கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் 2.35 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக கூட் டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 09.04.2011 அன்று பிரசாரம் செய்தார். திருவண்ணாமலை காந்திசிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தலுக்காக மட்டும் அல்ல, எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் நாங்கள் உங்களோடு இருக்கிறவர்கள். இந்த தேர்தலில் எதிரணியினர் அமைத்துள்ளது அணி அல்ல, பிணி, சனி. கடந்த 5 ஆண்டுகளில் சாதனைகளை நிறைவேற்றிய தெம்போடு, தைரியத்தோடு, உரிமை யோடு ஆதரவு கேட்டு வந்திருக்கிறோம்.
எதிரணியில் உள்ளவர்கள் 2 முறை, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். மக்கள் மனதில் பதியக்கூடிய அளவில் ஒரேயொரு சாதனையையாவது அவர்களால் சொல்ல முடியுமா. அந்த அருகதை, ஆற்றல், தெம்பு, துணிவு இருந்தால் சொல்லட்டும். 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஒரு கிலோ ரூ.2க்கு தருவதாக சொன்னபோது, கேலி கிண்டல் செய்தவர் ஜெயலலிதா. சாத்தியப்படாது, சத்தியமாக முடியாது என்றார்.
ஆனால், முடியும் என்று சொன்னதோடு, ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் அதை நிறைவேற்றியவர் கருணாநிதி. தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்துகொண்டிருக்கிறார். ரூ.7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடியையும் முடியாது என்றார் ஜெயலலிதா. ஆனால், விவசாய கடனை தள்ளுபடி செய்தார் கருணாநிதி.
வாரத்துக்கு 5 முட்டை, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு இடஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை போன்றவற்றை வழங்கினார். இதைப்போல ஒன்றையாவது ஜெயலலிதாவால் சொல்ல முடியுமா. எனக்கே திருமணமாகவில்லை, எதற்கு திருமண உதவித்திட்டம் என்று நிறுத்தியவர் ஜெயலலிதா. இது குடும்ப ஆட்சிதான். ஒட்டுமொத்த தமிழ் குடும்பங்களின் ஆட்சி. கோடிக்கணக்கான குடும்பங்களை கருணாநிதி காப்பாற்றி வருவதால் இது குடும்ப ஆட்சிதான். கலைஞர் உயிர் காக்கும் திட்டத்தால் தமிழகத்தில் 2,70,265 பேர் பயன்பெற்றுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தால் 8 லட்சத்து 970 பேரை காப்பாற்றி இருக்கிறார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தால் 1.85 கோடி குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 21 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற உத்தரவிட்டு, 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் 57,530 ஆசிரியர்கள், 56,823 சத்துணவு பணியாளர்கள், 44,775 போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களுக்குக்காக ஒக்கேனக்கல் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, 70 சதவீதம் பணிகள் முடிந்திருக்கிறது.
2006ம் ஆண்டுக்கு பிறகு புதிய தொழிற்சாலைகள் தொடங்க 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 24 அரசாணைகள் மூலம் 51 தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. 62,349 கோடி முதலீடு வந்துள்ளது. 2,35,464 பேருக்கு நேரடியாக, மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இலவச கலர் டிவி 99 சதவீதம் வழங்கியுள்ளோம். தேர்தல் தேதி ஒருமாதம் முன்பாக அறிவித்ததால் ஒரு சதவீதம் பேருக்கு வழங்கமுடியவில்லை. அவர்களுக்கும் தேர்தல் முடிந்ததும் வழங்குவதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் 6வது முறையாக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடன் ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அதில் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மகப்பேறு விடுப்பு 4 மாதங்களாகவும், 58 வயதானவர்களுக்கு இலவச பஸ்பாஸ், அரசு அலுவலர்கள் குறை களை தீர்க்க நிரந்தர ஆணை யம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனை கள் தொடர, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள திட்டங்கள் நிறைவேற கருணாநிதி ஆட்சி தொடர வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment