கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 18, 2011

திமுக தலைவர் கிங் மேக்கர் விஜயகாந்த் டின் மேக்கர் - நடிகர் வடிவேலு பிரசாரம்


‘திமுக தலைவர் கருணாநிதி கிங் மேக்கர். விஜயகாந்த் டின் மேக்கர்’ என தஞ்சையில் நடிகர் வடிவேலு பேசினார்.
தஞ்சை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் உபயதுல்லாவை ஆதரித்து மாரியம்மன் கோயில் பஸ் நிறுத்தம் அருகே 09.04.2011 அன்று நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
எல்லா மக்களுக்கும் தேவைகள் உள்ளன. அவை அனைத்தையும் அறிந்து பூர்த்தி செய்து வருவது முதல்வர் கருணாநிதி அரசு தான். முதியவர்களுக்கு உதவித்தொகை, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஓட்டு உரிமை உள்ளவர்களுக்கு மட்டுமில்லை. கருவில் உள்ள சிசுக்களுக்கும் நலத்திட்டம் கொடுப்பவர் கருணாநிதி.
இப்போது கருப்பு எம்ஜிஆர், பச்சை எம்ஜிஆர் என பலர் கிளம்பி விட்டனர். அவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் கருணாநிதி கூறிய நலத்திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு வீடு தேடி வரும். காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்ட அந்த கூட்டணியின் நலத்திட்டங்கள், வரும் ஆனா வராது.
திமுக கூட்டணி பலமான கூட்டணி. எதிரணி கூட்டணியோ தண்ணீரும், எண்ணெய்யும் போல ஒட்டாத கூட்டணி. ஏழைகளின் பசியை போக்கியவர் முதல்வர். எதிரணியினருக்கு பசி, பட்டினி என்றால் என்னவென்று தெரியுமா. அதை அவர்கள் ஒருநாளாவது அனுபவித்தது உண்டா.
திமுக தலைவர் கருணாநிதி கிங் மேக்கர். விஜயகாந்த் டின் மேக்கர். திமுக தலைவர் சொந்த ஊரில் போட்டியிடுகிறார். அதேபோல் நீ உனது சொந்த ஊரான மதுரையில் போட்டியிட வேண்டியது தானே.
இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.

No comments:

Post a Comment