஓட்டு வீடுகளே கட்டப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு திமுக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கான்கிரீட் வீடுகள் கட்ட ஆணையிட்டது. இத்திட்டம் தான், இந்திரா வீட்டுவசதித் திட்டம் என மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை 7 லட்சத்து 85 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஜெயலலிதா அரசின் 10 ஆண்டு ஆட்சியில் 3 லட்சத்து 86 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன அதாவது திமுக அரசில் கட்டப்பட்டதில் பாதி அளவுக்குத்தான் ஜெயலலிதா ஆட்சியில் கட்டப்பட்டது.
மத்திய அரசில் உணவு அமைச்சராகத் திகழ்ந்த பாபு ஜகஜீவன்ராம், 1979ம் ஆண்டு ஜனவரியில் செங்கற்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் அரிஜன வீட்டுவசதிக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளைத் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, “மக்கள் நல அரசு என்ற வார்த்தைக்கு உண்மையான விசுவாசத்துடன் தமிழக அரசு பணியாற்றி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாடகை எதுவும் இல்லாமல் இலவசமாக இந்த வீடுகளை அரிஜனச் சகோதரர்களுக்கு வழங்குவது என்று முதலமைச்சர் கருணாநிதி முடிவு செய்திருப்பது, அவருடைய சீரிய மனப்பான்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு காட்டியுள்ள இந்தச் சிறந்த முன் உதாரணத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற முயலும் என்று நம்புவோமாக” என்று பாராட்டியது இன்றைக்கும் பழைய நாளேடுகளில் அப்படியே உள்ளன.
மீனவ சமுதாயத்தினருக்கு இலவச வீடுகள் கட்டித் தரவேண்டும் எனும் நோக்கில் 1975ம் ஆண்டு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் மீனவர் இலவச வீட்டுவசதித் திட்டம். இந்தத் திட்டம் தான் பின் 1996ல், மீனவர் சமுதாய மேதை, சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பெயரில் மாறியது.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 53 ஆயிரத்து 413 மீனவக் குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில், பாதிக்கு மேல், அதாவது 28 ஆயிரத்து 174 வீடுகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டவை. மேலும், 8,495 வீடுகள் தற்போது மீனவர் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கட்டப்பட்டு வருகின்றன.
இத்தகைய திட்டங்களின் தொடர்ச்சியாகவே, தற்போது கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்ற திட்டத்தைத் தமிழக அரசு உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிநாதமாக இருக்கும் குறிக்கோளே, குடிசைகள் இல்லாத கிராமங்கள் என்ற கனவை, நனவாக்குவது தான்.
21&1&2010ல் சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில், “இந்த அரசு மகத்தான சாதனைகள் புரிந்துள்ள போதிலும், மாநிலமெங்கும் ஏழை, எளியோர் மண் சுவர்களால் ஆன கூரை வீடுகளில் வசித்து வருவதால், இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளும் துயர்மிகு நிலை இன்னமும் தொடர்கிறது. மாநிலத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 21 லட்சம் என அறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் மட்டும் இக்குடிசைகளை நிரந்தர இல்லங்களாக மாற்ற இன்னும் 30 ஆண்டுகள் ஆகும். எனவே முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.
2010&2011ம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகாலத்தில் முடிக்கப்படும். வரும் நிதியாண்டில் மூன்று லட்சம் நிரந்தர வீடுகள் கட்டப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 75 ஆயிரம் வீதம் மானியமாக வழங்கிட அரசு முடிவு செய்தது.
தமிழகத்திலுள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும், ஒரே நேரத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வீடும் 207 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட்களான சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் குறைந்த விலையில் அரசே வழங்குகிறது.
வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.210 வீதம் 60 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது. ஒரு வீட்டிற்குத் தேவைப்படும் 155 கிலோ கம்பி, சராசரியாக கிலோ ரூ.36 என்ற விலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, வெளிச்சந்தையில் சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளின் விலை உயர்ந்தாலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள், சூளை உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, வெளிச்சந்தை விலையை விடக் குறைவான விலைக்கு செங்கற்கள் கிடைத்திடச் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணல் மற்றும் ஜல்லிக் கற்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் அல்லது வெளிச்சந்தை விலையை விடக் குறைத்துப் பெறுவதற்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய நடவடிக்கையினை எடுத்துள்ளார்கள்.
இவை தவிர, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நல நிறுவனத்தின் மூலம் செங்கற் சூளைகள் அமைப்பதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவியும், கட்டடத் தொழிலாளர்களுக்குப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மணல் மற்றும் ஜல்லிக் கற்களை அரசு நிர்ணயிக்கும் விலையில் அல்லது வெளிச் சந்தை விலையைவிடக் குறைத்துப் பெறுவதற்கும் தக்க நடவடிக்கையினை எடுத்து வருகிறார்கள்.
நாடெங்கும் வீடுகட்டும் பணிகள் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருசில இடங்களில் வீடுகட்டும் பணி நிறைவு பெற்றிருக்கிறது. 10&10&2010ல் திருவாரூர் செல்லும் வழியில், சிதம்பரத்திற்கு அருகே வல்லம்படுகை என்ற கிராமத்தில் கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீட்டையும், வீட்டுச் சொந்தக்காரரின் மகிழ்ச்சியையும் கண்டு மனமார வாழ்த்தினேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் முடிந்து திரும்பிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னிடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் புகைப்படங்களைக் காட்டி வரும் டிசம்பர் மாதத்திற்குள் இரண்டு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
2011, ஜனவரி மாதத்திற்குள் மூன்று லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, ஏழையெளியோர் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளுக்கு உரிமையாளர்கள் என்ற சமுதாய அந்தஸ்தினைப் பெறுவார்கள். கலைஞர் வீடுவழங்கும் திட்டம் கிராமப் புறங்களில் பெற்றுவரும் பெரும் வரவேற்பினைக் கண்டு ஒருசில நாளேடுகளும், ஒருசில எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தில் ஏதாவது குறைகாண முடியாதா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

என்எல்சி ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது - சுமுக தீர்வு ஏற்பட தொழிற்சங்கத்தினரிடம் முதல்வர் கருணாநிதி உறுதி


கடந்த 38 நாட்களாக நீடித்துக்கொண்டிருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது. சுமுக தீர்வு ஏற்பட தொழிற்சங்கத்தினரிடம் முதல்வர் கருணாநிதி உறுதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று நெய்வேலி தொழிலாளர்கள் 27.10.2010அன்று நடத்துவதாக இருந்த முற்றுகை போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 27.10.2010 அன்று நடக்கும் பேச்சுக்கு பின், போராட்டம் வாபஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள், பேராட்டத்திற்கு சுமுக தீர்வு காணக் கோரி முதல்வர் கருணாநிதியை 26.10.2010 அன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.
செ. குப்புசாமி, மு.சண்முகம் (தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்), வேல்முருகன், எம்.எல்.ஏ., பெருமாள் (பாட்டாளி தொழிற்சங்கம்), அன்பழகன், (ஒப்பந்தத் தொழிற்சங்கம்), சேகர், குப்புசாமி (ஏ.ஐ.டி.யு.சி.), சுகுமாரன், குப்புசாமி (சி.ஐ.டி.யு.) ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் கருணாநிதி பேசும் போது, ‘‘ஏற்கனவே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர்களுக்குக் கூடுதலாக நாளொன்றுக்கு ஸி40 ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சலவைப்படி மாதம் ஸி10லிருந்து ஸி25 ஆக உயர்வு, 8.33% போனசுடன் ஸி500 சிறப்புத் தொகை, ஸி300 மழைக் கோட்டுக்காக சிறப்புப் படி, நெய்வேலி வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், 31&10&2010க்குள் முதல்கட்டமாக 4,200 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
தொழிற்சங்க தலைவர்கள் கூறும்போது, ‘‘முன்பு உயர்த்தி அளிக்கப்பட்டுள்ள தினசரி ஊதியம் மேலும் உயர்த்தப்பட வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும்” என்றனர். முதல்வர் கருணாநிதி, இது தொடர்பாக மத்திய அரசுடன் கலந்து பேசி, நல்லதொரு தீர்வு காண விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு, உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் மாலதி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தொ.மு.ச. பேரவை தலைவர் செ.குப்புசாமி, பொது செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது:
ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி 68 சதவீதம் பேர் பணிக்கு திரும்பி விட்டனர். இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காணுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். இதில் தனிக் கவனம் செலுத்தி மத்திய அரசுடன் பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும் அதற்கு ஏற்றார் போல வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்வர் உறுதி அளித்ததன் அடிப்படையில் நாங்கள் அனைத்துக் கட்சி தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்களுடன் பேசி 26.10.2010 அன்று மாலையில் முடிவை அறிவிப்போம்.’என்றார். சென்னையில் 27.10.2010 அன்று காலை 10 மணிக்கு நெய்வேலி இல்லத்தில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொள்கிறார்கள். இதில் சுமுக முடிவு ஏற்படும் என்றும், இதைத்தொடர்ந்த, போராட்டம் வாபஸ் பெறுவது அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

முதல்வர் கருணாநிதியை காயிதே மில்லத் பேரன் எம்.ஜி.தாவூத் மியாகான் சந்தித்துப் பேசினார்


முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில், காயிதே மில்லத் பேரன் எம்.ஜி.தாவூத் மியாகான் 25.10.2010 அன்று சந்தித்துப் பேசினார். உடன் திருச்சி பி.முகமது இஸ்மாயில், கோவை ஜெ.முகமது ரபி, ஆடிட்டர் ஏ.முகமது இஸ்மாயில், வேலூர் ஜி.எஸ்.இக்பால் மற்றும் ஏ.ஜி.செய்யது மொய்தீன் ஆகியோர் உள்ளனர்

முல்லை பெரியாறு அணை பிரச்சினை : முதல்வர் கலைஞரிடம் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் விளக்கம்


தமி ழக- கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தொடர்பாக, தமிழ்நாட்டுக்கும், கேர ளாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச் சினை இருந்து வருகிறது. முல்லை பெரியாறு அணை பலம் இழந்து விட்டதாகக் கூறி அதன் அருகில் புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்து அதற்கான ஆய்வு களையும் நடத்தியது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஏற்கெனவே உள்ள அணை நன்றாக இருப்ப தால், புதிய அணை தேவை இல்லை என்று தமிழகம் சார்பில் ஆதா ரங்களுடன் வலியுறுத் தப்பட்டு வருகிறது. மேலும், தற்போதுள்ள அணையில் 147 அடி வரையில் தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண் டும் என்றும் தமிழக அரசு கோரி வருகிறது. அதற்கு கேரளா ஒப் புக்கொள்ளவில்லை.

முல்லை பெரியாறு பிரச் சினை தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத் தில் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சினையில் விசாரணை நடத்துவதற் காக, 5 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு உயர் நிலைக்குழுவை, உச்ச நீதி மன்றம் நியமித்தது. இந் தக் குழுவுக்கு, உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைவராக உள்ளார்.

தமிழகத்தின் சார் பில், உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளா சார்பில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் மற்றும் மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன் னாள் பொறியாளர் சி.கே. தட் ஆகியோர் உறுப்பினர்களாகவும், உறுப்பினர் செயலா ளராக சி.கே.மேத்தாவும் நியமிக்கப்பட்டார்கள்.

அணையை நேரில் ஆய்வு

இந்தக் குழு, தமிழகம் மற்றும் கேரளா தரப்பு கருத்துகளை கேட்ட றிந்து, 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இந்த குழுவி னர், வரும் டிசம்பர் மாதத்தில், முல்லை பெரி யாறு அணையை நேரில் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த நிலையில், முத லமைச்சர் கலைஞரை, முல்லை பெரியாறு அணை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட குழு வின் உறுப்பினரான, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சும ணன் 25.10.2010 அன்று சந்தித்துப் பேசினார். முதலமைச்ச ரிடம் அவர், முல்லை- பெரியாறு அணையை பார்வையிட செல்வது தொடர்பாக விவரங் களை விளக்கமாக எடுத் துக் கூறினார்.

நீதியரசர் விளக்கம்

இதுபற்றி கேட்ட போது, நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் கூறியதா வது:- முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர் பாக அமைக்கப்பட்டுள்ள குழு, வரும் டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முல்லை பெரி யாறு அணையை பார் வையிடுகிறது. இந்தக் குழுவில் இடம்பெற் றுள்ள நான் உள்ளிட்ட குழுவினர், மதுரையில் இருந்து புறப்பட்டு, தேனி, குமுளி வழியாகச் சென்று, தமிழகத்தில் உள்ள முல்லை பெரி யாறு அணைப் பகுதியை பார்வையிடுகிறோம். அதன்பிறகு, தேக்கடி சென்று கேரள பகுதியில் உள்ள முல்லை- பெரி யாறு அணைப்பகுதியை ஆய்வு செய்யவுள்ளோம். இந்தப் பயணம் சாலை வழியாக இருக்கும். எங் களது பயண விவரத்தை பற்றி முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து விளக் கம் அளித்திருக்கிறேன்.

இதுபோல், ரஷிய நாட்டில் நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தை அறிந்து கொள்வதற் காக, அங்கு சென்று வந் தேன். அப்போது, மாஸ்கோ பல்கலைக்கழ கத்தில், தமிழ் பிரிவு செயல்படுவதையும், அதில் 20 மாணவர்கள் தமிழ் கற்பதையும் அறிய முடிந்தது. அவர்களுக்கு, அலெக்சாண்டர் என்ற பேராசிரியர் தமிழ் பயிற்றுவித்து வருகிறார். சமீபத்தில் நடை பெற்ற கோவை மாநாட் டில், தொல்காப்பியம் பற்றிய ஆய்வுக்கட்டு ரையை அலெக்சாண் டர் சமர்ப்பித்துள்ளார். அவர், ரஷியாவில் தமி ழைப் பயிற்றுவிப்பதற் காக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியரை 2 ஆண்டு காலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுபற்றியும் முதல மைச்சரிடம் கூறினேன். அவர், தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்பதற் கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள் ளார். இவ்வாறு நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறினார்.

உலகதமிழ் செம்மொழி தொல்காப்பியர் பேரவை உறுப்பினர்கள் நியமனம்


தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அரசாணை:
தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம், ‘உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை‘ என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது. பேரவை 14 உறுப்பினர்களை கொண்டதாகும். பேரவையின் தலைவராக முதல்வரும், பேரவையின் கவுரவ செயலராக முனைவர் ராஜேந்திரனும்(தமிழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர்) செயல்படுவர். உறுப்பினர்கள் விவரம்:
தமிழ்நாட்டு தமிழறிஞர்கள் வகைப்பாட்டில்:
முனைவர் பொன் கோதண்டராமன்(பொற்கோ), முனைவர் ராம.பெரியகருப்பன்(தமிழண்ணல்).
பிறமாநில தமிழறிஞர்கள் வகைப்பாட்டில்:
முனைவர் கி.நாச்சிமுத்து(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி), முனைவர் குளோரியா சுந்தரமதி(திருவனந்தபுரம்).
தமிழாய்வு நிறுவனங்கள் வகைப்பாட்டில்:
தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை அரசு செயலர், முனைவர் ழான்&லா செவிலார்டு பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வு பள்ளி(புதுச்சேரி)
வெளிநாட்டு தமிழறிஞர்கள் வகைப்பாட்டில்:
முனைவர் ஜார்ஜ் ஹார்ட்(கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்கா),முனைவர் உல்ரிக்நிக்லாஸ் (ஜெர்மனி).
திராவிடவியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் தமிழரல்லாத வெளிநாட்டவர் வகைப்பாட்டில்: முனைவர் அஸ்கோ பர்ப்போலா(பின்லாந்து).
இந்திய தமிழ்ச்சங்க வகைப்பாட்டில்:
புலவர் பி.விருதாச்சலம், தமிழறிஞர், கரந்தை தமிழ்ச்சங்கம்.
வெளிநாட்டு தமிழ்ச்சங்க அமைப்பு வகைப்பாட்டில்:
முனைவர் தசரதன், தலைவர் பாரிசு தமிழ்ச்சங்கம்.
பேரவையின் இயக்குநர்:
முனைவர் மு.ராமசாமி, பேராசிரியர் நாடகத்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
சிறப்பு உறுப்பினர்கள்:
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், பேராசிரியர் க.நெடுஞ்செழியன்.
நிர்வாகக்குழு 7 உறுப்பினர்களை கொண்டதாகும். இதில் நிர்வாக குழு தலைவர் மு.ராஜேந்திரன் (தமிழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தர்), நிர்வாக குழு செயலர் மு.ராமசாமி தமிழ் பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியர், பேரவை உறுப்பினர்களின் சார்பில் முனைவர் பொன் கோதண்டராமன், அரசு செயலர் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் தமிழியற்புலம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் முனைவர் ஈசுவரப்பிள்ளை (பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை), செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், இயக்குநர் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்.
உலக தமிழ்ச்செம்மொழி தொல்காப்பியர் பேரவையின் அலுவலகம் தற்காலிகமாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.