கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 10, 2011

வீரபாண்டி ஆறுமுகத்தை திருச்சி சிறைக்கு மாற்றியதை எதிர்த்து மகன் வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை திருச்சி சிறைக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வீராபாண்டி ஆறுமுகம் மகன் ராஜா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சேலத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலையானார். பின் மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் கோவை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.
அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி விரும்பிய சிறைக்கு மாற்றுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எந்த மாவட்டத்தில் கைது செய்யப்படுகிறார்களோ, அந்த மாவட்ட சிறையில்தான் சட்டப்படி அடைக்க வேண்டும். அதன்படி வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் சிறையில்தான் அடைக்க வேண்டும். எனவே வீரபாண்டி ஆறுமுகத்தை திருச்சி சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் 08.08.2011 அன்று விசாரித்து, உள்துறை செயலாளர், போலீஸ் கமிஷனர், திருச்சி சிறை எஸ்.பி. ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விட மறுப்பு :
கொலை முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விடுவதற்கு ஐகோர்ட் மறுத்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழநாவலடிவிலையைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளார். இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸ் காவலில் விட அனுமதிக்க முடியாது எனக்கூறி அம்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ஓணம் பண்டிகை : கலைஞர் வாழ்த்து


ஓணம் பண்டிகையை முன்னிட்டு திமுக கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞரின் வாழ்த்து செய்தி பின்வருமாறு
கேரள மாநில மக்கள் தமது இனிய பண்பாட்டுத் திருநாளாகவும், அவர்களின் மிக முக்கியமான அறுவடை திருநாளாகவும் வண்ணமயமாக கலைமணம் கமழக் கொண்டாடுவது ஓணம் திருநாள்.
அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதையும், மனித சமுதாயத்திற்கு உணர்த்திடும் நன்னாளாகும். ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் மகிழ்கிறேன்.

பேரவையில் இருந்து 2வது நாளாக திருக்குறளை கேட்டுவிட்டு திமுகவினர் வெளிநடப்பு


சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 08.08.2011 அன்று 2வது நாளாக திருக்குறளை மட்டும் கேட்டு விட்டு, அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
சட்டப்பேரவை 08.08.2011 அன்று காலை 10 மணிக்கு கூடியது. பேரவை தலைவர் ஜெயக்குமார், திருக்குறள் ஒன்றை வாசித்து அதற்கு விளக்கம் சொன்னார். அதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அவையில் இருந்து வெளியேறினர்.
பேரவைக்கு வெளியே எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், �சட்டப்பேரவையில் எங்கள் குரல் ஒலிக்க வழியில்லை. அதனால் திருக்குறள் ஒலித்தது. அதை கேட்டோம். குறளின் பொருள் நன்றாக இருந்தது. அதனால், எங்கள் பணியை முடித்து விட்டு புறப்பட்டோம்” என்றார். 08.08.2011 அன்றும் திருக்குறளை மட்டும் கேட்டுவிட்டு, அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.

பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முப்பெரும் விழாவில் பரிசளிப்பு : கலைஞர் பரிசுகளை வழங்குகிறார்


முரசொலி அறக்கட்டளை 08.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன.
பள்ளிகளுக்கான போட்டிகளில் கோவையைச் சேர்ந்த ஏ.எம்.ஆல்வின் ஆண்டோ முதலிடம் பிடித்துள்ளார். கல்லூரிகளுக்கான போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்ட மாணவர் ந.மணியரசன் முதலிடம் பிடித்துள்ளார். மொத்தம் 10 மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட உள்ளது. வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கும் முப்பெரும் விழாவில், திமுக தலைவர் கருணாநிதி பரிசுகளை வழங்குகிறார், என்று கூறப்பட்டுள்ளது.

பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் - கலைஞர்


நெருக்கடி நிலைக்காக இந்திரா காந்தி வருத்தம் தெரிவித்ததுபோல, பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக தலைமைக் கழக துணை மேலாளர் ஜெயகுமார் மகன் கதிரவன்& காயத்ரி திருமணம், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 08.08.2011 அன்று காலையில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:
நெருக்கடி நிலைக்குக் காரணமான, இந்தியாவின் தலைசிறந்த தலைவியாக விளங்கிய இந்திரா காந்தியாலேயே திமுகவை வீழ்த்த முடியவில்லை. அவரே வருத்தம் தெரிவிக்கின்ற நிலைமைக்கு திராவிட மக்கள், தமிழ் மக்கள் திமுகவை அன்றைக்குத் தாங்கிப் பிடித்தார்கள் என்பதை வரலாறு உணரும். அந்த வரலாறு மீண்டும் திரும்புவதற்கு இன்றைக்கிருக்கின்ற ஆட்சியாளர்கள் வழி வகுப்பார்களேயானால், அதற்காக முன்கூட்டியே நன்றி கூறுவதற்கு தயாராக இருக்கிறோம்.
அண்ணா, தமிழக சட்டமன்றத்திலே ஜனநாயகம் எப்படி பூத்துக் குலுங்க வேண்டுமென்பதை பற்றி பல நேரங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைக்கு அந்த ஜனநாயகத்தை காண முடிகிறதா என்றால் இல்லை. ஜனநாயகம் தேடப்பட வேண்டிய ஒரு பொருளாக ஆகி விட்டது. அதனால்தான் திமுகவினர் நேற்றைக்கு கூட வெளியேறி விட்டார்கள்.
வெளியேறியவர்களை நிருபர்கள், என்ன திருக்குறள் படித்து முடித்தவுடன் வெளியேறி விட்டீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு இவர்கள், �நல்ல சொற்களைக் கேட்டு முடித்து விட்டோம். தீயச் சொற்களைக் கேட்க நாங்கள் தயாராக இல்லை� என்று சொல்லியிருக்கிறார்கள். திருக்குறள் ஒன்றைத் தவிர காதால் கேட்கக் கூடிய எந்தவொரு சொல்லும் ஒலிக்கவில்லை என்பதற்கு, இதை விட வேறு சான்று சொல்ல விரும்பவில்லை.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது எந்த அளவுக்கு கண்ணியமாக, எதிர்க்கட்சிகளை மதிக்கின்ற வகையில் நடந்து கொண்டது, இப்போது எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒருவர் பேசியிருக்கிறார், பெரிய மேதாவி. இவருக்குத் தான் கதை சொல்லத் தெரியும் என்று மண்வெட்டி கதை சொல்லியிருக்கிறார். ஒரு விவசாயி கடவுளைப் பார்த்து கேட்டாராம். நான் விவசாயம் செய்ய வேண்டும், கடவுளே எனக்கு ஏதாவது உதவி செய்� என்று கேட்டாராம். விவசாயம் செய்ய வேண்டுமென்றால், கடவுள் என்ன செய்ய வேண்டும்?
விவசாயிகளுக்கு ஸீ7000 கோடி கடன் இருந்தால், அதை ரத்து செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, கடவுள், �இந்தா ஒரு மண்வெட்டியை வைத்துக் கொள்� என்று ஒரு இரும்பு மண்வெட்டியைக் கொடுத்தாராம். விவசாயி அந்த இரும்பு மண்வெட்டியை வாங்கி வெட்டினாராம். மண்வெட்டி என்றாலே அது மண்ணை வெட்டுவதுதான். ஆனால், அந்தக் கதையிலே வருகின்ற கடவுள், கடவுள் கதையிலேதான் வருவார். வேறு எதிலும் வர மாட்டார். அந்த கடவுள் கொடுத்தது இரும்பு மண் வெட்டியாம். இரும்பால் ஆனதைக் கொடுத்தால், அது இரும்பு வெட்டி தானே, அது மண் வெட்டி ஆகாது. மண்ணை வெட்டினால்தான் மண் வெட்டி.
தமிழ் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியும். தமிழ் தெரியாதவர்கள் சிலர் சட்டசபையில் இருக்கிற காரணத்தால் அவர்களுக்குப் புரியவில்லை. விவசாயி வெட்டினானாம். இரும்பு மண்வெட்டியால், வெட்டியவுடன் இரும்பாகவே வந்ததாம். உடனே அவன் மகிழ்ச்சியடைந்து கடவுளிடம் எனக்கு வேறொரு மண்வெட்டி கொடு என்று கேட்டானாம். உடனே கடவுள் வெள்ளி மண்வெட்டி கொடுத்தாராம். அதை வாங்கி விவசாயி வெட்டினானாம்.
நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்கேயாவது வெள்ளியால் மண்வெட்டி செய்து மண்ணை வெட்டுகின்ற மடையன் இருப்பானா? வெள்ளியால் மண்வெட்டி கிடைத்தால் வெள்ளியைதான் வெட்டுவான். இவன் வெள்ளி மண்வெட்டியால், மண்ணை வெட்டினானாம். அது வெள்ளியாக கொடுத்ததாம்.
மீண்டும் கடவுளிடம் அவன் பேராசைப்பட்டு கேட்டதால் தங்க மண்வெட்டி கொடுத்தாராம். இவன் தங்க மண் வெட்டியை வைத்துக் கொண்டு, தங்கம் கிடைக்குமென்று தோண்டிக் கொண்டே போய் தரைக்குள்ளேயே மூழ்கி விட்டானாம். அது யாராம்? அது தி.மு.க வாம்.
திமுக தங்க மண்வெட்டியாக ஆக்கப்பட்டு, குழி தோண்டி, அந்தக் குழிக்குள் விழுந்து புதைந்து போனதாக கதை சொல்ல வந்தவர், கதையைச் சொல்லி முடித்திருக்கிறார். தங்க மண்வெட்டி தேடியவர்கள் யார்? முதலில் இரண்டு கோடி ரூபாய் சொத்து இருந்தபோது, அது போதாதென்று, அதைப் பத்து கோடி ரூபாய் சொத்தாக ஆக்கி, பிறகு அந்தப் பத்து கோடி சொத்தும் போதாது என்று, அதை 66 கோடி ரூபாய் சொத்தாக ஆக்கி, இன்றைக்கு பெங்களூரு கோர்ட்டில் போய் தொங்கிக் கொண்டிருப்பது யார்? தங்க மண்வெட்டியா? இரும்பு மண்வெட்டியா? வெள்ளி மண்வெட்டியா? கதை சொல்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டசபையிலே பேசினால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், ஏனென்றால் திமுக தலைவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள் ஏதோ அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அல்ல இது. பெரியாரால், அண்ணாவால் நம் இனத்தைக் காப்பாற்றுவதற்காக இன உணர்வை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இன உணர்வு என்றைக்கு பட்டுப் போகிறதோ அன்றைக்கெல்லாம் திமுக, அந்த இன உணர்வை கூர் தீட்டப் பாடுபடும், பணியாற்றும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட முக்கிய திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

போலீஸ் உதவியுடன் நடக்கும் அத்துமீறல் - அரசு கேபிள் டிவி ஒளிபரப்ப தனியார் கேபிளை துண்டிப்பதா? : தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


அரசு கேபிள் நிறுவனம் தனது ஒளிபரப்புக்கு யாருடைய கேபிளை பயன்படுத்துகிறது என்று தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால் கேபிள் லிமிடெட் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஜே.ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூன்று மனுக்களில் கூறியிருப்பதாவது:
எங்களது கம்பெனி எம்.எஸ்.ஓ மூலம் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த பிசினசில் எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்த 1995ம் ஆண்டு கேபிள் டி.வி ஓழுங்குமுறை சட்டத்தின்படி நாங்கள் இதற்கு உரிய லைசென்ஸ் பெற்றுள்ளோம். 12 ஆண்டுகளாக இந்த தொழிலை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். இதற்காக தமிழகம் முழுவதும் கேபிள் வயர்களை பதித்துள்ளோம். இதற்கு தனியாக அரசு அதிகாரிகளிடம் ஆங்காங்கே லைசென்ஸ் பெற்றுளோம். அதற்கான கட்டணமும் செலுத்தி வருகிறோம்.
டிராக் வாடகை என்று ஒரு கட்டணத்தையும் தவறாமல் அரசுக்கு செலுத்தி வருகிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் எங்கள் டி.வி நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு ஒளிபரப்பி வருகிறோம். சட்டப்படி, அமைதியான முறையில் எங்கள் கேபிள் மூலம் எங்கள் தொழிலை செய்து வருகிறோம். இதில் எந்த சட்டவிதியும் மீறப்படவில்லை.
அப்படி இருக்கும்போது கடந்த 2ம் தேதி தமிழக அரசு கேபிள் டி.வி கார்ப்பரேசன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தனக்கென தனியாக எந்த கேபிளும் பதிக்காமல் அவசரம் அவசரமாக சேவையை தொடங்கியுள்ளது. அரசு கேபிள் தொடங்கியவுடன் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல பகுதிகளில் எங்கள் கேபிள் வயர்களை கட் செய்து அதே கேபிள்கள் மூலம் அரசு கேபிள் உரிமம் பெற்ற சேனல்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பி வருகிறது. போலீஸ் உதவியுடன் இந்த சட்டவிரோத நடவடிக்கை நடந்துள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் கேபிளுக்கு ஆண்டு வாடகை கட்டணம் செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தாமல் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி சேவைக்கு எங்களுக்கு சொந்தமான கேபிளை சட்ட விரோதமாக பயன்படுத்துவது பெரும் குற்றம்.
எங்கள் கேபிள்களை அரசு கேபிள் நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால் மாவட்ட கலெக்டர்கள் எங்கள் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களிடமும் மனு கொடுத்தோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்பூரில் பட்டாளம் சாலை, பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், குமரன் ஓட்டல், ஈஸ்வரன் கோவில், லோட்டஸ் கண் மருத்துவமனை, நொய்யல் வீதி ஆகிய இடங்களில் எங்கள் கேபிள்களை அரசு கேபிள் நிறுவனம் கட் செய்து அதன் மூலம் அரசு கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல கோவையிலும், ஈரோட்டிலும் பல இடங்களில் அரசு கேபிள் நிறுவனம் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. போலீஸ் ஒத்துழைப்புடன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பலன் இல்லை. சட்டப்படியான எங்கள் வியாபாரத்தில் அரசு கேபிள் நிறுவனம் வேண்டுமென்றே குறுக்கீடு செய்கிறது.
அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இந்த செயல் திருட்டுத் தனமானது என்பதை சுட்டிக் காட்டியும், அதிகாரிகளிடம் முறைட்யிட்டும் அந்த குற்றம் தடுக்கப்படவில்லை என்பதை விளக்கியும் எங்கள் நிறுவனம் சார்பில் தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் கடந்த 7ம் தேதி மனு கொடுத்தோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் சட்டப்படி வியாபாரம் செய்ய உரிமையுள்ளது. அதன்படி நாங்கள் சட்டப்படி எங்கள் வியாபாரத்தை நடத்தி வருகிறோம். இதை அரசு கேபிள் நிறுவனம் தடுத்து வருகிறது. இது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1) (ஜி)க்கு எதிரானது. எங்கள் வியாபாரத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு கேபிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எங்களது அனைத்து அடிப்படை வசதிகளையும் சட்டவிரோதமாக திருடி வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி வரை எங்களது எம்.எஸ்.ஓ.வுக்கு லைசென்ஸ் உள்ளது.
எனவே எங்கள் கேபிள்களை சட்டவிரோதமாக பயன்படுத்த அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
கடந்த 3ம் தேதி, 5ம் தேதி, 7ம் தேதி நாங்கள் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்களிடம் கொடுத்த புகார்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
எங்கள் கேபிள்களை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
எங்கள் கம்பெனிக்கு உரிய பாதுகாப்பு தர போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.
அமைதியான முறையில் நாங்கள் நடத்தும் வியாபாரத்தில் அரசு கேபிள் நிறுவனம் குறுக்கீடு செய்ய தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கால் கேபிள் நிறுவனத்தின் பொதுமேலாளர் ராஜேஷ் கூறியுள்ளார். இந்த மனுக்களை வக்கீல்கள் கிரிஸ் நீலகண்டன், எம்.ஏ.விமல் மோகன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
மனுக்களை 08.08.2011 அன்று நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல்கள் விஜயநாராயணன், பி.எஸ்.ராமன் ஆகியோரும் அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனும் ஆஜரானார்கள்.
�அரசு கேபிள் நிறுவனத்திற்கு தனி கேபிள் இருக்கிறதா? எந்த கேபிள்களை பயன்படுத்துகிறீர்கள்? இந்த கேள்விகளுக்கு 12ம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்� என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Thursday, September 8, 2011

மதுரை திமுக இளைஞரணி செயலாளர் கைது


ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக, சிம்கார்டு விற்பனையாளர் கொடுத்த புகாரின்பேரில், திமுக இளைஞரணிச் செயலாளர் ஜெயராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 07.09.2011 அன்று கைது செய்தனர்.
மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் சக்திதாசன்(32). இவர் போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘மதுரை பழங்காநத்தம் பகுதியில் நான் செல்போன் சிம்கார்டு விற்பனைக் கடை வைத்துள்ளேன். ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நகர திமுக இளைஞரணி செயலாளர் ஜெயராமன் என்னை அணுகினார். ஒரு குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி, அந்நிறுவனத்திற்கு 500 சிம் கார்டுகள் தேவை இருக்கிறது. ஆவின் பணியாளர்களுக்கு இந்த சிம் கார்டுகள் வழங்க வேண்டும்.
இதற்காக தனக்கு ரூ.3.5 லட்சம் கமிஷன் கொடுத்தால், இந்த 500 சிம் கார்டுகளுக்கான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். இதற்கு சம்மதித்த என்னிடம், மூன்று தவணைகளில் கமிஷன் தொகையான ரூ.3.5 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால், சொன்னபடி 500 சிம் கார்டுகளை வாங்கவில்லை. கமிஷனாக கொடுத்த பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார்’ எனத் தெரிவித்திருந்தார்.
போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் 07.09.2011 அன்று ஜெயராமனை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதற்கிடையில் ஏற்கனவே மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பவுன். ஆகியோர் ஜெயராமன் மீதும், துணைமேயர் மன்னன் மீதும் கரிமேடு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தங்கள் வீட்டுக்குள் சோடாபாட்டில் வீசியதாகவும், செல்போனில் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். இப்புகார்களின் பேரிலும் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலும் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.

பொங்கலூர் பழனிச்சாமி மகன் கைது


பொங்கலூரில் நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமை ச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ்பாரியை 077.09.2011 அன்று போலீசார் திடீரென கைது செய்தனர்.
திருப்பூர் முருங்கபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் பொங்கலூர் முன்னாள் எம்எல்ஏ மணி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மணி மகன் வெங்கடாச்சலம் ஆகியோர் மீது நில மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மணி மட்டும் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இதையடுத்து பொங்கலூர் பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆனாலும் தொடர்ந்து பொங்கலூர் பழனிச்சாமி தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் 07.09.2011 அன்று அவரது மகன் பைந்தமிழ் பாரியை(37) இந்த வழக்கில் அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பைந்தமிழ் பாரி கோவை மாநகர திமுக துணை செயலாளராகவும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவராகவும் பதவி வகிக்கிறார். வடகோவை மேம்பாலம் அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் 07.09.2011 அன்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பைந்தமிழ் பாரியும் கலந்து கொண்டார். மதிய உணவுக்கு பின்னர் கட்சி அலுவலகத்திலேயே முன்னணி நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது திமுக அலுவலகத்திற்கு முன் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பல்லடம் டிஎஸ்பி முருகானந்தம் தலைமையில் வந்த தனிப்படையினர், முருங்கபாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் கொடுத்த நில மோசடி புகாரின் பேரில் பைந்தமிழ் பாரியை கைது செய்து விசாரணைக்காக அவிநாசிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அவினாசி பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பைந்தமிழ்பாரியிடம் தொடர்ந்து 3 மணிநேரம் விசாரணை நடத்திய பின்னர் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பத்மாவின் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். பைந்தமிழ் பாரியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் சேலம் மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த வழக்கில் பொங்கலூர் பழனிச்சாமியை மட்டுமே போலீசார் தேடி வந்தனர். கடந்த இரு வாரங்களாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மாநகராட்சி பணிகளில் பைந்தமிழ் பாரி வழக்கம் போல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பைந்தமிழ் பாரியை கைது செய்யும் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை. 07.09.2011 அன்று மதியம் திடீரென அவரை கைது செய்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லி குண்டுவெடிப்பு : கலைஞர் கடும் கண்டனம்


டெல்லியில் 07.09.2011 அன்று தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, கலைஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி (திமுக தலைவர்):
பாதுகாப்பற்ற நிலையில் இந்தியாவின் தலைநகரம் இருக்கக் கூடாது. ஏற்கனவே, நாடாளுமன்றத்துக்கு அருகில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இப்போது உயர் நீதிமன்றத்துக்கு அருகில் டெல்லியில் நடைபெற்றிருக்கிறது. இந்தியாவின் தலைநகரம் டெல்லி. அங்கேயே இப்படிப்பட்ட சூழ்நிலை என்றால் கேட்பதற்கே, படிப்பதற்கே வேதனையாக இருக்கிறது.

உத்தமராக இருந்தால் சொத்து குவிப்பு வழக்குக்கு ஒத்துழைப்பு கொடுப்பாரா? - கலைஞர்


உத்தமராக இருந்தால் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஒத்துழைப்பு தர வேண்டியது தானே என்று ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கேள்வி பதில்கள் வருமாறு:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றுவதே தனது கனவு என்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கக் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
மத்திய அரசின் மத்திய புள்ளி விவர நிறுவனம் 2011ல், தனது 2008&2009ல் தொழிற்சாலைகள் குறித்த ஆண்டு ஆய்வை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாடு மொத்தம் 26,122 தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் வகிக்கிறது.தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் 17 லட்சத்து 74,019 பேர் தொழிற்சாலைகளில் மட்டும் பணிபுரிகின்றனர். மொத்த முதலீட்டின் வரிசையிலும் மொத்த தொழில் உற்பத்தியிலும் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது.
மேலும் நிகர மதிப்பு கூடுதல் அளவில் தொழிற்சாலை வரிசையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8&7&2010 தேதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தமிழ்நாடு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள், சாலைகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில் மற்ற இந்திய மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது. ஆக்ஸ்போர்ட் அனாலிட்டிகா என்ற ஒரு பன்னாட்டு தனியார் ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, தமிழகம் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகிறது,
2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில், அதற்கு முந்தைய திமுக அரசின் ஆட்சியில் இருந்த முதலீட்டை விட அதிகரித்த தொழில் முதலீடு ஸீ 8 ஆயிரத்து 742 கோடியே 61 லட்சம்.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், அதற்கு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தை விட அதிகரித்த தொழில் முதலீடு ஸீ5 லட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 லட்சம். திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு தொழில் வளர்ந்தது என்பதற்கு இந்த விளக்கங்களே போதுமென எண்ணுகிறேன்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மூன்று மாதங்களில் புதிய சொத்து எதுவும் வாங்கவில்லை என்று அறிவித்திருக்கிறாரே?
பொறுப்புக்கு தற்போது வந்த இந்த மூன்று மாதங்களில் எந்தப் புது சொத்துக்களையும் வாங்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். ஆனால் ஜெயலலிதா 1991&1996ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது அவருடைய சொத்துக் கணக்கு என்ன என்று மாநிலங்களவையில் ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது தெரிவித்த விவரப்படி 1&7&1991ல் அதாவது அவர் முதலமைச்சராக ஆவதற்கு முன்பு ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பீடு ஸீ2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரம். அவர் ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்த பின்னர், 30&4&1996ல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு ரூ. 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம். இந்த அளவுக்கு வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு எப்படி வந்தது என்பதற்கான வழக்குதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலே நடந்து கொண்டிருக் கிறது.
சமச்சீர் கல்வி திட்டத்தை பிடிவாதமாக ஏற்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறியதில் உச்ச நீதிமன்றம் தலையில் குட்டியதைப் போல, சொத்து குவிப்பு வழக்கிலும் ஜெயலலிதா பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே?
சமச்சீர் கல்வி திட்ட பிரச்சினையில் அந்த திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூறியதோடு அவசர அவசரமாக பேரவையில் திருத்தச் சட்டம் கொண்டு வந்து ஜெயலலிதா நிறைவேற்றினார். சமச்சீர் கல்வி முறையில் பாடப்புத்தகங்கள் எல்லாம் அச்சடிக்கப்பட்டு விநியோகமும் முடிந்த நிலையில் பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க ஆணை கொடுத்தார்.
அந்த புத்தகங்களின் கதி என்ன? அவைகளை அச்சிட டெண்டர் எடுத்து புத்தகங்களை அச்சிட்டவர்களின் கதி என்ன? அதற்காக அரசுக்கு ஆன செலவு எவ்வளவு? இதற்கெல்லாம் அதிமுக ஆட்சியினர் பதில் கூற வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் பெங்களூரில் சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? அந்த ஒரு வழக்குக்காக ஆகின்ற செலவு எவ்வளவு? அந்த வழக்கைத் தாமதப்படுத்த ஜெயலலிதா எவ்வளவு முயற்சி செய்கிறார்? அவர் உத்தமராக இருந்தால் வழக்கை விரைவில் முடிக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது தானே?
சட்டசபை நடவடிக்கைகளில் தி.மு.கழக உறுப்பினர்களை எப்படியாவது கலந்து கொள்ளாமல் செய்ய ஆளுங்கட்சியினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முயற்சியிலே ஈடுபடுகிறார்கள். முதல் அமைச்சரும் ஆளுங்கட்சியினரைக் கண்டிக்காமல் இருக்கிறாரே?
ஊக்கப்படுத்துகிறவராக அவரே இருக்கும்போது எப்படி அவர் அதைக் கண்டிப்பார்?
6ம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க வேண்டிய ஒரு அமைச்சர் கூறிய கதைக்கும், அந்த மானியத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? பொதுவாக பேரவையில் உறுப்பினராக இல்லாத ஒருவரைப் பற்றி அவையிலே பேசுவது மரபல்ல.
ஆனாலும் அந்த அமைச்சர் பேரவையிலே உறுப்பினராக இல்லாத மு.க. அழகிரியின் பெயரையும், கனிமொழி பெயரையும் குறிப்பிட்டுப் பேசும் போது பேரவைத் தலைவர், அந்தப் பெயர்களை நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கியிருக்க வேண்டாமா? அவையில் உறுப்பினராக இல்லாதவர்கள் பற்றி குற்றச்சாட்டு கூறும் போது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எழுந்து விளக்கம் தர அனுமதிக்க வேண்டாமா? அந்த அனுமதி வேண்டுமென்று கோரினால் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்வதா? இதுதான் அதிமுக ஆட்சியினரின் நீதி நிர்வாகமா? மக்களே புரிந்து கொள்ளட்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அதிமுக அரசின் பழிவாங்கும் போக்கை கவர்னர் தடுத்து நிறுத்த வேண்டும் : திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு


பொய் வழக்கு போட்டு பழி வாங்கும் அதிமுக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு, கவர்னர் ரோசய்யாவை சந்தித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு தந்தனர்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஜெ.அன்பழகன், டி.ஆர்.பி.ராஜா, கோவி. செழியன், அன்பழகன் உள்ளிட்ட 19 பேர், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசய்யாவை 07.09.2011 அன்று சந்தித்துப் பேசினர். காலை 10.45 மணி முதல் 11.15 மணி வரை சந்திப்பு நடந்தது. அப்போது, அதிமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை மனு தந்தனர்.
மனுவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூறியிருப்பதாவது:
புதிதாக தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஏற்கனவே உங்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை நினைவு கூர்கிறோம். எங்கள் கோரிக்கை மனுவை ஏற்று பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2006 முதல் 2011 வரையில் ஆவணங்களில் முறைகேடு செய்து நிலங்களின் உண்மையான உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை அபகரித்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அந்த நிலங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஜெயலலிதா தலைமையிலான மாநில அதிமுக நிர்வாகம் பொது அறிவிப்பு செய்தது.
திமுகவினருக்கு எதிரான புகார்களுக்கு முக்கிய முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில அரசு காவல் துறைக்கு ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளது.
இதுவரை, நில அபகரிப்பு புகார்களில் நடவடிக்கை எடுப்பது என்ற பெயரில் 90 திமுக நிர்வாகிகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராக இருந்தவரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொன்முடி, 10 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராக இருந்தவரும், திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு, ஈரோடு மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி.ராஜா, முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது நிலஅபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு, அவர் இடைக்கால முன்ஜாமீன் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இதில் அடங்குவர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மணி, அன்பில் பெரியசாமி, ரங்கநாதன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தென்சென்னை மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன், லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் ஆகியோரும் உள்ளனர்.
வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்புக் காவல் சட்டமான குண்டர்கள் சட்டம் திமுகவின் 11 நிர்வாகிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன.
திமுக மீது காவல்துறை பாரபட்சமான முன் விரோத அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. சட்டத்தின் ஆட்சியினுடைய பல கோட்பாடுகள் காற்றில் பறக்க விடப்பட்டு மாநிலத்தில் ஒரு போலீஸ் ராஜ்யம் நடைபெறுகிறது.
பலர் இத்தகைய பொய் புகார்கள் இல்லாமல்கூட கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டு புகார்கள் புனையப்படுகின்றன. இது, மனித உரிமை மீறலும், உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான உத்தரவுகளுக்கு மாறானதுமாகும்.
சேடப்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ தளபதி, விசாரணைக்கு வந்தபோது மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், முற்றிலும் மாறுபட்ட புகாரின் அடிப் படையில் அவரும் இதர சில திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட் டனர்.
திமுக நிர்வாகிகள் முறையான கைது மெமோ இன்றி கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேட் முன்பு முறையான ஆவணங்களின்றி நிறுத்தப்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எந்த கைது மெமோ, ரிமாண்ட் மெமோவும் இல்லாமல் கைது செய்யப்பட்ட முறையான ஆவணங்களின்றி நீதிமன்றத் துக்கு அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழகாட்டும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் அவர்கள் எல்லையில் உள்ள சிறைகளில் இல்லாமல், வேண்டுமென்றே அவர்களது இல்லங்களிலிருந்து வெகுதொலைவிலுள்ள சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
அதிமுகவைச் சேர்ந்த காஞ்சிபுரம், பவானி, சோழவந்தான், ஆண்டிபட்டி, நாகர்கோவில், காரைக்குடி ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பி என்.ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் மீதும், மேலும் பல அதிமுக நிர்வாகிகள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் அளிக்கப்பட்டும், சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தயங்கி, அவர்களுக்கு எதிரான புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த மூர்த்தி என்பவரால் நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி சட்ட ரீதியான ஆலோசனையைப் பெற முயலுவதாக கூறினார். இதற்கிடையில், மற்றொரு மூத்த அமைச்சர் புகார்தாரரை அழைத்து சமரசம் செய்து வைத்தார்.
காரைக்குடி தொகுதி எம்எல்ஏ சோழன் பழனிச்சாமி மீதான நில அபகரிப்பு புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் புகார்தாரர் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு சென்றுள்ளார்.
பெரும்பாலான நில அபகரிப்பு வழக்குகள் அடிப்படையில் சிவில் தன்மை கொண்டவை என்பதால், சிவில் நீதிமன்றங்கள் மட்டுமே அத்தகைய வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்தவையாகும். உண்மையான சிவில் பரிவர்த்தனைகள் கிரிமினல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.
மூத்த அரசியல் தலைவரான நீங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல், நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவர். எனவே, இந்த பிரச்னையில் நீங்கள் தலையிட்டு நீதி வழங்குவீர்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவில் திமுக தலைவர் கருணாநிதி, சக்கரபாணி, மைதீன்கான், பெரிய கருப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

கவுன்சிலர் தனசேகரன் வேலூர் சிறையில் அடைப்பு


நில அபகரிக்க முயன்றதாக கேகே நகர் 12வது செக்டார் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து, 06.09.2011 அன்று மாலை தனசேகரன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரை வடபழனி போலீசார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போய் அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.
இரவு 9.30 மணிக்கு அவரை போலீசார் சைதாப்பேட்டை 17வது கோர்ட் மாஜிஸ்திரேட் பிரியா வீட்டுக்கு கொண்டு போய் ஆஜர்படுத்தினர். ஆனால், அவர் அடுத்த நாள் காலை அழைத்து வருமாறு கூறிவிட்டார். பிறகு அவரை போலீசார் இரவு முழுவதும், வடபழனி போலீஸ் நிலையத்தில் வைத்தனர். இதைத்தொடர்ந்து, 07.09.2011 அன்று காலை சைதாப்பேட்டை கோர்ட்டு தனசேகரன் கொண்டு வரப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீசார் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். தனசேகரனை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுகிறார் என்பதை அறிந்து ஏராளமான திமுகவினர் கோர்ட் வளாகத்தில் குவிந்து இருந்தனர். பாதுப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, தனசேகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு 08.09.2011 அன்று விசாரணைக்கு வருகிறது.

மருத்துவம், கல்வி உதவி நிதி : 32 பேருக்கு க்ஷீ 3.20 லட்சம் கருணாநிதி வழங்கினார்


கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவி நிதியாக, க்ஷீ 3.20 லட்சத்தை திமுக தலைவர் கருணாநிதி 07.09.2011 அன்று வழங்கினார்.
திமுக தலைமைக்கழகம் 07.09.2011 அன்று இரவு வெளியிட்ட அறிக்கை:

அறக்கட்டளைக்காக திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த க்ஷீ 5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டது. அதில் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோர்க்கு உதவித்தொகை 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வந்தது.
30வது புத்தக கண்காட்சியை 2007 ஜனவரி 10ம் தேதி திறந்து வைத்து பேசிய கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு க்ஷீ 1 கோடி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
அந்த சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள க்ஷீ 4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை க்ஷீ 2 கோடியே 11 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2011 ஆகஸ்ட் மாதம் வட்டியாக கிடைத்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை, மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு கருணாநிதி 07.09.2011 அன்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக, தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை திமுக முன்னாள் மண்டல தலைவர் மகன் கைது


நில அபகரிப்பு வழக்கில் மதுரை மேற்கு மண்டல முன்னாள் தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அவரது மகன் கைது செய்யப்பட்டார்.
மதுரை நரிமேடு தாமஸ் தெருவைச் சேர்ந்தவர் சேத்டேனிராஜ் தேசிங்கர் (30). இவர் மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார்:
எனது தந்தை தேசிங்கர் கடந்த 1996ம் ஆண்டு மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள அருள்நகரில் 4 சென்ட் பிளாட் வாங்கினார். அதன் மதிப்பு ரூ.20 லட்சம். அந்த இடத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்து. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் சென்று பார்த்த போது வேலி பிரிக்கப்பட்டிருந்தது. மீண்டும் ரூ.10 ஆயிரம் செலவு செய்து வேலி அமைத்தோம். அப்போது அந்த இடத்தை ராமச்சந்திரன் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கி விட்டதாக முரட்டம்பத்திரியை சேர்ந்த சின்னான், அவர் மனைவி பாக்கியம், மகன் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் கூறியதோடு, நாங்கள் அந்த இடத்திற்குள் நுழைய கூடாது என மிரட்டி இடத்தை அபகரித்து கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை மீட்டு தர வேண்டும்� என கூறியிருந்தார்.
இதுகுறித்து மாநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மதுரை மேற்கு மண்டல முன்னாள் தலைவரான திமுகவைச் சேர்ந்த சின்னான், மனைவி பாக்கியம், மகன் செந்தமிழ்ச் செல்வன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் செந்தமிழ்ச் செல்வனை போலீசார் 06.09.2011 அன்று அதிகாலை கைது செய்து ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி (பொறுப்பு) வீட்டில் ஆஜர்படுத்தி, மதுரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள சின்னான், அவர் மனைவி பாக்கியம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலஅபகரிப்பு வழக்கில் மீண்டும் கைதான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திருச்சி சிறையில் அடைப்பு




நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கோவை மத்திய சிறை வளாகத்தில் கைது செய்த போலீசார், அவரை திருச்சி சிறையில் அடைத்தனர்.
சேலம் அங்கம்மாள் காலனி, பிரிமியர் மில் நிலப்பிரச்னை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட வந்த போது அவரை, தாசநாயக்கப்பட்டியில் பாலமோகன்ராஜ் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 38 நாட்களுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, கடந்த செவ்வாய்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன்கிடைத்தது. 05.09.2011 அன்று சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற அவரை, வெளியே கொண்டு வர இருந்த நேரத்தில், சேலம் போலீசார் அவர் மீது திடீரென இன்னொரு நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
சேலம் கோயமுத்து�ர் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர் பிரேம்நாத்துக்கு சொந்தமான 12,676 சதுர அடி நிலம் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2007ம் ஆண்டு அபகரிக்க முயற்சி செய்ததாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் பாலகுருமூர்த்தி, ஓய்வு பெற்ற தாசில்தார் ஸ்ரீரங்கநாதன், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய 05.09.2011 அன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார், வாரண்ட் கேட்டு 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது ஆவணங்கள் முறையாக இல்லாததை கண்டித்த நீதித்துறை நடுவர் ஸ்ரீவித்யா, போலீசாரின் மனுவை திருப்பி அனுப்பி விட்டார்.
இந்நிலையில், ஜாமீன் பெற்றுள்ள வீரபாண்டி ஆறுமுகம் வெளியே வந்தால் சிறை வாயிலில் கைது செய்ய போலீசார் கோவை சிறை வாயிலில் காத்திருந்தனர். சேலம் நீதிமன்றத்திலிருந்து தபாலில் சென்ற ஜாமீன் மனு 06.09.2011 அன்று பகலில் கோவை சிறை அதிகாரிகளின் கையில் கிடைத்தது. இதற்கிடையில் சேலம் நீதிமன்றத்தில் வாரண்ட் கேட்டு போலீசார் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதித்துறை நடுவர் ஸ்ரீவித்யா, வாரண்டுக்கு அனுமதி வழங்கினார்.
இத்தகவலை கோவையில் முகாமிட்டுள்ள போலீசாருக்கு சேலம் போலீசார் தெரிவித்த நிலையில், 06.09.2011 அன்று பகல் 1.30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார்மீண்டும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
இரவு 8 மணிக்கு அய்யந்திருமாளிகையில் உள்ள 4வது நீதித்துறை நடுவர் ஸ்ரீவித்யா வீட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்த தகவல் கேள்விப்பட்ட சேலம் மாவட்ட திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் சேலம் அஸ்தம்பட்டியில் நீதிமன்ற வளாகத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை காண திரண்டனர்.
8.15 மணிக்கு வெளியே வந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் கையை பிடித்து போலீஸ் ஏ.டி.சி.ராசராசன் இழுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர், “நான் ஒரு நோயாளி. என்ன நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என யாராவது கேட்டீர்களா?,” என கேட்டார்.
அப்போது அங்கிருந்த அவரது மகள், மகன், மருமகள் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். �கோவை சிறையில் இருந்து 1 மணிக்கு கைது செய்துள்ளீர்கள். இரவு 8 மணிக்கு சேலம் கொண்டு வந்து இருக்கிறீர்கள். எங்களது அப்பாவை எங்கெல்லாம் கொண்டு சென்றீர்கள்? ஏன் இப்படி அலைக்கழிக்கிறீர்கள்? என்று கேட்டனர். உடனே வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினரை 30க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். பிறகு வீரபாண்டி ஆறுமுகத்தை உள்ளே அழைத்து சென்றனர்.
பின்னர் நீதித்துறை நடுவர் ஸ்ரீவித்யா, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் உடல்நலம் கருதி சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை போலீசார் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லாமல், உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி அழைத்து சென்றனர். நீண்ட நேரமாகியும் அவரை சேலம் சிறைக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில், அவரை திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். நிர்வாக காரணங்களுக்காக சேலம் சிறையில் இருந்து அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறரை மணி நேரம் அலைக்கழிப்பு :
வழக்கமாக கோவையில் இருந்து சேலம் வருவதற்கு 3.30 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால் 1.30 மணிக்கு புறப்பட்ட போலீஸ் வாகனம் இரவு 8 மணிக்கு சேலம் வந்து சேர்ந்தது. சுமார் ஆறரை மணி நேரம் போலீசார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அலைக்கழித்ததாக அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கோவையில் இருந்து அவினாசி, பெருந்துறை, ஈரோடு, சங்ககிரி, சேலம் வருவதற்கு பதிலாக, கோவையில் இருந்து அவினாசி, பெருந்துறை, பவானி, மேட்டூர் வழியாக அவரை சேலம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் வாய்தா : சசிகலா உட்பட 3 பேருக்கு தனி நீதிமன்றம் கண்டனம்


சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் ஆஜராகாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி வருவதற்கு பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜூலை 27ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை பதிவு செய்யும்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார்.
தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் �இசட்� பிரிவு பாதுகாப்பில் இருப்பதாகவும், தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாலும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ஜெயலலிதா கோரினார். அதை நிராகரித்த நீதிபதி, கட்டாயமாக ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை நேற்று முன்தினம் நிராகரித்த உச்ச நீதிமன்றம், பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனி நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு 06.09.2011 அன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் சார்பிலும் வாய்தா கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும், சசிகலா கண் சிகிச்சை காரணமாகவும், இளவரசி சர்க்கரை நோய் காரணமாகவும், சுதாகரன் கை எலும்பு முறிவு காரணமாகவும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது.
இவற்றை பரிசீலித்த நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, �ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் பரவாயில்லை. மற்றவர்கள் ஒவ்வொரு முறையம் மருத்துவ காரணங்களை கூறுவது சரியல்ல.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறுவதன் நோக்கமே, நீதிமன்ற நடவடிக்கைகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குதான். ஆனால், ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்வது இந்த வழக்கில் வாடிக்கையாகி விட்டது. இதுபோன்ற காரணங்களை நீதிமன்றம் இனியும் ஏற்காது� என்று கண்டிப்புடன் கூறினார். அதே நேரம், 4 பேரின் வாய்தா மனுக்களையும் ஏற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், இந்த விசாரணையை 2 வாரங்கள் ஒத்திவைக்கும்படி ஜெயலலிதாவின் வக்கீல் கந்தசாமி புதிய மனு தாக்கல் செய்தார்.
இதற்கு, 12ம் தேதி தீர்ப்பு வெளியாகும் நிலையில் 13ம் தேதியே விசாரணை நடத்தலாம் என்று அரசு வக்கீல் சவுட்டா தெரிவித்தார். அதை ஏற்ற நீதிபதி, விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிமுக அரசின் பழி வாங்கும் போக்கு : ஜனாதிபதியிடம் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை மனு


திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்கும் அதிமுக அரசின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் 06.09.2011 அன்று மனு அளித்தனர்.
திமுக எம்.பி.க்கள் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்துப் பேசினர். அப்போது அதிமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு தந்தனர்.
மனுவில் திமுக எம்.பி.க்கள் கூறியிருப்பதாவது:

2006 முதல் 2011 வரையில் ஆவணங்களில் முறைகேடு செய்து நிலங்களின் உண்மையான உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை அபக ரித்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அந்த நிலங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஜெயலலிதா தலைமையிலான மாநில அ.தி.மு.க. நிர்வாகம் பொது அறிவிப்பு செய்தது.
மேற்கூறிய அறிவிப்பு தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளைத் தொடுத்து பொது மக்கள் பார்வையில் கட்சியின் நற்பெயரை அழிக்கவும் செய்யப்பட்ட ஒரு சால்ஜாப்புதான் என்பதை நாங்கள் இன்று உணருகிறோம்.
பெரும்பாலான புகார்கள் விற்பனைத் தொகை போதுமானதல்ல என்றும், எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்களுக்கு எதிராகவும் இருந்தன. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. போன்ற பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளுக்கு எதிராகவும் புகார்கள் இருந்தன. நில அபகரிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள மாநில காவல்துறையினர் எண்ணிக்கையிலிருந்து சிறப்பு காவல்துறை பிரிவை அரசு அமைத்துள்ளது.
தி.மு.க.வினருக்கு எதிரான புகார்களுக்கு முக்கிய முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில அரசு காவல் துறைக்கு ரகசிய கட்டளை பிறப்பித் துள்ளது.
இதுவரை, நில அபகரிப்பு புகார்களில் நடவடிக்கை எடுப்பது என்ற பெயரில் 90 தி.மு.க. நிர்வாகிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராக இருந்தவரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம், 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைச்சராக இருந்தவரும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், வரலாற்று துறையில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்று 18 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட க.பொன்முடி,
10 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராக இருந்தவரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு, முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாவட்ட செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொங்கலூர் பழனிசாமி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது நிலஅபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு அவர் இடைக் கால முன்ஜாமீன் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இதில் அடங்குவர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மணி (பொங்கலூர்), அன்பில் பெரியசாமி (திருச்சி&2), ரங்கநாதன் (வில்லிவாக்கம்) தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் (சேப்பாக்கம்) தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஜெ.அன்பழகன், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் ஆகியோரும் உள்ளனர்.
வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்புக் காவல் சட்டமான குண்டர்கள் சட்டம் தி.மு.க.வின் 11 நிர்வாகிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன.
தி.மு.க. மீது காவல்துறை பாரபட்சமான முன் விரோத அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. சட்டத்தின் ஆட்சியினுடைய பல கோட்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டு மாநிலத்தில் ஒரு போலீஸ் ராஜ்யம் நடைபெறுகிறது. தி.மு.க. நிர்வாகிகள் பொய்யாக, புனையப்பட்ட புகார்களில் கைது செய்யப்படுகின்றனர்.
பலர் இத்தகைய பொய் புகார்கள் இல்லாமல்கூட கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டு புகார்கள் புனையப்படுகின்றன. இது மனித உரிமை மீறலும், பிரபலமான டி.கே.பாசு மேற்குவங்க மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான உத்தரவுகளுக்கு மாறானதுமாகும்.
சேடப்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தளபதி, விசாரணைக்கு வந்த போது மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்தும் முற்றிலும் மாறுபட்ட புகாரின் அடிப் படையில் அவரும் இதர சில தி.மு.க. நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தளபதி ஜாமீன் மனு செய்தபோது, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சிவில் தன்மையானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 18.9.2009ல் நடைபெற்றதாக கூறப்படும் கிரிமினல் மிரட்டல் சம்மந்தமாக 1.8.2011ல் கொடுக்கப்பட்ட புகாரில் அன்றே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். இதில் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்தின் உரிமை தாவா 2008ம் ஆண்டு சிவில் வழக்கில் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தி.மு.க. நிர்வாகிகள் முறையான கைது மெமோ இன்றி கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு முறையான ஆவணங்களின்றி நிறுத்தப்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எந்த கைது மெமோ, ரிமாண்ட் மெமோவும் இல்லாமல் கைது செய்யப்பட்ட முறையான ஆவ ணங்களின்றி நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டார்.
அதுபோலவே, முன் னாள் அமைச்சர் என்.கே. கே.பி.ராஜா எப்.ஐ.ஆர்.கூட இல்லாமல் சிறையில் வைக்க நிறுத்தப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களிலும் காவல்துறையினரிடம் மாஜிஸ்ட்ரேட் கேள்வி கேட்ட பிறகுதான் இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. எப்.ஐ.ஆரில் பெயர் இடம் பெறாதபோதும் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கைது செய்யப்பட்டார். குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரின் புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரிடமிருந்து பொய்ப் புகார்களைப் பெற்று தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்படுகின்றனர். தலைமறைவாகி போலீசாரால் தேடப்படும் ஒரு குற்றவாளியிடமிருந்து பெறப்பட்ட புகாரில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் வழகாட்டும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் அவர்கள் எல்லையில் உள்ள சிறைகளில் இல்லாமல் வேண்டுமென்றே அவர்களது இல்லங்களிலிருந்து வெகுதொலைவிலுள்ள சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட மாற்றங்கள் காவல் உத்தரவை மீறி காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிக்காமல் கூட பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படுகின்றனர். மதுரை குற்றவியல் பிரிவு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட என்.சுரேஷ்பாபு, வி.கே.குருசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறைக்கு பதிலாக பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்பட்டனர்.
மதுரை காவல் துறையால் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.கோபி மதுரை மத்திய சிறைக்கு பதிலாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவாரூர் காவல் துறையால் கைது செய்யப்பட்ட கலைவாணன் திருச்சி மத்திய சிறைக்கு மாறாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் காவல் துறையால் கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய சிறைக்கு பதிலாக கோவை சிறையில் வைக்கப்பட்டார். திருச்சி காவல் துறையால் கைது செய்யப்பட்ட கே.என்.நேரு, அன்பில் பெரியசாமி ஆகியோர் திருச்சி சிறைக்கு பதிலாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்செந்தூர் காவல் துறையால் கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அருகி லுள்ள பாளையங்கோட்டை சிறைக்கு பதிலாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன் புழல் சிறைச்சாலைக்கு பதிலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த காஞ்சிபுரம், பவானி, சோழவந்தான், ஆண்டிபட்டி, நாகர்கோவில், காரைக்குடி ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி. என்.ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் மீதும், மேலும் பல அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் அளிக்கப்பட்டும். சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தயங்கி, அவர்களுக்கு எதிரான புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தற்போதைய அ.தி.மு.க. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூர்த்தி என்பவரால் நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி சட்ட ரீதியான ஆலோசனையைப் பெற முயலுவதாகக் கூறினார். இதற்கிடையில் மற்றொரு மூத்த அமைச்சர் புகார்தாரரை அழைத்து சமரசம் செய்து வைத்தார்.
காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிச்சாமி மீதான நில அபகரிப்பு புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் புகார்தாரர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்குச் சென்றுள்ளார்.
ஆனால் தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளின் தூண்டுதலால் தொடுக்கப்படும் வழக்குகளின் புகாருக்கு கிரிமினல் வர்ணம் பூச சதி, அச்சுறுத்தல் மிரட்டுதல் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் மேற்கூறியபடிஉச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆகியவற்றை மீறும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், மத்திய அமைச்சர்கள் பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட் டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கணபதி ஸ்தபதி மரணம் : கலைஞர் இரங்கல்


பத்ம பூஷண் விருது பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதி மரணமடைந்தார். அவருக்கு வயது 85.
கணபதி ஸ்தபதி உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் 06.09.2011 அன்று மாலை மரணமடைந்தார். இவர் 1926ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் பிறந்தார். சிறந்த வாஸ்து சாஸ்திர நிபுணராக திகழ்ந்த இவர், ஏராளமான கோவில்களை வடிவமைத்துள்ளார். தஞ்சை பல்கலைக்கழக கட்டிடம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை, பூம்புகாரில் மாதவி சிலை உள்பட பல்வேறு சிறந்த பணிகளை செய்துள்ளார்.
ஹவாய், சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் ஆகமவிதிப்படி ஆலையங்களை நிர்மாணித்து கொடுத்துள்ளார். இவரது உடல் மாமல்லபுரம் அருகில் உள்ள வடகடும்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக 07.09.2011 அன்று வைக்கப்பட்டது. பின்னர் மாலை யில் தகனம் செய்யப்பட்டது.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
நாம் நினைத்தவாறு சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பவும் பெரிதும் துணையாக இருந்து அந்த பெரும் பணிகளிலே இரவு பகலாக கண் விழித்து வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அண்மை காலத்தில் அவரை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு அடிக்கடி ஏற்படாவிட்டாலும் கூட, சில தினங்களுக்கு ஒரு முறை எப்படியாவது என்னை சந்தித்து விடுவார். அவரது இழப்பு தமிழகத்திற்கும், சிற்ப கலைக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சிற்ப கலை வல்லுநர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

கேகே நகர் பகுதி திமுக செயலாளர் கவுன்சிலர் தனசேகரன் கைது


வணிக வளாகத்தை அபகரிக்க முயன்றதாக கேகே நகர் பகுதி திமுக செயலாளர் தனசேகரன் கைது செய்யப்பட்டார்.
வடபழனி ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் ராம் என்பவரின் மனைவி பரமேஸ்வரி. இவர் தனது வீட்டுடன் இணைந்த ரூ.15 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை அடமானமாக வைத்து நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.2.50 லட்சம் கடனாக வாங்கினார். பின்னர் கடனை அவர் ஒழுங்காக செலுத்த முடியாததால் பரமேஸ்வரிக்கும் அந்த நிதி நிறுவனத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் நிதி நிறுவனம் அந்த வணிக வளாகத்தை வேறு நபருக்கு ஏலத்தில் விட்டது. இதனால் பரமேஸ்வரி கோர்ட்டில் நிதி நிறுவனம் மீது சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக கே.கே.நகர் பகுதி திமுக செயலாளரும், கவுன்சிலருமான தனசேகரன் சில ரவுடிகளை வைத்து பரமேஸ்வரியை மிரட்டி வணிக வளாகத்தை அபகரிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன பரமேஸ்வரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம்தேதி வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. இதையடுத்து பரமேஸ்வரி மீண்டும் கடந்த மாதம் 3ம்தேதி வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
நில அபகரிக்க முயன்றதாக கடந்த மாதம் 8ம்தேதி தனசேகரன் கூட்டாளிகள் முருகேசன், கோவிந்தராஜன் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கேகே நகர் 12வது செக்டார் பகுதியில் உள்ள வீட்டில் தனசேகரனை 06.09.2011 அன்று மாலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கில் முன் ஜாமீன் :
இதற்கிடையில் கோவை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் நிதி மோசடி வழக்கில், கே.கே. நகர் தனசேகரனை தேடி வந்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தனசேகரன் மனு தாக்கல் செய்தார். அதில், �நான் நிரபராதி. போலீசார் உள் நோக்கத்துடன் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே முன் ஜாமின் தரவேண்டும்� என கூறியிருந்தார். வழக்கை நீதிபதி வாசுகி 06.09.2011 அன்று விசாரித்து, மனுதாரர் தனசேகரனுக்கு வரும் 9ம் தேதி வரை இடைக்கால முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.